Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனுக்கு உணவுப் பொருட்கள், கார், தளபாடங்கள், வீடு வாங்குவது நல்லதா?

16 members have voted

  1. 1. கடனுக்கு உணவுப் பொருட்கள், கார், தளபாடங்கள், வீடு வாங்குவது நல்லதா?

    • ஆம்!
      5
    • இல்லை!
      10
    • தெரியாது!
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம்.

இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை?

நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று!

கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள் பற்றி நாம் விழிப்பாய் இருக்கின்றோமா?

ஆசைக்கு கடன் மூலம் மாளிகை மாதிரி பெரிய வீடுகளை, தளபாடங்களை வாங்கியபின் இரவு, பகலாக மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக எங்கடை சனம் வேலை, வேலை என்று வாழ்க்கையை இரசித்து அனுபவிக்க முடியாமல் ஓடுப்பட்டு திரியுதுகள். இவர்களிற்கு எல்லாம் இருக்கின்றது ஆனால் நிம்மதியான தூக்கம், வாழ்க்கை இல்லை.

இப்படி கடனுக்கு வீடு, கார் வாங்கி மற்றவர்களுக்கு நாங்கள் படம் காட்டவேண்டுமா? அல்லது மற்றவன் விரும்புகின்றான் என்பதற்காக நாங்கள் கடனுக்கு வீடுவாங்க முடியுமா?

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் ஆலோசனைகளை, கருத்துக்களை, உங்கள் கடன் அனுபவங்களை சொல்லுங்கோ. நன்றி!

Edited by கலைஞன்

ஜெனரல் அவர்களே!!

வாக்கெடுப்பு தொடங்கியாச்சா மீண்டும் அமோக வெற்றி பெற வாழ்த்துகள்............இதற்கு நாளைக்கு வந்து விளக்கம் தருகிறேன் நான் வாக்கும் போடாம போகிறேன் ஏன் என்றா எனக்கு சின்ன சந்தேகம் இருக்கு எல்லாவற்றிற்கும் நாளைக்கு வாரேன் குருவே குட்நைட்.......... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு வெளிநாடுகளை பொறுத்த வரை கடனுக்கு பொருட்கள் வாங்குவது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அவை அளவுக்கதிகமாக வாங்குவதே பிரச்சினை. எனது கருத்தின் படி,

வர்த்தக ரீதியில் வாங்கும் கடன்கள் தவறல்ல. பெருந்தொகைக்கடனைப் பெற்று வியாபாரம் செய்து முன்னேற முடியும் என்று நம்புவர்கள் கடன் பெறுகின்றனர். ஆனால் இங்கே எமது சமூகத்து;ககுள் இருக்கும் ஒரு மிகப்பெரும் பிரச்சினையாக, ஒருவர் வியாபாரத்துக்காக கடன் வாங்கி, அதனூடே பெரிய அளவில் முன்னேறி விட்டால் அவரை போற்றி புகழுவார்கள், தற்செயலாக அவர் வியாபாரத்தில் நட்டப்பட்டு விட்டால் ஐயோ சொன்னம் பார்த்தீங்களோ என்று அழ ஆரம்பித்து விடுவார்கள். வியாபாரத்தில் சில நேரங்களில் லாப நட்டக்கணக்கை பார்க்க முடியாது. அது ஒரு யதாhத்தமான அக, புற சூழலால் ஏற்படும் விடயம். என்பதால் வியாபாரம் ஆரம்பித்த உடனேயே லாபம் கிடைக்க வேண்டும் என்ஞ நினைப்பதால் எங்கள்; சமூகத்துக்குள் இப்படி கடன்பட்டு வியாபாரம் செய்வது விரும்பப்படுவதில்லை. ஆனால் அதனூடாக பலர் முன்னேறியுள்ளனர் என்பதற்க்கு கனடாவிலுள்ள பல தமிழ் வணிகர்கள் சாட்சி.

அடுத்து வீடு, கார் என்று வாங்குபவர்களை பற்றியே சார்ச்சைகள் பல இருந்தாலும், ஒரு இளைஞனாய் இதற்க்கு பதிலளித்தால், அவர்கள் செய்வது சரி என்பதே எனது கருத்து காரணம்,

இன்று வளர்ந்து வரும் எம் சமூக கட்டமைப்புக்குள் நாங்கள் உழைப்பதும், உண்பதுமாக இருக்க முடியுமா? வெறுமனே உழைக்கும் பணத்தை வாடகைக்காரருக்கும், தொடரூந்துகள், ரெக்சிகளுக்கு கொடுத்துக்nகொண்டிருக்க முடியுமா? அவை விரையாமாகும் பணங்களல்லவா?

