Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைவெளி: Blood Diamond

Featured Replies

BLOOD DIAMOND

இயக்கம்: Edward Zwick

தயாரிப்பு: Gillian Gorfil, Marshall Herskovitz, Graham King, Paula Weinstein, Edward Zwick

எழுத்து: Charles Leavitt

நடிப்பு: Leonardo DiCaprio, Jennifer Connelly, Djimon Hounsou, Michael Sheen, Arnold Vosloo

இசை: James Newton Howard

ஒளிப்பதிவு: Eduardo Serra

படத்தொகுப்பு: Steven Rosenblum

விநியோகம்: Warner Bros. Pictures

வெளியீடு: United States December 8, 2006

நாடு: USA

மொழி: English, Mende, Krio

ktbdp.jpg

அடுத்த நாம் பார்க்க இருக்கிற படம் BLOOD DIAMOND. 1990களில் ஆபிரிக்காவில் உள்ள SIERRA LEONE என்ற இடத்தில் நடக்கிற போர்ச்சூழலை பின்னணியாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. சிம்பாவே முன்னாள் இராணுவ வீரனான DANNY ARCHER ஐயும், மீனவனான SOLOMON ஐயும் சுற்றித் தான் கதை நகர்கிறது. இரண்டு பேரும் ஆபிரிக்கர்கள். ஆனால் அடையாளமும் வாழ்க்கைச் சூழலும் வேறு வேறு. ஏன், அவர்களின் இலட்சியங்கள் கூட வேறு வேறு தான். ஒரு கட்டத்தில இரண்டு பேரினதும் இலக்கும் ஒன்றாகிறது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கான காரணங்கள் வேறு. அந்த இலக்கு என்னவென்றால் மிகவும் அரிதாகக் கிடைக்கிற ROSE DIAMONDஐ தேடுவது. அந்த முயற்சி இலகுவானது அல்ல. அவர்கள் பல ஆபத்துக்களை கடக்கவேண்டி வருகிறது. சாவினைத் தழுவுகிற சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது.

SOLOMON தன்னுடைய குடும்பத்தை பிரிந்து ஒரு DIAMOND பகுதியில் வேலை செய்கிறார். ஏன்? அங்கு இருக்கும் போராளிக் குழு SOLOMON வசிக்கும் கிராமத்தை சூறையாடுகிறது. SOLOMON இன் மகனை போராளிக் குழு பிடித்துச் செல்கிறது. SOLOMON ஐயும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் DIAMOND எடுக்கும் பகுதிக்கு வேலையாளாக பிடித்துச் செல்கிறது. அதனால் SOLOMON இன் குடும்பம் சின்னாபின்னமாகிறது. இப்படியாகப் பிரிந்து செல்லும் SOLOMON தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு வித்தியாசமான வைரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதை போராளி இயக்கம் கண்டுபிடிக்க இயலாதவாறு ஒரு இடத்தில ஒழித்து வைக்கிறார். இவர் ஒழித்து வைத்த விடயத்தை ஏதோ ஒரு வகையில் அறிந்து கொள்கிற அந்தப் போராளிக் குழுவின் தலைவன் அதை எடுத்துத் தரும்படி மிரட்டுகிறான். அந்த சந்தர்ப்பத்தில் இராணுவம் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்துகிறது. இதில் போராளிக்குழுத் தலைவனும் போராளிகளும் வேலை செய்த அடிமைத் தொழிலாளர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

ARCHER வைரக் கடத்தல் தொழிலில ஈடுபடுகிறவர். வித்தியாசமான வைரங்களைக் கடத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டு நபர்களுக்கு விற்பவர். தனது பல்லுக்குள் கூட வைரத்தை வைத்துக் கடத்தும் புத்திசாலி. ஒரு கட்டத்தில் இவரும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

SOLOMON ம் ARCHERம் சிறையில் சந்திக்கிறார்கள். அப்ப SOLOMON ஒழித்து வைத்திருக்கும் வைரம் பற்றி ARCHER தெரிஞ்சுகொள்கிறார். அந்த வைரத்தை இருவரும் சேர்ந்து தேடி எடுப்போம் என்கிறார் ARCHER. ஆனால், ARCHER இல் SOLOMON நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் ARCHER விடுவதாக இல்லை. SOLOMON இன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவுவதாக சொல்கிறார். முதலில் தனது குடும்பத்தைக் கண்டுபிடித்துத் தந்தால் அதன்பின் வைரத்தை எடுத்துத் தருவதாக SOLOMON சொல்கிறார்.

