Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
England FlagEngland    (25.5/50 ov) 123/7

England chose to bat.   Current RR: 4.76  • Last 5 ov (RR): 29/2 (5.80)   Live Forecast:ENG 180

  • Replies 546
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:
England FlagEngland    (25.5/50 ov) 123/7

England chose to bat.   Current RR: 4.76  • Last 5 ov (RR): 29/2 (5.80)   Live Forecast:ENG 180

முத‌ல் சொன்ன‌து போல் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இங்லாந் இல‌ங்கையிட‌ம் தோல்வி அடையிற‌து 
அது இண்டைக்கும் ந‌ட‌க்க‌ போகுது அண்ணா 

 

  • கருத்துக்கள உறவுகள்
இன்றோடு இங்கிலாந்தின் semi-final கனவு போய்விடும்போலுள்ளது!! எல்லாம் Ben Stokes ஐ திரும்பவும் சேர்த்ததன் விளைவு! நல்லா இருந்த டீமை உடைத்துவிட்டார்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போதைய இலங்கை 100 ஓட்டங்களுக்குள் சுருளக்கூடிய அணி. எனவே ஆட்டம் முடிந்தபின்னர் தான் தெரியும் யார் வென்றார்கள் என. 

மத்தியூஸ் வந்தது ஒரு புத்துணர்ச்சி. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் என முன்பு ஓர் செய்தி பார்த்தேன். காயங்கள் அருமையான ஒரு வீரர் சோபிக்க முடியாமல் செய்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நியாயம் said:

 

தற்போதைய இலங்கை 100 ஓட்டங்களுக்குள் சுருளக்கூடிய அணி. எனவே ஆட்டம் முடிந்தபின்னர் தான் தெரியும் யார் வென்றார்கள் என. 

மத்தியூஸ் வந்தது ஒரு புத்துணர்ச்சி. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் என முன்பு ஓர் செய்தி பார்த்தேன். காயங்கள் அருமையான ஒரு வீரர் சோபிக்க முடியாமல் செய்துவிட்டது. 

அஞ்ச‌லோ மத்தியூஸ் திற‌மையான‌ வீர‌ர் 

காய‌ங்க‌ளால் அவ‌ரின் விளையாட்டு முன்பு போல் இல்லை

இன்று ந‌ல்ல‌ ப‌ந்து போட்டு இருந்தார்

 

குசால் பேரா வார‌தும் வெளியில் போவ‌தும் தான் அவ‌ரின் விளையாட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:
இன்றோடு இங்கிலாந்தின் semi-final கனவு போய்விடும்போலுள்ளது!! எல்லாம் Ben Stokes ஐ திரும்பவும் சேர்த்ததன் விளைவு! நல்லா இருந்த டீமை உடைத்துவிட்டார்கள்?

வீன் ஸ்ரொக் ஓய்வை அறிவிக்க‌
தேர்வுக் குழு அவ‌ரை அணியில் மீண்டும்  சேர்த்த‌து

இங்லாந் வீர‌ர்க‌க் எல்லாரும் தான் தோல்விக்கு கார‌ண‌ம்

த‌னிய‌ ஸ்ரொக்கை குறை சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை ந‌ண்பா
 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பையன்26 said:

வீன் ஸ்ரொக் ஓய்வை அறிவிக்க‌
தேர்வுக் குழு அவ‌ரை அணியில் மீண்டும்  சேர்த்த‌து

இங்லாந் வீர‌ர்க‌க் எல்லாரும் தான் தோல்விக்கு கார‌ண‌ம்

த‌னிய‌ ஸ்ரொக்கை குறை சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை ந‌ண்பா
 

Jos Butler இன் captaincy ம் ஒரு சத்தத்திற்கு உதவாது. மற்றது coach, இவ்வளவு IPL மேட்சுகளை பார்த்தும் பெங்களூரில் chase பண்ணுவதுதான் சுலபம் என்று தெரியாதிருக்கிறார்களே!! வயதுபோன எல்லாரையும் வீட்டுக்கனுப்பி இளையவர்களை சேர்த்து புது டீம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த டீமில் 30 வயதான லிவிங்ஸ்டனே மிகவும் வயது குறைந்தவராம்!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

