Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் அருமையான படங்கள் இணைப்பிற்க்கு நன்றி.

சுவைப்பிரியன்,  படங்களை… ரசித்தமை எமக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

என்ன நண்பியோடு உலாத்திறீங்க போல இருக்கு.

இல்லை அண்ணா. நண்பியும் தங்கச்சியும் நடக்க வரமாட்டார்கள். நானும் நாயும் தான் நடை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

கட்டக்கலை சம்பந்தமான ஒரு சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள்.
நான் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் இதே மாதிரி வீடுகளும் வீதிகளும் உண்டு. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்படாத இடங்கள் என பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றார்கள். இப்படியான இடங்களில் அரசு அனுமதியின்றி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது.

இது நான் வசிக்கும் இடத்தின் மறு பகுதியில் உள்ள இடம்.படம் நான் எடுத்ததல்ல. உபயம் கூகிள் .

Altstadt - GOSLAR am Harz, UNESCO-Weltkulturerbe

Goslar - Sehenswürdigkeiten & die schönsten Ecken [mit Josef Seibel]

Goslar: Sehenswürdigkeiten in der Welterbestadt | NDR.de - Ratgeber - Reise  - Harz

உங்கள் நகரத்து படங்களை இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி அண்ணை.
சில கட்டிடங்கள், ஒருவகை  சீமெந்து பூச்சுக்களாலும்
சிலது மலையில் பெயர்த்தெடுத்த தட்டுப் போன்ற கற்களாலும்,
சில... செங்கற்களாலும், சிவரை  மூடி இருந்தாலும்... 
எல்லா இடமும் முக்கியமாக மரத்தை பாவித்துள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nilmini said:

இந்த வீடுகள் ஆகக்கூடியது 200வருடங்கள்தான் இருக்கும்.ஏனென்றால் அமெரிக்காவுக்கு வெள்ளையர்கள் குடியேறியது 245 வருடங்கள் முதல்தானே. ஜெர்மன்கார்கள் குடியேறிய இடங்களில் டென்னெர்சியும் ஒன்று.

523c33231b84dd2056c9489a80b8a1d4-cc-ft-9

 

Presentation1.jpg

ஆகா... நில்மினி, 
சொன்ன மாதிரி... அடுத்த நாள் மினக்கெட்டு அந்த இடத்திற்குப் போய் 
படத்தை  எடுத்து இணைத்தமைக்கு நன்றிகள். 🙏

இரண்டு  வீடுகள் அடுத்தடுத்து உள்ளது அழகாக உள்ளது.
மற்றைய வீடுகளும், மிகப் பிரமாண்ட வேலைப்பாடுகளுடன் கட்டியமை...
அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றது. 👍

இங்கிருந்து இவ்வளவு தூரம் போய்.... தாங்கள் விரும்பியபடி கட்டியவர்கள்...
உண்மையிலேயே கெட்டிக்காரர்தான்.

ஏனோ தெரியவில்லை, இப்படியான இந்த வீடுகளை எங்காவது கண்டால் 
என்னை அறியாமலே நின்று அதனை ரசித்து விட்டுத்தான் செல்வேன். 🥰

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 hours ago, nilmini said:

கு சா அண்ணா மிகவும் அழகான வீடுகள். ரோடுகளை பார்த்தால் ஜப்பான் போல இருக்கு என்று மகன் சொன்னார்.நானும் மகனும் 2018 இல் ஜெர்மனி வந்து ஒரு காரை எடுத்துக்கொண்டு பிராங்பேர்ட், முன்சின். பாவேரியா என்று ஜேர்மன் கிராமங்களுக்கூடாக பிரயாணித்தோம்.மகன் ஜேர்மன் மொழி கற்றுள்ளபடியால் ஓரளவு கதைப்பார். அழகான இடம். ஒரே ஒரு இலங்கை நண்பியை தான் பார்த்தேன். சிறி, நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் வந்து நல்ல மீன் குழம்பும் புட்டும் சாப்பிட்டிருக்கலாம்

how to prepare sigappu arisi puttu, பூப்படைந்த பெண்களுக்கு கருப்பை  ஆரோக்கியம் காக்கும் சிவப்பு அரிசி புட்டு!,தயாரிப்பு முறை - preparation and  benefits of red rice puttu for ...

fish curry recipe in tamil: how to make masala fish curry tamil | Indian  Express Tamil

நில்மினி... பவேரியாவில் இருந்து, 250 கிலோ மீற்றர் தூரத்தில் நாங்கள் வசிக்கின்றோம். 
நில்மினிக்கு.. புட்டும், animiertes-fische-bild-0493.gif மீன் குழம்பும் என்றால்,  நல்ல விருப்பமோ.... 😂

