Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 17:48, nunavilan said:

சிங்கள ஊடகங்களில் இச்செய்தி இருட்டடிக்கப்பட்டதா?

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டறியப்படவில்லை - பொலிஸ்

Published By: VISHNU

13 JUL, 2023 | 05:24 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு ஜுலை மாதம் (இம்மாதம்) 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார். 

இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker இச்செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது.

அதற்கமை இதுபற்றி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் Factseeker வினவியபோது, அவர் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகளோ, வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்த அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாகவும், 8 ஆம் திகதி எந்தவொரு அகழ்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159940

  • Replies 99
  • Views 12.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்க

  • Kapithan
    Kapithan

    உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?   

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு, துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும். எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை  உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எப்போது ? 20 ஆம் திகதி நீதிமன்றில் தீர்மானம்

13 JUL, 2023 | 09:32 PM
image
 

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று  விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட  மனித எச்சங்கள் தொடர்பிலான  அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில்  பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

 

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அது பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணி தொடர்பில் இன்று(13) வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

 

இதற்க்கமைய முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

 

இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் (ஓ எம் பி ) சிரேஸ்ர சட்டத்தரணி ஜெகநாதன் தர்ப்பரன், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின்   சட்டத்தரணிகளான றணித்தா ஞானராஜா, வி.கே நிறஞ்சன், தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அளம்பில் பங்குத்தந்தை யூட் அமலதாஸ், நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, மற்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

 

கலந்துரையாடலில் முன்னதாக நீதிபதி அவர்களால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த பணியை முன்னெடுக்கும் எனவும், இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும்  அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களை  தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (20.07.2023) அன்று  சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டவைத்திய அதிகாரிகளின் அகழ்வு நடவடிக்கைகள், நிதி தொடர்பான விடயம் ஓஎம்பி அலுவலகம் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ளல், விரைவாக அகழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும், சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொறிமுறை, குறித்த காணி தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் வரைபடங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணிதொடர்பான விடயங்கள் ,கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் குறித்த காணி சுதந்திரத்தின் பின்னர் யார் யாரின் ஆளுகையில்  இருந்தது என்பது தொடர்பான விடயம்  தற்போதுள்ள பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட   விடயங்கள் தொடர்பில் தொடர்பில் மன்றுக்கு  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம்(20) அகழ்வு பணி தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன் அவர்கள்

சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

 

இதன் போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

 

அவர்கள் இந்தப் புதைவழி எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.

 

இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/159955

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன

அது தானே பார்த்தேன். பொய்யை சொல்லி விடுவார்களோ என பயந்து விட்டேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

அது தானே பார்த்தேன். பொய்யை சொல்லி விடுவார்களோ என பயந்து விட்டேன்.🙃

அவசரப்படாதேங்கோ! இவர்கள் ஒருவரும் அரிச்சந்திரன் பக்கத்து வீட்டுக்காரரல்ல. எந்த நேரமும் அறிக்கை மாறும்.  போரே நடைபெறவில்லை நடந்ததெல்லாம் மனித மீட்பு என்கிறார்கள். அதே நேரம் போரென்றால் மனித இழப்புகள் இருக்கும் என்கிறார்கள். எழுபத்தையாயிரத்துக்கும் குறைவான மக்களே இருந்தனர் என்கின்றனர், அதே நேரம் இரண்டு லட்ஷத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் தமிழரை பாதுகாத்தே இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்கின்றனர்,  மூன்று லட்ஷம் தமிழரை பணயக்கைதிகளாக புலிகள் வைத்திருந்தனர் என்கின்றனர். இவையெல்லாம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்.

