Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனிந்த வீதி உலா?

Featured Replies

கோடை காலம் ஆரம்பித்ததுமே புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் (தர்மகர்த்தாக்கள்) கும்மாளம் போடத் தொடங்குகிறார்கள். சரியாகச் சொல்லி வைத்தது போல ஞாயிற்றுக் கிழமைகளிலோ அல்லது வங்கி விடுமுறை நாட்களிலோ வரும் சுபநேரத்திலே கடவுளைத் தேரிலேற்றி ஊர்வலம் கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக என்னிடத்தில் சில கேள்விகள்

மென்மையான சந்தேகங்கள்

1. அன்பையும் அமைதியையுமே போதித்த சைவ சமயத்தின் பெயரால் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா?

2. ஊரிலே ஆண்டவன் தேரில் வருவதற்காகச் சொல்லப்பட்ட காரணம் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆணடவன் அவர்களையே நாடிச் சென்று அருள் செய்வதற்காகவே தேர்த்திருவிழாக்கள். அப்படியானால் சைவர்களே இல்லாத தெருக்களில் யாருக்காக இந்த வீதி உலா?

கடுமையான சந்தேகங்கள்

3. வீதிகளிலே தன்னை வருத்தி உடலெல்லாம் செதில் குத்தி பறவைக் காவடியென்ற பெயரில் ஒரு மனிதனைத் தொங்க விடுவது தேவையா? இதை ஏனைய இனத்தவர்க்ள எப்படிப் பார்ப்பார்கள்? தமிழனைக் காட்டுமிராண்டி என்று நினைக்க மாட்டார்களா? 'அவர்கள்' சொல்வது போல தமிழன் பயங்கரவாதி தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?

4. சுத்தத்தைக் கடைப்பிடிக்க முயலும் இந்த நாட்டு வீதிகளிலே 108 தேங்காய்களை அடித்து நொறுக்கி சூழலை அசுத்தப்படுத்தத் தான் வேண்டுமா? 108 தேங்காய்களுக்கு குறைந்தது 50 பவுண்களாது தேவை. இலங்கை நாணயத்தில் 10000 ரூபா. அந்தப் பணத்தை இலங்கையில் ஒரு சிறுவர் இல்லத்துக்கு அனுப்பி அந்தக் குழந்தைகளுக்கு ஒரு விருந்து கொடுத்தால் ஆண்டவன் சந்தோசப்பட மாட்டாரா?

5. ஆயிரம் ஆயிரமாய் ஒன்றுகூடி கூட்டத்தோடு கூட்டமாய் கோவிந்தா போடும் போதா அல்லது தனியாக அமைதியான நேரத்தில் ஆண்டவன் சந்நிதானத்தில் பிரார்த்தனை செய்யும் போதா உண்மையான மன அமைதி ஏற்படுகிறது? தனியாக அமர்ந்து வழிபடும் போது தான் (நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்றால் யாருடைய பணப் பையை நிரப்புவதற்காக இந்தக் கூத்து ?

யாராவது தெரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தாருங்களேன்.

எனக்குத் தெரிந்த வரையில் இப்படியெல்லாம் பேசினால் தெய்வக் குற்றம் ஆகிவிடும்.

மென்மையான சந்தேகங்கள்

1. அன்பையும் அமைதியையுமே போதித்த சைவ சமயத்தின் பெயரால் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா?

அதென்ன சைவம்? அப்படி எப்படி தனியாகப் பிரிப்பீர்கள். இந்து சமயம் என்று சொல்லுங்கள். எங்களுக்குள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். கிறிஸ்தவர்களைப் பாருங்கள். இஸ்லாமியர்களைப் பாருங்கள். நாங்கள் மட்டும் தான் சைவம், வைணவம் என்று பேதங்கள் வளர்த்து ஒற்றுமையின்றி இருக்கிறோம். அதனால் தான் இந்த பெரியாரிய வாதிகளால் இந்து மதத்தைப் பற்றிக் கேவலமாகக் கதைக்க முடிகிறது. இதில் என்ன ஆடம்பரம் இருக்கிறது? இந்த உலகத்தில் எம்மைப் படைத்து செல்வச் செழிப்புகளை எல்லாம் தந்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றிக் கடனாக இதைக் கூட செய்யக் கூடாதா? கிறிஸ்தவர்கள் ஊர்வலம் போனால் அதைக் கேள்வி கேட்கிறீர்களா? இந்து மதம் என்றால் மட்டும் உங்களுக்கு இளக்காரம்.