படம்: கூகிள்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-8473.jpg

IMG-8352.jpg

 

IMG-8497.jpg

IMG-8301.jpg

animiertes-markt-bild-0003.gif  வாராந்திர சந்தை. ஒவ்வொரு கிழமையும் தோட்டக்காரர், 
தமது தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்த நகரங்களில் கொண்டு வந்து 
நேரடியாக விற்பனை செய்வார்கள். 🙂

கிழமையில் இரண்டு நாட்கள் இப்படியான சந்தை 
காலை 🕗 8 மணியிலிருந்து  animiertes-uhren-bild-0077.gif  மணிவரை நடக்கும்.  😎

இப்போதெல்லாம்... தோட்டக் காரரின் வரவு குறைந்து,
அந்த இடத்தை இடைத் தரகர்கள் 🤼‍♂️ அதிகமாக காணப் படுகின்றார்கள். 
தோட்டக் காரருக்கும்... நாள் முழுக்க கடையில் நின்று, மினக்கெடுவதற்கு... 

 animiertes-uhren-bild-0113.gif நேரம் காணாமையும், முக்கிய காரணம் என நினைக்கின்றேன். 🙂

animiertes-fotograf-bild-0051.gifதமிழ் சிறி. 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

வாராந்திர சந்தை. ஒவ்வொரு கிழமையும் தோட்டக்காரர், 
தமது தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்த நகரங்களில் கொண்டு வந்து 
நேரடியாக விற்பனை செய்வார்கள். 🙂

இதை bauernmarkt என சொல்வார்கள்.இறைச்சி தொடக்கம் மரக்கறி ஈறாக கைவினைப்பொருட்கள் வரைக்கும் விற்பனை செய்வார்கள். நிறைய மக்கள் கூடுவார்கள். அத்துடன் அவர்களது கிராமிய சிறு இசை நிகழ்சிகளும் இருக்கும்.

Unsere Stadt - Ferienwohnungen „Arnikaweg am See” - Clausthal-Zellerfeld

Bergbauernmarkt Clausthal-Zellerfeld - Grüne Meile

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/3/2023 at 09:15, தமிழ் சிறி said:

 

நில்மினி... பவேரியாவில் இருந்து, 250 கிலோ மீற்றர் தூரத்தில் நாங்கள் வசிக்கின்றோம். 

நில்மினிக்கு.. புட்டும், animiertes-fische-bild-0493.gif மீன் குழம்பும் என்றால்,  நல்ல விருப்பமோ.... 😂

படம்: கூகிள்.

அந்த நேரத்துக்கு புட்டும் மீன் குழம்பும் யோசனை சிறி . இந்த கொம்பினேஷனும் நல்ல இருக்கும். இது அக்கா செய்து தந்தது. எப்படியும் உங்கள் குடும்பத்தை ஒருமுறையாவது சந்திக்க வேணும்

puttu.jpg

17 hours ago, குமாரசாமி said:

இதை bauernmarkt என சொல்வார்கள்.இறைச்சி தொடக்கம் மரக்கறி ஈறாக கைவினைப்பொருட்கள் வரைக்கும் விற்பனை செய்வார்கள். நிறைய மக்கள் கூடுவார்கள். அத்துடன் அவர்களது கிராமிய சிறு இசை நிகழ்சிகளும் இருக்கும்.

 

 

வெள்ளைக்காரர்களுக்கு எல்லாத்திலயும் கலை உணர்வும் ரசனையும் அதிகம். நல்ல தகவல் கு சா அண்ணா

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-8483.jpg

IMG-8326.jpg

👆 1435´ம் ஆண்டில் கட்டப்  பட்டு, இன்றும்... நகர சபையாக இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடம்.

IMG-8532.jpg

இந்தப் படத்தின், மேல் மாடியில் உள்ள யன்னல்களின் கீழே உள்ள சதுரமான இடத்தில்...
கட்டிடம் கட்டப் பட்ட 1435´ம் ஆண்டும், தொடர்ந்து உள்ள இடங்களில்  
புனருத்தாரணம் செய்யப் பட்ட 1508´ம் ஆண்டு, 1543´ம் ஆண்டு என தொடர்ந்து பதிக்கப் பட்டுள்ளது.

588 வருடம் பழமையான கட்டிடம் இன்றும், 
புதுப் பொலிவுடன் இயங்கிக் கொண்டு இருப்பது, பாராட்டப் பட வேண்டிய விடயம். 🙂

Edited by தமிழ் சிறி
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் இலையான் கில்லருக்கு கெட்டிக்காரன் கெட்டிக்காறி அகப்படவில்லை.

 

நல்ல பதிவு இலையான் கில்லர்.🙂

  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.