Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்ட கஜேந்திரகுமார் : தாக்கியவர் தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? கஜேந்திரகுமாரிடம் செல்வம் கேள்வி!

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சி மிலேச்சத்தனமானது – செல்வம் அடைக்கலநாதன்

கஜேந்திரகுமார் எம் பி மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள முனைந்தமைக்கு கண்டனம் தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் செயற்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னேடுக்கும் போது புலனாய்வாளர்களின் இடையூறுகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை பொருட்படுத்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் காவலர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் புலனாய்வாளர்களை வைத்து செயற்படுத்த முனைவதானது தமிழ் மக்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நாடாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333537

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள நிலாந்தனின் கட்டுரையும், இந்தச் சம்பவத்தை பற்றி விரிவாக  எடுத்துரைப்பதால்... இணைத்துள்ளேன்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் விகாரை எங்களுக்கு வேண்டாம், எமது நிலம் எமக்கு வேண்டும் என்று மக்கள் தெருவில் நின்று போராடுகிறார்கள், மற்றொரு பக்கம் சிங்களத்துக்கு துணைக்கு வாகனத்தில் தமிழரே வந்து இறங்குகிறார்கள். இங்கே யாரை நோவது? இவர்கள் பௌத்தர்களாம், இவர்களிடம் இந்த விகாரை கையளிக்கப்படுமாம், இவர்களுக்கு போதனை சிங்கள பிக்கு செய்யுமாம். பாருங்கள் கொம்பு சீவும் விதத்தை! இப்படியொரு கேடுகெட்ட இனத்தை கேள்விப்பட்டிருப்பீர்களா? அருண் சிர்த்தாத்தன் பெயரை வைத்து பௌத்தத்துக்கே அசிங்கம் செய்கிறார்கள். தமிழரை தலைகுனிய வைத்து வெறுப்பேற்றுவதே இதன் நோக்கம். அதற்கு துணை போவது ஈனத்தமிழனும் சர்வதேசமும். இயற்கை அழிவேதும் வந்து இந்த விகாரையை தாக்காதா என மனம் ஏங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தர்கள் இல்லாத இடத்தில விகாரை எதுக்கு? என்று கேள்வியெழுப்பினோம், பௌத்த தமிழரை உருவாக்கிவிட்டான் எதிரி. இப்படிப்பட்ட சில்லறைகளை வைத்து என் தலைவன் என்ன கஸ்ரப்பட்டு போராட்டத்தை நடத்தியிருப்பார்? உலக நாடுகள், இந்தச் சில்லறைகளின் உதவியோடும் அவனால் முப்பது ஆண்டுகள் நெருங்கமுடியவில்லை எம்மை.  கோழைகளின் பழிவாங்கல் இது. தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை புரியும் அறிவு கூட அற்ற கூட்டம். வயிற்றுக்காக இனத்தை, மதத்தை விக்கும் மானமிழந்த கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

May be an image of 1 person and tree

போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால்  எதிரிகள் ஏளனம் செய்யும் அளவிற்கு அமைந்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை (திங்கடகிழமை) நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகி இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமாச்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

https://athavannews.com/2023/1333548

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

May be an image of 1 person and tree

போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால்  எதிரிகள் ஏளனம் செய்யும் அளவிற்கு அமைந்துவிடக்கூடாது.