இப்போது ஒரு வீட்டை வாங்கி அதில் 2,3 வருடங்கள் நாங்கள் பணத்தை செலுத்தும் பட்சத்தில், இடையே கட்ட முடியாத சூழலில் அதை விற்றால், குறைந்தது 50000 (காலம்-இடம் என்பவற்கு ஏற்ப வேறு படும்) டொலர்களை எம்மால் பெற முடியும். ஆனால் அதையே வாடகைக்கு கொடுத்தால் பெற முடியுமா?

அளவுக்கதிகமான கடன்காளைப் பெற்று அவற்றை மீள செலுத்த முடியாதவர்களும் எமக்குள் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் இன்று தாங்கள் கஸ்டப்படுகின்ற போதும் இன்னும் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு அப்பால் வளருகின்ற எம் சந்ததிக்கு இந்த நாட்டில் ஒரு நிலையான சொத்தை பெற்றுக்கொடுக்கின்றனர். உதாரணமாக இப்போது 25 வயதில் ஒரு இளைஞர் வீடு ஒன்றை 20 வருட தவணை முறையில் வாங்குவானாக இருந்தால் அவனது 45 வயதில் அவனுக்கு ஒரு சுமை குறைந்து விடும். இந்த வயது அவன் உழைப்பதற்கான வயது அவன் உழைத்து அந்த கடனை கட்டி முடித்து விட்டால் ஒரு நிம்மதி பெரு மூச்சை அவனால் நிச்சயம் விட முடியுமல்லவா?

கடன் வாங்குவதும் அதைக்கட்ட காருக்குள் தூங்குவதும் எம் கண்களின் முன்பே கனேடிய வீதிகளில் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் சற்று ஆளமாக சிந்திப்போhனால் அதில் ஒரு நியாயம் இருப்பது தெரியும்.

படிப்புக்கு கடன் வாங்குவது இன்றியமையாத ஒன்றாய் தென்பட்டாலும் சில நேரங்களில் அது சாத்தியப்படலாம். ஆனால் முழு நேரக்கல்வியை தொடர்ந்த வண்ணம் எத்தனை பேரால் முழு நேர வேலையும் செய்ய முடியும்? எனவே கல்விக்கான கடனை பெற்றே ஆக வேண்டிய தேவை உள்ளது. கனடாவின் ஒன்ராரியோவில் ( ஓசாப் ஊடாக) நீங்கள் கடனை பெறும் போது குறிப்பிட்ட தொகையை அரசாங்கமே உங்களுக்காக செலுத்தும். உதாரணமாக நீங்கள் 10000 டொலர்களை கடனாகப் பெற்றால் நீங்கள் முழுமையாக உங்கள் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் பட்சத்தில் 3000 டொலர்களை அரசாங்கம் பொறுப்பேற்கும். எனவே இதில் ஒரு நன்மையும் எமக்கும் உள்ளது.

கார்களை கடனுக்கு வாங்குவதென்பது இளைஞர்களை பொறுத்தவரை அவர்கள் தங்களது தேவைக்கு அதிகமாக அவற்றை வாங்குவது அதாவது 3000 டொலருக்கும் காரை வாங்க முடியும் அதே நேரம் 30000 டொலருக்கும் வாங்க முடியும். 3000 விட்டு 30000 டொலர் காருக்கு பறந்தால் அதை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் சில சந்தர்பங்களில் அவை கூட தவிர்க்க முடியாதவையாகின்றது. ஒரு குடும்பத்தில் 6 பேர் இருப்பார்களாயில் 3000 பெறுமதியான காரில் பயணிக்க முடியுமா? அவர்களுக்கு குறைந்தது 8000 தொடக்கம் 18000 வரை பெறுமதியான வான்களை பெற்றாக வேண்டும் என்ற சூழலில் கடனைத்தவிர வேறென்ன பெற முடியும்.

பொதுப்போக்கு வரத்துக்களை பாவிக்கலாம் என்று சொல்ல வராலாம் ஆனால் அவை ஐரோப்பாவுக்கு உகந்தவையாக இருக்கலாம் ஆனால் கனடாவைப்பொருத்த வரை அது சரிப்பட்டு வராது. எனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வர 2.5 மணித்தியாலங்கள் எடுக்கும் இதுவே கார் என்றால் 25 நிமிடங்கள் மட்டுமே. அப்படியான சூழலில் உங்கள் தெரிவு எதுவாக இருக்கும்?

