Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: நீதிமன்ற வளாகத்தில் இருந்து இழுத்துச் சென்ற போலீஸ் - என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இம்ரான் கான் கைது

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

28 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை 'இயல்புடன்' உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவர் ஃபவாத் செளத்ரி, தமது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர். அடையாளம் தெரியாத சிலரால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் ஐ.ஜி ஆகியோர் 15 நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்," என்று கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் முஸரத் சீமா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்துள்ள ஒரு காணொளி செய்தியில், "இப்போது இம்ரான் கானை சித்ரவதை செய்கிறார்கள். அவரை அடிக்கிறார்கள். அவரை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.

மற்றொரு தலைவரான ஷிரீன் மசாரி, "இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்குள் இம்ரான் கான் கடத்தப்பட்ட சம்பவம் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம். இந்த நாட்டில் காட்டாட்சி நடக்கிறது. போலீஸ் ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை அடித்து, சித்ரவதை செய்து, இம்ரான் கானை கடத்திச் சென்றுள்ளநர்," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த சம்பவம் குறித்த தகவலை உறுதிப்படுத்த, பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை.

பாகிஸ்தானில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு இணையாக சக்திவாய்ந்த அமைப்பாக அந்நாட்டு ராணுவம் இருக்கிறது. இந்நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பணியில் உள்ள ஐ.எஸ்.ஐ அதிகாரிக்கு எதிராக "மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுமத்துவதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியிருந்தது. அந்த கருத்து வெளிவந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இம்ரான் கான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

காதிர் அறக்கட்டளை வழக்கு என்ன?

தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் காதிர் அறக்கட்டளை வழக்கு என்பது பாஹ்ரியா என்ற நகரில் அந்த அறக்கட்டளைக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 530 மில்லியன் ரூபாய் மதிப்பிலான நிலம் தொடர்புடையது. அந்த அறக்கட்டளை, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியை தலைவராக கொண்ட அமைப்பாகும்.

https://www.bbc.com/tamil/articles/cx7004ee4pqo

  • கருத்துக்கள உறவுகள்

தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே..

இம்ரான்கான்..

நல்லவரா?

கெட்டவரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே..

இம்ரான்கான்..

நல்லவரா?

கெட்டவரா?

மனிசன் பேசாமல்  லண்டனிலையே இருந்திருக்கலாம்......பாக்கிஸ்தானில் என்றும் எந்தக்கட்சி வந்தாலும் ஒரே அரசியல் தான்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான் கைதானதை அடுத்து, பொலிஸார் - ஆதரவாளர்கள் மோதல்

Published By: Sethu

10 May, 2023 | 10:24 AM
image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள்களும் ஏற்பட்டன. இதனால் குறைந்தபட்சம் இருவர் பலியாகினர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் பிரதமரும் பிரிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிராக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட் நிலையில்,  முன்பிணை கோருவதற்காக, இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை சென்றிருந்த நிலையில், துணை இராணுவப் படையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். லாகூரில் படைத் தளபதியின் வாசஸ்தலம் மற்றும் ராவல்பிண்டியிலுள்ள இராணுவத் தலைமையகம் ஆகியவற்றுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் பல இடங்களில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

Police-clash-with-protesters-after-forme

கராச்சி, லாகூரில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இம்ரான் கானின் கைதுக்கு எதிராக பல மனுக்களை கட்சியின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்யவுள்ளனர் என பிரிஐ கட்சியின் உப தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஆதரவாளர்களை அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறும் அவர் கோரியுள்ளார். (Photos: AFP)

 

https://www.virakesari.lk/article/154937

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

மனிசன் பேசாமல்  லண்டனிலையே இருந்திருக்கலாம்......பாக்கிஸ்தானில் என்றும் எந்தக்கட்சி வந்தாலும் ஒரே அரசியல் தான்.:rolling_on_the_floor_laughing:

 

May be an image of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கானின் கைது "சட்டவிரோதம்" - உடனே விடுதலை செய்ய உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

இம்ரான் கான்

பட மூலாதாரம்,REUTERS

10 மே 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட விதம், சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கானை உடனடியாக விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை போலீஸார் இழுத்துச் சென்ற விதம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் வியாழக்கிழமை வாதிட்டனர்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி உமர் அட்டா பந்தியல். "உங்கள் (இம்ரான் கான்) கைது செல்லாது. எனவே அது தொடர்பான முழு நடவடிக்கையும் பின்வாங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறும், உயர்நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை அவர் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையையொட்டி உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

அவர் நீதிமன்ற வளாகத்தில் நடந்து வரும் காட்சியை அவரது பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி அதன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

என்ன நடந்தது?

