Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்!

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.samakalam.com/ஆதிவாசிகள்-சமூகத்தின்-பி/

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சாணக்கியன் விசேட கலந்துரையாடல்

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சாணக்கியன் விசேட கலந்துரையாடல்

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2023/1331490

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

http://www.samakalam.com/ஆதிவாசிகள்-சமூகத்தின்-பி/

26 minutes ago, தமிழ் சிறி said:

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

https://athavannews.com/2023/1331490

//தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின்// என்றால்.. என்ன அர்த்தம்?
எமது தமிழ் ஊடகங்கள்... செய்திகளை திருடி போடும் போது கூட.... 
ஈயடிச்சான் கொப்பி  மாதிரி, அதில் உள்ள எழுத்துப் பிழைகளை கூட 
கண்டு கொள்ளாமல் தமது தளத்தில் பதிந்து... 
செய்தியை, தமிழ் மக்களுக்கு வழங்கும் கொடுமையை என்ன என்று சொல்வது. 

இந்த இரண்டு ஊடகங்களை விட... இதே மாதிரி கண்ணை மூடிக் கொண்டு மற்றவனின் 
செய்திகளை தமதாக பதிந்த ஊடகங்கள் எம்மிடம் அதிகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

//தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின்// என்றால்.. என்ன அர்த்தம்?

தேசிய என்பது தரிசியா  என்று ஆகிவிட்டது.😁

மூளை இதையெல்லாம் கடந்து செய்தியில் சாராம்சத்தை உணர்ந்தால் போதும்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

தேசிய என்பது தரிசியா  என்று ஆகிவிட்டது.😁

மூளை இதையெல்லாம் கடந்து செய்தியில் சாராம்சத்தை உணர்ந்தால் போதும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு... கிழக்கில்,  சாணக்கியன் தலைமையில் பிரிந்து...
தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பு என்று, ஒரு புதிய கட்சி
உருவாகி விட்டது என்று நினைத்து விட்டேன்.   animiertes-tanz-smilies-bild-0009.gif 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசேட கலந்துரையாடல்!

By kugen
 
BATTINEWS.COM%2010.jpg

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசேட கலந்துரையாடல்.மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்வதையறிந்த ஆதிவாசிகள் சமூகத்தினர் அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்திருந்ததுடன், தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இதன்போது கடந்த காலத்தில் மருதங்கேணிக்குளம் பிரதேசத்தில் வசித்துவருகின்ற ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.

குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சமூகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் உள்ளிட்ட குழுவினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

watermarked-05.05.2023%20Photos%20(1).jpg

watermarked-05.05.2023%20Photos%20(2).jpg

watermarked-05.05.2023%20Photos%20(3).jpg

watermarked-05.05.2023%20Photos%20(4).jpg

watermarked-05.05.2023%20Photos%20(5).jpg

watermarked-05.05.2023%20Photos%20(6).jpg

watermarked-05.05.2023%20Photos%20(7).jpg

watermarked-05.05.2023%20Photos%20(8).jpg

watermarked-05.05.2023%20Photos%20(9).jpg

watermarked-05.05.2023%20Photos%20(10).jpg

watermarked-05.05.2023%20Photos%20(11).jpg

watermarked-05.05.2023%20Photos%20(12).jpg

watermarked-05.05.2023%20Photos%20(14).jpg

watermarked-05.05.2023%20Photos%20(15).jpg

watermarked-05.05.2023%20Photos%20(16).jpg

watermarked-05.05.2023%20Photos%20(18).jpg

watermarked-05.05.2023%20Photos%20(19).jpg

watermarked-05.05.2023%20Photos%20(20).jpg

watermarked-05.05.2023%20Photos%20(21).jpg

watermarked-05.05.2023%20Photos%20(22).jpg

watermarked-05.05.2023%20Photos%20(23).jpg

http://www.battinews.com/2023/05/blog-post_385.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தேசிய என்பது தரிசியா  என்று ஆகிவிட்டது.😁

மூளை இதையெல்லாம் கடந்து செய்தியில் சாராம்சத்தை உணர்ந்தால் போதும்!

ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்புத் தேவை. வெட்டி ஒட்டும்போதும் சரியாக ஒட்ட வேண்டும். 

சிங்களப் பிரதேசங்களில், அரச காரியாலயங்களில் googe translation  செய்து எழுதும்போது வரும்   தமிழ்க் கொலையைக் காணுபோது எங்களுக்குக் கோபம் வருமானால் இங்கேயும் கோபம் வரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்புத் தேவை. வெட்டி ஒட்டும்போதும் சரியாக ஒட்ட வேண்டும். 

சிங்களப் பிரதேசங்களில், அரச காரியாலயங்களில் googe translation  செய்து எழுதும்போது வரும்   தமிழ்க் கொலையைக் காணுபோது எங்களுக்குக் கோபம் வருமானால் இங்கேயும் கோபம் வரவேண்டும். 

கபிதன்... நீங்கள் சொல்வது  சரி என்றாலும்,
மூலச் செய்திகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று ஒரு களவிதி உள்ளது என நினைக்கின்றேன்.

அது... எழுத்துப் பிழையை, திருத்துவதற்கும் பொருத்துமா என்பதை 
நிர்வாகம் தான்,  உறுதிப் படுத்த வேண்டும்.