2. ஊரிலே ஆண்டவன் தேரில் வருவதற்காகச் சொல்லப்பட்ட காரணம் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆணடவன் அவர்களையே நாடிச் சென்று அருள் செய்வதற்காகவே தேர்த்திருவிழாக்கள். அப்படியானால் சைவர்களே இல்லாத தெருக்களில் யாருக்காக இந்த வீதி உலா?

மக்களுக்காகத் தான் வீதி உலா. எல்லோருமே இந்துக்கள் தான். மற்றையவை எல்லாம் இடையில் புகுந்த மதங்கள். இந்து மதம் ஒன்றே மதம். ஆதி மதம். எனவே இந்துக்கள் இல்லாத இடமே இல்லை. தூணும் இந்து, தெருவும் இந்து, கணினியும் இந்து, இணையமும் இந்து, எல்லாமே இந்து. எல்லா மக்களையும் அரவணைப்பதே இந்து மதம்.

கடுமையான சந்தேகங்கள்

3. வீதிகளிலே தன்னை வருத்தி உடலெல்லாம் செதில் குத்தி பறவைக் காவடியென்ற பெயரில் ஒரு மனிதனைத் தொங்க விடுவது தேவையா? இதை ஏனைய இனத்தவர்க்ள எப்படிப் பார்ப்பார்கள்? தமிழனைக் காட்டுமிராண்டி என்று நினைக்க மாட்டார்களா? 'அவர்கள்' சொல்வது போல தமிழன் பயங்கரவாதி தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?

தமிழனைக் காட்டுமிராண்டி என்பீர்கள், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்பீர்கள். இந்தப் பெரியாரிய வாதிகளே இப்படித்தான். பறவைக் காவடி என்பதில் எத்தனை மருத்துவக் காரணங்கள் இருக்கிறது தெரியுமா? இப்படி செதில் குத்துவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? மனிதனாலும் பறக்க முடியும் என்பதை அன்றே இந்துக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமானத்தின் உதவியின்றி மனிதன் தானாகவே பறக்கும் காலம் வரும். அப்போது இந்துமதத் தத்துவங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இஸ்லாமியர்கள் முதுகில் அடித்து ஒரு சடங்கு செய்வார்களே. அதை மட்டும் கேள்வி கேட்டீர்களா? இதை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்.

4. சுத்தத்தைக் கடைப்பிடிக்க முயலும் இந்த நாட்டு வீதிகளிலே 108 தேங்காய்களை அடித்து நொறுக்கி சூழலை அசுத்தப்படுத்தத் தான் வேண்டுமா? 108 தேங்காய்களுக்கு குறைந்தது 50 பவுண்களாது தேவை. இலங்கை நாணயத்தில் 10000 ரூபா. அந்தப் பணத்தை இலங்கையில் ஒரு சிறுவர் இல்லத்துக்கு அனுப்பி அந்தக் குழந்தைகளுக்கு ஒரு விருந்து கொடுத்தால் ஆண்டவன் சந்தோசப்பட மாட்டாரா?

சிகரட் பத்தும் காசு, மது அருந்துவதற்காக செலவழிக்கும் காசு, சினிமாக்களுக்கு செலவழிக்கும் காசு இவற்றை அனுப்ப யோசிக்க மாட்டீர்கள். ஆனால் தேங்காய் உடைப்பதை மட்டும் குறை சொல்வீர்கள். யாருக்காக தேங்காய் உடைக்கிறோம் கடவுளுக்காகத்தானே. ஏன்? எமது மக்கள் இன்பத்துடன் வாழவேண்டுமென்றுதானே? கடவுளுடன் நேர்த்திக்கடன் வைத்தால் கடவுள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார். கடவுள் எங்கள் மக்களைக் காப்பாற்றுவார். தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் உங்களுக்கு தெரியுமா? தேங்காயை நிலத்தில் போட்டு உடைக்கும் போது சிதறுகிறதல்லவா. அதாவது அது போல எமது மனமும் சிதறாமல் ஒருநிலைப்படுத்தப்பட்டு கடவுளையே நினைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைக்கப்படுகிறது. அதை விட வேறு சில அர்த்தங்களும் உள்ளன. பூமா தேவி செய்த பாவங்களால் கடவுள் அவளுக்கு கொடுத்த சாபம் தான் இது. தேங்காய் உடைப்பதன் மூலம் பூமா தேவிக்கு நோகும்.