எனவ கடன் வாங்கி தளபாடங்களை, வீடுகளை, கார்களை, அதர தேவைகைளசெய்வது தவறே இல்லை ஆனால், அவை அளவுக்கதிகமாகவோ, தேவைக்கதிகமாகவோ வேண்டுவதே தவறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சந்தோஷமா கடன் வாங்குங்க"

உலகில் பல விஷயங்கள் யதேச்சையாகவே நடக்கின்றன. அப்படித்தான் நான் இம்மாதம் 24ஆம் தேதி வலைப்பதிவர் சந்திப்புக்கு போனபோதும் நடந்தது. இந்த அழகில் நான் அங்கு போவதே கடைசி தினத்தன்றுதான் நிச்சயம் ஆயிற்று. சந்திப்பு நடந்த வித்லோகா புத்தகக் கடையில் சிறிது நேரம் சுற்றிப் பார்த்தேன். சிவஞானம்ஜி அவர்கள் திடீரென என் கவனத்தை நம்ம ஜோசஃப் சார் எழுதிய புத்தகத்தின் மேல் திருப்பினார். அவருக்கு என் நன்றி. புத்தகத்தின் விவரங்கள்:

புத்தகத்தின் தலைப்பு: சந்தோஷமா கடன் வாங்குங்க, ISBN 978-81-8368-319-7

எழுதியது: டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், Website: www.nhm.in, email: support@nhm.in

பக்கங்கள்: 160

விலை: ரூ. 70

வெளிநாடுகளில் இருப்பவர்கள் புத்தகத்தைப் பெறுவதற்காக விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சரி புத்தகத்துக்கு வருவோம். போன ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோசஃப் சார் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் பாடியது ராமாயணத்தில் எந்தக் கட்டத்தில் வருகிறது என்று என்னைக் கேட்டிருந்தார். நானும் அதற்காக சிலரைக் கேட்டு விவரம் அளித்து, என் தரப்பில் ஒரு பதிவும் இட்டேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஒரு முக்கிய உண்மை புலப்பட்டது. அது என்னவென்றால், கடன்பட்டார் நெஞ்சம்போல என எழுதியது கம்பன் இல்லையாம். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புத்தகத்துக்கு திரும்புவோம்.

முன்னுரையை ஆசிரியர் அப்பாடலுடனேயே துவக்குகிறார். பலர் (நான், ஜோசஃப் சார் உள்பட) இத்தனை நாளாக கொண்ட கருத்துப் பிழை இதிலும் வந்து விட்டது. இதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு இருப்பது விசனத்துக்குரியது. மன்னித்து விடுங்கள் ஜோசஃப் சார். அடுத்த பதிப்பில் நீங்கள் அதை திருத்துவீர்கள் என நம்புகிறேன்.

"கடன் வாங்குவது தவறு என்று சொல்கிறவர்கள், பணத்தின் மதிப்பை சரியாக உணர்ந்த புத்திசாலிகளாக இருக்கமுடியாது. காரணம், கடனாக வாங்கும் பணத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிப்பது எப்படி, வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்கிற தெளிவு உங்களுக்கிருந்தால், கடன் ஒரு தடை அல்ல; வரப்பிரசாதமே", என்று ஆணித்தரமாக கூறி புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். அதுவும் இரண்டாம் வரி ரொம்ப முக்கியம். ஆக்கபூர்வமாக செலவழிப்பது மட்டும் இருந்து விட்டால் அதற்கு ஈடு இல்லைதான். அவரே இப்புதகத்தின் நடுப்பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பெர்சனல் கடனைக் கேட்டு வருபவர்களை விட தொழில் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் கேட்டு வருபவர்கள் அதிக வரவேற்பை பெறுகின்றனர் என்று கூறி இருப்பதையும் இதே லாஜிக்கால் புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தருணத்தில் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில் 1982-ல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தில்லியில் நடந்த போது இந்திய அரசு ஐ.எம்.எஃப். இடமிருந்து வாங்கிய 5 பில்லியன் டாலர் கடன்களின் பெரும்பகுதி ஆசிய விளையாட்டை ஆடம்பரமாக நடத்தவே உபயோகப்படுத்தப்பட்டதால், இந்தியாவின் கடன் பளுதான் அதிகமாயிற்று. ஆக, கடனை வாங்கி அதன் மூலமாக அதிகப் பொருள் ஈட்டி, கடனையும் உரிய காலத்தில் அடைத்து, முன்னேற்றமும் பெறுவது என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இம்மாதிரி புத்தகங்களில் ஒரு உள்ளடங்கிய பலவீனம் உண்டு. அவை வெகு சீக்கிரம் வழக்கற்று (obsolete) போய் விடுகின்றன. ஆனால் அது ஆசிரியர் கட்டுப்பாட்டை மீறியது. முக்கியக் காரணம் அரசின் இடைவிடாது மாறும் நிதிக் கொள்கைகள்தான். இப்போதைய அரசு கொள்கைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்புத்தகமும் இதற்கு விதி விலக்கல்ல. உதாரணத்துக்கு இந்த வடிவில் இப்புத்தகத்தை அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ எழுதியிருக்கவே முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இவற்றில் தரப்படும் தகவல்கள் பல காணாமல் போகலாம், புதுத்தகவல்கள் அவற்றின் இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் சில விஷயங்கள் அப்படியே இருக்கும், ஏனெனில் மனித இயற்கையுடன் சம்பந்தப்பட்டவை அவை. இவற்றில் அடங்குவன முன்னுரையும் முதல் இரு அத்தியாயங்களும்.

