Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல்

Published By: Digital Desk 3

19 May, 2023 | 10:53 AM
image

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வடக்கிற்கும், கிழக்கிற்கும் இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஊவாமாகணத்தின் முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டனர் என பெருமை கொள்வோரும் உண்டு. இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆளுநர்கள் ஜனாதிபதியின் தேவையை நிறைவேற்றுவர்களை தவிர மக்கள் கோரிக்கைகளை செவிமடுப்பவர்களாகவே இருப்பார்கள். செந்தில் தொண்டமான் ஊவாமாகண சபையின் அனுபவம் உள்ளவர். அவரை ஊவா மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்காதது ஏன்? வேறொரு தமிழரை கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்காததன் நோக்கம் என்ன? அதுவே ஜனாதிபதியின் நரி தந்திரம்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவாமாகாணங்களுக்கு இது நாள் வரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாகவோ முதலமைச்சர்களாகவோ நியமிக்கப்படவில்லை. அந்த அளவு துணிவு கட்சிகளுக்கும் கிடையாது. மலையக மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் தமிழர்களை அதிகாரத்தில் வைத்து விடக்கூடாது. இவ்வாறு நியமித்தால் மலையக பிரதேசத்தை மலையக தமிழர்களின் தேசியத்தின் அடையாளமாக அடையாளப்படுத்தி விடுவார்கள் என்று பயம். இது சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.

ஏற்கனவே அமைச்சர் பதவி ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு தொண்டமான் குடும்பத்தவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதே கட்சியை சேர்ந்த அதே தொண்டமான் குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். தற்போது அவர்களின் கட்சி முழுமையாக ஜனாதிபதியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கைக்குள் சென்று விட்டது என்று கூறலாம். இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷரின் அரவணைப்பிற்குள் வளர்ந்தவர்கள் தற்போது ரணிலின் அரவணைப்புக்குள் சென்று விட்டனர். இது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மலையகத்தை தமதாக்கும் செயற்பாடாகும்.

செந்தில் தொண்டமானின் நியமனத்தின் மூலம் தற்போது ஜனாதிபதி இந்தியாவையும் சமாளித்து விட்டார். புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள செந்தில் இந்தியா விரும்பும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் விரும்பும், தமிழகத்தோடு நெருங்கிய ஒருவரும் ஆவார். இனிமேல் இந்திய துணை தூதரகம் கிழக்கில் அமைந்தது போன்றது தான்.

வடகிழக்கினை சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் வேகமாக ஆக்கிரமிக்கும் காலமிது. புதிய ஆளுநர்கள் அதற்கு என்ன செய்ய போகின்றார்கள். ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும்.
 
https://www.virakesari.lk/article/155659

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எங்களது நிர்வாக அலகுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அந்த மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்றம் தேவை. அதன் தலைமை அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்த வேண்டும். ஆளுநர் என்பவர் தனது அதிகாரங்களுக்கு உட்படாத எல்லா விடயங்களிலும் நிர்வாக அலகை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்றதின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவராகவேண்டும். 

மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர், மத்தியில் முழுநாட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றினால் தேர்வுசெய்யப்படவேண்டும். நிர்வாக அலகை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்றம் ஆளுநர் பதவிக்கான பெயர்களை பரிந்துரை செய்யவேண்டும். 

தற்போதைய நிலையில் மாகாண சபை இல்லாத நிலையில் ஆளுனரினதும் அரச இயந்திரத்தின் ஆட்சி தான் அங்கு நடைபெறுகிறது. இன்னொரு திரியில் முன்னர் எழுதியது போல இது எங்களுக்கு நீண்டகால ஆபத்துகளை கொண்டுவரும். இப்படியான விடங்களில் நடைமுறை சாத்தியமாக சிந்தித்து அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும். முழுமையான ஒரு தீர்வு வந்தால் பிறகு எல்லாம் செய்யலாம் என்றால் இன்னும் 50 தீபாவளி வந்துபோகும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, saravanar said:

 ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் என்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2023 at 02:05, Kapithan said:

முழுமையாக வாசித்தால் "அடுத்த கட்டத்துக்கு" நகர இந்த அணுகுமுறை அவசியம் என்று சொல்லியிருக்கிரேன். இதுதான் இறுதி முடிவென்று சொல்லப்படவில்லை. 

