Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன்

குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!

திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007

லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தினர், ராம், ஷியாம் என செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.

இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். இரு சகோதரர்களும் பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள். டெல்லியில் இவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேறு வேறு இடத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்ததால், நம்மைப் பிரிக்கும் வேலை நமக்கு தேவையில்லை என்று கூறி வேலையையே விட்டு விட்டனர்.

சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒருமுறை கன்வர்பால் ஒரு பிரச்சினையில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதைப் பார்த்த அவரது சகோதரர் சந்தர்பால் போலீஸாருடன் வேண்டும் என்றே சண்டை போட்டு கைதாகி தனது சகோதரருடன் தானும் சிறைக்குச் சென்றாராம்.

சகோதரர்களின் அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன போலீஸார் இருவரையும் விடுதலை செய்து விட்டனராம்.

இரு சகோதரர்களுக்கும் இடையே இதுவரை ஒரு சண்டை கூட வந்ததில்லையாம். மனக் கசப்பு ஏற்பட்டதில்லையாம். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இருவரது உருவ ஒற்றமை கிராமத்தினரை பல சமயங்களில் குழப்பி விடுமாம்.

இந்த நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா என்ற பெண்ணின் மீது அண்ணன், தம்பிக்கு காதல் பிறந்துள்ளது. இருவருமே மதுபாலாவை விரும்பினர்.

இருவரும் மதுபாலாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு மதுபாலாவை, அண்ணன், தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இருவருக்கும் தற்போது 7 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகனுக்கு 5 வயதுதான் ஆகிறதாம்.

பள்ளி ஆவணங்களில் குழந்தைகளின் தந்தை பெயராக இரு சகோதரர்களின் பெயர்களும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னத்த சொல்றது..!!

http://thatstamil.oneindia.in/news/2007/09...oman-in-up.html

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில சொன்னதை பலர் பிழையா விளங்கினது போல.. ஒரு பெண்ணை... இருவர் மணந்து...??!

அண்ணன் தம்பி.. மனக்கசப்பில்லாம வாழுறதை பாராட்டலாம். ஆனால் ஒரே பெண்ணைத் திருமணம் செய்தது..??! ஒருவேளை இரண்டு பெண்ணைச் செய்திருந்தால்.. மனக்கசப்பு வந்திருக்கும் அது வேற விசயம்...??! இருந்தாலும்.. ஒரே பெண்ணை.. மணம் முடிச்சதை ஏற்றுக் கொள்ள முடியாது. :P :lol:

Edited by nedukkalapoovan

மகா பாரதத்தில சொன்னதை பலர் பிழையா விளங்கினது போல.. ஒரு பெண்ணை... இருவர் மணந்து...??!

அண்ணன் தம்பி.. மனக்கசப்பில்லாம வாழுறதை பாராட்டலாம். ஆனால் ஒரே பெண்ணைத் திருமணம் செய்தது..??! ஒருவேளை இரண்டு பெண்ணைச் செய்திருந்தால்.. மனக்கசப்பு வந்திருக்கும் அது வேற விசயம்...??! இருந்தாலும்.. ஒரே பெண்ணை.. மணம் முடிச்சதை ஏற்றுக் கொள்ள முடியாது. :P :D

தாத்தா ஏன் ஒரு பெண்ணை மணம் முடித்ததை ஏற்று கொள்ள மாட்டீங்க..........நல்ல குடும்பம் பல்கலைகழகம் என்பது இதை தானோ!! :P

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா ஏன் ஒரு பெண்ணை மணம் முடித்ததை ஏற்று கொள்ள மாட்டீங்க..........நல்ல குடும்பம் பல்கலைகழகம் என்பது இதை தானோ!! :P

பாவம் அந்தப் பெண். ஒரு ஆண் கூடவே வாழுறது பெரியபாடா இருக்கும். இரண்டு கூடவா...???! விபச்சாரி கணக்கில...???! :D:lol:

பாவம் அந்தப் பெண். ஒரு ஆண் கூடவே வாழுறது பெரியபாடா இருக்கும். இரண்டு கூடவா...???! விபச்சாரி கணக்கில...???! :D:)