17 hours ago, ஏராளன் said:

இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும்  அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ம்ம் ... சும்மா வேலியில  போன ஓணானை பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டிட்டு குத்துது குடையுது என்று அலறுங்கோ. கள்ளனைதான் காவலுக்கு கூப்பிடுங்கோ. உள்ளதை எடுத்துப்போட்டு தமக்கு சார்பானதை புதைத்து விட்டு புது கதைகளும் தடைகளும் ஏற்படுத்த இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்டு உரிய அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - புலம்பெயர் தமிழர் அமைப்பு

14 JUL, 2023 | 04:53 PM
image
 

(நா.தனுஜா)

முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் ஆகியோரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கு அமைவாகக் கடந்த 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. அக்கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

அண்மையில் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 8 ஆவது பந்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றைப் பாதுகாத்துவைப்பதற்குமான அதிகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வதிகாரத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இலங்கையில் கண்டறியப்பட்டிருக்கின்ற 33 ஆவது மனிதப்புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. அதுமாத்திரமன்றி இப்புதைகுழியை அண்மித்த பகுதியில் இராணுவமுகாம் ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகின்றது.  இம்மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுடையது என்ற அச்சம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களது அலுவலகத்தின் தலையீடின்றி உண்மை வெளியே வராது என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் உடனடியானதொரு சர்வதேசப் பொறிமுறையும் அவசியமாகின்றது என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/160032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் 

Published By: NANTHINI

15 JUL, 2023 | 11:22 AM
image
 

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், 

இப்பொழுதும் மன்னார் புதைகுழி மறைக்கப்பட்ட ஒன்றாக வந்துள்ள நிலையில் கொக்குதொடுவாய் புதைகுழி விடயம் கூட ஊடகத்தினூடாகவே பெருமளவு மக்களின் காதுகளை சென்றடைந்துள்ளது. 

இந்த கொக்குதொடுவாய் புதைகுழியானது, சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அதாவது அனுசரணையாளர்களின் மேற்பார்வையில் தோண்டப்பட வேண்டும். 

ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரை அவர்களது உறவுகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர். 

இலங்கையை பொறுத்தவரையில், இந்த ஆய்வுகளின் களப்பணிக்குரிய அறிவும் ஆற்றலும் எந்தளவுக்கு சர்வதேச நியமத்துக்கு உட்பட்டுள்ளது என்றொரு கேள்வியுள்ளது. 

ஆகவே, சர்வதேசத்தின் கண்காணிப்பில், அவர்களின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.

https://www.virakesari.lk/article/160061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம்

20 JUL, 2023 | 02:57 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு குழுவினர் கால்வாய் ஒன்றை தோண்டும் போது மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  

கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் 12 புலி உறுப்பினர்கள் மற்றும் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

அவர் விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. - அசங்க அபேரத்னஎன அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2023 at 21:35, ஏராளன் said:

விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. - அசங்க அபேரத்னஎன அவர் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றியை கொண்டாடுவதை விட்டு வெட்கப்படுங்கள். கொலைவெறியாடிய ராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு அளிப்பதை கண்டியுங்கள். உங்களாலேயே எங்களது இழப்புகளுக்கும், அடிமை வாழ்வுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும், செய்வீர்கள். வீரக்கதைகளையும் பொய்க்கதைகளையும் கேட்டு மகிழ்ந்த நீங்கள் உண்மையை கண்டு வெட்கப்படுங்கள். அங்கே நடந்தது போரல்ல மனிதப்படுகொலை! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை ; அருட்தந்தை மா.சத்திவேல்

Published By: VISHNU

26 JUL, 2023 | 03:36 PM
image
 

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் பாரிய மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடியும், நீதி கேட்கும் தொடர் போராட்டம் நடாத்தி வரும் வடக்கு- கிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் கடையடைப்பு ஹர்த்தால் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 

அத்தோடு அன்றைய தினம் அவர்கள்  பேரணியும் நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். இதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஒத்துழைப்பு நல்குவதோடு  அரசியல் நீதிக்காக கொடுக்கும் அனைத்து சக்திகளையும் ஆதரவு நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. குற்றவாளிகள்  வெளியில் தெரியக்கூடாது. வெளியில் தெரிந்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது.

தண்டனை கிடைத்தாலும் தண்டனையை முழுமையாக அனுபவிக்க கூடாது என்ற மனநிலையில் பேரினவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதே சிந்தனையுள்ள எதிரணியினரும் உள்ளனர்.