ஒற்றையாட்சி முறைமை ஒரே இரவில் முடிவுக்கு கொண்டுவரலாம் என்பது 2009இங்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் எவ்வளுவு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறி . ஒரு பிரதேசத்தை முழமையாக நிர்வகித்து சமாந்தர அரசை அமைத்து புலிகள் தமது பகுதியில் தங்களால் உருவாக்கப்பட்ட முறைமையின் கீழ் ஆண்டார்கள். அவர்களில் நிர்வாகம் தவிர்த்த பகுதிகளில் இருந்த அரச அதிகாரிகளும் அந்த காலங்களில் கவனமாக, மத்திய அரசின் அதிகாரங்களை அமுல்படுத்தினார்கள். சுருக்கமாக சொல்வதானால் தட்காலிகமாகவேனும் தமிழர் பகுதிகளில் ஒற்றையாட்சி முறைமை முடக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் அதனை முடக்கக்கூடிய இராணுவ பலத்தையும் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்தனர். 

ஆனால் 2009இங்கு பின்னர் நிலைமை மிகவும் மாறுபட்டுள்ளது. கடந்த மாகாணசபைக்கு முன்னர், அதாவது 2009இங்கு பின்னர் அங்கு இராணுவ அதிகாரிகள், இராணுவ ஆளுநர் மற்றும் பசில் ராஜபக்ஷ கொண்ட நேரடி இராணுவ ஆட்சி அங்கு வாழும் மக்கள் மீது திணிக்கப்பட்டது. அது பின்னர் அழுத்தம் காரணமாக ஒரு மாகாணசபை தேர்தலுக்கு வழிவகுத்தது. மாகாண சபையால், வழமையாக இராணுவ ஆளுநர் சந்திரஸ்ரீ மத்திய அரசின் பெயரால் செய்ய முனைந்தவற்றை ஓரளவுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. அதோடு ஒரு பாராளுமன்றம் என்ற வகையில் சர்வேதேச ராஜதந்திரிகளுடன் நேரடி சந்திப்புகளையும் செய்து தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகிக்க வழியாகவும் இருந்தது. இந்த அழுத்தங்கள் காரணமாகவேனும் வேண்டா விருப்பாக மத்தியின் அதிகாரங்களை குறைத்து அவர்கள் பாவிக்கவேண்டி இருந்தது. குறிப்பாக மத்திக்கு மாகாணத்துக்கும் சமாதாந்தரமான அதிகாரங்கள் (concurrent list - https://www.sinhalanet.net/wp-content/uploads/2013/11/Copy-of-13-Amedment.pdf) உள்ள விடயங்களில் அழுத்தங்கள் மற்றும் எதிப்புகள் மூலம் பகிரங்கப்படுத்தி இந்த அதிகார முறைமையில் உள்ள குறைபாடுகளையும் , செயலளவில் எவ்வாறு  எமது சுயநிர்ண்ய உரிமை மட்டுப்படத்தப்பட்டுள்ளது என்பதையும் வெளிக்கொணமுடிந்தது.

ஆனால் மீண்டும் மாகாணசபை முடங்கியதும் மீண்டும் மத்தியின் ழுமையான ஆட்சி அங்கு நடக்கிறது. இந்த முறை இரானுவம் அல்லாத ஆளுநர் இருந்தாலும் அவர் அதே அதிகார முறைமையில் கீழ் தான் இயங்குகிறார். அந்த மாகாணசபை அதிகாரங்களுக்கே முறைமைகளோ மாற்றியமைக்கப்படவில்லை. எனவே ஆட்களை மாற்றினாலும் விளைவுகள் ஒன்றுதான் என்ற நிலைமை. இந்த பின்னணியில் எமது பகுதிகளில் இந்த ஒற்றையாட்சியின் அதிகார பிடியை முடக்க நாங்கள் சட்டத்தை நாடவேண்டியுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் வர பல மாதங்கள் ஆண்டுகள் பிடிக்கலாம். அதேவேளை சர்வேதேச தொடர்புகளும் ஆளுநர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என்றளவில் நிக்கின்றன. ஒப்பீட்டளவில் எமது செயல்கள் முடக்கப்ட்டுள்ளன. 