தாத்தா ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தா விபசாரி என்றா.இந்த பகுதியில் இன்னொரு செய்தியில் ஒசாமா பின்லேடன் 4 மனைவிகளும் வாழ்கிறார் அவரை என்னவென்று சொல்வது.........அல்லது அவர் செய்வது சரியோ!!! :lol:

தாத்தா ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தா விபசாரி என்றா.இந்த பகுதியில் இன்னொரு செய்தியில் ஒசாமா பின்லேடன் 4 மனைவிகளும் வாழ்கிறார் அவரை என்னவென்று சொல்வது.........அல்லது அவர் செய்வது சரியோ!!! :D

நல்லாக் கேளுங்க தம்பி ஒரு ஆண் இரு(ஒன்றுக்கு மேல்) பெண்களை திருமணம் செய்து கொள்ள ஏற்றுக்கிறவங்க.... ஒரு பெண் இரு ஆணை திருமணம் செய்ய ஏன் ஏற்றுக்க மாட்டாங்களாம்..??

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான் ஒருத்திக்கும் ஒருவன்தான் ....அதனால் மதுபாலா செய்ததும் ஒசாமா செய்ததும் சரி என்பது எனது கருத்தல்ல :P

நல்ல இரட்டையர்கள். :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரட்டையரை வாழ்த்துவோம் .

ஒற்றுமையாய் இருப்பதற்காக

நல்லாக் கேளுங்க தம்பி ஒரு ஆண் இரு(ஒன்றுக்கு மேல்) பெண்களை திருமணம் செய்து கொள்ள ஏற்றுக்கிறவங்க.... ஒரு பெண் இரு ஆணை திருமணம் செய்ய ஏன் ஏற்றுக்க மாட்டாங்களாம்..??

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான் ஒருத்திக்கும் ஒருவன்தான் ....அதனால் மதுபாலா செய்ததும் ஒசாமா செய்ததும் சரி என்பது எனது கருத்தல்ல :P

இப்படி எல்லாம் கேட்க தானே நான் இருகிறேன் அண்ணா உங்க சார்பில எல்லாரின்ட சார்பிலையும் இப்படி பல அறிவுபூர்வமான கேள்விகளை கேட்கிறேன்(என்ன அண்ணா சிரிகிற மாதிரி இருக்கு நக்கல் இல்லை தானே)ஆமாம் அண்ணா ஒருத்திக்கு ஒருத்தன் தான் வெளியுலகதிற்கு வேண்டும் என்றா தெரியாமல் எத்தனையும் வைத்து கொள்ளலாம்............. :P

ஆமாம் அண்ணா ஒருத்திக்கு ஒருத்தன் தான் வெளியுலகதிற்கு வேண்டும் என்றா தெரியாமல் எத்தனையும் வைத்து கொள்ளலாம்............. :P

இப்பவே எண்ணத்தை பாரன். அதுவும் அண்ணாக்கு தம்பி சொல்லுறாராம். அண்ணாட்டை பேச்சு வாங்க் போறார் தம்பி

இப்பவே எண்ணத்தை பாரன். அதுவும் அண்ணாக்கு தம்பி சொல்லுறாராம். அண்ணாட்டை பேச்சு வாங்க் போறார் தம்பி

தம்பி அண்ணாவிற்கு சொல்லாம யார் அண்ணாவிற்கு சொல்லுறது.........அண்ணா பேபிக்கு எல்லாம் ஏசமாட்டார் அக்கா.........ஆனா பேபி உப்படி எல்லாம் செய்யாது அக்கா............செய்ய தான் விடுவாவோ அக்கா......... :P

தம்பி அண்ணாவிற்கு சொல்லாம யார் அண்ணாவிற்கு சொல்லுறது.........அண்ணா பேபிக்கு எல்லாம் ஏசமாட்டார் அக்கா.........ஆனா பேபி உப்படி எல்லாம் செய்யாது அக்கா............செய்ய தான் விடுவாவோ அக்கா......... :P

