Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று 

By VISHNU

07 FEB, 2023 | 11:29 AM
image

received_1570954813411100.jpeg

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகர ஆரம்பித்துள்ளது.

received_6027043677403622.jpeg

received_1876669999366561.jpeg

received_1343619663127814.jpeg

received_1343236783178407.jpeg

received_1210175069602039.jpeg

received_914659789959112.jpeg

received_905351180663072.jpeg

received_750729446358236.jpeg

received_856297018775000.jpeg

received_723042672866615.jpeg

received_722479852743916.jpeg

received_565894755438968.jpeg

received_709083964282874.jpeg
 

 

https://www.virakesari.lk/article/147589

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடவரவில்லை - செல்வராணி

By VISHNU

07 FEB, 2023 | 04:41 PM
image

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்துள்ளார்கள். 

 

IMG_3505.JPG

இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டுள்ளோம். 

IMG_3496.JPG

எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகளை தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர். 

IMG_3494.JPG

இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார். தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை. என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

IMG_3491.JPG

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணியின் தலைமையில் பேரூந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், செவ்வாய்கிழமை (07.02.2023)  நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

IMG_3493.JPG

எனக்கு திங்கட்கிழமை (06.02.2023) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்துள்ளது. செவ்வாய்கிழமை(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் தற்போது இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்துள்ளேன். புலனாய்வாளல்கள் எம்மை மிகவும் துன்பப் படுத்துகின்றார்கள்.

DSC00973.JPG

நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் அயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டு வருகின்றோம். எமது போராட்டம் வெற்றி பெறவேண்டும். 170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.

DSC00975.JPG

https://www.virakesari.lk/article/147642

  • கருத்துக்கள உறவுகள்

அலையெனத் திரண்ட தமிழ்மக்கள்

Editorial   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 07:18 - 0      - 30

 

image_f38c6af8cb.jpg

 

- வ.சக்தி       

உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்.

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதி நாள் செவ்வாய்கிழமை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றைய தினம் வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து தமது ஆதரவை வழங்கினர்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி இறுதி நாள் நிகழ்வுக்கு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட மக்கள் மிகவும் அமோக ஆதரவு வழங்கியுள்ளர்.

இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெருகல் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமான பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது.

அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்.

இந்நிலையில் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கதிரவெளி மக்களால் பேரணிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வெடி கொளுத்தி தேங்காய் உடைத்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கிறிஸ்தவ இந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல பிரதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

image_11c1c4452d.jpgimage_89127a290b.jpgimage_f4972fa55a.jpg

Tamilmirror Online || அலையெனத் திரண்ட தமிழ்மக்கள்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியை புறக்கணித்தார்களா சாணக்கியன் – சுமந்திரன்

6-7.jpg

தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியானது நேற்றையதினம்(07.02.2023) நிறைவு பெற்றது.

இந்த எழுச்சி பேரணியில் அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள், பொது மக்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்ட போதிலும் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொள்ளாமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரணியில் வடகிழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோருடன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோரும் பங்குபற்றி இருந்தனர்.

அவர்களுடன் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜானமுத்து ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், பாக்கியம் அரியேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பேரணியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்குபற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தொடக்கத்திலோ முடிவிலோ நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இதன் ஏற்பாட்டாளர்கள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இருப்பினும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் பேரணியின் எந்தவொரு பகுதியிலும் கலந்துக்கொள்ளவில்லை என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒற்றுமையும் இணைப்பையும் வலியுறுத்தி இடம்பெற்ற இந்த பேரணியில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் தேசிய கருத்துக்களை அதிகளவில் கூறிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துக்கொள்ளாமை ஏற்பாட்டாளர்களுக்கு மற்றுமல்ல தமிழ் தேசிய பரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசு கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அந்நிகழ்வை புறக்கணித்திருந்தார்.

இதேவேளை இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளிலும் தனிநபர் ஆதிக்கத்தாலும் அதிருப்தி கொண்ட பலர் அந்த கட்சியின் ‘B’ அணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு வெளிப்பாடாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அணியின் ஆதரவின் வெளிப்பாடு இருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

 

https://akkinikkunchu.com/?p=237690

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.