அதேசமயம், 14 ஆண்டுகள்  கடந்த நிலையில் தமிழரின் உள்ளக அரசியல் கட்டமைப்புகளின் ஆற்றல் (capacity) எவாறுள்ளது என்பது இன்று நாம் உள்ள நிலைமையில் இருந்து தெரியும். உண்மையில் திம்புவில் ஒன்றிணைத்த ஒரு பொது நிலையை வெளிப்படுத்திய வரலாற்றை கூட இவர்களால் நினைத்து பார்க்கமுடியாதளவு  கொளகை முரண்பாடு, கருது வேறுபாடு, தனிமனித வெறுப்பு என்று நிக்கின்றார்கள். இவர்களால் ஒரு முழுமையான தீர்வை நோக்கி மத்திய அரசை நிர்பந்திக்க கூடிய ஆற்றல், கட்டமைப்பு, ஒருமித்து வேலை செய்யக்கூடிய மனநிலை இல்லை. காலம் போய்க்கொண்டிருக்கின்ற போது மத்திய அரசின் ஆட்சியின் கீழ் வடக்கின் குடிசன பரம்பல், பொருளாதார தனக்கு நிலைமை, வரலாற்று அடித்தளம் என்பன பற்றியமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் கிழக்கு மாகாண நிலைமை அங்கு வந்துவிடும். சர்வேதேச அளவில் தமிழ் சமூகத்தில்  வந்துகொண்டிருக்கின்ற தலைமுறை மாற்றங்கள் அவர்களை அரசியல் இருந்து விடுபடுத்திவிடும். பொருளாதார அளவிலும் தமிழர் நலன் சார்ந்த உதவிகள் குறையக்கூடும். கிழக்கின் நிலைமையை மாற்றி எப்படி வடக்கு கிழக்கு இணைப்பு நீத்துப்போக செய்யப்பட்டதோ இன்று அதன் தொடர்ச்சி வடக்கில் நடக்கிறது.

இவற்றை அனுமானித்து தான் நாம் வேறு அணுகுமுறைகளை நாடவேண்டும். அதாவது படிப்படியாக எமது சுயநிர்ணய உரிமையை பெறவேண்டும். அதில் ஒரு படிக்கல்லாக மாகாணத்தில் எமது விவகாரங்களில் உடனடியாக நாம் எமது நலன் சார்ந்து முடிவெடுக்க அதன் அதிகாரங்களை விருப்படுத்தி ஆளுநரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தவேண்டும். கூடுதலாக மாகாண பாரளுமன்றம் ஆளுநர் பதவிக்கு பரிந்துரை செய்யும் நிலைமை வரவேண்டும். இந்த ஒவொரு படிமுறையும் எமது சுயாட்சியை அதிகரிக்கும். இவை சமஸ்டி அடிப்படையிலான இறுதி தீர்வு பற்றிய பேசுகளும் தேடல்களும் நடக்கும்  பொழுது இதை ஒரு இடைக்கால அரசியல் முறைமையாக  தமிழர் பகுதிகளில் எமது நலன் சார்ந்து கொண்டு நடத்த வழி வகுக்கும். இந்த இடைக்கால அரசியல் முறைமை ஒன்றும் உலகுக்கு புதிதல்ல. 
வழமையாக சமாதான முனைப்புக்கள் ஒரு நடைமுறை தீர்வை நோக்கி நகர பல ஆண்டுகள் எடுக்கும். எனவே போர் நடத்தின் இடங்களில் மக்கள் முன்பிருந்த நிலையை (stats quo) தக்கவைத்துக்கொண்டு சமாதான முன்னெடுப்புகளை செய்ய அவசியமான ஒரு அணுகுமுறை. இல்லாவிடில் எமது கோரிக்கைகளின் அடிப்படையே எதிரிகள் தகர்த்துவிடுவார்கள். அதுதான் இப்ப நடக்கின்றது. 

