Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
27 பிப்ரவரி 2023, 04:36 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

21 மாத கால திமுக ஆட்சி மற்றும் ஓராண்டு கால உள்ளாட்சி அமைப்புகளின் மீதான மதிப்பீடாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிற நிலையில் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இரு கூட்டணிக்கும் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணயில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில் இம்முறை அதிமுக நேரடியாக களம் கண்டது.

அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் தேர்தல் களம் காண்கின்றனர்.

மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரச்சாரம் செய்தனர்.

திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/ck5yx1pnn7po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
27 பிப்ரவரி 2023, 04:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோட்டில் 80% மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி சின்னமான கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க முடிவு செய்துவிட்டனர். வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது. 21 மாத கால திமுக ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி அமையும். ராகுல் காந்தி மேற்கொண்ட பாத யாத்திரைக்கு ஆதரவாகவும் இந்த முடிவு அமையும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மக்கள் வெற்றியை தீர்மானித்து விட்டார்கள். எதிர்க்கட்சியினர் சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அனுமதியில்லாமல் இயங்கிய இரு கட்சிகளின் பணிமனைகளையும் மூடியுள்ளது. தேர்தல் நல்லபடியாக, நேர்மையாகவே நடைபெற்று வருகிறது" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ck5yx1pnn7po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவடைந்தது வாக்குப்பதிவு - மாலை 6 மணிவரை 74.69% வாக்குகள் பதிவு

ஈரோடு ஆட்சியர்
 
படக்குறிப்பு,

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தமது மனைவி கே.எம். பிரசிதா சபரியுடன் வந்து வாக்களித்தார்.

27 பிப்ரவரி 2023, 04:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 27 பிப்ரவரி 2023, 06:31 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வாக்குப்பதிவு, மாலை 6 மணி நிலவரப்படி 74.69% ஆக பதிவானதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

முன்னதாக காலையில், ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோட்டில் 80% மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி சின்னமான கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க முடிவு செய்துவிட்டனர். வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது. 21 மாத கால திமுக ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி அமையும். ராகுல் காந்தி மேற்கொண்ட பாத யாத்திரைக்கு ஆதரவாகவும் இந்த முடிவு அமையும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மக்கள் வெற்றியை தீர்மானித்து விட்டார்கள். எதிர்க்கட்சியினர் சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அனுமதியில்லாமல் இயங்கிய இரு கட்சிகளின் பணிமனைகளையும் மூடியுள்ளது. தேர்தல் நல்லபடியாக, நேர்மையாகவே நடைபெற்று வருகிறது" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ck5yx1pnn7po

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் செய்திகளைக்காணவில்லையே???

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

தேர்தல் செய்திகளைக்காணவில்லையே???

May be an image of 1 person and text that says 'ஈரோட்டில் ஓட்டுக்கு 1000 கூறிவிட்டு 400 கொடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மண்டையை உடைத்த பொதுமக்கள். தந்தி 1 THANTHI TV'

May be an image of 1 person and text that says '"ஈரோட்டு" சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த 12 நாட்களில் 7000 தெருநாய்கள் மாயம் #மட்டன் பிரியாணியில் கலக்கப்பட்டதா? சமூக ஆர்வலர்கள் சந்தேகம்..'

விசுகரின்... ஆசைக்கு, சில தேர்தல் செய்திகள்.  😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

தேர்தல் செய்திகளைக்காணவில்லையே???

நாம் தமிழர் கட்சி முன்னிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் கட்சி முன்னிலையில்.

உண்மையாகவா??

சந்தர்ப்பமில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு பிபி எகிற போவுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'ஈரோட்டில் ஓட்டுக்கு 1000 கூறிவிட்டு 400 கொடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மண்டையை உடைத்த பொதுமக்கள். தந்தி 1 THANTHI TV'

May be an image of 1 person and text that says '"ஈரோட்டு" சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த 12 நாட்களில் 7000 தெருநாய்கள் மாயம் #மட்டன் பிரியாணியில் கலக்கப்பட்டதா? சமூக ஆர்வலர்கள் சந்தேகம்..'

விசுகரின்... ஆசைக்கு, சில தேர்தல் செய்திகள்.  😁 😂 🤣

உந்தாள் எதையும்  விட்டு வைக்காது

நாய் எம்மாத்திரம்  சிறி??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உண்மையாகவா??

சந்தர்ப்பமில்லையே??

யாருக்கு தெரியும் விசுகு.

சும்மா அடித்து விடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

உண்மையாகவா??

சந்தர்ப்பமில்லையே??