மற்ற அத்தியாயங்களில் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்கும் எண் உதாரணங்கள்தான் முதலில் இம்மாற்றங்களில் அடிபடும். அதற்காக அவற்றைக் கூறாமல் இருக்க முடியாது. மிக அழகாக ஆசிரியர் அவற்றை அடுக்கியிருக்கிறார். என்ன இருந்தாலும் அவரது வங்கியின் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் அல்லவா? இப்போதும் கணினி பிரிவின் தலைவராக இருந்து வங்கியின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகளின் கணினி பிரச்சினைகளை தீர்த்து வைப்பவரும் கூட. ஆகவே பலருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அந்த பயிற்சி எல்லாம் வீணாகப் போகுமா என்ன? ஆகவே புத்தகத்தில் போர் என்று கருதும் புள்ளிவிவரங்களையும் அழகுபட அடுக்கியுள்ளார் அவர். அதையும் அழகான, அதே சமயம் எளிமையான தமிழில் செய்தது பாராட்டுக்குரியது. சில ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கம் மிக உபயோகமானது என்று கூறுவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.

தனி நபர் கடன் என்பதிலிருந்து ஆரம்பித்து, பெருந்தொழில் கடன் வரை படிப்படியாக செல்வது மிக அருமையாக உள்ளது. புத்தகத்தை படிக்கும்போது, அதிலும் தொழில் கடன்களைப் பற்றிப் பேசும்போது, அவருடைய 'என்னுலகம்' வலைப்பூவில் வந்த "திரும்பிப் பார்க்கிறேன்" பதிவுகளின் பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாக ஒரு குடும்பம் பரம்பரையாக செய்து வந்த வியாபாரத்தில் இளைய தலைமுறையில் சகோதரர்கள் ஒத்துப் போகாததால் அந்த வியாபாரமே எப்படி நொடித்துப் போனது என்பதும் ஞாபகத்துக்கு வந்தது. கடன்களுக்கு பல விதிமுறைகள் இருந்தாலும் எப்படி மேலிட நிர்ப்பந்தங்கள் குறுக்கிடுகின்றன என்பதையும் அவர் முதலில் கிளை மேலாளராக பதவியேற்று திறந்த கிளையில் பெற்ற அனுபவங்களும் நினைவுக்கு வந்தன. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனாலும் நான் கூறுவதை விட புத்தகத்தை விலைக்கு வாங்கி படிப்பதே அதிகப் பலனைக் கொடுக்கும்.

குறைபாடுகள்? என் மனதுக்கு பட்டவற்றைக் கூறுவேன். எல்லோருக்குமே அவை குறைகளாகத் தெரியவேண்டும் என்பதும் அவசியமில்லை.

இம்மாதிரி புத்தகங்களில் இண்டெக்ஸ் ரொம்ப முக்கியம். அது இல்லை என்பது குறையாகவே படுகிறது. அடுத்தப் பதிவுகளில் இதை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

நான் இப்பதிவில் குறிப்பிட்டது போல இப்போதெல்லாம் டெலிமார்கெட்டிங்கில் போன் போட்டு கடன் வாங்குமாறு தொந்திரவு செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் கந்து வட்டியையே நாணச் செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாசகர்களை உஷார்படுத்தியிருக்கலாம் என எனக்கு படுகிறது. (இப்பதிவு ஜோசஃப் சாருடன் பேசியதன் ஒரு விளைவு என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்).

இன்னும் சில வங்கிகளில் கடனை தவணைக்கு முன்னமே செலுத்த (preclosing) விடுவதில்லை. அப்படியே விட்டாலும் அபராதம் போல போடுகிறார்கள். இது சரியா? இதன் லாஜிக் என்ன? இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. டிபாசிட்டுகளுக்கு வட்டி தரும்போது, உதாரணத்துக்கு 3 வருட டிபாசிட் 10 % என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள டிபாசிட்டுகளுக்கு வட்டி 9 % என்று கூறுவதன் தாத்பர்யம் புரிந்ததே இல்லை.