ஆளுநர் பதவி மற்றும் ஒற்றையாட்சி தொடர்பான குறிப்பு:

பாரம்பரியமாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் அல்லது முடியாட்சியின் பிரதிநிதி. சமஸ்டி ஆட்சியிலும் ஆளுநர் இருப்பார். இந்தியாவில் கூட அதுதான் நடக்கிறது. ஆனால் சில மேட்கு நாடுகளில் (அவுட்ரேலியா ) மாநில பிரதமர் (Premier) ஆளுநர் தெரிவுக்கான பெயரை பரிந்துரை  செய்வார். இதை தான் நாங்களும் செய்ய அரசியல் அமைப்பு திருத்தப்படவேண்டும்.

இந்தியாவின் சமஸ்டி முறைமையை மீறி இலங்கையில் தீர்வு வருவது கேள்விக்குறி. அதட்கு காரணம் இந்தியாவின் சமஸ்டி உண்மையில் மேற்கத்திய சமைஸ்ட் முறையுடன் ஒப்பிடுகையில், ஒற்றையாட்சி தன்மையை அதிகமாக கொண்டது. மத்திய அரசு மாநில அரசை கலைப்பதில் இருந்து, மாநிலக்களின் எல்லையை நிர்ணயிப்பது மற்றும் ஆளுநர் பதவி நியமன என்று பலவிடயங்களில் மாநிலத்தை மீறி சுயமாக முடிவெடுக்கலாம். 

Edited by saravanar

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் சுமந்திரன் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சிந்திக்கிறாரா அல்லது பயிற்சி அளிக்கப்படுகிறாரா என எண்ணத் தோன்றுகிறது. அஸ்தமனம் மனதில் தட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2023 at 14:49, saravanar said:

தற்போதைய நிலையில் மாகாண சபை இல்லாத நிலையில் ஆளுனரினதும் அரச இயந்திரத்தின் ஆட்சி தான் அங்கு நடைபெறுகிறது. இன்னொரு திரியில் முன்னர் எழுதியது போல இது எங்களுக்கு நீண்டகால ஆபத்துகளை கொண்டுவரும்.

இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறாது.

வடக்கு கிழக்கில் மகாவலி வலயங்கள் பிரிக்கப்பட்டு வெளி மாவடட மக்கள் குடியேற்றப்பட்ட வேண்டும்.

தொல்பொருட்கள் திணைக்களம் ஆய்வு செய்து விகாரைகள் அமைத்து முடிக்க வேண்டும். இவை எல்லாம் கச்சிதமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இவைகளை தடுப்பது என்றால் ஜனாதிபதி ரணில் உத்தரவு போடடாலும் , அதையும் தாண்டி நிறைய செய்ய வேண்டி உள்ளது. அது இலகுவான காரியம் இல்லை.

எனவே நாங்கள் இங்கு  என்னதான் எழுதினாலும் இதுதான் யதார்த்தம். சுந்திரன், சம்பந்தன் இல்லை, இவர்களுடைய பாடடன் பூட்ட்ன வந்தாலும் இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2023 at 12:10, saravanar said:

முழுமையாக வாசித்தால் "அடுத்த கட்டத்துக்கு" நகர இந்த அணுகுமுறை அவசியம் என்று சொல்லியிருக்கிரேன். இதுதான் இறுதி முடிவென்று சொல்லப்படவில்லை. 

ஒற்றையாட்சி முறைமை ஒரே இரவில் முடிவுக்கு கொண்டுவரலாம் என்பது 2009இங்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் எவ்வளுவு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறி . ஒரு பிரதேசத்தை முழமையாக நிர்வகித்து சமாந்தர அரசை அமைத்து புலிகள் தமது பகுதியில் தங்களால் உருவாக்கப்பட்ட முறைமையின் கீழ் ஆண்டார்கள். அவர்களில் நிர்வாகம் தவிர்த்த பகுதிகளில் இருந்த அரச அதிகாரிகளும் அந்த காலங்களில் கவனமாக, மத்திய அரசின் அதிகாரங்களை அமுல்படுத்தினார்கள். சுருக்கமாக சொல்வதானால் தட்காலிகமாகவேனும் தமிழர் பகுதிகளில் ஒற்றையாட்சி முறைமை முடக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் அதனை முடக்கக்கூடிய இராணுவ பலத்தையும் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்தனர். 