Jos Butler இன் captaincy ம் ஒரு சத்தத்திற்கு உதவாது. மற்றது coach, இவ்வளவு IPL மேட்சுகளை பார்த்தும் பெங்களூரில் chase பண்ணுவதுதான் சுலபம் என்று தெரியாதிருக்கிறார்களே!! வயதுபோன எல்லாரையும் வீட்டுக்கனுப்பி இளையவர்களை சேர்த்து புது டீம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த டீமில் 30 வயதான லிவிங்ஸ்டனே மிகவும் வயது குறைந்தவராம்!!🤣

உண்மை தான் திற‌மையான‌ ப‌ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் இப்ப‌ விளையாடின‌ ப‌ல‌ர் ஓய்வை அறிவிப்பின‌ம்.............இங்லாந் வெளிய‌ மீத‌ம் இருக்கும் போட்டிக‌ளில் கூட‌ தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

ப‌ட்ல‌ருக்கு இந்த‌ உல‌க‌ கோப்பை ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை

தொட‌க்க‌ வீர‌ர் ஜோனி விர‌ச்ரொவ் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் ஐபிஎல்/2020 அளவுக்கு அதிகமாக விளையாடியதால் 50 ஓவர் விளையாட கஸ்டப்படுகின்றார்களோ. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

முத‌ல் சொன்ன‌து போல் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இங்லாந் இல‌ங்கையிட‌ம் தோல்வி அடையிற‌து 
அது இண்டைக்கும் ந‌ட‌க்க‌ போகுது அண்ணா 

 

ம்ம் நடந்து விட்டது பையா.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

ம்ம் நடந்து விட்டது பையா.

என‌து நினைவில்

இங்லாந் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் தோத்த‌து

 

2007

2011

2019

2023

இந்த‌ ஆண்டுக‌ளில் தோத்த‌து நினைவு இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 அக்டோபர் 2023, 07:43 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பெங்களூருவில் இன்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது.

இலங்கையின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 33.2 ஓவர்களில் 156 ரன்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி சுருண்டது. இங்கிலாந்தை வீழ்த்தி தரவரிசையில் இலங்கை அணி திடீர் முன்னேற்றம் பெற்றுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோர் பென் ஸ்டோக்ஸ் சேர்த்த 43 ரன்கள்தான். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் ஏதும் ஸ்கோர் செய்யவில்லை.

இன்னும் 100 பந்துகள் தாராளமாக மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கடந்த இரு போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்து அணி 55.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்துள்ளது.

கடந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி கண்டது. ஆனால், இந்த ஆக்ரோஷமான ஆட்டம் அனைத்து நேரத்திலும் கைகொடுக்காது என்பதை அந்த அணி புரிந்திருக்கவில்லை.

இங்கிலாந்து அணி தனது புதுவித ஆக்ரோஷ ஆட்டத்துக்கு இந்த உலகக்கோப்பைத் தொடரில் விலை கொடுத்து வருகிறது.

 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணியிடம் வெற்ற பெற வேண்டும் என்ற வேட்கை, துடிப்பு தெரிந்தது. அதனால்தான் பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில் லைன் லென்த் மாறாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.

இவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு சரியான சவாலாக இருந்தது.

ஃபீல்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிய இலங்கை அணி, இரண்டு ரன் அவுட்களை செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கேட்ச்ளையும் கோட்டைவிடாமல் பிடித்து, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தது. 18 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து பந்துவீசிய ஏஞ்சிலோ மாத்யூஸ், இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை சாய்த்து நெருக்கடி அளித்தார்.

இங்கிலாந்து அணி 85 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 70 ரன்களை சேர்ப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் குறிப்பாக 122 ரன்களில் இருந்து 155 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி பறிகொடுத்தது.

இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்(3), கேப்டன் பட்லர்(8), லிவிங்ஸ்டோன்(1), மொயீன் அலி(15), கிறிஸ் வோக்ஸ்(0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ஐபிஎல் தொடரில் மஞ்சள் ஆடை அணிந்து சிஎஸ்கே அணிக்காக பேட் செய்யும்போது பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசிய மொயீன் அலி, தாய்நாட்டுக்காக ஆடும்போது, உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் சொதப்பியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் விளையாடியதே 33.2 ஓவர்கள்தான். ஆனால் அதில் 123 பந்துகளை டாட் பந்துகளாக விட்டுள்ளனர். அதாவது 20 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்கவில்லை. மீதமுள்ள 13 ஓவர்களில்தான் இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்த்துள்ளனர்.