:P :P ஓகே. அவ்வளவு பயம் இருந்தால் போதும். எனக்கும் நம்பிக்கையுங்கோ :D

:P :P ஓகே. அவ்வளவு பயம் இருந்தால் போதும். எனக்கும் நம்பிக்கையுங்கோ :D

எனக்கு சரியான பயம் அக்கா கூட நம்பிக்கைக்கு ரொம்ப நன்றியுங்கோ......... :P

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தா விபசாரி என்றா.இந்த பகுதியில் இன்னொரு செய்தியில் ஒசாமா பின்லேடன் 4 மனைவிகளும் வாழ்கிறார் அவரை என்னவென்று சொல்வது.........அல்லது அவர் செய்வது சரியோ!!! :D

ஒசமா என்ன கிளிங்கடனும் விபச்சாரிதான்..! ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன, ஒருவனுக்கு ஒருத்தி என்ற இயற்கை விதியை மீறிறவர் யார் என்றாலும் அதுதான். மனிதனில் இலிங்கத் தேர்வு X, Y என்ற நிறமூர்த்தங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஏன் ஆணுக்கு பெண் 1:1 என்று இயற்கை தீர்மானிக்கனும். சில வகை பூச்சிகளில் உள்ளது போல.. பல பெண்ணிற்கு ஒரு ஆண் என்று தீர்மானிக்கலாம். இல்ல.. மறுதலையும் நடந்திருக்கலாம்..??! ஏன் நடக்கல்ல..! :lol:

நெடுக் அண்ணா ஆன் பெண் க்கு x Y என்று நிறமூர்த்தங்கள் இருப்பது போல மலர் குருவிகளூக்கும் இருக்குதோ அண்ணா? விஞ்ஞான ரீதியில் சின்ன டவுட் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா ஆன் பெண் க்கு x Y என்று நிறமூர்த்தங்கள் இருப்பது போல மலர் குருவிகளூக்கும் இருக்குதோ அண்ணா? விஞ்ஞான ரீதியில் சின்ன டவுட் அதுதான்.

நீங்கள் சின்னப் பொண்ணா இருந்தாலும் பெரிய கேள்விகள் கேட்கிறீர்கள்...!

மலர் - தாவரத்துக்குள் அடங்குவதால் அங்கும் லிங்கத் தேர்வுகள் உண்டு.

ஆனால் அதில் ஒரு விசேடம் உண்டு. சில மலர்கள் ஆண் - பெண் ஈரிலிங்கத்தையும் ஒரே பூவில் கொண்டிருக்கும். உ+ம்: செவ்வரத்தை.

சில தாரவங்களில் தனித்தனியாக ஒரே தாவரத்தில் இருக்கும். உ+ம்: சோளம்.

சில தாவரங்களில் மனிதர்கள் போல ஆண் பெண் பூக்கள் தனித்தனி தாவரங்களில் இருக்கும். உ+ம்: நம்ம பனை.

குருவிகளில மனிதர்கள் போலத்தான அநேகம் இலிங்கத் தேர்வு நடக்கிறது.

விஞ்ஞான விளக்கம் போதுமா இல்ல இன்னும் வேணுமா..??! :P

Edited by nedukkalapoovan

விஞ்ஞான விளக்கத்துக்கு நன்றிகள் நெடுக் அண்ணா

நீங்கள் சின்னப் பொண்ணா இருந்தாலும் பெரிய கேள்விகள் கேட்கிறீர்கள்...!

இது என்ன அண்ணா பெரிய கேள்வி? 11ம் வகுப்பிலேயே இனப்பெருக்கம் என்று படிக்கிறம் தானே. அதை வைச்சுதான் சந்தேக கேள்வி வந்திச்சுங்கோ.