@இணையவன், @நிழலி, @நியானி@nunaviIan 

இணையங்களில் தினமும் பல பல எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள்.
அதனை வாசிக்கும் இளைய சந்ததி... அது  சரியான் சொல் என எடுத்துக் கொண்டால் 
வரும் ஆபத்து மிகப் பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்... நீங்கள் சொல்வது  சரி என்றாலும்,
மூலச் செய்திகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று ஒரு களவிதி உள்ளது என நினைக்கின்றேன்.

விடயம் அது அல்ல. 

விதிகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும். பிழையைப் பிழை என்று கூற வேண்டும். சரியைச் சரி என்று கூற வேண்டும். 

சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல் சிலவற்றை மாற்ற முடியாது. அதில் மொழிப் பாவனையும் பிரயோகமும் முக்கியம். 

குறிப்பாக, ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகம். அவர்கள் எழுத்துப் பிழை விட முடியாது. அதை ஏற்கவும் முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்புத் தேவை. வெட்டி ஒட்டும்போதும் சரியாக ஒட்ட வேண்டும். 

ஆய்வுக் கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்துவதுண்டு. ஆனால் எல்லாவற்றையும் திருத்த நேரம் இல்லை. இது எல்லாம் source இல் சம்பளம் எடுப்பவர்கள் செய்யவேண்டிய வேலை. நாம செய்வது சம்பளம் இல்லாத உத்தியோகம். மகாராஜா படியளந்தால் தாராளமாக திருத்தும் (திரிக்கும் அல்ல!) அளவுக்கு தமிழறிவு இருக்கு. ஆனால் எமது hourly rate அதிகம்!

21 minutes ago, தமிழ் சிறி said:

மூலச் செய்திகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று ஒரு களவிதி உள்ளது என நினைக்கின்றேன்.

அது... எழுத்துப் பிழையை, திருத்துவதற்கும் பொருத்துமா

விதியைப் பார்த்தேன். இப்படி இருக்கு..

  • தலைப்புக்கள் பதியப்படும் செய்திகளின்/பதிவுகளின் உள்ளடக்கத்துக்கு மாறாக இருப்பின் பொருத்தமானதாக மாற்றவும், தலைப்புகளில் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

குறிப்பாக, ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகம். அவர்கள் எழுத்துப் பிழை விட முடியாது. அதை ஏற்கவும் முடியாது. 

ஒரு அறையில்... கணணியை வைத்துக் கொண்டு,
ஊடகம் நடத்துபவர்களிடம்... தமிழ் அறிவோ, ஊடக தர்மத்தையோ...
எதிர் பார்க்க முடியுமா? 🙂
முதலில் இவர்கள் ஊடகம் நடத்துவதற்குரிய அடிப்படை அறிவையாவது 
பெற்று இருந்தால் தானே... மேற் சொன்னவைகளை நாம் எதிர் பார்க்க முடியும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

விதியைப் பார்த்தேன். இப்படி இருக்கு..

  • தலைப்புக்கள் பதியப்படும் செய்திகளின்/பதிவுகளின் உள்ளடக்கத்துக்கு மாறாக இருப்பின் பொருத்தமானதாக மாற்றவும், தலைப்புகளில் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.

இந்த, உபவிதி எனது கண்ணில் படவில்லை. நன்றி கிருபன் ஜீ. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

1) ஆய்வுக் கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்துவதுண்டு. ஆனால் எல்லாவற்றையும் திருத்த நேரம் இல்லை.

2) இது எல்லாம் source இல் சம்பளம் எடுப்பவர்கள் செய்யவேண்டிய வேலை.

3) நாம செய்வது சம்பளம் இல்லாத உத்தியோகம். மகாராஜா படியளந்தால் தாராளமாக திருத்தும் (திரிக்கும் அல்ல!) அளவுக்கு தமிழறிவு இருக்கு.

4) ஆனால் எமது hourly rate அதிகம்!

1)

2) தாங்கள் source ல் இல்லை என்பதைக் கூற விளைகிறீர்கள? நன்று. இப்போது இல்லை. அப்படித்தானே 😉

3) மகாராஜா அடிமைகளுக்குப் படியளப்பது இல்லை.  அடிமைகள் வேலை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். திரிக்கச் சொன்னால் திரிக்கவும் வேண்டும், மாவு. 

4) (hourly rate) வழங்கப்படும் சேவையைப் பொறுத்தது.  

ஊடகங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கிருபனுக்குக் கோபம் வரக் காரணம் என்ன ? 

33 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு அறையில்... கணணியை வைத்துக் கொண்டு,
ஊடகம் நடத்துபவர்களிடம்... தமிழ் அறிவோ, ஊடக தர்மத்தையோ...
எதிர் பார்க்க முடியுமா? 🙂
முதலில் இவர்கள் ஊடகம் நடத்துவதற்குரிய அடிப்படை அறிவையாவது 
பெற்று இருந்தால் தானே... மேற் சொன்னவைகளை நாம் எதிர் பார்க்க முடியும்.

கிருபன் கோவிக்கப் போகிறார். 🤣

(தவறுகளை ஏற்றுக் கடந்துபோகும் மனநிலை அபாயகரமானது. 👇

""மூளை இதையெல்லாம் கடந்து செய்தியில் சாராம்சத்தை உணர்ந்தால் போதும்!"")

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.