5. ஆயிரம் ஆயிரமாய் ஒன்றுகூடி கூட்டத்தோடு கூட்டமாய் கோவிந்தா போடும் போதா அல்லது தனியாக அமைதியான நேரத்தில் ஆண்டவன் சந்நிதானத்தில் பிரார்த்தனை செய்யும் போதா உண்மையான மன அமைதி ஏற்படுகிறது? தனியாக அமர்ந்து வழிபடும் போது தான் (நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்றால் யாருடைய பணப் பையை நிரப்புவதற்காக இந்தக் கூத்து ?

தனிமை என்பதை இந்துமதம் எப்போதும் போதிக்கவில்லை. தனிமையாக இருக்கும் போது மனநலம் பாதிக்கப்படும். கூட்டுமுயற்சிகளை அறிமுகப்படத்தியதே இந்து மதம் தான். மக்கள் கூட்டாக சேரும் போது சக்தி அதிகம். கூட்டாக அரோகரா என்று சொல்லும் போது அந்த அரோகரா என்கிற ஒலி உலகமெலாம் பரவி கெட்டவற்றை நீக்கும். பூமியில் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கும். மன அமைதி என்பது எப்போது ஏற்படுகிறது? பூமி அமைதியாக இருந்தால் தானே? இப்ப சத்தம் போடாதே என்று குழந்தையை அதட்டுவதற்கு நீங்கள் சத்தம் போடுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

திராவிடவாதம், பெரியாரியம், நாத்தீகம் பேசி இந்துமதக் கலாச்சாரங்களை இழிவுபடுத்தாதீர்கள்.

  • தொடங்கியவர்

பறவைக் காவடி என்பதில் எத்தனை மருத்துவக் காரணங்கள் இருக்கிறது தெரியுமா? இப்படி செதில் குத்துவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? மனிதனாலும் பறக்க முடியும் என்பதை அன்றே இந்துக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமானத்தின் உதவியின்றி மனிதன் தானாகவே பறக்கும் காலம் வரும். அப்போது இந்துமதத் தத்துவங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

இளைஞன்,

நீங்கள் எள்ளல் தொனியில் பதிலளிக்கிறீர்களா? அல்லது உண்மையான உங்கள் கருத்துக்களைச் சொல்கிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை.

உடலை வருத்தி யாருக்கும் பிரயோசனமில்லாமல் அந்தரத்தில் தொங்குவதை விட ஒரு வயோதிபர் இல்லத்திற்குப் போய் அந்த இல்லத்தைக் கழுவித் துடைத்துத் தொண்டு செய்தால்; அன்பின் வடிவமான கடவுள் சந்தோசப்பட மாட்டாரா? தன் முன்னிலையில் தொங்குவதைத் தான் விரும்புவாரா?

பறவைக் காவடிக்கும் விமானத்திற்கும் தொடர்பினை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். ம்ம்ம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை

  • தொடங்கியவர்

பூமா தேவி செய்த பாவங்களால் கடவுள் அவளுக்கு கொடுத்த சாபம் தான் இது. தேங்காய் உடைப்பதன் மூலம் பூமா தேவிக்கு நோகும்.

பூமா தேவிக்கு ஆண்டவன் சாபம் கொடுத்தார் சரி. அவருக்குத் தண்டனை கொடுப்பவருக்கு ஒரு தகுதி வேண்டாமா? 100 தேங்காய் வாங்கக் காசிருந்தால் கொலைகாரனும் தண்டனை கொடுக்கலாம் அப்படியா?

சரி தண்டனைக்காக ஏன் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடிய தேங்காயைப் பாவிக்க வேண்டும். கல்லெடுத்து அடித்தால் அதை விட நோகுமே

  • தொடங்கியவர்

திராவிடவாதம், பெரியாரியம், நாத்தீகம் பேசி இந்துமதக் கலாச்சாரங்களை இழிவுபடுத்தாதீர்கள்.