முன்னதாக, இம்ரான் கைதுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்த நிலையில் போலீஸ் மேற்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கான் கைது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நகர காவல்துறை தலைவர் அக்பர் நாசிர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இம்ரான் கான் கைதுசெய்யப்படலாம் என்ற ஊகம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள பிபிசி இந்தி செய்தியாளர் பிரேர்ணா, பிபிசி உருது சேவையின் ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கியிடம் உரையாடினார்.

அந்த உரையாடலிலிருந்து இக்கட்டுரை தொகுக்கப்பட்டிருக்கிறது.

இம்ரான் கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருப்பவர்கள் யார்

பட மூலாதாரம்,EPA

எதற்காக கைது?

  • கேள்வி- இம்ரான் கான் கைது தொடர்பான பேச்சு நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், அவர் ஏன் திடீரென கைது செய்யப்பட்டார்?

பதில்- இது திடீரென நடந்ததல்ல. பின்னணியில் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருந்தது. பாகிஸ்தானில் ஊழலைத்தடுக்கும் பொறுப்பு உள்ள நிறுவனம் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB). அந்நிறுவனம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவரை நேரில் ஆஜராகுமாறும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும் கேட்டிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காததால் படிப்படியாக விஷயம் கைது வரை சென்றது.

இந்த விவகாரம் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போது அவர் ஆன்மிகம் மற்றும் சூஃபித்துவத்தில் பணியாற்றுவதற்காக பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி அளித்தார்.

அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்ட பஞ்சாப் அரசு நிலங்களை வாங்கியது. அந்த நிலத்தை வாங்குவதில் இம்ரான் கானும் அவரது மனைவியும் மோசடி செய்ததாக தேசிய பொறுப்புடைமை பணியகம் கூறுகிறது. சட்டவிரோதமாக நிலம் வாங்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?

  • கேள்வி- தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் கட்டுப்பாடு யார் கைகளில் உள்ளது மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது?

பதில்- தேசிய பொறுப்புடைமை பணியகம் சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய அமைப்பாக மாறியுள்ளது.

இது பர்வேஸ் முஷாரஃப் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வாயை அடைக்க அவர் இந்த அமைப்பை பயன்படுத்தினார்.

இந்த அமைப்பிடம் நிறைய அதிகாரங்கள் இருந்தன. தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒருவரை கைது செய்த பின்னர் அவரை 60 நாட்களுக்கு தான் காவலில் வைத்திருக்க முடியும்.

இம்ரான் கான் ஆட்சியின் போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர்களும் இதன் காவலில் இருந்துள்ளனர். இதில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோரும் அடங்குவர்.

ஆனால் இம்ரான் கானின் அரசு வெளியேறிய பிறகு, இந்த அமைப்பிற்கு பரந்த அதிகாரங்கள் இருப்பதாகவும், அதன் உதவியுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கருதிய புதிய அரசு, அதன் அதிகாரங்களைக் குறைத்துள்ளது.

இன்றைய தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட மிகக் குறைவான அதிகாரங்களோடு செயல்படுகிறது. எல்லா அரசுகளும் தங்கள் அரசியல் திட்டங்களை நிறைவேற்ற இந்த அமைப்பை பயன்படுத்தியுள்ளன.

இம்ரான் கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருப்பவர்கள் யார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • கேள்வி- இம்ரான் கானுக்கு என்னென்ன சட்ட வழிகள் உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை அவர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுள்ளார். இந்த முறை என்ன நடக்கும்?

