Jump to content

நானுஓயா விபத்தில் இறந்தவர்களின் விபரம் வெளியானது: காயமடைந்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானுஓயா விபத்தில் இறந்தவர்களின் விபரம் வெளியானது: காயமடைந்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

By Nanthini

21 Jan, 2023 | 11:52 AM
image

நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

DSC06639.jpg

வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

01. அப்துல் ரஹீம் (55)

02. ஆயிஷா பாத்திமா (45)

03. மரியம் (13)

04. நபீஹா (08)

05. ரஹீம் (14)

06. நேசராஜ் பிள்ளை (25) - வேன் சாரதி 

07. சண்முகராஜ் (25) - முச்சக்கரவண்டி சாரதி

DSC06652.jpg

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவுக்காக  மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு  பயணித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் பேருந்து அதிக வேகம் காரணமாகவும் 'பிரேக்' செயற்படாததாலும், நானுஓயா, ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, பேருந்து சுமார் 50 அடி வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதில் வேனும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்ததோடு, அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு உயிராபத்து ஏதும் நேரவில்லை.

DSC06650.jpg

இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

DSC06691.jpg

விபத்து நேர்ந்ததையடுத்து நானுஓயா குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

வெளிப் பிரதேசங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்துவரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியை பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்கின்றன. அவர்களுக்கு அவ்வீதியின் தன்மை புரிவதில்லை. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

DSC06697.jpg

விபத்து ஏற்பட்டதையடுத்து நேற்றிரவே வைத்தியசாலைக்கு சென்ற இ.தொ.கவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அத்துடன், குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC06647.jpg

DSC06642.jpg

DSC06688.jpg

DSC06644.jpg

DSC06694.jpg

DSC06640.jpg

 

 

https://www.virakesari.lk/article/146346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

உயிரிழந்தவர்களின் விபரம்

01. அப்துல் ரஹீம் (55)

02. ஆயிஷா பாத்திமா (45)

03. மரியம் (13)

04. நபீஹா (08)

05. ரஹீம் (14)

06. நேசராஜ் பிள்ளை (25) - வேன் சாரதி 

07. சண்முகராஜ் (25) - முச்சக்கரவண்டி சாரதி

பெரிய எச்சரிக்கை பலகை வைத்திருந்தும்.. 
கவலையீனமாக ஓடும் சாரதிகளை என்ன செய்வது?
முதலில்.... பொது மக்களை ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு, விசேட பயிற்சியும்... 
கடுமையான சோதனையும் வைத்துத் தான் சாரதி அனுமதி  பத்திரம் கொடுக்கும் 
நடை முறையை கொண்டு வர வேண்டும்.

அங்கு இறந்தவர்களும்... தமிழர்களும், முஸ்லீம்களும் தான்.
சிங்களவனுக்கு சாவே.... இல்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரூந்தை செலுத்திய சாரதியின் கவனமின்மையே இந்த விபத்துக்கு காரணமெவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1321068

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உடனடியாக ஆஸ்பத்திரி போய் விடயங்களை கவனித்ததாக ஜீவன் மீது ஒரு நல் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இதில் உடனடியாக ஆஸ்பத்திரி போய் விடயங்களை கவனித்ததாக ஜீவன் மீது ஒரு நல் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

கோசான்... இவ்வளவு, அப்பாவியாய் இருப்பார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 😂

உள்ளூராட்சி  தேர்தல் வருகின்றது. 
விரும்பியோ, விரும்பாமலோ போய்த் தான் ஆக வேண்டும்.
அத்துடன் ஜீவன் தொண்டமான்,  29 வயது உடைய இளைஞர்.
நம்மடை ஆக்கள் மாதிரி, சக்கர நாற்காலியில்... இருக்கும், முத்தின பழங்கள் அல்ல. 

😎

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

உள்ளூராட்சி  தேர்தல் வருகின்றது. 
விரும்பியோ, விரும்பாமலோ போய்த் தான் ஆக வேண்டும்.
அத்துடன் ஜீவன் தொண்டமான்,  29 வயது உடைய இளைஞர்.
நம்மடை ஆக்கள் மாதிரி, சக்கர நாற்காலியில்... இருக்கும், முத்தின பழங்கள் அல்ல. 

😎

கூட்டாக ஈழதமிழ் தலைவர்கள் 75 வருடமாக தமது மக்களுக்கு செய்ததை விட, செளமியமூர்த்தி தொண்டமான் ஒரு தனிமனிதனாக தனது மக்களுக்கு செய்தது பல மடங்கு.

மனோ கணேசன் கூட அப்படித்தான்.

செளமியமூர்தியின் மகன், பேரன் போல் அல்லாது பூட்டன் செளமியமூர்த்தி போல் செயல்வீரரக தெரிகிறார். பார்க்கலாம்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஈழதமிழ் தலைவர்கள் 75 வருடமாக தமது மக்களுக்கு செய்ததை விட, செளமியமூர்த்தி தொண்டமான் தனது மக்களுக்கு செய்தது பல மடங்கு.

மனோ கணேசன் கூட அப்படித்தான்.

செளமியமூர்தியின் மகன், பேரன் போல் அல்லாது பூட்டன் செளமியமூர்த்தி போல் செயல்வீரரக தெரிகிறார். பார்க்கலாம்.

நீங்கள் சொன்னது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை.
எங்கடை,  ஈழத் தமிழ் தலைவர்கள் தமது சொந்த அலுவல்களை பார்ப்பதற்காகவே 
அரசியலில்... சாக்கு மூட்டைகள் மாதிரி இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.