Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தமதத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரிய கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடாஷா எதிரிசூரிய கைது

 பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார்.

கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் சேவைக்குச் சொந்தமான எம்.எச்.178 என்ற விமானத்திலேயே பயணஞ்செய்யவிருந்தார்.

அந்தப் பெண்ணுடன் பயணம் ஹேன்நாயக முதியன்சலாகே பெத்தும் பண்டார எகொடவத்த என்பவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

எனினும், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதன் பின்னர், தன்னுடைய பயணத்தை அவர், கைவிட்டுள்ளார் என்றும், விமான நிலையத்தில் இருந்து அந்நபர் திரும்பிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விருவரும் மலேசியா கோலாலம்பூருக்குச் சென்று அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் சிங்கபூருக்குச் செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நடாஷா-எதிரிசூரிய-கைது/150-318111

  • கருத்துக்கள உறவுகள்

நடாஷா எதிரிசூரிய கைது

நடாஷா எதிரிசூரிய கைது

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

நடாஷா எதிரிசூரிய நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

பக்தி, பயம் போனதற்கு யார் காரணம்? புத்தரின் போதனையை சொல்லிக்கொண்டு அடாவடி பண்ணினால் பரிகசிக்கத்தானே தோன்றும்.. முதலில் உங்களை திருத்துங்கள் அல்லது புத்தரை சொல்லி களவெடுப்பதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறியர் பொருள் விளங்கிச்சோ? பாதிரியார் புத்தரை ஒளியோடு சேர்த்து வைச்சு பேசினார்போலும், நடாஷா என்ன சொல்லியிருப்பா? ஏதோ மண்டையோட்டை காட்டி ஊழையிடுகினம், மாக்சும் கொடுக்கினமோ? எதுக்கும் குருசோ பதிலோடு வருமளவும் காத்திருப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

என்ன சிறியர் பொருள் விளங்கிச்சோ? பாதிரியார் புத்தரை ஒளியோடு சேர்த்து வைச்சு பேசினார்போலும், நடாஷா என்ன சொல்லியிருப்பா? ஏதோ மண்டையோட்டை காட்டி ஊழையிடுகினம், மாக்சும் கொடுக்கினமோ? எதுக்கும் குருசோ பதிலோடு வருமளவும் காத்திருப்போம்! 

சாத்தான்...  எனக்கு விளங்கின அளவில், இடது பக்கம் உள்ள படத்தில்,
புத்தரின் கையில் கஞ்சா. அதை அரசியல்வாதி சொன்னால்...
பிக்குமார் அதுக்கு 10 புள்ளிகளை அள்ளிக்   கொடுக்கிறார்கள்.
ஏனெறென்றால் பிக்குகளுக்கு, அரசியல்வாதிகளிடமிருந்து கன காரியம் ஆக வேண்டியுள்ளது.

மற்றப் படத்தில்... புத்தரை நிர்வாணமாக, ஒரு சாதாரண ஒரு பெண் சொன்னால்...
அகில இலங்கை புத்த காவலரும், பிக்குகளும் சேர்ந்து பொங்கி எழுகிறார்கள்.

எதற்கும்.... @Cruso என்ன சொல்கிறார் என பார்ப்போம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... எனக்கது விளங்கவில்லை. நான் பாதிரியாரை நினைத்துவிட்டேன். புத்தர் கஞ்சா பாவித்தார், கடத்தசொல்லியிருக்கிறார் என்றால்; பிக்குகளுக்கு அவ்வளவு சந்தோசம். இதை தீட்டியவரும் நாளை கைது செய்யப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி,நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி,நற்கடைப்பிடி, நற்தியானம் என் புத்தரால் போதிக்கப்பட்ட எந்தவொரு நன்னெறிமுறைகளையும் பின்தொடராத அரசுக்கோ அதன் பொத்தமத பரிவாரங்களுக்கோ இவரைக் குற்றம்சாட்டும் தகமை இருக்கிறதா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த நாடு இலங்கை. பெளத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இலங்கை. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். அவங்கள் சும்மா விடுவாங்களோ நக்கல் அடிச்சால் அங்குள்ள பிரபல பாடசாலையில்? 

  • கருத்துக்கள உறவுகள்

எதில் பவுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள்? காணி பிடிப்பு? சரித்திரம் திரிப்பு? சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாவிடின் அது பரிகாசத்துக்குரியதே. இவ்வளவு காலமும் இல்லாத பரிகாசம் எப்படி இப்போது மட்டும் தோன்றியது என்பதை சிந்தித்து திருத்திக்கொள்ள மறுத்து, அவர்களை தண்டித்து, மறைக்க, தடுக்கப்பார்கிறார்கள். பிக்குகளின் அடாவடியே இதற்கு காரணம். காருணியத்தை போதிக்க வேண்டியவர்கள் சக மனிதனை அடிப்பதும் அடாத்து பண்ணுவதும் சமூகசீர்கேடுகளில் ஈடுபடுவதும் அவர்களை சிரிக்க தூண்டுகிறது. பிக்குகள் வேண்டுமென்றால் நடாஷாவுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டுமென்று ஓலமிடலாம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் போதனை என்கிற பெயரில் மோசடிகளில் ஈடுபடுவோரே. நிதர்சனத்தை சந்தித்து திருத்திக்கொள்ளாவிடின் பவுத்தம் பாரிய சரிவைச்சந்திக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