இதற்கிடையில அமெரிக்க பத்திரிகையாளரான MADDY BOWEN வைரக் கடத்தல பற்றியும், அது மக்களின்ர வாழ்க்கைல செலுத்தி தாக்கங்கள் பற்றியும், இதின்ர பின்னணிகள் பற்றியும் ஆராய்வதற்காக SIERA LEONE க்கு வருகிறார். தகவல்கள பெறுவதற்காக ARCHER உடன் நெருங்கிப் பழகுறார். ஆனா பிறகு ஒரு கட்டத்தில் அவரை நேசிக்கத் தொடங்குகிறார். பத்திரிகையாளரான MADDY BOWEN இன் துணையுடன் அகதி முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டுபிடிக்கிறார் SOLOMON.

அதன்பின் SOLOMON ம் ARCHER ம் இணைந்து வைரத்தைத் தேடிப் புறப்படுகிறார்கள். நீண்ட பயணத்தின் பின் வைரங்கள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அங்கே குழந்தைப் போராளிகள் இருப்பதைக் காண்கிறார்கள். அதற்குள் தனது மகனைத் தேடுகிறார். இறுதியாக தனது மகனை மீட்டாரா, அந்த வைரம் கிடைத்ததா, வைரக்கடத்தலின் பின்னணியும் குற்றவாளிகளும் யார் என்பது உலகத்துக்கு அறியக்கொடுக்கப்பட்டதா என்பதாக SOLOMON, ARCHER, MADDY BOWEN ஆகிய மூவரின் இலக்கையும் நோக்கி கதை நகர்கிறது.

மிகவும் உருக்கமான காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. தந்தை மகனுக்கிடையிலான பாச உணர்வு, அகதியாய்ச் சென்று குடும்பம் சின்னாபின்னாமாகி வாழ்கிற நிலை என்பன எம்மவர் போராட்ட சூழலுக்கும் பொருந்தக்கூடியனவாகவே உள்ளன. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள யுத்தக்காட்சிகள் அதன் தொழில்நுட்பத்தை ஒட்டி பிரமிக்க வைக்கிற போதும், பாதிக்கப்படுகிற மக்களின் வாழ்வை எண்ணி கண்ணீரை வரவழைப்பதாகவே இருந்தது. சுருக்கமான அதேநேரத்தில் கூர்மையான வசனங்கள் இடையிடையே படத்துக்கு வலுச் சேர்க்கின்றன. மண் என்பது வெறும் மண்ணல்ல அது அந்த மண்ணில் வாழ்கிற மக்களின் வாழ்வைப் பிரதிபலிப்பது, மக்களின் வரலாற்றைக் காவிச் செல்வது, உணர்வுபூர்வமானது என்பதை படத்தின் காட்சிகள் சுட்டிநிற்கின்றன. மண்ணுக்கும் எமக்கும் இடையிலான உறவு இலகுவில் மறந்துபோகக் கூடியதல்ல. பிறந்த மண்ணிலேயே எமது உயிர் பிரிய வேண்டும் என்று எம்மில் நிறைய பேருக்கு ஆசை இருக்கிறது. அது ஆசை அல்ல. அதுதான் மனித இயல்பு. இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள் அதையே சொல்லி நிற்கின்றன. ஒரு தந்தைக்கு ஒரு பிள்ளை எவ்வளவு பெரிய சொத்து என்பதை SOLOMON ஊடாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆபிரிக்கரின் (SOLOMON குடும்பம்) வாழ்வைப் பார்க்கிறபோது எமது நாட்டிலும் எமது மக்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் எல்லாம் கண்முன்னே வந்து நிற்கின்றன.

இந்தப் படத்தில் போராளிக் குழுக்கள் சித்தரிக்கப்பட்ட விதம், குழந்தைப் போராளிகள் மூளைச்சலவை செய்யப்படுவதாகக் காட்டப்படுவது போன்றன எந்த அரசியல் பின்னணியில் வெளிவந்தது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதே. SIERRA LEONE பற்றிய சரியான அரசியல், வரலாற்றுப் பின்புலம் இல்லாமல் இதுபற்றி என்னால் கதைக்கமுடியவில்லை. ஆனால், சில நாடுகளின் அரசியல் நலன் இதன் பின்னணியில் இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படத்தை எம்மவர்கள் கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம்.