நான் நாத்திகம் பேசவில்லை.

ஆண்டவன் பேரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தின் செயலைத் தான் கண்டிக்கிறேன்.

மணிவாசகன்

உங்கள் குழப்பத்துக்கான அடிப்படைக் காரணம் நீங்கள் பாவம் புண்ணியம் பற்றித் தெளிவடையவில்லை என்பது தான். நீங்கள் மெஞ்ஞானத் தளத்தில் இருந்து பார்த்தால் இதுகள் விளங்கும் இப்படியான குதர்க்கமாக இது தேவையா அது தேவையா என்ற ஆராச்சிக் கட்டுரைகள் எழுத வேண்டிவராது.

அடுத்து விஞ்ஞானத்துக்காலையும் பலவிடையங்களை விளக்கலாம், உதாரணத்திற்கு...

காவடி குத்துவது உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை தருகிறது. வெள்ளையள் வியாபாரத்துக்கு உருவாக்கின மருந்துகளிற்கு தேவையில்லாது போய்விடும். ஒரு நாளைக்கு பாருங்கோ வெள்ளையளே காவடி எடுப்பாங்கள் தேர் இழுப்பங்கள் தேங்கா உடைப்பங்கள் நல்ல உடற்பயிற்சி ஆரோக்கியம் எண்டு.

  • தொடங்கியவர்

அதென்ன சைவம்? அப்படி எப்படி தனியாகப் பிரிப்பீர்கள். இந்து சமயம் என்று சொல்லுங்கள்.

சைவம் என்றொரு சமயமில்லையா?

நாங்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள். சைவர்கள் என்று தான் சிறுவயதில் அம்மா சொல்லித் தந்தார்

பிறகு பாடசாலையிலே இந்து மதம் என்பது சைவம், சாக்தம் வைணவம் முதலான ஆறு பிரிவுகளைக் கொண்டது என்று படித்தேன்.

இப்போது தான் தெரிகிறது சைவம் என்றொரு சமயமில்லை என்று. அப்ப சிவபெருமான் என்றொருவர் இருக்கிறாரோ?

  • தொடங்கியவர்

நானொரு நாத்திக வாதியல்ல. ஆனால் இந்த நாடுகளில் சைவ மதம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்றால் சில மூடச் செயல்கள் நீக்கப்பட வேண்டும்.

காரணம் எங்கள் குழந்தைகள் எம்மைப் போல சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. பல கேள்விகள் கேட்பார்கள். அது ஏன் இது ஏன் என்று துளைத்தெடுப்பார்கள். அப்போது அவர்களுக்கு சரியான விளக்கங்களைக் கொடுக்க வேண்டாமா?

''ஏனம்மா ஒரு மனிதனை அந்தரத்தில் ஏற்றி பறவைக் காவடி என்ற பேரில் கோரம் செய்கிறார்கள்''

என்று கேட்கும் குழந்தைக்கு

''பாத்தியா பிள்ளை எங்கடை முன்னோர்களின் கெட்டித்தனத்தை. விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் நாங்கள். அதுக்காகத்தான் தொங்க விட்டு ரசிக்கிறோம். இருந்து பார் இன்னும் கொஞ்ச நாட்களிலை விமானம் இல்லாமல் நாங்கள் அந்தரத்திலை பறப்பம்''

என்று சொன்னால்

அந்தப் பிள்ளை 999 இற்கு தொலைபேசி அழைப்பெடுத்து மனநல வைத்தியசாலையின் அம்புலன்சைக் கூப்பிடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஊர்வலம் எல்லாம் பெடி பெட்டையள் தங்கட வலுவைக் காட்டத்தான். தங்கம் ஒரு பக்கம்... இப்படி வித்தைகள் இன்னொரு பக்கம். இதை விளம்பரப்படுத்த ஓசிப் பேப்பர்கள்.. ( ஒரு பேப்பருக்கு ஒரு பக்கம் நிரப்ப படங்கள் கிடைக்குதே). எல்லாம் அரோகரா.. கோசத்தோடு வியாபாரம் தான்..! அரோகரா கோசத்துக்கு அர்த்தம் இருக்கோ இல்லையோ ஊர்வலங்களால நல்ல இலாபம் இருக்கு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன்,

நீங்கள் எள்ளல் தொனியில் பதிலளிக்கிறீர்களா? அல்லது உண்மையான உங்கள் கருத்துக்களைச் சொல்கிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை.