ஆனால் 2009இங்கு பின்னர் நிலைமை மிகவும் மாறுபட்டுள்ளது. கடந்த மாகாணசபைக்கு முன்னர், அதாவது 2009இங்கு பின்னர் அங்கு இராணுவ அதிகாரிகள், இராணுவ ஆளுநர் மற்றும் பசில் ராஜபக்ஷ கொண்ட நேரடி இராணுவ ஆட்சி அங்கு வாழும் மக்கள் மீது திணிக்கப்பட்டது. அது பின்னர் அழுத்தம் காரணமாக ஒரு மாகாணசபை தேர்தலுக்கு வழிவகுத்தது. மாகாண சபையால், வழமையாக இராணுவ ஆளுநர் சந்திரஸ்ரீ மத்திய அரசின் பெயரால் செய்ய முனைந்தவற்றை ஓரளவுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. அதோடு ஒரு பாராளுமன்றம் என்ற வகையில் சர்வேதேச ராஜதந்திரிகளுடன் நேரடி சந்திப்புகளையும் செய்து தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகிக்க வழியாகவும் இருந்தது. இந்த அழுத்தங்கள் காரணமாகவேனும் வேண்டா விருப்பாக மத்தியின் அதிகாரங்களை குறைத்து அவர்கள் பாவிக்கவேண்டி இருந்தது. குறிப்பாக மத்திக்கு மாகாணத்துக்கும் சமாதாந்தரமான அதிகாரங்கள் (concurrent list - https://www.sinhalanet.net/wp-content/uploads/2013/11/Copy-of-13-Amedment.pdf) உள்ள விடயங்களில் அழுத்தங்கள் மற்றும் எதிப்புகள் மூலம் பகிரங்கப்படுத்தி இந்த அதிகார முறைமையில் உள்ள குறைபாடுகளையும் , செயலளவில் எவ்வாறு  எமது சுயநிர்ண்ய உரிமை மட்டுப்படத்தப்பட்டுள்ளது என்பதையும் வெளிக்கொணமுடிந்தது.

ஆனால் மீண்டும் மாகாணசபை முடங்கியதும் மீண்டும் மத்தியின் ழுமையான ஆட்சி அங்கு நடக்கிறது. இந்த முறை இரானுவம் அல்லாத ஆளுநர் இருந்தாலும் அவர் அதே அதிகார முறைமையில் கீழ் தான் இயங்குகிறார். அந்த மாகாணசபை அதிகாரங்களுக்கே முறைமைகளோ மாற்றியமைக்கப்படவில்லை. எனவே ஆட்களை மாற்றினாலும் விளைவுகள் ஒன்றுதான் என்ற நிலைமை. இந்த பின்னணியில் எமது பகுதிகளில் இந்த ஒற்றையாட்சியின் அதிகார பிடியை முடக்க நாங்கள் சட்டத்தை நாடவேண்டியுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் வர பல மாதங்கள் ஆண்டுகள் பிடிக்கலாம். அதேவேளை சர்வேதேச தொடர்புகளும் ஆளுநர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என்றளவில் நிக்கின்றன. ஒப்பீட்டளவில் எமது செயல்கள் முடக்கப்ட்டுள்ளன. 