பதில்- இது சட்ட விஷயத்தைக்காட்டிலும் அரசியல் ரீதியான விஷயமாகும். சட்டரீதியாக, அவர் தொடர்ந்து நிவாரணம் பெறுகிறார். ஆனால் பின்னர் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

நான் கூறியது போல், தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் சட்டங்கள் கடந்த ஆண்டு இருந்தைப்போல இப்போது வலுவாக இல்லை.

முன்பெல்லாம் ஜாமீன் கிடைப்பதே சிரமம். சிலருக்கு இரண்டு ஆண்டுகள் கூட ஜாமீன் கிடைக்காமல் இருந்துள்ளது.

ஆனால் ஒப்பீட்டளவில் இப்போது இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைப்பது எளிது.

ஆனால் பாகிஸ்தானில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை சட்ட அடிப்படையில் மட்டும் அல்லாமல் அரசியல் பின்னணியிலும் பார்க்க வேண்டும்.

இதற்குப் பிறகுதான் விஷயம் எங்கு முடியும் என்பதை நீங்கள் யூகிக்க முடியும். இம்ரான் கான் விஷயத்தில் கூட, சட்ட விவாதம் அவ்வளவு முக்கியமில்லை. உண்மையில் அரசியல் சூழ்நிலை முழு விஷயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இம்ரான் கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருப்பவர்கள் யார்

பட மூலாதாரம்,KHALID CHAUDHARY

 
படக்குறிப்பு,

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் போராட்டம் நடத்தினர்

இம்ரான் கானை நீதிமன்றம் ஆதரிக்கிறதா?

  • கேள்வி- பாகிஸ்தானில் அவரது சொந்தக் கட்சியைத் தவிர இம்ரானுடன் யார் இருக்கிறார்கள்? அவருக்கு எதிராக யார் உள்ளனர்? உதாரணமாக, ராணுவம், நீதித்துறை மற்றும் பிற அரசியல் குழுக்களின் நிலைப்பாடு என்ன?

பதில்- இம்ரான் கான் ஆட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவருக்கு நீதிமன்றத்தின் ஆதரவு அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நீதிமன்றத்தில் விசாரணை நடத்தும் நீதிபதி கூட தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர் என்றும் இம்ரான் கானுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்குவதாகவும், இம்ரான் கானின் அரசியல் எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பும் இம்ரானை கைது செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரது கைது வாரண்டை நீதிமன்றங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜரான போதெல்லாம் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இனி அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை குறைத்துக்கொள்ளப் போவதாகப் பாகிஸ்தான் ராணுவம் ஓராண்டுக்கு முன்பு வரை கூறி வந்தது.

கடந்த ஒன்றரை வருடங்களில் ராணுவம் அரசியலில் இருந்து தன்னை வெகுவாக ஒதுக்கி வைத்துக்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் பாகிஸ்தானின் அதிகார வட்டங்களில் இதனால் ஏற்பட்ட வெற்றிடம் நீதிமன்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இம்ரான் கானுக்கு நிறைய நிவாரணம் கொடுப்பதால் மக்கள் முன் இம்ரான் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல் தெரிகிறது. ராணுவத்தில் தனக்கு ஆதரவானவர்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் ஆதரவு தனக்கு கிடைத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இம்ரான் கான் பாகிஸ்தானின் சாதாரண அரசியல்வாதிகளைப் போல் இல்லை. அவர் ஒரு அசாதாரண சக்தியைப் பெற்றுள்ளார், அதை அவர் நன்றாகப் பயன்படுத்துகிறார்.

இம்ரான் கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருப்பவர்கள் யார்

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

இம்ரான் கானுக்கு ஆதரவாக லாகூரில் நடந்த போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு

  • கேள்வி- இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் விளைவு என்னவாக இருக்கும்? அரசுக்கும் இம்ரானுக்கும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். பாகிஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது, தேர்தல் நடக்குமா? உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் நீண்ட நாட்களாக கோரி வருகிறாரே?

பதில்- இந்தக் கைதின் விளைவு என்னவாக இருக்கும் என்பது அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தது.

ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் வெளியே வந்தால் அது அவரது அரசியலை மேலும் வலுவாக்கும்.