இதில் என்ன சந்தேகம் பதிலை பார்த்தவுடன் புரிகிறதல்லவா இது எள்ளல் தொனி என்று.நான் யாழில் ஏனையோர் வந்து திருப்பி அதே புராணத்தை தொடங்குவார்கள் அதை அவர்களின் நேரம் வீணாகபோக கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கேட்கிறார் போல. :)

  • தொடங்கியவர்

மணிவாசகன்

உங்கள் குழப்பத்துக்கான அடிப்படைக் காரணம் நீங்கள் பாவம் புண்ணியம் பற்றித் தெளிவடையவில்லை என்பது தான். நீங்கள் மெஞ்ஞானத் தளத்தில் இருந்து பார்த்தால் இதுகள் விளங்கும் இப்படியான குதர்க்கமாக இது தேவையா அது தேவையா என்ற ஆராச்சிக் கட்டுரைகள் எழுத வேண்டிவராது.

அடுத்து விஞ்ஞானத்துக்காலையும் பலவிடையங்களை விளக்கலாம், உதாரணத்திற்கு...

காவடி குத்துவது உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை தருகிறது. வெள்ளையள் வியாபாரத்துக்கு உருவாக்கின மருந்துகளிற்கு தேவையில்லாது போய்விடும். ஒரு நாளைக்கு பாருங்கோ வெள்ளையளே காவடி எடுப்பாங்கள் தேர் இழுப்பங்கள் தேங்கா உடைப்பங்கள் நல்ல உடற்பயிற்சி ஆரோக்கியம் எண்டு.

வணக்கம் குறுக்காலை போவான்

எனக்கு மெய்ஞானத் தளத்தில் நின்று பின்வரும் 2 கேள்விகளுக்கும் விளக்கம் தருவீர்களா?

1. உடம்பிலை குத்திக் கொண்டு நாள் முழுக்க சுவாமிக்கு முன்னாலை தொங்குவதை அன்பே வடிவான கடவுள் விரும்புவாரா அல்லது அதே அன்பர் ஒரு வயோதிபர் இல்லத்துக்குப் போய் அந்த இடத்தைச் சுத்தம் செய்து அங்குள்ளவர்களின் தேவைகளைக் கேட்டு அவற்றை தன் உடல் உழைப்பினால் நிறைவு செய்வதை விரும்புவாரா?

2. 108 தேங்காய்களை இந்த நாட்டு வீதிகளிலை அடித்துடைத்து மாசுபடுத்துவதை கடவுள் விரும்பவாரா அல்லது அந்தப் பணத்தை இல்லாத ஒரு உயிருக்குக் கொடுத்து அந்த உயிரின் வயிற்றுப் பசியை அகற்றுவதை கடவுள் விரும்புவாரா?

முதலில இளைஞனையும், குறுக்காலபோவானையும் சேர்த்து சோடியாக நல்லூர் தேர் திருவிழாவிற்கு வருவது போல் பறவைக்காவடி ஆடவிட வேண்டும்.

இளைஞனுன், குறுக்காலபோவானும் பறவைக்காவடி எடுப்பது நல்லது எண்டு சொல்லுறீங்கள். அப்படியாயின் அதை நீங்கள் எடுத்தால் என்ன? உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்தானே? மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகூடும் தானே?

வெள்ளைக்காரங்கள் எங்கட தூக்கு காவடிகள், பறவைக்காவடிகளை பார்த்துவிட்டு ஓ சிட்! என்று அருவருக்கிறாங்கள்.

மணி உங்களுக்கு ஒரு விசயம் தெரியவேணும், எங்கட ஆக்கள் இப்படி கூத்து ஆடுவது சரியாக இல்லை என்றாலும், நாங்கள் இப்படியான நிகழ்வுகளின்போது கலகலப்பாக இருக்க முடிகின்றது. இப்ப நல்லூர் திருவிழாவுக்கு நாங்கள் சனங்கள், வேடிக்கை பார்க்கத்தானே போவம்? சாமி கும்பிட போவது இல்லைதானே!