அதேசமயம், 14 ஆண்டுகள்  கடந்த நிலையில் தமிழரின் உள்ளக அரசியல் கட்டமைப்புகளின் ஆற்றல் (capacity) எவாறுள்ளது என்பது இன்று நாம் உள்ள நிலைமையில் இருந்து தெரியும். உண்மையில் திம்புவில் ஒன்றிணைத்த ஒரு பொது நிலையை வெளிப்படுத்திய வரலாற்றை கூட இவர்களால் நினைத்து பார்க்கமுடியாதளவு  கொளகை முரண்பாடு, கருது வேறுபாடு, தனிமனித வெறுப்பு என்று நிக்கின்றார்கள். இவர்களால் ஒரு முழுமையான தீர்வை நோக்கி மத்திய அரசை நிர்பந்திக்க கூடிய ஆற்றல், கட்டமைப்பு, ஒருமித்து வேலை செய்யக்கூடிய மனநிலை இல்லை. காலம் போய்க்கொண்டிருக்கின்ற போது மத்திய அரசின் ஆட்சியின் கீழ் வடக்கின் குடிசன பரம்பல், பொருளாதார தனக்கு நிலைமை, வரலாற்று அடித்தளம் என்பன பற்றியமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் கிழக்கு மாகாண நிலைமை அங்கு வந்துவிடும். சர்வேதேச அளவில் தமிழ் சமூகத்தில்  வந்துகொண்டிருக்கின்ற தலைமுறை மாற்றங்கள் அவர்களை அரசியல் இருந்து விடுபடுத்திவிடும். பொருளாதார அளவிலும் தமிழர் நலன் சார்ந்த உதவிகள் குறையக்கூடும். கிழக்கின் நிலைமையை மாற்றி எப்படி வடக்கு கிழக்கு இணைப்பு நீத்துப்போக செய்யப்பட்டதோ இன்று அதன் தொடர்ச்சி வடக்கில் நடக்கிறது.

இவற்றை அனுமானித்து தான் நாம் வேறு அணுகுமுறைகளை நாடவேண்டும். அதாவது படிப்படியாக எமது சுயநிர்ணய உரிமையை பெறவேண்டும். அதில் ஒரு படிக்கல்லாக மாகாணத்தில் எமது விவகாரங்களில் உடனடியாக நாம் எமது நலன் சார்ந்து முடிவெடுக்க அதன் அதிகாரங்களை விருப்படுத்தி ஆளுநரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தவேண்டும். கூடுதலாக மாகாண பாரளுமன்றம் ஆளுநர் பதவிக்கு பரிந்துரை செய்யும் நிலைமை வரவேண்டும். இந்த ஒவொரு படிமுறையும் எமது சுயாட்சியை அதிகரிக்கும். இவை சமஸ்டி அடிப்படையிலான இறுதி தீர்வு பற்றிய பேசுகளும் தேடல்களும் நடக்கும்  பொழுது இதை ஒரு இடைக்கால அரசியல் முறைமையாக  தமிழர் பகுதிகளில் எமது நலன் சார்ந்து கொண்டு நடத்த வழி வகுக்கும். இந்த இடைக்கால அரசியல் முறைமை ஒன்றும் உலகுக்கு புதிதல்ல. 
வழமையாக சமாதான முனைப்புக்கள் ஒரு நடைமுறை தீர்வை நோக்கி நகர பல ஆண்டுகள் எடுக்கும். எனவே போர் நடத்தின் இடங்களில் மக்கள் முன்பிருந்த நிலையை (stats quo) தக்கவைத்துக்கொண்டு சமாதான முன்னெடுப்புகளை செய்ய அவசியமான ஒரு அணுகுமுறை. இல்லாவிடில் எமது கோரிக்கைகளின் அடிப்படையே எதிரிகள் தகர்த்துவிடுவார்கள். அதுதான் இப்ப நடக்கின்றது. 

ஆளுநர் பதவி மற்றும் ஒற்றையாட்சி தொடர்பான குறிப்பு:

பாரம்பரியமாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் அல்லது முடியாட்சியின் பிரதிநிதி. சமஸ்டி ஆட்சியிலும் ஆளுநர் இருப்பார். இந்தியாவில் கூட அதுதான் நடக்கிறது. ஆனால் சில மேட்கு நாடுகளில் (அவுட்ரேலியா ) மாநில பிரதமர் (Premier) ஆளுநர் தெரிவுக்கான பெயரை பரிந்துரை  செய்வார். இதை தான் நாங்களும் செய்ய அரசியல் அமைப்பு திருத்தப்படவேண்டும்.