இன்னும் ஒரு கடன் ஊழியர்களுக்கு தரும் பண்டிகை கடன்கள். இதற்கு வட்டியில்லை என அறிகிறேன். ஆனால் அதை வாங்குவதற்கும் ஜாமீன் கையெழுத்து கேட்கிறார்கள். யாராவது சக ஊழியர் போட வேண்டும். நான் கேட்கிறேன், நிறுவனத்தில் வேலை செய்பவர் மேல் ஏன் இந்த நம்பிக்கையின்மை? அதற்கு இன்னொரு ஊழியர் ஏன் பலிகடாவாக வேண்டும்? நடைமுறையில் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் பார்த்தது என்னவென்றால், ராமு கோவிந்தனுக்காக கையெழுத்திடுவான், கோவிந்தன் ராமுவுக்காகக் கையெழுத்திடுவான். இது என்ன கூத்து? என்னைப் பொருத்தவரை நான் ஒரு பைசா கூட பண்டிகைக் கடன் வாங்கியதில்லை. அப்படி வாங்கி தங்களுக்கு கடனாகக் கொடுக்குமாறு பலர் தொல்லையும் செய்தனர். அது நடக்கவில்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் இது சம்பந்தமான எரிச்சல் அப்படியே உள்ளது.

கடன் தராதவர்களின் பெயர், பெயர், போட்டோ எல்லாம் இப்போதுதான் ரெகுலராகப் போடுகிறார்கள் என அறிகிறேன். அதுவும் தொழிலாளர்கள் யூனியன் ரொம்பப் போராடி இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது என்பதையும் அறிகிறேன்.

ஆங்கிலத்தில் spanner in the works என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக நான் குறிப்பிட நினைப்பது கடன் வழங்கும் விழாக்கள், அதிலும் மந்திரிகள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் என்னவோ தன் அப்பன் வீட்டுப் பணம் போல வங்கிப் பணங்களை தங்கள் ஜால்ராக்களுக்கு கடனாக வழங்கச் செய்வது. கடன் எப்படித் தரக்கூடாது என்பதற்கு உதாரணங்கள் இந்த நிகழ்ச்சிகள். அவ்வாறு பொது பணத்தை ரூட் விட்ட ஒரு மந்திரியால் தண்டனை மாற்றம் பெற்ற இந்த ஆசிரியர் இம்மாதிரி விஷயங்களை குறைந்தபட்சம் எதிர்மறை உதரணங்களாகக் காண்பித்திருக்கலாம். அதே போல ஓட்டு அரசியலுக்காக சகட்டு மேனிக்கு கடனை ரத்து செய்வதால், அவற்றை முதலில் நாணயமாகத் திருப்பித் தந்தவர்கள் முட்டாள் ஆக்கப்படுதலையும், அது எப்படி வங்கிகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன என்பதைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்.

யார் கண்டது, இவையெல்லாம் வேறொரு புத்தகத்தில் வருமோ என்னவோ.

இம்மாதிரி புத்தக மதிப்புரையை பதிவாகப் போடுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மதிப்புரையை நீட்டிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,

டோண்டு ராகவன்

ஓய் கலைஞா ளொள்ளா செல்வா சுக் இன்ர வயித்தில அடிக்கிற பிளானா ??

:angry:

ம் இருக்கட்டும் விசயத்துக்கு வருவம் கடன் வாங்குவதும் தப்பு கொடுப்பதும் தப்பு நம்மைப்பொறுத்தமட்டில

காசு இருந்தா வாங்கிறது இல்லை எண்டா நோ ........ அடுத்தமுறை பாக்கலாம்

ஆணால் கிறடிட்காட் ஐ நான் பலமுறை பயன்படுத்தி உள்ளேன் அதுவும் வெளிநாடுகளில் ஒரு பிரச்சனையும் இல்லை இதுவரை

கிறடிட் காட்பாவிப்பதால் என்ன நட்டம் எண்டு எனக்குப்புரியவில்லை.....

நான் ஒரு முறை வடஇந்தியாவுக்கு சென்றேன் அங்கு காசு வெளிய எடுக்கஏலாது அதுவும் டெல்லியில குறுக்காலை போவார் சுட்டுவாங்கள் ஆணால் வாங்கிய பொருட்க்களுக்கு காட் குடுத்தன் அன்று இரவு ஓன்லைன் இல செக்பண்ணினன் தவறாக பணம் எடுபடவில்லை ....

