Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
8999-300x200.jpg

எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/251604

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைகிறது!

Published By: DIGITAL DESK 5

02 MAY, 2023 | 12:07 PM
image

12.5 கிலோ கிராம் நிறை கொண்ட  லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம்   லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய சிலிண்டர்களின் விலைகளும் விகிதாசாரப்படி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை எரிவாயு விலை 1, 005 ரூபாவால் குறைக்கப்பட்டது. நாளை மீண்டும் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என நம்புகிறோம். நாளை  அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என அந்த நிறுசனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/154294

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமையல் எரிவாயு விலை குறைப்பு - புதிய விலை விபரங்கள்

Published By: T. SARANYA

03 MAY, 2023 | 02:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 3,638 ரூபாவாகவும் 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1,462 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 681 ரூபாவா  கவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைக்கு அமைய சகல எரிவாயு விநியோகஸ்தர்களும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் சகல விநியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய  கடந்த மாதம்  12.5 கி.கிராம் சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினாலும் 5 கி.கிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவினாலும் 2.3 கி.கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/154392

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைப்பு - லிட்ரோ நிறுவனம்

Published By: NANTHINI

04 JUN, 2023 | 12:14 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட புதிய விலை 3186 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1281 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைப்பு, தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், டொலரின் பெறுமதி குறைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, புதிய விலை நிர்ணயம் இன்று முதல் அமுல்படுத்தப்படும். சந்தையில் பற்றாக்குறை இல்லாமல் சிலிண்டர்களை விநியோகிக்க உறுதியான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியான முதித பீரிஸ் தெரிவித்தார்.

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் (மே) 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/156889

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சனாதிபதி என்ன பொருளாதார நிபுணரா..?! விலைகளை தீர்மானிப்பது ஏற்றுமதி இறக்குமதியை தீர்மானிப்பது எல்லாமே அவராக இருக்குது.

சொறீலங்காவில் இந்த ஒற்றையாட்சி.. சனாதிபதி சர்வாதிகார முறைமை ஒழியாமல்.. நாட்டுக்கு விமோசனம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, nedukkalapoovan said:

சனாதிபதி என்ன பொருளாதார நிபுணரா..?! விலைகளை தீர்மானிப்பது ஏற்றுமதி இறக்குமதியை தீர்மானிப்பது எல்லாமே அவராக இருக்குது.

சொறீலங்காவில் இந்த ஒற்றையாட்சி.. சனாதிபதி சர்வாதிகார முறைமை ஒழியாமல்.. நாட்டுக்கு விமோசனம் இல்லை. 

பத்தாம் வகுப்பு படித்த.. பசில் ராஜபக்சவை,
நிதி அமைச்சராக வைத்திருந்த நாட்டில் எதுவும் நடக்கலாம். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு !

gas.jpg
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபா  குறைக்கப்பட்டுள்ளது. விலைத்திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2,982 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, அந் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,198 ரூபாவாகும்.

இதுதவிர, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 37 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 561 ரூபா என்ற புதிய விலைக்கு அதனை விற்பனை செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/261334

Price-List-effective-from-05-07-2023.jpg

https://www.litrogas.com/price-list/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று நள்ளிரவு முதல் லாப் எரிவாயு விலை குறைப்பு !

laugfs-gas.jpg

இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் எரிவாயு  விலையை குறைக்க இந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதன் புதிய விலை 3690 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபா குறைக்கப்படவுள்ளது. இதன் புதிய விலை 1476 ரூபாவாகும்.

https://thinakkural.lk/article/261784

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிட்ரோவுக்கு இணையாக லாப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை !

gas.jpg

சந்தையில், லிட்ரோ சமையல் எரிவாயுக்கு இணையாக, லாப் சமையல் எரிவாயுவின் விலை, குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

12.5 கிலோகிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனை விடவும், லாப் எரிவாயு கொள்கலனின் விலை, 708 ரூபா அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு 2,982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 12.5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த விலை முரண்பாடு நுகர்வோருக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/262032

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விலையை குறைக்க லாப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு ஒரு மாதகால அவகாசம் - வர்த்தக அமைச்சர்

23 JUL, 2023 | 08:04 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்காக லாப் காஸ் நிறுவனத்துக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்கி இருப்பதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு விலைகளில் சமநிலையை பேணுவதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் அடுத்தவாரத்துக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 350ரூபாவினால் குறைக்கவேண்டும் என்றும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக்குவதற்கு இரண்டு கட்டங்களின் கீழ் விலை குறைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் லாப் நிறுவனத்துக்கு தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மற்றும் 12.5 லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலைகளுக்கிடையில் 708 ரூபா வித்தியாசம் காணப்படுகிறது. அந்தளவு தொகை வித்தியாசம் இருக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/160734

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குறித்து அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கான உள்நாட்டு எரிவாயு விநியோகம் நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள அவர், அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளதாகவும், இரு நிறுவனங்களினதும் உள்நாட்டு எரிவாயுக்கான ஒரே விலைகள் குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/265433

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

MT-100-Lakhs-Gas-Import-Muditha-Peiris-Litro-Gas.jpg

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் இன்றைய தினம் லிட்ரோ எரிவாயுவிள் விலை அதிகரிக்கப்படும் என அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், முன்னதாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிவாயு கையிருப்பில் உள்ளமையால் தற்போதைய நிலையில் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதைய விலையில் லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/266754

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் பெட்ரோலுக்கும் தண்ணீருக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மீண்டும் விலைவாசி முருங்கை மரத்தில் ஏறி உள்ளது🙄🙄

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விலை திருத்தம் குறித்து லாப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு !

laugfs-gas.jpg

லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் எந்தவித விலை திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோசன் ஜி.பீரிஸ் தெரிவித்துள்ளார்

எரிவாயு விலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் இலங்கையில் தற்போதைய நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இன்று முற்பகல் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/266846



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.