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசியல் தலையீடு தொடர்ந்துள்ளது என்பதை அன்மையில் இது தொடர்பில் ஆராய்ந்த மூன்று அமைப்புக்களின் கூட்டு அறிக்கை வெளி கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் சீருடைகளோடு மனித எச்சம் காணப்படுகையில் சர்வதேச சட்டதிட்டங்கள், நியதிகள் என்பவற்றோடும் சர்வதேச நிபுணர் குழுவினரின் வழிகாட்டலோடும் புதைகுழி அகலப்படவும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான அழுத்தமாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்துகின்றனர்.

இனவாத வன் செயல்களால் கொல்லப்பட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கூரக்கூடாது நினைவு கூறினாலும் மீண்டும் அவர்கள் வரப்போவதில்லை என்பதுவே தெற்கின் சிந்தனை.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் எண்பத்திமூன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடத்தப்பட்ட போது அங்கு குழப்புவதற்காக வந்த குண்டர்கள் கூறினர். அதுவே பேரினவாத மற்றும் மதவாத அரசியல் வாதிகளினதும் கருத்தியல். தமிழர்களுக்கு இனி எத்தகைய நீதியும் இலங்கையில் கிடைக்கப் போவதில்லை இதுவே இன்றைய சூழ்நிலை.

இத்தகைய பின்னணியில் யுத்த குற்றங்களுக்கும், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், கண்டுபிடிக்கப்படும் மனித புதைக்குழிகளின் ஆய்விலும் இலங்கையில் நீதியை அடைய முடியாது. சர்வதேச தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நடத்தும் கடை அடைப்புக்கும், பேரணிக்கும் தாயக தமிழர்கள் ஆதரவு வழங்குவதே அரசியல் நீதி என்றார்.

https://www.virakesari.lk/article/160976

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : போராட்டம் முன்னெடுப்பு

Published By: VISHNU

28 JUL, 2023 | 02:05 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் மக்கள்  இராணுவத்திடம் உறவுகளைக் கையளித்ததாகக் கூறப்படும் பகுதியான, முல்லைத்தீவு நீதிமன்றிற்கு அருகில் ஆரம்பமானது.

இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போரணி தொடர்ந்து நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து. அங்கு மிகப் பாரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

363055274_244381211860930_11880898698183

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (28) போராட்டம்  மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/161132

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் ; காணாமல் போனோர் அலுவலகம்

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 04:42 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161896

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் இறுதி முடிவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு களவிஜயம் செய்திருந்தார்கள்.

களவிஜயத்தின் பின்னர் இது தொடர்பாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று (10) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும், வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஆகவே அவர்கள் இந்த மாதம் 17 ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள். அதனை தொடர்ந்து 21 ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படுமென தெரிவித்தார்.

 

http://www.samakalam.com/மனிதப்புதைகுழி-அகழ்வுப்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : அகழ்வுப் பணிக்கான செலவு அறிக்கை சமர்ப்பிப்பு

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.jpg

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில்  மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்தப் பகுதியில் அகழ்வுப் பணிக்கான செலவு தொடர்பான அறிக்கையை தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மன்றில் சமர்ப்பித்தனர். இந்நிலையில், நிதி கையாளுகை தொடர்பில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் மன்றில் ஆஜராகாதமையினால், அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

https://thinakkural.lk/article/268940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை! நிதியை வழங்க பின்னடிக்கிறதா அரசாங்கம் ? மீளவும் வழக்கு

Published By: VISHNU

18 AUG, 2023 | 09:48 AM
image
 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.08.2023 அன்று  திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

received_846292670228167.jpeg

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17)  முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

received_839494991183678.jpeg

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  கொக்குளாய்  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்தரணி வி கே நிரஞ்சன், தொல்பொருள் திணைக் களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக,  கொக்குத்தொடுவாய் மத்தி  கிராம அலுவலர் எம். அஜந்தன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகியிருந்தனர்.