அதுபோலவே, எம்மவர்களின் இந்த களியாட்டங்களை தெருவில் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்கின்றது.

வணக்கம் குறுக்காலை போவான்

எனக்கு மெய்ஞானத் தளத்தில் நின்று பின்வரும் 2 கேள்விகளுக்கும் விளக்கம் தருவீர்களா?

1. உடம்பிலை குத்திக் கொண்டு நாள் முழுக்க சுவாமிக்கு முன்னாலை தொங்குவதை அன்பே வடிவான கடவுள் விரும்புவாரா அல்லது அதே அன்பர் ஒரு வயோதிபர் இல்லத்துக்குப் போய் அந்த இடத்தைச் சுத்தம் செய்து அங்குள்ளவர்களின் தேவைகளைக் கேட்டு அவற்றை தன் உடல் உழைப்பினால் நிறைவு செய்வதை விரும்புவாரா?

நமஸ்தே மணிவாசகன்

ஒருவரை வயோதிபமோ வறுமையோ நோயோ கஸ்டப்படுவது அவரின் பாவ-புண்ணியத்தைப் பொறுத்தது முற்பிறப்பு வினைப் பயன்களைப் பொறுத்தது. அவருடைய கஸ்டத்தில் நீங்கள் தலையிடுவது கடவுளின் தீர்ப்பில் தலையிடுவதாகும்.

அது தான் உங்கள் பாவத்திற்கான மீட்சிக்கும் விமோசனத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டியது கடவுளை நோக்கிய பிராயச்சித்தங்கள். தொண்டர் வோலை எண்டு வெள்ளையளின் பாணியில் வெளிக்கிடுவது தெய்வக் குற்றமும் கலாச்சார சீரழிவும்.

2. 108 தேங்காய்களை இந்த நாட்டு வீதிகளிலை அடித்துடைத்து மாசுபடுத்துவதை கடவுள் விரும்பவாரா அல்லது அந்தப் பணத்தை இல்லாத ஒரு உயிருக்குக் கொடுத்து அந்த உயிரின் வயிற்றுப் பசியை அகற்றுவதை கடவுள் விரும்புவாரா?

நீங்கள் மீண்டும் வெளியில் தோன்றும் போலியான தூய்மை பற்றித்தான் கவனம் செலுத்துறியள். இதை வைச்சுத்தான் உங்களை வெள்ளையள் ஏமாத்துறாங்கள். குறைந்தது 1 மூட்டை தேங்கையை உடைப்பதால் உங்கள் உள்ளத்திற்கு கிடைக்கும் சமாதானம் மனத்தூய்மை மாத்திரமல்ல உடற்பயிற்சியினால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி உணர உங்களுக்கு மெஞ்ஞான அறிவு காணாது. இல்லை நீங்கள் 10 வண்டில் தேங்காய் உடைச்சும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை எண்டால் அதன் அர்த்தம் நீங்கள் கடவுளை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு செய்யாது பெரியார் விட்ட விளையாட்டு மாதிரி விஞ்ஞான பரிசோதனை பாணியில் அணுகி இருக்கிறியள்.

கடவுளிற்கு விருப்பமில்லாட்டி தனக்கு விருப்பம் இல்லை என்பதை உங்களுக்கு எப்படியும் ஏதோ ஒரு வழியில் காட்டியிருப்பார். ஆனா பகுத்தறிவு என்று கேக்கிற குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை கடவுளுக்கு இல்லை. நீங்கள் பாடசாலையில் படிக்கவில்லையா கடவுள் எப்படி எல்லாம் உங்களோடு தொடர்பெடுப்பார் என்று?

உயிரின் வயித்துப் பசி பிரச்சனைக்கு மேலுள்ள (1) விளக்கத்தைப் பார்க்கவும்.

கடவுளின் தீர்ப்பிற்கு எதிராக உதவி செய்ய வெளிக்கிடுவது குற்றவாளிகளிற்கு உதவுவது போன்றது என்று உங்கடை பகுத்தறிவிற்கு தெரியவில்லையா?

மெஞ்ஞானத்துக்காலை வேறு என்ன விளக்கம் வேண்டும் எண்டாலும் கேக்கவும் விளங்கப்படுத்தலாம். அப்புறம் Ricky Martin வேதம் vixx-xxi பற்றினதுகளை மாத்திரம் என்னட்டை கேட்டுடாதேங்கோ.

