Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் தமிழருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

குற்றத்த்தை ஒப்புக்கொண்டால் 12 வருடங்கள் சிறைத்தண்டனை. குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் மரணதண்டனை? சட்டம் ஒரு இருட்டறை என்று கூறுவது சரிதானோ. 

  • Replies 60
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

குற்றத்த்தை ஒப்புக்கொண்டால் 12 வருடங்கள் சிறைத்தண்டனை. குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் மரணதண்டனை? சட்டம் ஒரு இருட்டறை என்று கூறுவது சரிதானோ. 

இது உலகம் முழுவதிலும் உள்ள நடைமுறை என்று நினைக்கிறேன்

காலம் மற்றும் அரச செலவை குறைத்தல் மற்றும் குற்றத்தை ஒப்புக் கொண்டு திருந்துதல் என்பவற்றின் கூட்டுப்பலன் என்று நினைக்கிறேன். 

13 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

குற்றத்த்தை ஒப்புக்கொண்டால் 12 வருடங்கள் சிறைத்தண்டனை. குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் மரணதண்டனை? சட்டம் ஒரு இருட்டறை என்று கூறுவது சரிதானோ. 

இங்கும் கனடாவிலும் அப்படித்தான். Pleaded guilty என்றால் தண்டனை குறைப்பும் Pleaded NOT guilty என்று வாதாடி நீதித்துறைக்கு சவால்விட்டால், குற்றம் நிரூபிக்கப்படின் முழுமையான தண்டனையும் கிடைக்கும். அமெரிக்காவிலும் அவ்வாறுதான் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

இங்கும் கனடாவிலும் அப்படித்தான். Pleaded guilty என்றால் தண்டனை குறைப்பும் Pleaded NOT guilty என்று வாதாடி நீதித்துறைக்கு சவால்விட்டால், குற்றம் நிரூபிக்கப்படின் முழுமையான தண்டனையும் கிடைக்கும். அமெரிக்காவிலும் அவ்வாறுதான் என நினைக்கின்றேன்.

அப்போ நீங்கள் செய்யாத குற்றத்துக்கு போலிச் சாட்சியங்கள் அல்லது சூழ்நிலைச் சாட்சியங்கள்.. உங்களைக் குற்றவாளி ஆக்கி தூக்கிலிட்டால்.. அது செய்த குற்றமாகிடும்.. இல்லையா..??! நல்ல நீதிதான். 

இதனை நன்கு வலியுறுத்தி வக்காளத்து வாங்கனும். இந்த முறைமையை நீக்க அல்லது முன்னேற்றி உண்மையில் குற்றம் செய்யாதவர்களை பாதுக்காக்க கோருவது.. குற்றம் செய்பவர்களை தூண்டுவதாகும் என்று சொல்ல வேண்டும். அப்படித்தானே. நல்ல நியாயமான கருத்துப் பரிவர்த்தனை. 

35 minutes ago, nedukkalapoovan said:

என் நேரம் மிக பொன்னானது 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

குற்றத்த்தை ஒப்புக்கொண்டால் 12 வருடங்கள் சிறைத்தண்டனை. குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் மரணதண்டனை? சட்டம் ஒரு இருட்டறை என்று கூறுவது சரிதானோ. 

இதில் இருட்டு, மறைப்பு ஒன்றுமில்லை.

ஒரு நாட்டின் சட்டத்துறையின் அடிப்படை நோக்கம், சட்டப் படி ஒழுகும் பிரஜைகளுக்கு, சட்டமீறல் செய்யும் தரப்பிடமிருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் வழங்குவது தான். இதை வினைத்திறனாகச் செய்ய வேண்டுமென்றால் மேற்கு நாடுகளில் இருக்கும் இந்த ப்ளீ டீல் முறை சிறந்த வழி. இல்லையேல், வழக்கு இழுபடும், இது சந்தேக நபருக்கு தப்பிச் சுழித்தோட அவகாசம் கொடுக்கும் (இந்த சிங்கப்பூர் வழக்கிலேயே 22 மரண தண்டனைக் கைதிகளைச் சேர்த்துக் கொண்டு technicality அடிப்படையில் வழக்கை இழுக்க முயன்றிருப்பதைக் கவனியுங்கள்!). முக்கியமாக வழக்கை இழுத்தால், பாதிக்கப் பட்டவருக்கு நீதி கிடைப்பதும் தாமதமாகும்.

இதனால் தான், ப்ளீ டீல் கொடுத்து சந்தேக நபரிடமிருந்து பதிலாக வழக்கைத் தீர்க்க ஒத்துழைப்பு, தகவல் என்பன எடுத்து விடுவர்.