received_771729811625419.jpeg

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினுடைய முல்லைத்தீவு வலய பொறுப்பதிகாரி ஆர் ஜி ஜே பி குணதிலக அவர்களால் குறித்த அகழ்வு பணிக்கு ஆறு வாரங்களுக்கு 1.2 மில்லியன் ரூபா பாதீடு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

received_1493115134856155.jpeg

தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதிகள் கிடைக்கப்பெறாமல் அதனுடைய வேலைகளை ஆரம்பிக்க முடியாது என்று சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் உரிய நிதிகள் கிடைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 15 நிமிடங்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

received_294278026621320.jpeg

இதன் பின்னர் மீண்டும் நீதிமன்றம் ஆரம்பமாகி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கில்  சட்டத்தரணி வி கே நிரஞ்சன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததன்படி 21 ஆம் திகதி அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்றும் அதன் தொடர்ச்சியாக இந்த அகழ்வுப்பணிகள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

received_678774734143854.jpeg

இதன் அடிப்படையில் குறித்த அகழ்வு பணி இடத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக பல்வேறு திணைக்களங்கள் இதில் கலந்துரையாடுவதற்கு இந்த இடத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களையும் அடுத்த தவணையில் அழைத்து உரிய தீர்வுகளை எட்டி இந்த அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு  மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  அவர்களால் நீதிமன்றத்திற்கு கருத்தை முன்வைத்தார்.

இதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை, கரைதுறைப்பற்று  பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று  பிரதேச சபையினுடைய செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசாங்க  அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் அல்லது நிதி தொடர்பாக கையாளக்கூடிய அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை  அதிகாரிகள், தொல் பொருள் திணைக்கள  அதிகாரிகள், கொக்குளாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தடயவியல் பொலிசார், காணாமல் போனோர்  அலுவலகத்தினுடைய பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியினுடைய கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினர் அனைவரையும் அடுத்த தவணையில் மன்றில் பிரசன்னமாக உத்தரவிடுமாறும்  அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி  உறுதியான தீர்மானத்தை எடுத்து  அகழ் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

சட்டத்தரணி நிரஞ்சன் அவர்கள் குறித்த வழக்கில் அகழ்வு பணியுடன் தொடர்புடைய  பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளையும்  அழைத்து உரிய  முடிவை எடுத்து மழைக்கு முன்பதாக இந்த அகழ்வு பணியினை விரைவுபடுத்தி  அகழ்வு  பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதினால் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31.08.2023  அன்றுக்கு தவணையிட்டு அன்றைய தினம் (31) அனைத்து தரப்பினரையும் நீதிமன்றில் முன்னிலையாக கட்டளை ஆக்கினார்.

https://www.virakesari.lk/article/162614

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்தநிலையில், அதன் விசேட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது. நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் எதிர்வரும், 5ம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/271111

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்

31 AUG, 2023 | 09:43 PM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இன்று வியாழக்கிழமை (31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு  சட்டத்தரணிகளால்  சுட்டிக்காட்டப்பட்டது.

 

குறிப்பாக இந்த வழக்கு விசாரணை களுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி  உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த  சட்டத்தரணிகள் தொடர்பிலே புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும்  அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன ? எங்கிருந்து வந்தார்கள் ? என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும்  அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் 

இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் அவர்கள் புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் 

இலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருக்கின்றதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குகுளாய் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஈடுபடும் பொது மக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக புலனாய்வு பிரிவினரால் அச்சுறத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டத்தரணிகளையும்  அச்சுறுத்தும் நீதித்துறையை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

03 SEP, 2023 | 01:54 PM
image
 

"வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள் மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடும்"

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி அகழ்வுகளை சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை செவ்வாய்கிழமை (5) மேற்கொள்வதென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இப்புதைகுழி அகழ்வின்போது பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் இதனை அடிப்படையாகக்கொண்ட அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டுமெனக் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். மனிதப்புதைகுழி விவகாரங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனடிப்படையிலேயே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டிய அவர், தற்போது கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்நடவடிக்கைகள் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதைப்போன்று, ஏனைய மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரங்களிலும் உரியவாறு செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான நிதியொதுக்கீட்டை வலியுறுத்துவதில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதாகவும், அதன்மூலம் இப்பணிகளுக்கென 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டதுடன், எனவே இவ்விசாரணைகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.  

அத்தோடு இதுபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பின்னணியில் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நா அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/163743

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம்

Published By: VISHNU

05 SEP, 2023 | 05:06 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

IMG-20230905-WA0032.jpg

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20230905155936_IMG_7812.JPG

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

IMG-20230905-WA0017.jpg

அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும், எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார்.