என்னைப்பொறுத்தமட்டில கிறடிட்காட் ஒரு பெரிய உதவிப்பொருள்

வேற என்னப்பு வரட்டே..

:P :P ;) ;)

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்குவது ஒரு நல்ல முதலீடு என்று எந்த நாட்டிலும் கூறுவார்கள்.ஆனால் பெரும்பாலும் எல்லோரும் கடன் எடுத்து தான் வாங்குகிறார்கள்.வட்டியும் வங்கிக்கு கட்டுகிறார்கள்.ஆனால் வீட்டின் பெறுமதி சில காலத்தில் அதிகரிக்கின்றது.ஒரு காலத்தில் வீட்டை விற்கிறோம் என்று வைத்து கொண்டால் எப்படியும் கொஞ்ச லாபத்துக்கேனும் விற்க முடியும்(வங்கி வட்டி,இன்னோரென்ன செலவுகள் எல்லாம் போக). இதனையே தொழிலாக பல பேர் செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள்.

ஆகவே வீடு வாங்குவதற்கு கடன் வாங்கலாம் என்பது எனது கருத்து.எனது வாக்கும் அதற்கே.

ஜெனரல் அவர்களே!!

வெளிநாட்டை பொறுத்தவரையில் கடனிற்கு பொருட்களை வாங்குவது ஒரு சர்வசாதாரணமான விடயம் வாங்கிவிட்டு பணம் கட்ட ஓடி வேலை செய்வது அடுத்த விசயம்.............இதை பிழை என்று சொல்ல முடியாது அவர்களின் விருப்பு வெறுப்பு என்ற ஒரு பார்வையில் இதை உற்று நோக்கலாம்!! :)

கடனிற்கு பொருட்களை வாங்கும் என்ற வரையறையில் நாம் வாங்க போகும் பொருட்களை பொருத்து மாறுபடும் என்று நினைகிறேன் உதாரணமாக வீடு மற்றும் வாகனங்கள்.......... பலர் கடனடிடையில் தான் வாங்கிறார்கள் ஒரு சிலரே முழுதொகையும் கொடுத்து வாங்கிறார்கள் என்று கூறலாம்........அத்துடன் வாகனங்களை பொறுத்தவரை சிறிய தொகைக்கும் வாங்கலாம் பெரிய தொகைக்கு பெற்று கொள்ள முடியும்.......... ஆனால் இங்குள்ளவர்கள் நவீன வாகனங்களை பெற்று கொள்ள விரும்புவார்கள் அதனையும் கடன் அடிபடையில் தான் பெற்று கொள்ளவதில் எந்த வித பிழையும் இல்லை குறிபாக மாணவர்கள் வாகனங்களை கடன் அடிப்படையில் தான் பெறமுடியும் ஆனால் அவர்கள் அதனை வாங்கும் போது தங்களுடைய வருமானநிலையை பொறுத்து கடனை கட்டலாம் என்ற நம்பிக்கை அடிபடையில் அவர்களுக்கு வசதிக்கு தகுந்த வாகனங்களை பெற்று கொள்வது சிறந்தது இல்லாவிடில் வாகனத்தை பெற்றுவிட்டு கடனை அடைக்காம முழுச வேண்டும் இது அநாவசியமானது............ :)

வீட்டு வாங்குவதிற்காக கடன் வாங்குவது எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது அது சிறந்த முதலீடு அதன் பெறுமதி அதிகரிக்கும் தவிர குறையாது........வீட்டை கடனிற்கு வாங்கி அதை வாடகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாய் மூலம் அந்த வீட்டு கடனையும் கட்டி அடுத்த வீடு வாங்கி அதில் இருந்து கொண்டு அதற்குரிய கடனையும் அந்த வாடகை மூலம் நிறைவேற்றுவர்கள் இருகிறார்கள்........ஆகவே வீட்டில் முதலீடு செய்ய கடன் பெறுவதில் தவறு இல்லை........ஆனால் அதற்காக சிலர் உச்ச தொகையில் போய் வீடுகளை வாங்குவார்கள் அது அவர்களின் வருமானத்தை பொறுத்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து...... B)