7 minutes ago, ஈழப்பிரியன் said:

கனபேருக்கு பிபி எகிற போவுது.

லயோலா கல்லூரி மாணவர்கள்... வாக்களித்து விட்டு வந்தவர்களை 
எடுத்த கணக்கெடுப்பின் படி, நாம் தமிழர் கட்சியினர் 
முன்னணியில் இருப்பதாக கணித்துள்ளார்கள். 

பிற் குறிப்பு: இதயம் பலவீனமானவர்கள்.... தேர்தல் முடிவுகள் வரும் மட்டும் 
இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

லயோலா கல்லூரி மாணவர்கள்... வாக்களித்து விட்டு வந்தவர்களை 
எடுத்த கணக்கெடுப்பின் படி, நாம் தமிழர் கட்சியினர் 
முன்னணியில் இருப்பதாக கணித்துள்ளார்கள். 

வாக்கு போட்டு என்ன பிரயோசனம்?

பெட்டியை அல்லவா மாற்றுகிறார்கள்.

சுமந்திரன் வென்றதை மறந்துட்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டு என்ன பிரயோசனம்?

பெட்டியை அல்லவா மாற்றுகிறார்கள்.

சுமந்திரன் வென்றதை மறந்துட்டியளோ?

உண்மைதான்... இப்போது, தேர்தல்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது.
கோத்தா... ஜனாதிபதியாக வேண்டும் என்றே... 
தேவாலயங்களில்  குண்டு வைத்து தமிழரை கொன்றார்கள்.
அதற்கு இந்தியாவும் உடந்தையாம். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

உந்தாள் எதையும்  விட்டு வைக்காது

நாய் எம்மாத்திரம்  சிறி??

இந்தத் தேர்தலில் இளங்கோவன் சும்மா இருக்க,
அவருக்காக... கூட்டாளி கட்சியான   தி.மு.க. தான், சகல வழிகளிலும் முன் நின்று உழைத்தது.
அவர் தோற்றால்... ஆளும் கட்சிக்கு அவமானம் வந்துவிடும்  என்று கருதினார்கள்.
ஒரு வாக்காளருக்கு... தி.மு.க. / அ. தி.மு.க. சேர்ந்து 85,000 ரூபாய் வரை 
செலவளித்துள்ளதாக முன்னணி பத்திரிகைகள்  சொல்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

நாம் தமிழர் கட்சி முன்னிலையில்.

15 minutes ago, தமிழ் சிறி said:

லயோலா கல்லூரி மாணவர்கள்... வாக்களித்து விட்டு வந்தவர்களை 
எடுத்த கணக்கெடுப்பின் படி, நாம் தமிழர் கட்சியினர் 
முன்னணியில் இருப்பதாக கணித்துள்ளார்கள். 

பிற் குறிப்பு: இதயம் பலவீனமானவர்கள்.... தேர்தல் முடிவுகள் வரும் மட்டும் 
இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம். 😂 🤣

2 ஆம் திகதி தான் முடிவு அறிவிப்பார்கள். இளைஞர்களின் வாக்கு நாம்தமிழருக்கு விழுந்துள்ளதாகத் தான் கணிப்புகள் சொல்லுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

2 ஆம் திகதி தான் முடிவு அறிவிப்பார்கள். இளைஞர்களின் வாக்கு நாம்தமிழருக்கு விழுந்துள்ளதாகத் தான் கணிப்புகள் சொல்லுதாம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Image

ஐயோ... எரியுதடி மாலா.... 😁 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கொண்டாட்டம்
2 மார்ச் 2023, 02:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் வாக்குகளையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

வாக்குகள் விவரம்

காங்கிரஸ் - 23321

அதிமுக - 8124

நாம் தமிழர் - 1498

தேமுதிக - 184

மொத்தம் 16 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததாலும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததாலும் பத்திரிகையாளர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவி கடந்த பிப்ரவரி 27-ந் தேதி நடந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் போட்டியிட்டனர்.

தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

238 வாக்குச் சாவடிகள் கொண்ட இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சித்தோடில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு

மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரசாரம் செய்தனர்.

திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c4njyd8jkkeo

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 17:54, தமிழ் சிறி said:

ஒரு வாக்காளருக்கு... தி.மு.க. / அ. தி.மு.க. சேர்ந்து 85,000 ரூபாய் வரை 
செலவளித்துள்ளதாக

தேர்தலுக்கு. முன்னரே  வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தேர்தலுக்கு. முன்னரே  வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்கள் 

“செய்து விட்டு சொல்வோம்”
இதனை உலகின் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாடல் ஆட்சிக்கு அங்கீகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ஸ்டாலின்
2 மார்ச் 2023, 02:38 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் வாக்குகளையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

வாக்குகள் விவரம்

9வது சுற்று முடிவுகள்

காங்கிரஸ் - 70,299 (முன்னிலை - 45,314)

அதிமுக - 24,985

நாதக - 4,162

தேமுதிக - 606

கொண்டாட்டம்

வரலாற்று வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றிருப்பது வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈவிகேஎஸ்

கடந்த முறை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டபோது 8,900 வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில் தற்போது அதிமுக இரட்டை இல்லை சின்னத்தில் நேரடியாக போட்டியிட்டும் வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

முன்னிலை பெற்றது குறித்துப் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என்றார்.

“தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது. இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஈரோடு கிழக்கு

மொத்தம் 16 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததாலும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததாலும் பத்திரிகையாளர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி நடந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் போட்டியிட்டனர்.

தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

238 வாக்குச் சாவடிகள் கொண்ட இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சித்தோடில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு

மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரசாரம் செய்தனர்.

திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c4njyd8jkkeo

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ண‌ நாய‌க‌ம் வென்ற‌து 

ஜ‌ன‌நாய‌க‌ம் தோத்த‌ தேர்த‌ல்

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் புகுந்து விளையாடி இருக்கு

காசை கொடுத்து விட்டு சாமி மேல‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணி ம‌க்க‌ளை மிர‌ட்டி ஓட்டு போட‌ வைச்ச‌ தேர்த‌ல்.............க‌ருணாநிதி குடும்ப‌த்தின் த‌ல‌ மேல் இடி விழ‌ நாச‌மாய் போவாங்க‌ள்............................

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ முறைகேடு குள‌றுப‌டிக‌ள் மூல‌ம் ப‌ண‌த்தை கொட்டி தேர்த‌லையே அசிங்க‌ப் ப‌டுத்தி திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ கூட்ட‌னி வென்ற‌ உப்பு ச‌ப்பில்லா வெற்றி இது.............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஆளும் கூட்டணியின் வெற்றி எதை காட்டுகிறது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 8 நிமிடங்களுக்கு முன்னர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி. இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

வாக்குகள் இன்னமும் எண்ணப்பட்டுவரும் நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 74 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சுமார் 25,000 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

சுமார் 2,27,000 வாக்காளர்களைக் கொண்ட ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகின. தற்போது வாக்கு எண்ணிக்கையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்துவரும் வாக்குகளைப் பார்க்கும்போது பதிவான வாக்குகளில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்று வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.

அ.தி.மு.க. தவிர களத்தில் இருந்த மற்ற பிரதான கட்சிகளான நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகியவை சொற்ப வாக்குகளையே பெற்றிருக்கின்றன.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 1,50,800 வாக்குகள் பதிவாகின. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வே.ரா. 67,300 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்துவந்த த.மா.காவின் யுவராஜ் 58,396 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கோமதி 11629 வாக்குகளையும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் 10,005 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், இந்த முறை தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் தனக்கு அடுத்த வேட்பாளரைவிட கூடுதலாகப் பெறும் வாக்குகளின் வித்தியாசமும் வாக்குகளின் சதவீதமும் மிக அதிகமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்ததும், அந்தத் தொகுதியில் தனது அடுத்த மகனை நிற்க வைக்கவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விரும்பினார். ஆனால், அவரையே போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தியது. திருமகன் ஈவேரா உயிரிழந்ததால் ஏற்பட்ட அனுதாபம், ஓரளவுக்கு வாக்குகளை ஈ.வி.கே.எஸ்.சிற்குப் பெற்றுத்தரும் என்பது ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக, இந்தத் தேர்தலை மிகப் பெரிய கௌரவ பிரச்னையாக தி.மு.க. எடுத்துக்கொண்டது. இதையடுத்து, ஒன்றிரண்டு அமைச்சர்களைத் தவிர, அனைத்து அமைச்சர்களும் இந்தத் தொகுதிக்கு தேர்தல் பணிகளை கவனிக்க அனுப்பப்பட்டனர்.

ஒவ்வொரு அமைச்சரும் வெறும் இரண்டு, மூன்று வார்டுகளைப் பார்த்துக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு கண்ணில்படும் இடங்களில் எல்லாம் அமைச்சர்கள் தென்பட்டனர்.