இந்தியாவின் சமஸ்டி முறைமையை மீறி இலங்கையில் தீர்வு வருவது கேள்விக்குறி. அதட்கு காரணம் இந்தியாவின் சமஸ்டி உண்மையில் மேற்கத்திய சமைஸ்ட் முறையுடன் ஒப்பிடுகையில், ஒற்றையாட்சி தன்மையை அதிகமாக கொண்டது. மத்திய அரசு மாநில அரசை கலைப்பதில் இருந்து, மாநிலக்களின் எல்லையை நிர்ணயிப்பது மற்றும் ஆளுநர் பதவி நியமன என்று பலவிடயங்களில் மாநிலத்தை மீறி சுயமாக முடிவெடுக்கலாம். 

கேள்வி பதில் நன்றாக இருக்கிறதே! 

On 20/5/2023 at 02:05, Kapithan said:

 ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் என்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2023 at 22:10, saravanar said:

யதார்த்தத்தைத் தொட்டுச்செல்லும் பதிவு. 

இதற்கு வெளிநாடுவாழ் தமிழர் ஒத்துக்கொள்வார்களா? அவர்கள்தான் வெண்ணை திரழும்போது தாழியை உடைப்பவர்களாச்சே? 🤨

(சரவணரின் எழுத்து, யாழ் களத்திலிருந்து அண்மையில்  தற்காலிக ஓய்வை எடுத்துள்ள மூத்தவர் ஒருவரின் எழுத்தை நினைவுபடுத்துகிறது 😉

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா .......

  • கருத்துக்கள உறவுகள்

இதில எது நடக்கிறது என்டாலும் அங்கு மக்கள் இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

(சரவணரின் எழுத்து, யாழ் களத்திலிருந்து அண்மையில்  தற்காலிக ஓய்வை எடுத்துள்ள மூத்தவர் ஒருவரின் எழுத்தை நினைவுபடுத்துகிறது 😉

46 minutes ago, satan said:

ஹாஹா .......

ஓய்வில் இருக்கும் அந்த மூத்தவரின், முதல் எழுத்தை நாங்கள் அறியலாமா... animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

ஓய்வில் இருக்கும் அந்த மூத்தவரின், முதல் எழுத்தை நாங்கள் அறியலாமா... animiertes-gefuehl-smilies-bild-0048.gif

ஏன் முதலெழுத்து, பெயரையே சொல்கிறேன் அது..சரவணர்

😀

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

சரவணரின் எழுத்து, யாழ் களத்திலிருந்து அண்மையில்  தற்காலிக ஓய்வை எடுத்துள்ள மூத்தவர் ஒருவரின் எழுத்தை நினைவுபடுத்துகிறது 😉

9 hours ago, Kapithan said:

ஏன் முதலெழுத்து, பெயரையே சொல்கிறேன் அது..சரவணர்

😀

தயவு செய்து நீங்கள் எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்து பார்க்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ஓய்வில் இருக்கும் அந்த மூத்தவரின், முதல் எழுத்தை நாங்கள் அறியலாமா... animiertes-gefuehl-smilies-bild-0048.gif

நான் அவரில்லை, அவர் நானில்லை. பினாமிகள், அவதாரங்களின் தொல்லைகள் தாங்க முடியவில்லை.

On 23/5/2023 at 10:40, Kapithan said:

யாழ் களத்திலிருந்து அண்மையில்  தற்காலிக ஓய்வை எடுத்துள்ள மூத்தவர்

யோசித்து பாருங்கள், ஒன்றும் கடினமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

நான் அவரில்லை, அவர் நானில்லை. பினாமிகள், அவதாரங்களின் தொல்லைகள் தாங்க முடியவில்லை.

யோசித்து பாருங்கள், ஒன்றும் கடினமில்லை!

நான் அந்த மூத்தவரை கண்டுபிடித்து விட்டேன்.
எதற்கும்… கபிதனின் வாயால் கேட்போம் என்றுதான், துருவி துருவி கேட்டேன்.
ஆனால் அவர் பிடி கொடுக்காமல், நழுவுறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

நான் அந்த மூத்தவரை கண்டுபிடித்து விட்டேன்.
எதற்கும்… கபிதனின் வாயால் கேட்போம் என்றுதான், துருவி துருவி கேட்டேன்.
ஆனால் அவர் பிடி கொடுக்காமல், நழுவுறார். 😂

சரவணரை ஏன் வம்பிற்கிழுப்பான்? அவரை அப்படியே விட்டுவிடுவோம் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.