இது, இவரின் போராட்டத்தை மலினப்படுத்தும் நோக்கில் எடுத்து வெளியிட்ட படம்போல்த் தெரிகிறது. சிறு தொகை மக்களோடு இரவுபகலாக போராடுகிறார், எதிரி, மக்களின் வரிப்பணத்தையும்  சர்வதேசத்தை ஏமாற்றி வாங்கிய பணத்தையும் தொகையாக நிற்கும் படையையும் வைத்து எங்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது. சாதாரண மக்களை தொடர்ந்து போராட வரும்படி கேட்கமுடியாத பொருளாதார நெருக்கடி. ஆகவே இருக்கிற மனித வளத்தைவைத்து போராடுகிறார். இங்கு மட்டுமல்ல, குடும்பிமலையிலும் இவர் தன் போராட்டத்தை செய்த பின்தான் பலருக்கு தெரியவே வந்தது. அவர்களுக்கும் எங்களைப்போலவே பசி, தாகம், தூக்கம், களைப்பு, உணர்வு இருக்கு. உதவி வந்த நேரம் அவர் சற்று தனியாகச்சென்று இளைப்பாறியிருக்கலாம், இது பெரிய தப்பா? இங்கே வைத்துதான் இவரை பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினாரென போலீசார் இவரை குண்டுத்தூக்காக தூக்கி சென்றனர். அவர் போராடாவிட்டால் ஏன் அவரை போலீசார் கைது செய்தனர்? சிங்களத்துக்கு நன்றாகவே தெரியும். பொதுமக்கள் தொடர்ந்து போராட வரமாட்டார்கள். பொருளாதார நிலை, அச்சம். பலப்பக்கங்களிலும் குடைச்சலை கொடுத்தால் நாளடைவில் களைத்து, சலித்து, ஓய்ந்துவிடுவார்கள். தாங்கள் எதிர்ப்பில்லாமல் தங்கள் திணிப்புகளை கச்சிதமாக செய்யலாம் என்பதே. உதவி செய்ய முடியாவிட்டால் ஒதுங்கி இருக்கலாம், கொச்சைப்படுத்தக்கூடாது. நாமே இழிவு படுத்தினால் சிங்களம் எப்படி இழிவு படுத்தும். அது சொல்கிறது தங்கள் திட்டங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, அரசியல்வாதிகள்தான் எதிர்க்கிறார்கள் என்று. அதை நாமே இந்தப்படத்தின் மூலம் ஆமோதிக்கிறோம், ஆதாரப்படுத்துகிறோம். மக்கள் போராட முடியாத வாழ்க்கைச்சுமையால் அவதியுறுகிறார்கள் என்பதை மறைத்து நடிக்கிறார்கள். இந்தப்படத்தை வெளியிட்டவரின் நோக்கம் என்ன? அவர் இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் எங்கே இருக்கிறார்? அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்பதையும் பதிந்திருக்கலாம். விளங்கிக்கொள்ள முடிந்திருக்கும் நீங்களும் குழம்பியிருக்க மாடீர்கள். மக்களை குழப்பி இவர்களை மலினப்படுத்தி, தனிமைப்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதே குறிக்கோள். அதற்கு கச்சிதமாக முண்டு கொடுக்கிறார், செ. கஜேந்திரன் கண்ணயரும்போது படம் பிடித்து. கோழைத்தனமான செயல்! இங்கே நாம் ஒன்றை கருத்திற் கொள்ள வேண்டும் அந்த நேரத்தில் அவரை கொலைசெய்திருந்தால் போராட்டம் அதோடு முடிந்திருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை நான் சாதாரணமாக எடுக்கவில்லை, அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதுகிறேன். கஜேந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நேரானது, இது மறைமுகமானது. எதுக்கும் இவர் எச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது.   

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை (திங்கடகிழமை) நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகி இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமாச்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

https://athavannews.com/2023/1333548

அதாவது, கஜேந்திரகுமார்தான் போலீசாரை தாக்க முட்படடார் என்ற தோரணையில் கதை போகின்றது. கடந்த இரவு இலங்கை தொலைக்காட்சிகளை பார்த்தபோது இதை இலகுவாக விளங்கி  கொள்ளலாம். கஜேந்திர குமாருக்கு எதிராக இன்று வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அறிய கிடைக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Cruso said:

அதாவது, கஜேந்திரகுமார்தான் போலீசாரை தாக்க முட்படடார் என்ற தோரணையில் கதை போகின்றது. கடந்த இரவு இலங்கை தொலைக்காட்சிகளை பார்த்தபோது இதை இலகுவாக விளங்கி  கொள்ளலாம். கஜேந்திர குமாருக்கு எதிராக இன்று வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அறிய கிடைக்கின்றது. 