இந்தத் தேர்தலில் அந்தத் தொகுதியில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் செலுத்திய கவனத்தைவிட, தி.மு.கவினர் அதிக கவனம் செலுத்தினர். கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சிகள் பணியாற்றுகிறார்களா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலையே படாமல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இதையெல்லாம் விட மிக முக்கியமான காரணம், தொகுதியில் ஆறாக ஓடிய பணம். இதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமே இருக்கவில்லை. ஒரு கட்சி ஒரு வாக்கிற்கு ஐயாயிரம் ரூபாய் பணம், வெள்ளி விளக்கு, கொலுசு, உடைகள் என வாக்காளர்களுக்கு பரிசளித்து, வாக்குகளைக் கேட்டது. மற்றொரு கட்சி, மூவாயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

இரண்டு கட்சிகளுமே தேர்தல் பணிமனைகளில் ஆட்களை அமரவைத்து தினமும் சம்பளம் கொடுப்பதைப் போல 500 ரூபாய் வரை வழங்கினர். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அதுவே தினசரி இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தது.

பத்து நாட்களில் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை இந்த இடைத்தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்தது. இது தவிர, வாக்காளர்களுக்கு வாக்கிற்காக அளிக்கப்பட்ட பணம் தனி. பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கப்பட்ட கதைகளும் உலா வந்தன.

இதுதவிர, முக்கியமான தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும்போது, கூட்டத்தைத் திரட்ட அளிக்கப்பட்ட பணமும் பெரிய அளவில் இருந்தது.

ஈரோடு கிழக்கு ஒரு நகர்ப்புறத் தொகுதியாக இருந்ததாலும், குறிப்பிட்டுச் சொல்லும்வகையில் முக்கியமான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதாலும் இரு கட்சிகளுமே மாநில அளவிலான பிரச்சனைகளையே தங்கள் பிரச்சாரத்தில் முன்வைத்தன. அ.தி.மு.கவினர் பிரச்சாரத்தைத் துவங்கும்போதே, "விடியா தி.மு.க. அரசு" என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தி.மு.கவைப் பொறுத்தவரை, மகளிருக்குப் பேருந்து கட்டணம் இலவசம், பால் விலை குறைப்பு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற நிறைவேற்றிய வாக்குறுதிகளைச் சொல்லியும், மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறியும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஊடகப் பேட்டிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்க அ.தி.மு.கவின் வேட்பாளர் தென்னரசு ஊடகங்களிடமிருந்து விலகியே இருந்ததும் பின்னடைவாக இருந்தது. இது தவிர, இதே காலகட்டத்தில் அ.தி.மு.க. யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு, அது தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவையும் அ.தி.மு.கவுக்கு பாதகமாக இருந்தன. தேர்தல் நெருங்கிய நிலையில், வழக்கின் முடிவு எடப்பாடிக்கே சாதகமாக வந்தாலும் கூட, அது பெரிய அளவில் உதவவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, எளிய முறையில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பது, அதி காலையிலேயே முக்கியமான சந்திப்புகளில் பதாகைகளுடன் நின்று வாக்கு சேகரிப்பது என்ற பாரம்பரிய முறைகளில் வாக்குசேகரித்தனர். கடந்த முறை பெற்ற சுமார் 11,600 வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெறுவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரங்களில் பேசிய சில சர்ச்சைக்குரிய கருத்துகள் அங்கிருந்த சில அமைப்புகள் எதிர்ப்புக்குரலை எழுப்ப காரணமாக அமைந்தது.

தேர்தல் முடிவுகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே வெற்றி என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், "இந்த இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். ஆகவே, திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு தர வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் தந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தன்னை மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல பேசிய பேச்சுக்கு மக்கள் இடைத்தேர்தல் மூலம் நல்ல பாடத்தை வழங்கியுள்ளார்கள்.

கடந்த 20 மாதகால தி.மு.கவின் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு அங்கீகாரம் தர வேண்டும் இந்த தேர்தலை இடைத்தேர்தலாக மட்டுமல்லாமல் இந்த ஆட்சியை எடைபோட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பாருங்கள் என்றேன். ஆகவே மக்கள் நல்ல எடைபோட்டு, இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும்வகையில் நல்ல வெற்றியை தந்துள்ளனர். விரைவில் சந்திக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பெய்த பணமழையைப் பார்க்கும்போது இந்த ஆட்சிக்குத் தந்த மதிப்பெண்ணாகவோ, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாகவோ கருதினால், தி.மு.க. கூட்டணி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாக அமையும்.

https://www.bbc.com/tamil/articles/cmjkrkxjml6o

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ஊழ‌னில் த‌ந்தை க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஊட‌க‌ம் முன்னாள் நிக்க‌ வெக்க‌ப் ப‌ட‌மும் சீ சீ இது எல்லாம் வெற்றியா...................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.