தரவரிசையில் இலங்கை அணி திடீர் முன்னேற்றம்

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 157 ரன்கள் என்னும் எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணி, 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.250 ஆகக் சரிந்துவிட்டது.

இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேநேரம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 2 புள்ளிகளுடன் 9வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இனிமேல் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் இங்கிலாந்து வென்றால்கூட அரையிறுதி வாய்ப்பு வெறும் கனவுதான்.

இலங்கை தரப்பில் பதும் நிசங்கா(77), சமரவிக்ரமா(65) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து, 137 ரன்கள் சேர்த்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஒரு நாள் போட்டியில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்த இலங்கையும் இந்த உலகக் கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் இருக்கின்றன.

 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் அதிர்ச்சியான முடிவுகளை வழங்கியுள்ளது. 4 போட்டிகளில் மோதிய இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது.

இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 3 போட்டிகளில் தோற்று, 2 புள்ளிகளுடன் உள்ளது.

முதல் பந்திலேயே பீதி கிளப்பிய இலங்கை

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆட்டத்தைத் தொடங்கினர். இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா வீசிய முதல் ஓவர், முதல்பந்தை பேர்ஸ்டோ எதிர்கொண்டார்.

மிகத் துல்லியமாக, இன்ஸ்விங்கரில் வந்த யார்கர், பேர்ஸ்டோவின் விக்கெட்டை குறிவைத்து வீசப்பட்டது. ஆனால், லாகவமாக பேட்டாலும், கால்காப்பிலும் தடுத்ததால் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. முதல் பந்திலேயே பேர்ஸ்ட்டோவுக்கு பீதியை கிளப்பியது இலங்கை அணி.

இங்கிலாந்தின் மோசமான ஃபார்மிற்கு காரணம் என்ன?

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • ஐம்பது ஓவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக, குறைவான அளவில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியதுதான், குறைந்த ரன்கள் சேர்க்க முக்கியக் காரணம்.
  • பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல முக்கிய வீரர்களைத் தேர்வு செய்யவில்லை. காயத்தாலும் சிலரைத் தேர்வு செய்ய முடியாதது பெரிய பலவீனமாக அமைந்தது. குறிப்பாக ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் போன்றோர் அணியில் இல்லாதது பெரிய பலவீனம்.
  • இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தங்கள் மண்ணில் நடந்தபோது, அதிகமாக ஸ்விங் செய்ய வாய்ப்பு இருந்தது. வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களாக இங்கிலாந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், இந்திய ஆடுகளங்கள் அவ்வாறு இல்லாதது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய பலவீனம்.
  • இந்தியாவின் காலநிலை, தட்பவெட்பநிலை ஆகியவையும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு போட்டியில் நல்ல வெயிலும், மற்றொரு நகரில் நடக்கும் போட்டியில் இதமான சூழலும் என மாறி, மாறி இருப்பது அவர்களுக்கு சௌகரியக் குறைவை ஏற்படுத்தியது.
  • குறிப்பாக தொடக்க வீரராக வந்து இங்கிலாந்து ரன்ரேட்டை கடந்த உலகக்கோப்பையில் எகிறச் செய்த ஜேஸன் ராய் இந்த உலகக்கோப்பையில் இல்லாததும், வேகப்பந்துவீச்சாளர் பிளங்கெட் இல்லாததும் பெரிய பின்னடைவு. இருவரின் இடத்தையும் நிரப்ப எந்த வீரரும் தற்போது அணியில் இல்லை.

https://www.bbc.com/tamil/articles/cyd1ler0797o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Pakistan FlagPakistan     (35.6/50 ov) 198/5

Pakistan chose to bat.

Current RR: 5.50    • Last 5 ov (RR): 44/0 (8.80)  Live Forecast:PAK 275

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திறமை மூலம் தெரிவாளர்களை சிந்திக்கவைத்த மெத்யூஸ்; நடப்பு சம்பியன் இங்கிலாந்தை சரித்தது இலங்கை

27 OCT, 2023 | 07:12 AM
image

(பெங்களூருவிலிருந்து நெவில் அன்தனி)

பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 25ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

அணிக்கு மீளழைக்கப்பட்ட முன்னாள் அணித் தலைவர் சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் சிறப்பாக பந்துவீசி இரண்டு இணைப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்பத்தி இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

அத்துடன் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் மெத்யூஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தெரிவாளர்களை சிந்திக்கவைத்துள்ளார்.