இதை தவிர உணவுகள்,உடைகள்,தளபடாங்களை கடனிற்கு பெற்று கொள்வதை பெரும்பாலும் தவிர்பது நல்லது என்பது எனது கருத்து இதனை கடனிற்கு வாங்கிவிட்டு குறிபிட்ட நாட்களிள் பணத்தை கட்டிவிட்டால் வட்டி கட்டவேண்டிய அவசியம் இல்லை...........காலம் தாமதிக்கும் போது வட்டி என்று எங்கள் வருமானத்தில் இருந்து இழக்க நேரிடும் இது அநாவசிய செலவு என்பது என்னுடைய கருத்து.......அத்துடன் கிரடிட் கார்ட் பாவிப்பது பாதுகாப்பு என்று குறிபிடலாம் ............பணத்தை நாங்கள் கொண்டு செல்ல தேவையில்லை கடைக்கு போய் தேவையானவற்றை வாங்கலாம் கையில காசு இருந்தா மனதில் ஒரு பயம் இருக்கும் இதில் அந்த நிலைமையும் இருக்காது ஆனா கிரடிட் கார்ட் இருக்குது என்று போட்டு அதிகமாக செலவழித்து குறிபிட்ட நாட்களிள் காசு கட்டாம அதற்கும் சேர்த்து வட்டி கட்டுறவை தான் நிறைய பேர் இது அநாவசியம் என்பது என் கருத்து......... :angry:

கடன் வாங்கிபடிப்பது முழுநேர மாணவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறே செய்கிறார்கள் இதில் தவறு இல்லை அவர்கள் பகுதி நேர வேலையை பார்த்து கொண்டு முழுதொகையையும் செலுத்தமுடியாது ஆகவே கடன் பெற்று அதன் பின் பகுதிநேர வேலை செய்து அந்த தொகையை செலுத்தி முடிபது சிறந்த முறை என்றே கூறமுடியும்....... :lol:

வியாபரம் பற்றி குறிபிட்டு இருந்தீர்கள்..........அது வியாபாரியை பொறுத்து இருகிறது...........சிறந்த வியாபாரி நீண்டகால எண்ணத்தில் வியாபாரம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் பாரிய தொகை கடனை பெற்று வியாபாரத்தை ஆரம்பித்து வெற்றி பெறுவது அவரது கையில் இருகிறது.........பலர் ஒரு நீண்டகால எண்ணம் இல்லாம வியாபாரத்தை தொடங்கி அரைவாசியில் வியாபரத்தை மூடி விட்டு கஷ்டபடுவார்கள் இது அவர்களின் கையில் தான் உள்ளது.........வியாபரத்தை பொறுத்தவரை கடன் பெறுவதும் தப்பில்லை ஆனால் ஆரம்பிகிறவர்கள்...........

1)வியாபரத்தின் தன்மை

2)நீண்ட கால நிலைத்திருத்தல்

3)போட்டியாளர்கள்

4)சந்தையில் வியாபாரதிற்கு உள்ள கேள்வி

5)கடனை திருப்பி செலுத்த கூடிய நிலை

என்பனவற்றை கருத்தில் கொண்டு செயற்பட்டு கடனை பெற்றால் முன்னுக்கு வரலாம் இல்லாவிடில் அவர்களே தங்களுக்கு சங்கு ஊதுகிறார்கள் என்று தான் பார்க்கவேண்டும்!!

*ஆகவே எனது பார்வையில் கடன் பெறுவது பிரச்சினை இல்லை ஆனால் நீங்கள் பெறும் கடன் எதற்காக பெறுகிறீர்கள் அதனால் நீண்டகாலத்தில் நீங்கள் எவ்வாறான பிரச்சினைகள் மற்றும் நன்மைகளை எதிர்கொள்வீர்கள் என்ற அடிபடையில் கடனை பெற்றா சிறந்தது............. :rolleyes:

*ஆகவே ஜெனரல் அவர்களே!!வீடு மற்றும் வாகனம் அதனுடன் கல்விக்கான கடன்,வியாபாரகடன் என்பவற்றை பெறுவது பிரச்சினை இல்லை ஆனா உணவு,உடை என்பனவற்றை கடனில் பெறுவது அதாவது கிரடிட் கார்ட் மூலம் பெறுவதும் தப்பில்லை ஆனா அதிகளவு கொள்வனவு மேற்கொண்டு பிறகு குறிபிட்ட காலத்தில் கடனை செலுத்தாமல் வட்டி செலுத்துவதன் மூலம் தேவையற்ற செலவீனை மேற்கொள்வது அநாவசியம் என்பது என்னுடைய கருத்து!!

ஜம்முபேபி பஞ் -கடன் அன்பை முறிக்கும் கிரடிட் கார்டில வாங்கினாலும் அன்பை முறிக்குமா??? :P

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜெனரல், நிதர்சன், நுணாவிலான், குரல், சின்னப்பு உங்கள் கருத்துகளிற்கு நன்றி!