ஆனால் தேர்தல் முடியும் வரை அவர் சிறையில் இருந்தால் அது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தோல்வியை கொடுக்கக்கூடும்.

தெஹ்ரீக்-இ-இன்சாப் பாகிஸ்தானின் மற்ற கட்சிகளைப் போலல்லாமல் ஒரு தனிநபர் கட்சி.

இம்ரான் கான் சாலைக்கு வரும்போது மக்களும் வெளியே வருகிறார்கள். அவர் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லவில்லை என்றால், அது பிடிஐ கட்சிக்கு மிகவும் கடினமான நேரமாக அமையும்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன - முதலில், வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் போது கட்சி நிறைய சிக்கல்களைச் சந்திக்கும். இரண்டாவதாக, இம்ரான்கான் மக்கள் மத்தியில் இல்லையென்றால் கட்சி பின்னடைவை சந்திக்க நேரிடலாம்.

பங்குச் சந்தையில் தாக்கம்

இம்ரானின் கைது பாகிஸ்தானின் பங்குச் சந்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செவ்வாயன்று பங்குச் சந்தை குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலான சரிவுடன் முடிந்தது.

நாட்டின் அரசியல்-பொருளாதார சூழ்நிலையால் பங்குச்சந்தை ஏற்கனவே அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அது மேலும் சரிந்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தையில் கொந்தளிப்பு நிலவியது. ஒரு மணி நேரத்திற்குள் பங்குகளை விற்கும் அலைமோதல் தொடங்கியது.

இம்ரான் கானின் கைது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிகரித்து, பங்குச் சந்தையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை தரகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cpedd2j9jjzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான்கான் கொலைசெய்யப்படலாம்- அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம்

Published By: RAJEEBAN

12 MAY, 2023 | 03:07 PM
image

பாக்கிஸ்தானின் முன்னாள்பிரதமர் இம்ரான் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும்  பாக்கிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிக்காக தானும் தனது குடும்பத்தினரும் போராடுகின்றனர் என  மெல்பேர்னை சேர்ந்த அயேசா பக்ஸ் தெரிவித்துள்ளார்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை ஆனால் இம்ரானிற்கு நடந்தது அநீதி   என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fv6KkngacAAP-g0.jpg

இம்ரான்கானின் கைது அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை ஊடகங்கள் முடக்கப்பட்டமை இவை அனைத்தும் நியாயமற்ற விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாதத்திற்கு பின்னால் சீருடையுள்ளது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

இம்ரான்கானை பதவியிலிருந்து அகற்றுவதற்கு இராணுவம் சதி செய்தது என தெரிவிக்கப்படுவதாலும் அவரை கொலை செய்ய இராணுவம் சதி செய்தது என்ற குற்றச்சாட்டுகள் காரணமாகவும் இராணுவத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாக்கிஸ்தானின் 76 வருடகால வரலாற்றில் பாக்கிஸ்தான் இராணுவம் பல தடவைகள் தலையிட்டுள்ளது- எனினும் இம்ரான்கானின் குற்றச்சாட்டை அது நிராகரித்துள்ளது.

பாக்கிஸ்தானில் நீண்டகாலமாக தாமதமாகியுள்ள தேர்தல்களை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என மெல்பேர்ன் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்த பாக்கிஸ்தான் சமூகத்தை கிரான் வலி தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் கொல்லப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக சிட்னியை சேர்ந்த அசீம் மும்தாஜ் தெரிவித்துள்ளார்.

 

பாக்கிஸ்தான் இளைஞர்கள் கல்வியறிவுள்ளவர்கள் அவர்களிற்கு அமைப்பு முறை ஊழல் மிகுந்தது என்பது தெரியும்சில கட்டமைப்புகளை சிலர் கைப்பற்றி தீர்மானங்களை எடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களின் பின்னர் இம்ரான்கான் போன்ற ஒருவர் எமக்கு கிடைத்துள்ளார் அவரை போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவதளபதியே காரணம் - இம்ரான்கான்

12 MAY, 2023 | 04:33 PM
image

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார்.

என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம் என  இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.