  • தொடங்கியவர்

ஐயோ குறுக்கண்ணை எனக்குத் தலை சுத்துது :lol:

்நன்றி குறுக்ஸ் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இந்து மதத்தில் ஆழ்ந்து பொதிந்திருக்கும் அர்த்தங்களை இவர்கள் அறிந்துகொள்ளாமல் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு குதர்க்கமாகக் கேள்வி கேட்டு தங்களை அறிவாளிகளாகவும் மேதாவிகளாகவும் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள். அது தான் இங்கு நடக்கிறது. அற்ப மானிடப்பதர்கள். :angry:

ஆ.. இந்துமதத்தை கிண்டல் செய்தால் இளைஞனுக்கு கோவம் பொத்துக்கொண்டு வருதோ? :P

மணி குறுக்கு சொன்னது ஒண்டும் உங்களுக்கு விளங்கவில்லையா? எனக்கும் விளங்கவில்லை. குறுக்கு, பிளீஸ் எக்ஸ்பிளைன் இட் ஒன்ஸ் மோர் டைம்.. :)

தூக்குகாவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி எடுப்பதால் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோசம் கிடைக்குமென்றால் நானும் ஒருக்கால் டிரை பண்ணிப்பார்க்க வேணும்.

ஆனா, தூக்கு காவடியில் தொங்கிறதுக்கு உழவு இயந்திர வண்டி எல்லாம் ஏற்பாடு செய்யவேணுமே! இத இஞ்ச எங்க போய் தேடுவன்? இதற்கு மாற்றீடாக ForkLift Truck அல்லது Crane ஐ பாவிக்கலாமா? இதுகள் பற்றி கு.சா அண்ணாவத்தான் கேக்கவேணும். அவர்தான் சரியான ஆள்! :)

இந்த உலகத்தில் எம்மைப் படைத்து செல்வச் செழிப்புகளை எல்லாம் தந்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றிக் கடனாக இதைக் கூட செய்யக் கூடாதா?

அப்பிடியே எங்கட தேச விடுதலைக்கும் ஒரு தீர்வைத் தரச்சொல்லுங்கோ, போராட்டத்தை கொஞ்சம் ஒத்திவைச்சுப் போட்டு எல்லாரையும் ஆளுக்கு பத்து தேங்காய் சேர்க்கச் சொல்லுவம்.

எல்லோருமே இந்துக்கள் தான். மற்றையவை எல்லாம் இடையில் புகுந்த மதங்கள். இந்து மதம் ஒன்றே மதம். ஆதி மதம். எனவே இந்துக்கள் இல்லாத இடமே இல்லை. தூணும் இந்து, தெருவும் இந்து, கணினியும் இந்து, இணையமும் இந்து, எல்லாமே இந்து. எல்லா மக்களையும் அரவணைப்பதே இந்து மதம்.

தான் படைத்த மாந்தர், தனிய மதம் தொடங்கிய போது, எல்லாம் வல்ல கடவுளும், என்ன பிஸியில் இருந்தாரோ?

தமிழனைக் காட்டுமிராண்டி என்பீர்கள், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்பீர்கள். இந்தப் பெரியாரிய வாதிகளே இப்படித்தான்.

தலைகீழா கவிட்டு விட்டியளே,

யாருக்காக தேங்காய் உடைக்கிறோம் கடவுளுக்காகத்தானே. ஏன்? எமது மக்கள் இன்பத்துடன் வாழவேண்டுமென்றுதானே? கடவுளுடன் நேர்த்திக்கடன் வைத்தால் கடவுள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார். கடவுள் எங்கள் மக்களைக் காப்பாற்றுவார். தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் உங்களுக்கு தெரியுமா? தேங்காயை நிலத்தில் போட்டு உடைக்கும் போது சிதறுகிறதல்லவா. அதாவது அது போல எமது மனமும் சிதறாமல் ஒருநிலைப்படுத்தப்பட்டு கடவுளையே நினைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைக்கப்படுகிறது. அதை விட வேறு சில அர்த்தங்களும் உள்ளன. பூமா தேவி செய்த பாவங்களால் கடவுள் அவளுக்கு கொடுத்த சாபம் தான் இது. தேங்காய் உடைப்பதன் மூலம் பூமா தேவிக்கு நோகும்.