ஒருவகையில் பார்த்தால் கடனுக்கு வீடு வாங்குவது நல்லதுதான். ஏனென்றால் வீட்டின் பெறுமதி எப்போதும் அதிகரித்து செல்கின்றது. ஆனால், கடனுக்கு வாகனம், தளபாடம் வாங்குவது சரியாகபடவில்லை. ரெண்டு வருசத்துக்கு காசு கட்டதேவையில்லை, இப்போது சும்மா தருகின்றோம் என்று விளம்பரம் செய்வார்கள். பின் வட்டியுடன் சேர்த்து அறுப்ப்பார்கள்.

உணவுபொருட்கள், மற்றும் சிறிய நாளாந்த தேவைகளை பாவிக்க கிரடிட் கார்ட் பாவிப்பது பிழையாக தெரியவில்லை.

மற்றது, கிரடிட் கார்ட் இல்லையென்றால் ஒன்லைனில் பொருட்கள், மலிவான விமானச்சீட்டு போன்றவை வாங்குவது கடினம்.

நாம் பொறுப்புணர்வுடன் கவனமாக இந்த விடயத்தை கையாண்டால் பயம் இல்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் யமுனன் சொல்லுறது முழுக்கச்சரி!இருந்தாலும் கடன் வாங்கி ஒண்டை செய்யேக்கை மனுசனுக்கு ஏதாவது ஒண்டு நடந்துட்டால் குழந்தைகுட்டியள் நாளைக்கு ரோட்டுக்கு வந்துடுங்களப்பா?மற்றது தனி ஆக்களிட்டை வட்டிக்கு எடுத்தவன் நிமிருறதெண்டால் வலு கஸ்டம்?எதோ தெண்டிச்சு கடன்,வட்டி தொல்லையில்லாமல் வாழ்ந்தால் அதோடை நோய் நொடியில்லாமல் வாழ்ந்தாலும் அது பெரிய புண்ணியம். ;)

அதுசரி எடியே சின்னப்பு வட இந்தியாவிலை என்ன இல்லாதை கண்டுட்டீர்???? :D அப்புடியே பாக்கியளுட்டையும் போய் எங்கடை முஷாரப்புட்டை இரண்டு மாம்பழப்பெட்டி வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே :angry:

மாப்புவுக்கு வாழ்த்துக்கள் எம்மவருக்கு தேவையான தலைப்பு இதுவாகும்

உவன் யமுனன் சொல்லுறது முழுக்கச்சரி!இருந்தாலும் கடன் வாங்கி ஒண்டை செய்யேக்கை மனுசனுக்கு ஏதாவது ஒண்டு நடந்துட்டால் குழந்தைகுட்டியள் நாளைக்கு ரோட்டுக்கு வந்துடுங்களப்பா?மற்றது தனி ஆக்களிட்டை வட்டிக்கு எடுத்தவன் நிமிருறதெண்டால் வலு கஸ்டம்?எதோ தெண்டிச்சு கடன்,வட்டி தொல்லையில்லாமல் வாழ்ந்தால் அதோடை நோய் நொடியில்லாமல் வாழ்ந்தாலும் அது பெரிய புண்ணியம். ;)

அதுசரி எடியே சின்னப்பு வட இந்தியாவிலை என்ன இல்லாதை கண்டுட்டீர்???? :D அப்புடியே பாக்கியளுட்டையும் போய் எங்கடை முஷாரப்புட்டை இரண்டு மாம்பழப்பெட்டி வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே :angry:

மாப்புவுக்கு வாழ்த்துக்கள் எம்மவருக்கு தேவையான தலைப்பு இதுவாகும்

ஓய் கு சா டில்லிக்கு 4 வருசத்துக்கு முன்னம் போனனான் இந்தியா போன போது ஒரு மதுரை நண்பன் கூட பட் அவனுக்கே பயமா இருந்தது ஆக்களை பாக்க

:D:lol::)

அதுசரி எடியே சின்னப்பு வட இந்தியாவிலை என்ன இல்லாதை கண்டுட்டீர்???? :) அப்புடியே பாக்கியளுட்டையும் போய் எங்கடை முஷாரப்புட்டை இரண்டு மாம்பழப்பெட்டி வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே :angry:

மாப்புவுக்கு வாழ்த்துக்கள் எம்மவருக்கு தேவையான தலைப்பு இதுவாகும்

எடியே சின்னப்புவா எங்கையோ இடிக்குது கு.சா தாத்தா........என்ன முசாராப் மாம்பழமா விற்கிறார் என்ன தாத்தா இரண்டு பேரும் காமெடி பண்ணுறீங்களா...............சின்னா தாத்தா இந்தியா போகக்க இவா தான் அசினை பார்கவில்லையா........... :P <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.