உலகக் கிண்ணத்திற்கான இறுதி குழாம் அறிவிக்கப்பட்டபோது ப்ரமோதய விக்ரமசிங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் ஏஞ்சலோ மெத்யூஸை இறுதி அணியில் சேர்ப்பது குறித்து கவனம் செலுத்தாது எவ்வளவு தவறு என்பதை மெத்யூஸின் இன்றைய ஆற்றல்கள் புரிய வைத்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

மெத்யூஸின் ஆற்றலுடன் லஹிரு குமார, கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ன ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம ஆகியோரின் ஆட்டம் இழக்காத அரைச் சதங்களும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தன.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 25.4  ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்தை இலங்கை வெற்றிகொண்டது இது 5ஆவது தொடர்ச்சியான தடவையாகும். 2007, 2011, 2015, 2019 ஆகிய உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இலங்கை 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.

எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

உலகக் கிண்ணத்தில் 2ஆவது தொடர்ச்சியான தடவையாக இரண்டு குசல்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

குசல் பெரேரா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக் குறைவான அடியினால் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் குசல் மெண்டிஸ் தவறான அடி தெரிவினால் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் சதீர சமரவிக்ரமவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 77 ஓட்டங்களுடனும் சதீர சமரவிக்ரம 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 65 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்த உலகக் கிண்ண அத்தியாயத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 4ஆவது தொடர்ச்சியான அரைச் சதம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஜொனி பெயாஸ்டோவ், டாவிட் மலான் ஆகிய இருவரும் இலங்கையின் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகிய இருவரையும் இலகுவாக எதிர்கொண்டு வேகமாக ஓட்டங்களைக் குவித்து ஆரம்ப விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், 7ஆவது ஓவரில் பந்து வீச அழைக்கப்பட்ட அனுபவசாலியான ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 3ஆவது பந்தில் டாவிட் மாலனை ஆட்டமிழக்கச் செய்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

டாவிட் மலான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் இங்கிலாந்தின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

ஜோ ரூட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெத்யூஸ் - மெண்டிஸ் ஜோடியினரால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்

அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவினால் ஆட்டம் இழக்கச்செய்யப்பட்டார்.

மறு பக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்ளைப் பெற்ற ஜொனி பெயாஸ்டோவை கசுன் ராஜித்த வெளியேற்றினார்.

அவரைத் தொடர்ந்து லஹிர குமாரவின் பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அணியை வீழச்சியிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயீன் அலியின் விக்கெட்டை மெத்யூஸ் கைப்பற்றி ஆட்டத்தில் இரண்டாவது தடவையாக திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

மொயின் அலி 15 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ் கொடுத்த தாழ்வான பிடியை வலப்புறமாகத் தாவி சமீர சமரவிக்ரம பிடித்தார்.

ஆனால், அந்தப் பிடி நேர்த்தியாக எடுக்கப்படவில்லை என்ற சந்தேகத்தில் 3ஆவது மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நீண்டநேரம் சலன அசைவுகளைப் ஆராய்ந்த 3ஆவது மத்தியஸ்தர், கிறிஸ் வோக்ஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்க வோக்ஸ் நம்பமுடியாதவராக அதிருப்தியுடன் களம் விட்டகன்றார்.

இதேவேளை பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சாளர்களை சிதறடிக்கும் வகையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. அவர் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஆதில் ராஷித் (2) ரன் அவுட் ஆனதுடன் மார்க் வூட் 5 ஓட்டங்களுடன் தீக்ஷனவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.

டேவிட் வில்லி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயன்: லஹிரு குமார.

https://www.virakesari.lk/article/167828

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

உண்மை தான் திற‌மையான‌ ப‌ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் இப்ப‌ விளையாடின‌ ப‌ல‌ர் ஓய்வை அறிவிப்பின‌ம்.............இங்லாந் வெளிய‌ மீத‌ம் இருக்கும் போட்டிக‌ளில் கூட‌ தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

ப‌ட்ல‌ருக்கு இந்த‌ உல‌க‌ கோப்பை ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை

தொட‌க்க‌ வீர‌ர் ஜோனி விர‌ச்ரொவ் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு

பந்து வீச்சாளர் ஆச்சருக்கு  என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

பந்து வீச்சாளர் ஆச்சருக்கு  என்ன நடந்தது?