IMG-20230905-WA0047.jpg

IMG-20230905-WA0020.jpg

20230905154649_IMG_7806.JPG

https://www.virakesari.lk/article/163888

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் !

06 SEP, 2023 | 09:00 AM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர்  செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை.

அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர்  (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடையவியல் போலிசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர்இளஞ்செழியன், கிரமாஅபிவிருத்திச்சங்கத் தலைவர் கி.சிவகுரு பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

IMG-20230906-WA0013.jpg

IMG-20230906-WA0023.jpg

IMG-20230906-WA0011.jpg

IMG-20230906-WA0008.jpg

 

IMG-20230906-WA0009.jpg

IMG-20230906-WA0003.jpgIMG-20230906-WA0010.jpg

IMG-20230906-WA0002.jpg

https://www.virakesari.lk/article/163920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள்

06 SEP, 2023 | 09:26 PM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம்நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 2 ஆம் நாள் அகழ்வில் பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் உள்ளிட்ட இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு

Published By: VISHNU

07 SEP, 2023 | 06:51 PM
image
 

 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர்  (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

இந் நிலையில்  இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டுதுப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடையப் பொருட்களும் அகழ்வின்போது மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணி தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உலோகத் துண்டுகளும் இவேறு சில ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பகுதி அளவில் இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான  அடையாளங்கள் எவையும் இல்லை.

இருப்பினும் மீட்கப்பட்ட ஆடைகளில் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

எது எவ்வாறாயினும் இவற்றை விரிவாக ஆராய்ந்து, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பில் கூறமுடியும் என்றார்.

மேலும் குறித்த அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20230907-WA0028.jpg

IMG-20230907-WA0029.jpg

IMG-20230907-WA0018.jpg

IMG-20230907-WA0020.jpg

IMG-20230907-WA0023.jpg

20221007053308_IMG_0292.JPG

IMG-20230907-WA0012.jpg

20221007053652_IMG_0299.JPG

20221007052819_IMG_0286.JPG

20221007052658_IMG_0275.JPG

20221007052711_IMG_0278.JPG

20221007052438_IMG_0268.JPG

20221007052457_IMG_0270.JPG

https://www.virakesari.lk/article/164058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் இடையூறு

08 SEP, 2023 | 08:11 PM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகைதந்திருந்தனர்.

65.jpg

இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு இவ்வாறு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது.

 

அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்புக்கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபடமுடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தினர்.

 

அத்தோடு நீண்டதூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்திசேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களைப் பொலிசார் எச்சரித்துமிருந்தனர்.

64.jpg

இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பதற்கு  அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயர்த்தனத்தின் பின்னர், இந்தவிடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்திசேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

67.jpg

https://www.virakesari.lk/article/164140

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் : எத்தனை எலும்புக்கூடுகள் இருக்கின்றன என்பதை இனங்காண்பதில் சவால்

11 SEP, 2023 | 07:27 PM
image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஐந்தாவதுநாளாக (11) இன்று இடம்பெற்ற நிலையில், அகழ்வுப் பணிகளின் நிறைவில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (11) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

ஐந்தாம்நாள்  அகழ்வாய்வுகள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் இரண்டுமனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துப்பாக்கி ரவையும் தடயப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுகின்றன. எனவே எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காணமுடியாதுள்ளது.

படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போதுதான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும்.

இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ள என்பதை தெரிவிக்கமுடியும்.

அதேவேளை கடந்த செப்ரெம்பர்(08) வெள்ளியன்று இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தம் 04 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 14மீற்றர் நீளத்திலும், 3மீற்றர் அகலத்திலும், 1.5மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்த செப்ரெம்பர் (09) சனிக்கிழமையன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தகடு ஒன்று எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் என்றார்.

மேலும் குறித்த ஐந்தாம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அனந்தி சசிதரன் முன்னாள் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், கிராமமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

 

IMG-20230911-WA0043.jpg

IMG-20230911-WA0042.jpg

 

IMG-20230911-WA0044.jpg

IMG-20230911-WA0040.jpg

IMG-20230911-WA0030.jpg

IMG-20230911-WA0046.jpg

IMG-20230911-WA0045.jpg

https://www.virakesari.lk/article/164363

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.