இது இருப்பதால் தான் மேற்கு நாடுகளில் நீதித் துறை ஒயில் போட்ட இயந்திரம் போல சீராக வேலை செய்கிறது. இது போன்ற முறைகள் இல்லாமையால் தான் இலங்கையில், இந்தியாவில் வழக்குகள் 10, 20 வருடங்கள் இழுபட்டு சந்தேக நபரும் சிறையில் வாட, பாதிக்கப் பட்டவரும் இறந்த பின்னர் பயனற்ற தீர்ப்புகள் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இங்கும் கனடாவிலும் அப்படித்தான். Pleaded guilty என்றால் தண்டனை குறைப்பும் Pleaded NOT guilty என்று வாதாடி நீதித்துறைக்கு சவால்விட்டால், குற்றம் நிரூபிக்கப்படின் முழுமையான தண்டனையும் கிடைக்கும். அமெரிக்காவிலும் அவ்வாறுதான் என நினைக்கின்றேன்.

பிரான்சில் இதை coupable non coupable என்று சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சொறீலங்காவிலும்... கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் இருந்து வித்தியா கொலை வழக்கு வரை.. கொலையாளிகள்.. அரச தரப்பு சாட்சியங்களாக மாறி தண்டனை குறைப்பு.. விடுவிப்பு பெற்றவர்கள் தானே. இதுதான் அண்ணே நீதி. குற்றம் செய்யாதவனை செய்தது என்று ஒப்புக் கொள்ள வைப்பது செய்தவை செய்தது என்று சொல்ல வைச்சு தண்டனைக் குறைப்புச் செய்வதும்.. பின் அவன் வந்து இன்னொரு கொலை செய்வதும்.. கடந்த ஆண்டு லண்டனில் ஒரு இளம் பெண் வீதியில் வைச்சு சுவருடன் அடித்துக் கொல்லப்பட்டார்.. அதற்கான குற்றவாளி.. கடந்த குற்றங்களில்.. குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனைக் குறைப்புப் பெற்று வெளில வந்தவன் தான். 

எனி அந்த இறந்து போன பெண்ணுக்கு நீதி..??! நீதி கிடைத்தும்.. அவர்கள் அனுபவிக்கவா போகிறார்கள்.

அதேபோல் தான் இந்த தமிழ் இளைஞனும்.. தான் குற்றமே செய்யவில்லை என்கிறான்.. ஆனால்.. குற்றம் செய்தனி என்று தூக்கில் போட்டு கொன்று விட்டார்கள். நாளை அவன் குற்றமே செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தால்.. அந்த இளைஞனின் உயிரை நீதிமன்றம் திருப்பி.. வழங்குமா..??

ஆக.. நீதிமன்றங்களும்.. நீதிபதிகளும்.. நீதி வழங்குவதில் விரைவு காட்ட வேண்டும்.. ஆனால்.. அவசரப்படக் கூடாது. அது தவறான நீதிக்கும் தண்டனைக்கும் வழிவகுக்கும். மேலும் மரண தண்டனை என்பது தவறான நீதிக்கு பின் மீளப் பெற முடியாத நீதியாகிவிடும். அதனால்.. அது தொடர்பில் நீடித்த அவதானமும் அவதானிப்பும் அவசியம். நீதிபதிகளும் மனிதர்களே. அங்கும் தவறுக்கும் பக்கச்சார்புகளுக்கும் இடமிருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் இந்த பார்வை  சரியானதே...

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், மற்றும் ஒரு சிலர் தவிர யாழ் களத்து ஜூரி கூட்டம் பையனுக்கு கிடைத்த மரணதண்டனைக்கு ஆதரவு போல் உள்ளதே. 

எல்லா விசயங்களுக்கும் புலிகள் காலத்துக்கு கூட்டிக்கொண்டுபோகும், புலிகள் காலத்து உதாரணம் காட்டும் நெடுக்காலபோவானுக்கு ஒரு விடயம் கூறுகின்றேன் போதைப்பொருள் விடயத்தில் புலிகள் பகிரங்க மரண தண்டனையே வழங்கினார்கள். பதின்மவயது பையன் கூட தட்டார்தெரு சந்திப்பக்கம் எங்கோ பகிரங்க மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது நினைவில் உள்ளது. பதினாறு வயசு சொச்சம் இருக்க வேண்டும். 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தனிப்பட்ட ரீதியாக மரண தண்டனையை ஆதரிக்கின்றேன்.

போதைப் பொருளை வர்த்தக நோக்கத்திற்காக வைத்திருப்பவர்களுக்கும், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்கின்றவர்களுக்கும், கொடுக்கப்படும் குறைந்தபட்ச தண்டனைதான் மரண தண்டனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.