Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

மதுரை ஜிகர்தண்டா

Jigarthanda

மதுரை ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம்,  நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான்.

தேவையான பொருட்கள்

பால் - 1 கப் 

நன்னாரி சிரப் - 3-4 டேபிள்  ஸ்பூன் 

பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் 

சக்கரை - 1/2 கப் 

ஐஸ் கிரீம் - 1 கப் 

பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் 

ஜிகர்தண்டா செய்முறை

பாதாம் பிசின்

எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக   பாதாம் பிசினை ஊற வைக்கணும் . முந்தையநாள் இரவே இதை ஊற வைத்தால் மறுநாள் சேய்ய சரியாக இருக்கும்.  ஊறவைத்ததில் இரண்டு கல்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் இதில் உங்களுக்கு ஒரு கிண்ணம் நிறைய ஜெல்லியை போன்ற பாதாம் பிசின் கிடைக்கும். இதுவே இந்த குளிர்பானத்திற்கு முக்கியமான பொருளாகும். இது இல்லாமல் ஜிகர்தண்டா இல்லை என்றே கூறலாம்! 

ஐஸ் கிரீம்

ஜிகர்தண்டா அதற்கேற்ற சில ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன அதே உபயோகியுங்கள் இல்லாவிட்டால் ஏதேனும் உங்களுக்கு பிடித்த வெனிலா சாக்லேட் ஐஸ்க்ரீம்களை உபயோகிக்கலாம். 

பால்

ஒரு லிட்டர் பாலை சிம்மில் (அடுப்பை) வைத்து நன்றாக பாலின் அளவு குறையும் அளவிற்கு மெதுவாக காய்ச்சுக்கொளுங்க. இன்னொரு கிண்ணத்தில் இன்னும் நன்றாக காய்ச்ச ஆடையுடன் இருக்கும் பால் அதாவது பாஸந்தியை போல் உள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக பால்கோவாவையும்  சேர்த்துக்கொள்ளலாம் . 

இப்போது தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டது. இதை மேற்கொண்டு ஒரு கிளாஸில் எவ்வாறு சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.

  • முதலில் பாதாம் பிசினை இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கு மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொள்ளுங்கள். 
  • அதற்கு மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் பாஸந்தியை போல் ஆடையுடன் இருக்கும் பாலை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • இதற்கு மேல் நன்றாக காய்ச்சிய பாலை சிறிதளவு ஊற்றி  இதை ஒரு ஸ்பூனால் நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு பெரிய ஸ்கூப் ஐஸ் கிரீமை எடுத்து இதற்கு மேல் வைத்துவிடுங்கள். 
  • அதன் மேல் நன்னாரி சர்பத்தை சிறிதளவு ஊற்றி விட்டாள் உங்களுக்குத் தேவையான ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்!
  • https://www.pasumaiindhiya.com/news/madurai-jigarthanda
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இதை ஒருநாளும் அருந்தியதில்லை......படங்களில் பார்த்திருக்கிறேன்......!  😁

நன்றி நுணா........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, suvy said:

நான் இதை ஒருநாளும் அருந்தியதில்லை......படங்களில் பார்த்திருக்கிறேன்......!  😁

நன்றி நுணா........!  

பலூடா என்று அடுத்த முறை போகும் போது ஏதாவது சர்பத் கடையில் கேட்டுப் பாருங்கள்…!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புங்கையூரன் said:

பலூடா என்று அடுத்த முறை போகும் போது ஏதாவது சர்பத் கடையில் கேட்டுப் பாருங்கள்…!

அட.......பலூடாவா ஜிகர்தண்டா ........அது நான் லிங்கம் கூல்பாரில் (வெலிங்டன் சந்தி )  அடிக்கடி குடித்திருக்கிறேன் ........ சூப்பராய் இருக்கும்........நன்றி புங்கை தகவலுக்கு......!  😂

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.