May be a doodle of text

முதல் படத்தில் இருப்பவர் தேரென சிங்கள டிவி உரிமையாளர் டிலீத் ஜெயவீர. இவர் தீவிரமாக அரசியலில் இறங்கவில்லை என்றாலும், சீனி இறக்குமதி கொள்ளை போன்ற முறை கேடுகளில் ஈடுபட ஒரு பிரபல வியாபாரி. இவருக்கு அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருக்கின்றது. இவர் புத்தரை, புத்த பிக்குகளை ஆதரித்து எதோ கூறியிருக்க வேண்டும். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கதை அடிபடுகின்றது. 
மற்றயவர் நடாஷா என்னும் மேடை கமெடியான். இருவருமே புதரைப்பற்றி சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் என்ன கூறினார்கள் என்று உண்மையாகவே தெரியவில்லை இன்னும் அவர்களது யூட்டுபயும் பார்க்கவில்லை. பார்த்தபின்னர் அதை எழுதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Cruso said:

முதல் படத்தில் இருப்பவர் தேரென சிங்கள டிவி உரிமையாளர் டிலீத் ஜெயவீர. இவர் தீவிரமாக அரசியலில் இறங்கவில்லை என்றாலும், சீனி இறக்குமதி கொள்ளை போன்ற முறை கேடுகளில் ஈடுபட ஒரு பிரபல வியாபாரி. இவருக்கு அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருக்கின்றது. இவர் புத்தரை, புத்த பிக்குகளை ஆதரித்து எதோ கூறியிருக்க வேண்டும். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கதை அடிபடுகின்றது. 
மற்றயவர் நடாஷா என்னும் மேடை கமெடியான். இருவருமே புதரைப்பற்றி சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் என்ன கூறினார்கள் என்று உண்மையாகவே தெரியவில்லை இன்னும் அவர்களது யூட்டுபயும் பார்க்கவில்லை. பார்த்தபின்னர் அதை எழுதுகின்றேன். 

ஆறுதலாக வாங்கோ, ஒன்றும் அவசரமில்லை! எப்படியாகிலும் சிங்களவரிடத்தில் புத்தரைப்பற்றி இரண்டுபட்ட கருத்துக்களை உருவாக்கிவிட்டார்கள் அரசியல்வாதிகளும் பிக்குகளும் சேர்ந்து என்பது மட்டும் தெளிவாகிறது. ஒன்று ஆராதனைக்குரியவர் மற்றது கேலிக்குரியவராக்கிவிட்டார்கள். இது போதும். பத்தியெரிய வேணும், அதுக்கு எண்ணெய் ஊத்தவேணும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதாஷாவுக்கு உதவிய யூடியுபர் கைது!

பௌத்த மதத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதாஷா எதிரிசிங்கவிற்கு உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SL Vlog எனும் யூடியூப் சேனலை நடத்திச் செல்லும் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

http://www.samakalam.com/நதாஷாவுக்கு-உதவிய-யூடியு/

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

நதாஷாவுக்கு உதவிய யூடியுபர் கைது!

பௌத்த மதத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதாஷா எதிரிசிங்கவிற்கு உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SL Vlog எனும் யூடியூப் சேனலை நடத்திச் செல்லும் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

http://www.samakalam.com/நதாஷாவுக்கு-உதவிய-யூடியு/

இதெல்லாம் அரசியல் நாடகமே  ஒழிய வேறொன்றுமில்லை. இனிமேல் அரசுக்கு  எதிராக எதாவது தெரிவித்தால் இதுதான் உங்களுக்கும் என்பதான சமிக்கை. ஊடககங்களுக்கு எதிராக கடுமையான சட்ட்திட்ட்ங்கள் விரைவில் வரப்போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கவேண்டாமென அரசாங்கத்திடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2023 | 09:26 PM
image
 

(நா.தனுஜா)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இடம்பெற்ற நடாஷா எதிரிசூரியவின் கைது தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் அண்மைக்காலங்களில் இடம்பெறும் கைதுகள் மற்றும் அதன்விளைவாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் நகைச்சுவைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். மத ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான புதியதொரு உத்தியே இதுவாகும்.

அண்மையகாலங்களில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இந்தக் கைது மாத்திரம் இடம்பெறவில்லை என்பதையும் மத மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறி மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். 

அதுமாத்திரமன்றி நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதையும் அதன்மீதான மிகமோசமான தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றது.

மேலும் மத ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் அத்தகைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை கவலைக்குரிய விடயமாகும். 

இலங்கையின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் மத ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அரச கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். 

இவ்வாறானதொரு பின்னணியில் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/156792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.