Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக கொழும்பில் – காங்கேசன்துறைக்கான சேவைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1335739

 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரயில் ஓடுற திகதி சொல்லுவாங்கள் எண்டால் கடன் வாங்கிற கதைய சொல்லுறாங்கள். 🥱

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

ரயில் ஓடுற திகதி சொல்லுவாங்கள் எண்டால் கடன் வாங்கிற கதைய சொல்லுறாங்கள். 🥱

பானையில இருக்கிறதுதானே அகப்பையில வரும்....:sonne:



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.