இன்றும் நடக்கிற இந்த வைரக்கடத்தல் பிரச்சனையை மையமாக வைத்து அரசியல், காதல், ஆயுத வியாபாரம், குழந்தைப்போராளிகள் என்று பலவிடயங்களைத் தொட்டுச் செல்கிற இந்தப் படத்தை இயக்கியவர் EDWARD ZWICK. 1998 ம் இவருடைய படமான SHAKESPEARE IN LOVE என்ற படம் ஒஸ்கார் விருதை வென்றிருக்கிறது. ARCHER ஆக நடித்திருப்பவர் TITANIC நாயகன் LEONARDO DICAPRIO. ஊடகவியலாளர் MADDY ஆக நடித்திருப்பவர் JENNIFER CONNELLY. இவர் A BEAUTIFUL MIND மற்றது HULK போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். SOLOMON ஆக நடித்திருப்பவர் DJIMON GASTON HOUNSOU. இவர் இதே காலகட்டத்தில் வெளிவந்த ERAGON படத்திலும் நடித்திருக்கிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த THE ISLAND படத்திலும் நடித்திருக்கிறார்.

இத் திரைப்படம் பற்றி முன்னர் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டிருந்த தலைப்பு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19620

இத் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ தளம்:

http://blooddiamondmovie.warnerbros.com

இத் திரைப்படத்துக்கான முன்னோட்டக் காட்சி:

http://www.apple.com/trailers/wb/blooddiamond/large.html

உதவி: reuters

நிழற்படம்: http://ktarsis.files.wordpress.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரையுலகம் என்பது பற்றிய பார்வை தமிழருக்குள் வேண்டும் என்ற சிந்தனையோட தொகுத்து வழங்குற உங்கட ஆக்கதைப் பாராட்டுறன். நல்லதொரு முயற்சி. தமிழ் சினிமா உலகத்தையும் இவ்வாறே கலைக் கண்ணோட்டத்தோட பார்த்தால் எவ்வித பிரச்சனையும் வராது எண்டது என் கணிப்பீடு.

அது இருக்க, உங்களின் தொகுப்பினைக் கொங்சம் பெரிதாகவும், விளக்கமாகவும் வழங்கினால் ரெம்ப நல்லா இருக்கும் கண்டியளோ! இதில் விற்பனைப் பாதிப்பு எண்ட பிரச்சனை வரப்போவதில்லை. எனவே சாரம்சத்தோட நிறுத்தாமல் கதையின் விளக்கத்தை என்னும் கூட வழங்கினால் நல்லா இருக்கும் எண்டது தான் என் எதிர்பார்;ப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்படம் என்னிடமுள்ளது.பார்த்துவிட்ட

  • தொடங்கியவர்

நன்றி மதனராசா. முடிந்தளவு விபரமாக எழுத முயற்சிக்கிறேன். முழுக்கதையையும் எழுதினால் பிறகு படம் பார்க்கிற ஆர்வமும் போய்விடும். :) அதனால் தான் மேலோட்டமாக கதைச் சுருக்கத்தையும், படம் தொடர்பான இதர தகவல்களையும் இணைத்துள்ளேன்.

நன்றி நுனாவிலான். படத்தைப் பார்த்துவிட்டு படம் தொடர்பா உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலான். படத்தைப் பார்த்துவிட்டு படம் தொடர்பா உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :)

அண்மையில் வெளி வந்து திரைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் டை கார்ட்4, ரான்ஸ்போமர் போன்ற சுத்துமாத்து படங்களுடன் ஒப்பிடுகையில் இப்படம் வித்தியாசம் தான். ஒரு நாட்டில் நடைபெறும் வன்முறைகளை வெளி உலகத்துக்கு காட்டிய படம் என்ற வகையில் யதார்த்தமகாக படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த படத்தில் என்னை மிகவும் பாதிச்ச கட்டம் எதெண்டால், பத்திரிகை பெண்மணியாக வருபவர் (பிகர்) நிலத்தில் விழுவார், அட கால் தடுமாறி லேசா விழுவார். அந்த காட்சி ரொம்ப பாதிச்சிடிச்சு, ரொம்ப நொந்திருக்கும்....:o:( தமிழ் பட ஹீரோக்கள் எண்டால் எங்கிருந்தாலும் பறந்து வந்து நிலத்தில் விழவிடாமல் பாதுகாத்து ஒரு டூயட் பாடி இருப்பார்கள், ம்ம்ம்ம் முடியாமல் போயிட்டே....:huh::D

நன்றி மதனராசா. முடிந்தளவு விபரமாக எழுத முயற்சிக்கிறேன். முழுக்கதையையும் எழுதினால் பிறகு படம் பார்க்கிற ஆர்வமும் போய்விடும். :) அதனால் தான் மேலோட்டமாக கதைச் சுருக்கத்தையும், படம் தொடர்பான இதர தகவல்களையும் இணைத்துள்ளேன்.