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இனம்.
மகாவம்சத்தையே… காலத்துக்கு காலம் திருத்தி எழுதுபவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும். 🙁

மேற்கில்… துப்பாக்கியால் சுடுவது போல், கையால்… சைகை மூலம் காட்டுவதே பெரிய குற்றம்.
இங்கு என்னவென்றால்… நிஜ துப்பாக்கியையே தூக்கி சுடுவது போல் மிரட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார், பொதுமக்களுடன் சந்திப்பு நடத்தும்போது, பொலிஸாருக்கோ இராணுவ புலனாய்களுக்கோ அங்கு என்ன வேலை? ஏன் அங்கு வந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கட்சியின் பெண் உறுப்பினர்  ஒருவர்  கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் உட்பட இன்னும் ஒருவர். பிரச்சனையின்போது புகைப்படம் பிடித்திருப்பா போலுள்ளது, இருந்தாலும் போராட்டத்தை குழப்பி அடித்து அச்சுறுத்தி  நிறுத்துவதற்கு உப்பிடியான சில்லறைவேலை. இப்ப கொஞ்சம் காசு கையில வந்திருக்கு துள்ளுகினம். கெதியில ஒரு குழப்பம் வரஇருக்கிறது. நரியாரின் உண்மை முகத்தை இனிதான் ராஜபக்ச குடும்பம் காணப்போகுது. நரிக்கு இது வாழ்வா சாவா போராட்டம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு

05 JUN, 2023 | 05:42 PM
image
 

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157008

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

பொலிஸ்நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு

05 JUN, 2023 | 05:42 PM
 
 

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

நடக்கும் விதத்தை பார்க்கும்போது இவரை கைது செய்வார்கள் போலத்தான் தெரிகின்றது. பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக காரணத்தை கூறுவார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

போலீசார் தடுமாறுகிறார்கள், இறுக்கிப்பிடித்தால் சரி. அதாவது ஏதோ பாடசாலை பரீட்சை உபநிலையத்துக்கு அருகாமையில் கூடியதாகவும், அதைப்பற்றி தமக்கு அறிவிக்கவில்லை, அனுமதிபெறவில்லை, அங்கே இராணுவம் ஏதும் வரவில்லை, தாங்கள் பாதுகாப்புக்கொடுப்பது தமது கடமை,  புலனாய்வாளரை சிறைபிடித்து அடையாளம் கேட்டனர் என்று சொல்லி அறிவித்து பெண் உறுப்பினரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். அவர் தனது மக்களை சந்திப்பதற்கு எதற்கு அனுமதி? பாதுகாப்பு கொடுப்பதற்கு அங்கு ஏதும் அசாதாரண நிலை ஏற்பட்டிருக்கவில்லை? அறிவிக்காத இடத்திற்கு புலனாய்வு ஏன் அங்கு வந்தது? வந்தது.... ஏன் தன் அடையாளத்தை காட்ட மறுத்தது? அவர்களின், தையிட்டி விகாரை எதிர்ப்பே இதற்கு காரணம் என நினைக்கிறன். அச்சுறுத்தல் மூலம் தடுக்கப்பார்கிறார்கள்.

அவர்களுக்கு வடக்கில் ஒரு போராட்டம் தேவைப்படுகிறது, தெற்கை சமாளிப்பதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமானத்தின்படி, புலனாய்வு என்பவர் ஒட்டுக்குழுவைசேர்ந்தவராகஇருக்கலாம். இவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். செ. கஜேந்திரன் கண்ணயரும்போது எடுக்கப்பட்டு  பகிரப்பட்ட புகைப்படம் அதை உறுதிப்படுத்துகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு எதிராக சபாநாயகரிடம் மனு : ஆர்ப்பாட்டம் - சிங்களராவய திட்டம்

06 JUN, 2023 | 10:20 AM
image
 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சபாநாயகரிடம்  மனுக்கொடுப்பதற்கும்  கஜேந்திரகுமாருக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை மீறுவதற்கும் சிங்கள ராவய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மீறியுள்ளார் என சிங்கள ராவய தனது மனுவில் குறிப்பிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/157028

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.