11 வகுப்பிலையா படிபிபாங்க இப்ப மொண்டசூரியில இருகிறன் எப்ப 11 வகுப்பு வரும் என்று இருக்கு அப்ப தான் பேபியும் நாலு விசயம் அறியும் என்று சொல்ல வந்தனான்..... :P

11 வகுப்பிலையா படிபிபாங்க இப்ப மொண்டசூரியில இருகிறன் எப்ப 11 வகுப்பு வரும் என்று இருக்கு அப்ப தான் பேபியும் நாலு விசயம் அறியும் என்று சொல்ல வந்தனான்..... :P

எதிலும் அவசரம் தான். :angry:

எதிலும் அவசரம் தான். :angry:

அவசரம் இருந்தா தான் முன்னுக்கு வரலாம் நிலா அக்கா பேபி........ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொண்ணு ரெண்டு பையன்கள் :wacko: எவர் என்னசொன்னாலும் கனவிசயத்திலை எங்கையோ இடிக்குதப்பா? :D நெடுக்கு சாமியோவ் என்னயிருந்தாலும் நீங்கள் சரியான நயவஞ்சக்காரனப்பா :lol:

பாண்டவரின் பாஞ்சாலிகளுக்கு பிரச்சனை இல்லை... ஆனால் சாதாரணரின் மதுபாலாக்களுக்கு பிரச்சனைதான்:

அவங்களிருவரும் ஒருத்தியை மணந்து 7 பிள்ளைகளைப் பெற்று சந்தோசமாக தானே பா வாழுறாங்க. நீங்களேன் ஆளாளுக்கு சண்டைப்படுறியள்? ஹீஹீ :lol::)

Edited by வெண்ணிலா

சீனா சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 1 பிள்ளை சட்டத்தைக் கொண்டுவந்ததால் வயது போன காலத்தின் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் ஆண்பிள்ளைகளை விரும்பி இருந்தார்கள். இதனால் பெண் சிசுக்களின் கருக்களை கலைத்து வந்தால் உருவான் சமூக வெடி குண்டு இன்று பல கிராமங்களில் வெடித்துவிட்டது என்று கூறுகிறார்கள் அங்கு திருமணமாகாது இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை வைத்து. அரசாங்கம் தற்பொழுது பெண்பிள்ளைகளை பெறும் பெற்றாரை கொளரவித்து ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் சனத்தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் வரதட்சனைப் பிரச்சனையாலும் வயதுபோன காலத்தில் பொருளாதாரரீதியில் ஆண்பிள்ளைகளை அதிகம் விரும்பும் நிலையிருக்கிறது. இதுவும் உருவாக்குவது ஒரே சமூக வெடி குண்டைத்தான்.

இதனால் தெரிவு செய்த முறையில் பெண் சிசுக்களில் கருக்களை கலைக்கும் பழக்கம் இந்தியாவில் இருக்கிறது. இவ்வாறு சமச்சீரற்ற முறையில் உருவாகும் எதிர்கால சமுதாயத்தின் தேவைகளிற்கு ஒரு தீர்வு இதுவாக இருக்கும். தட்டுப்பாட்டில் உள்ள "நுகர்வுப் பொருளாக" பெண்களை வியாபாரம் செய்யும் நிலைக்கு மாறாது இப்படி ஒப்பீட்டளவில் நீதியான தீர்வை நடை முறைப்படுத்தினால் நல்லம் தான்.

ஏன் எமது சமூதாயத்தில் கூட போராட்டம் இராணுவ அடக்குமுறைகளால் ஆண்கள் அதிகம் கொல்லப்பட்டதன் தாக்கத்தை இன்று தாயகத்தில் திருமண முடிக்காது இருக்கும் பெண்களின் எண்ணிக்கைகள் பிரதிபலிக்கின்றன. உதுக்கு நான் தீ்ர்வு ஏதோ சொல்லவாறன் என்று நினைச்சு சண்டைக்கு வராதேங்கோ. எமது சமூகம் மொளனமாக எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட அவலங்களில் ஒன்று பற்றி அவதானிப்பே.

Edited by kurukaalapoovan

நுகர்வுப்பொருள். ஹீஹீ

அப்போ இனி பதிலீட்டு பொருள் வந்து கறுப்புச்சந்தை பணவீக்கம் பணச்சுருக்கம் எல்லாம் வருமோ குறுக்ஸ்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.