TTn னிலை ஆங்கில திரைப்படங்களின் விமர்சனம் செய்தது நீங்களா..?? :o

இளைஞன் அண்ணா,

நன்றாகவும் விறுவிறுப்பாகவும் காட்சி எழுதிய விதம் நன்றாகவே இருகிறது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது,ஒரு சின்ன விண்ணப்பம் உங்களுக்கு இந்த துறையில் அதிக ஈடுபாடு உள்ளது போல் தெரிகிறது ஆகவே,சில காட்சிகளிள் வரும் காட்சிகளிற்கு உங்களுக்கு ஏதாவது சிந்தனைகள் இருந்தால் அதை இப்படி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று உங்கள் பார்வையில் வைத்தால் பலர் அதை உள்வாங்குவார்கள் பலவிதமான கருத்துகளும் வரும் என்பது எனது தனிபட்ட கருத்து,ஆங்கில படங்கள் பெரிதாக பார்க்காததன் காரணமாக என்னால் இந்த திரைகதையை பற்றி சொல்ல முடியவில்லை ஆனாலும் உங்களின் எழுதோட்டம் பார்க்க தூண்டுகிறது வாழ்த்துகள்.......... :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பிறர் ,பிற மொழி என்று பார்க்காமல் பிறரிடம் இருந்து கற்போம் என்ற கொள்கையோடு வாழ்ந்தால் நிறைய கற்று விடுவோம்.

  • தொடங்கியவர்

உங்களைப் பாதித்த காட்சியைப் பற்றி மிகவும் உருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் டன். :) உண்மைச் சூழலை மையமாக வைத்து வெளிவந்த படமென்பதால் அதில் யதார்த்தத் தன்மைகள் இருப்பது இயல்பு.

Transformers இன்னும் பார்க்கவில்லை. Die Hard பார்த்தேன். அந்தப் படத்தில் தந்தை மகளுக்கிடையில் இருக்கும் பாசப் போராட்டத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய உலகில் கணினி வலைப்பின்னல் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், பொது இடங்களில் வீடியோ கமாராக்கள் வகிக்கும் பங்கு என்ன என்பதையும் படத்தில் காணலாம். action காட்சிகள் நிறைய உண்டு. இந்தப் படம் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.

###

TTn னிலை ஆங்கில திரைப்படங்களின் விமர்சனம் செய்தது நீங்களா..?? :)

:lol:

###

நன்றி யமுனா. ஆர்வம் இருக்கிறது. ஆனால், அந்தளவு நுணுக்கமாக அணுகுவதில்லை. நேரம் அமைந்தால் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதுகிறேன்.

###

உண்மைதான் நுனாவிலான். சிறியவர் பெரியவர், நல்லவர் கெட்டவர், வெள்ளையர் கறுப்பர் என்று பாகுபாடுகள் இன்றி எல்லோரிடத்தில் இருந்தும் நல்லதை பயனுள்ளதை கற்றுக்கொள்வதே எம்மை மேன்மைப்படுத்தும். பிறமொழி என்றோ பிற கலாச்சாரம் என்றோ எதையும் ஒதுக்கி வைக்காமல் எங்களுக்கு தேவையானதை எங்கள் முன்னேற்றத்துக்கு உதவக்கூடியதை எங்கிருந்தும் கற்றுக்கொள்ளலாம். நன்றி :)

Edited by இளைஞன்

இளைஞன், படத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இன்று தான் படத்தை பார்த்தேன்.

படத்தில் சொல்லும் கதை அதாவது வைரம், தங்கம் போன்றவற்றிற்காகவே உள் நாட்டு போர்களை நீடித்து பேணும் விடயம் பற்றி என்னுடன் படித்த ஆபிரிக்க நண்பர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.

குறிப்பாக கொங்கோ குடியரசை சேர்ந்தவர்களும், அதை சூழ உள்ள நாடுகளை சேர்ந்தவர்களும் அடிக்கடி சொல்லும் வசனம், எங்கள் நாட்டில் தங்க சுரங்கமும், வைர சுரங்கமும், ஆனால் தங்க, வைர வர்த்தக மையம் அற்வேப்பன், பெல்ஜியத்தில். எங்கள் மக்கள் சண்டையில் சாக, உணவின்றி இருக்க, யாரோ பணம் பண்ணுகிறார்கள்.

படத்தை பார்த்த போது அவர்கள் சொன்னவை மீண்டும் நினைவுக்கு வந்தது.

அங்கோலா எண்ணேய், கொங்கோ தங்கம், வளம் உள்ள எல்ல நாடுகளுமே உள் நாட்டு சண்டைகளில் மூழ்கி கிடந்தவை, கிடக்கிறன.

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.