இதெல்லாம் பாழாய்ப்போன எங்கட யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு முந்தியே தெரியாமல் போச்சே, அப்பவே தெரிஞ்சிருந்தால், இப்ப இப்பிடி நாடு நாடாய் நாடோடியாய் கையேந்த வேண்டி வந்திருக்காது, இந்த தேங்காய் மேட்டரை உந்த செல்வநாயகமாவது மேடை போட்டு கத்தின நேரங்களிலை செல்லியிருந்தா பெடியளும் துவக்கு தூக்கியிருக்காதுகள்.(என்ன யாழ்ப்பாணத்தில கொஞ்சம் தேங்காய் தட்டுப்பாடு வந்திருக்கும்)

கூட்டாக அரோகரா என்று சொல்லும் போது அந்த அரோகரா என்கிற ஒலி உலகமெலாம் பரவி கெட்டவற்றை நீக்கும். பூமியில் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கும். மன அமைதி என்பது எப்போது ஏற்படுகிறது? பூமி அமைதியாக இருந்தால் தானே?

அரோகரா

இப்பதானே விளங்குது, இப்ப எல்லாம் உந்த மேடை நிகழ்ச்சிகளிலை ஏன் எல்லாரையும் சத்தமா "ஓ" போடச் சொல்லீனம் எண்டு.

  • தொடங்கியவர்

இப்போது இந்தக் கோயில்களின் தறுமகர்த்தாக்கள் கோயில்களுக்குச் சொத்துச் சேர்க்கும் காரியத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அட தமிழன் தான் தான் சொத்துச் சேத்து வைச்சுப் போட்டு இண்டைக்கு கோத்தபாயாவுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் கொட்டி அழுகிறான் எண்டால் கடவுளுக்கும் சொத்துச் சேத்துக் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லண்டனில் உள்ள ஒரு ஆலயத்துக்கு 14 வீடுகள் சொத்தாக இருக்கிறதாம். இதைப் பார்த்து அந்த முருகனுக்கு 14 வீடுகளிருந்தால் நான் என்ரை அம்மனுக்கு 15 வீடாவது வாங்குவன் எண்டு மற்றவர்கள் போட்டி போட அடக் கடவுளே....

இந்தப் போட்டியில் சில ஆலயங்கள் தாயகத்தில் செய்து வந்த நற் பணிகளையும் குறைத்துக் கொண்டு போட்டியில் குதித்திருப்பதாகத் தகவல்.

்இது அவரவர் பாவ புண்ணியம். உங்களின் இயலாமையினால் அவர்கள் மீது நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள். கடவுள் அவர்களுக்கு வரம் கொடுத்திருக்கிறார். அவர்கள் கடவுளுக்கு சேவை செய்கிறார்கள், அதனால் அனைத்துச் செல்வங்களும் அவர்களைச் சேர்கிறது. போட்டி, பொறாமை என்று சொல்லி மதத்தையும், கடவுளையும், கோயிலையும் இழிப்பது நல்லதல்ல. மேலும் மேலும் பாவத்தைத் தேடிக்கொள்கிறீர்கள். :lol:

இப்போது இந்தக் கோயில்களின் தறுமகர்த்தாக்கள் கோயில்களுக்குச் சொத்துச் சேர்க்கும் காரியத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அட தமிழன் தான் தான் சொத்துச் சேத்து வைச்சுப் போட்டு இண்டைக்கு கோத்தபாயாவுக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் கொட்டி அழுகிறான் எண்டால் கடவுளுக்கும் சொத்துச் சேத்துக் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

்இது அவரவர் பாவ புண்ணியம். உங்களின் இயலாமையினால் அவர்கள் மீது நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள். கடவுள் அவர்களுக்கு வரம் கொடுத்திருக்கிறார். அவர்கள் கடவுளுக்கு சேவை செய்கிறார்கள், அதனால் அனைத்துச் செல்வங்களும் அவர்களைச் சேர்கிறது.

இது எப்பிடி இருக்கு?

Edited by தமிழினீ

இது எப்பிடி இருக்கு?

எப்படி இருக்கு? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.