காய‌ப் ப‌ட்டு அதில் இருந்து மீண்டு வ‌ந்தாப் பிற‌க்கு அவ‌ரின் ப‌ந்து வீச்சு ச‌ரியே இல்லை
நிறைய‌ ஓட்ட‌த்தை விட்டுக் கொடுக்கிறார்

ந‌ட‌ந்து முடிந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ ஒரு சில‌ விளையாட்டில் தான் விளையாட‌ விட்ட‌வை...........இவ‌ரின் ப‌ந்துக்கு சாத்து சாத்து  என‌ சாத்தின‌ம்🙈🙈🙈🙈🙈

அது தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ரை தெரிவு செய்ய‌ வில்லை.............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan

வ‌வுமா திருப்ப‌ க‌ப்ட‌ன் ப‌த‌வி காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டார்
ஒரு நாள் போட்டிக்கு இவ‌ர் ஒக்கே 20ஓவ‌ர் விளையாட்டில் ப‌ந்தை வீன் அடிப்பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Pakistan FlagPakistan                         270
South Africa FlagSouth Africa                (42.2/50 ov, T:271) 253/8

South Africa need 18 runs in 46 balls.

Current RR: 5.97   • Required RR: 2.34   • Last 5 ov (RR): 18/2 (3.60)

Win Probability:SA 76.68%  PAK 23.32%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 ஓட்டங்கள் 36 பந்துகள் இரண்டு விக்கெட்டுகள் கைவசம், தென்னாபிரிக்கா வெல்லுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Pakistan FlagPakistan                             270
South Africa FlagSouth Africa                      (46.2/50 ov, T:271) 265/9

South Africa need 6 runs in 22 balls.

Current RR: 5.71  • Required RR: 1.63 • Last 5 ov (RR): 15/1 (3.00)

Win Probability:SA 92.89%  PAK 7.11%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Pakistan FlagPakistan      270
South Africa FlagSouth Africa         (47.2/50 ov, T:271) 271/9

South Africa won by 1 wicket (with 16 balls remaining)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pt2.jpg

புள்ளிப் பட்டியலில் முதலிடம் தென்னாபிரிக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

pt2.jpg

புள்ளிப் பட்டியலில் முதலிடம் தென்னாபிரிக்கா.

பாக்கிஸ்தான் ம‌ற்றும் இங்லாந் வெளிய‌

சிமி பின‌லுக்கு இவ‌ர்க‌ள் வ‌ர‌க் கூடும் என்று நினைத்தேன்
ப‌டு தோல்வி அடைஞ்சு வெளி ஏறிட்டின‌ம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கையில் கிடைத்த வெற்றியை நழுவ விட்ட பாகிஸ்தான் - இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

PAK vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

27 அக்டோபர் 2023

உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாகவே கருதப்பட்டது. ஆனால், நடுவரின் முடிவால் கடைசி விக்கெட் தப்பிப் பிழைக்க நூலிழையில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

 

பாகிஸ்தான் டாஸ் வென்று முதல் பேட்டிங்

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி டாஸில் வென்றதும், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபீக்கும், இமாம் உல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.

ஆட்டத்தின் 5-வது ஓவரிலேயே ஜான்சென் வீசிய பந்தில் அப்துல்லா ஷஃபீக் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 9 ரன் மட்டுமே சேர்த்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களை கடந்துள்ளது.

பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசம் வழக்கம் போல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள சற்று நிதானம் காட்டினார். ஆனால் மறுமுனையில் இமாம் உல் ஹக் சிறிது நேரத்தில் ஜான்சென் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபாத்பாந்தவனாக திகழும் முகமது ரிஸ்வான் உள்ளே வந்தார்.

 

மீண்டும் ஏமாற்றம் தந்த பாபர் ஆசம்

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரும், பாபர் ஆசமும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நல்ல பார்மில் உள்ள ரிஸ்வான் தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 31 ரன்களிலேயே அவர் அவுட்டாகிப் போனார்.

அதேபோல், நடப்பு தொடரில் 4 போட்டிகளில் மூன்றாவது அரை சதத்தை எட்டிய பாபர் ஆசமும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் வெளியேறினார். விராட் கோலிக்கு நிகராக வைத்து பாகிஸ்தான் ரசிகர்களால் பேசப்படும் பாபர் ஆசம் அந்த உச்சபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அவர்களுக்கு ஏமாற்றமே.

பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட அதிரடியாக ஆடி ரன் சேர்க்கவில்லை. இதனால், ஆட்டம் முழுவதுமே அந்த அணியின் ரன் ரேட் மந்தமாகவே இருந்தது. முடிவில் அந்த அணி 47-வது ஓவரிலேயே 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிப் போனது.

 

அதிரடியாக ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி இந்தப்போட்டியில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்வது கடினமாக இருக்கும்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் க்விண்டன் டி காக் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தாலும், தென் ஆப்பிரிக்கா அணியின் மொத்த ஸ்கோர் ஒன்பது ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ஆக இருந்தது.

இந்தக் கட்டத்தில், அணியின் தொடக்க ஆட்டக்காரரான பவுமா அதிராடியாக அடி வந்தார். இதனால், அடுத்த இரண்டு ஓவர்களிலேயே பவுமாவும் ஆட்டமிழந்தார்.

 

மார்க்ரம் அசத்தல்

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தென் ஆப்பரிக்கா அணியின் ஓட்டுமொத்த ரன் ரேட் குறையாமல் மார்க்ரம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால், அணியில் ரன் ரேட் 6க்கு குறையாமல் இருந்தது.

தென் ஆப்பிரிக்கா அணி, 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 41 வது ஓவரில் உஸாமாவின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடிவந்த மார்க்ரம் ஆட்டமிழந்தார். இவர், 93 பந்துகளில் 91 ரன்கள் அடித்திருந்தார்.

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

ஐந்து ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்க்ரம் ஆட்டமிழந்த பிறகு, தென் ஆப்பிரிக்கா அணி 10 ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணியினர் திணறி வந்தனர்.

பார்க்ரம், 40.2 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் மொத்த ரன் 250 ஆக இருந்தது. ஐந்து ஓவர்களுக்குப் பிறகு தென் ஆப்பிரக்கா அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்து 260-8 என்ற நிலையில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அப்ரிடி, 10 ஓவர்கள் பந்துவீசி 45 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணியினர் திணறி வந்தனர்.

 

கடைசியில் போராடி வென்ற தென் ஆப்ரிக்கா

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடர்ந்து, களமிறங்கிய நிகிடி, நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் ராவுப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்துகளின் பெரியளவில் ரன் சேர்க்க முடியாவிட்டாலும், கிடைக்கும் வாய்ப்பில் ஒவ்வொரு ரன்னாக சேர்த்து ஆட்டமிழிக்கமால் இருந்தனர் மகாராஜூம், ஷமியும்.

இறுதியாக 45வது ஓவரில் முகமது நவாஸ் பந்துவீச்சின் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரியின் மூலம் வெற்றியை எட்டியது தென் ஆப்பிரிக்கா அணி. தென் ஆப்பிரிக்கா அணியில் பார்க்ரம் தவிர மற்ற அனைத்து வீரர்களும் 30 ரன்களுக்கு குறைவாகவே ரன் சேர்த்திருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக 10 ஓவர்கள் பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்த ஷம்ஸிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நூலிழையில் கண்டம் தப்பிய தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த கடைசிக் கட்டத்தில் நூலிழையில் ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடியவிருந்தது. ஹாரிஸ் ரஃப் வீசிய 46-வது ஓவரின் கடைசி பந்தில், கடைசி விக்கெட் ஜோடியாக நின்றிருந்த ஷாம்சியின் கால் காப்பில் பந்து பட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல் ஹரிஸ் ரஃப் எல்.பி.டபிள்யூ கேட்டு அப்பீல் செய்தார். ஆனால் நடுவரோ அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, எதிர்பார்க்கப்பட்ட படியே பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மூன்றாவது நடுவருக்கு முறையீடு செய்தார். மூன்றாவது நடுவர் கேமராவின் வெவ்வேறு கோணங்களில் அந்த பந்தின் திசையை ஆராய்ந்து பார்த்தார். அப்போது, பந்து லெக் ஸ்டம்பை லேசாக உரசிச் செல்வது போல் தெரிந்தது. எனினும், அது உறுதியாக இல்லாததால் கள நடுவரின் தீர்ப்பே இறுதியாகிவிட்டது. இதனால், கண்டம் தப்பிய ஷாம்சி அந்த அணியை வெற்றிகரமாக இலக்கை எட்ட வைத்தார்.

பாகிஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

நடப்பு உலகக்கோப்பையில் தொடக்க வெற்றிகளுக்குப் பிறகு ஹாட்ரிக் தோல்விகளால் தடுமாறி வந்தாலும் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தனது சிறப்பான வரலாற்றை தக்க வைக்கும் நம்பிக்கையுடன் இருந்தது. அதாவது, தென் ஆப்ரிக்கா அணி கடைசியாக 1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் பாகிஸ்தானை வென்றிருந்தது.

அதன்பின் 24 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியை ஒருநாள் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடர்களில் தென் ஆப்ரிக்கா வென்றதே இல்லை. இந்த 24 ஆண்டு கால வரலாற்றை தென் ஆப்ரிக்கா மாற்றி எழுதியுள்ளது. இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும், தென் ஆப்ரிக்கா 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இந்தியாவை முந்தி தென் ஆப்ரிக்கா முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து, இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன், நெட் ரன் ரேட் +2.032 கொண்டுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது.

இந்தியா இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டியில் ஐந்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன், நெட் ரன் ரேட் +1.353 கொண்டுள்ளது. புள்ளிகள் சம அளவில் இருந்தாலும், இந்தியாவைவிட அதிக நெட் ரன் ரேட் கொண்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c3g3mlz29zpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவுக்கு பரபரப்பான வெற்றி ; பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறி !

27 OCT, 2023 | 11:04 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டினால் மிகவும் பரபரப்பான வெற்றியை  ஈட்டியது.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றியீட்டியுள்ள தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

அதேவேளை, இம் முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்காவது தோல்வியைத் தழுவிய பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவின் முன்வரிசை மற்றம் மத்திய வரிசை வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். 

இதனால் தென் ஆபிரிக்காவின் வெற்றி வெகுதொலைவில் இருப்பது போல் தென்பட்டது.

ஏய்டன் மார்க்ராம் 3ஆவது விக்கெட்டில் ரெவி வென் டேர் டுசெனுடன் 54  ஓட்டங்களையும்  டேவிட் மில்லருடன் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.

ஆனால் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஏய்டன் மார்க்ராம், மொத்த எண்ணிக்கை  250 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தமை தென் ஆபிரிக்காவுக்கு பேரிடியாக அமைந்தது. (250 - 7 விக்)

மார்க்ராம் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்காவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 21 ஓட்டங்களைப் பெறுவதில் தென் ஆபிரிக்கா பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.

அத்துடன் 10 ஓட்டங்கள் இடைவெளியில் மேலும் 2 விக்கெட்களை தென் ஆபிரிக்கா இழந்ததால் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும் கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கேஷவ் மஹாராஜ், தப்ரெய்ஸ் ஷம்சி ஆகிய இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றி இலக்கை அடைய உதவினர்.

வெற்றிக்கான கடைசி 4 ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றக்கொடுத்த கேஷவ் மஹாராஜ் 7 ஓட்டங்களுடனும் தப்ரெய்ஸ் ஷம்சி 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் மார்க்ராமைவிட டேவிட் மில்லர் (29), டெம்பா பவுமா (28), குவின்டன் டி கொக் (24), ரெசி வென் டேர் டுசென் (21), மார்க்கோ ஜென்சென் (20) ஆகியோர் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உசாமா அலி 40 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் மொஹமத் வசிம் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் குறைந்தது 300 ஓட்டங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் பெரிய எண்ணிக்கைகளைப் பெறத் தவறியதால் அந்த ஏதிர்பார்ப்பு ஈடேறவில்லை.

அத்துடன் இணைப்பாட்டங்களும் சிறப்பாக அமையவில்லை. 6ஆவது விக்கெட்டில் சவூத் ஷக்கீல், ஷதாப் கான் ஆகிய இருவரும் பகிர்ந்த 84 ஓட்டங்களே பாகிஸ்தான் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

துடுப்பாட்டத்தில் சவூத் ஷக்கீல் (53), பாபர் அஸாம் (50), ஷதாப் கான் (43), மொஹமத் ரிஸ்வான் (31), மொஹமத் நவாஸ் (24), இப்திகார் அஹமத் (21) ஆகியோர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் தப்ரெய்ஸ்  ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சென் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கொயெட்ஸீ 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஏய்டன் மார்க்ராம்

https://www.virakesari.lk/article/167913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.