Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WC 2023: அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஸ்வீடன்! வெண்கலப் பதக்கத்துடன் துள்ளித் குதித்த வீராங்கனைகள்

3 மணி நேரம் முன்

மகளிர் உலகக்கோப்பையில் 3வது இடத்திற்கான போட்டியில் அவுஸ்திரேலியாவை 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வீழ்த்தியது.

மூன்றாவது இடத்திற்கான போட்டி

2023ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நாளையை தினம் இறுதிப்போட்டி (ஸ்பெயின்-இங்கிலாந்து) நடைபெற உள்ள நிலையில், 3வது இடத்திற்கான போட்டி இன்று நடந்தது.  

 

 

Suncorp மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்வீடன் அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஸ்வீடனின் பிரிடோலினா ரோல்போ கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து 62வது நிமிடத்தில் கொசோவாரே அஸ்லணி அபாரமாக கோல் அடிக்க, அதுவே ஸ்வீடனின் வெற்றி கோலாகவும் மாறியது. 

sweden-beat-aus-and-won-bronze-wc-2023Twitter (@FIFAWWC)

வெண்கலம் வென்ற ஸ்வீடன்

அவுஸ்திரேலிய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது. 

sweden-beat-aus-and-won-bronze-wc-2023 Twitter (@FIFAWWC)

வெண்கலப்பதக்கத்தை வென்ற ஸ்வீடன் வீராங்கனைகள் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மகளிர் உலகக்கோப்பையில் ஸ்வீடன் அணி 4வது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

 

 Twitter (@FIFAWWC)

https://news.lankasri.com/article/sweden-beat-aus-and-won-bronze-wc-2023-1692449306

  • Replies 85
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து இட‌த்தை பிடித்த‌து சுவிட‌ன் ம‌க‌ளிர் அணி

அவுஸ் ம‌க‌ளிர் அணி மீண்டும் தோல்வி

நாளைக்கு பின‌ல் வெற்றி கோப்பையுட‌ன் ஸ்பேனிய‌ன் ம‌க‌ளிர் அணி நாடு திரும்ப‌க் கூடும்........................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, நோர்வே ,யேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பின்பு பெண்களுக்கான கால்பந்து வரலாற்றில் ஐந்தாவது உலக சாம்பியனாக போவது ஸ்பெயினா அல்லது இங்கிலாந்தா என்பது நாளை தெரியவரும். இறுதி போட்டி ஒரு ஐரோப்பிய  மோதலாகிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்ற ஸ்வீடன்

sp-news-5.jpg

9ஆவது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20ஆம் திகதி தொடங்கியது.

இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது.

சிட்னி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா – ஸ்வீடன் அணிகள் மோதின.

30ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.

அவுஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2ஆவது பாதி தொடங்கியது. 62ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.

கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4ஆவது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/269385

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் உலக கோப்பையை வென்றது.  பெனல்டி உதை ஒன்றை தவற விட்டாலும் 1 - 0 கோல் கணக்கில் ஸ்பெயின் இங்கிலாந்தை வென்றது.  

பார்த்த போட்டிகளை வைத்து பார்க்கும் போது நைஜீரியா, யப்பான், சுவீடனின்  தரத்துக்கு இவ்விரு குழுக்களும் இருக்கவில்லை.

ஸ்பெயின் முதல் தரமாக  உலக கோப்பையை வென்றது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

ஸ்பெயின் உலக கோப்பையை வென்றது.  பெனல்டி உதை ஒன்றை தவற விட்டாலும் 1 - 0 கோல் கணக்கில் ஸ்பெயின் இங்கிலாந்தை வென்றது.  

பார்த்த போட்டிகளை வைத்து பார்க்கும் போது நைஜீரியா, யப்பான், சுவீடனின்  தரத்துக்கு இவ்விரு குழுக்களும் இருக்கவில்லை.

ஸ்பெயின் முதல் தரமாக  உலக கோப்பையை வென்றது. வாழ்த்துக்கள்.

ஒம் ப‌னாட்டிய‌ ஸ்பேனிய‌ன் ம‌க‌ளிர் அணி கோலுக்கு அடிக்க‌ வில்லை

ஸ்பேனிய‌ன் ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்...........

  • கருத்துக்கள உறவுகள்

இதே 2023 பீபா பெண்கள் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டித் தொடரில் ஜப்பானால் 0 - 4 என்ற கோல் கணக்கில் தோற்கடிக்கபட்ட ஸ்பெயின் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வெற்றி பெற்று 1 - 0 உலக சம்பியன் ஆனது

5 minutes ago, nunavilan said:

யப்பான், சுவீடனின்  தரத்துக்கு இவ்விரு குழுக்களும் இருக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பை: ஸ்பெயின் முதன் முறையாக சாம்பியன் - இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?

மகளிர் உலகக்கோப்பை - ஸ்பெயின் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 ஆகஸ்ட் 2023, 12:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.

இந்த ஆட்டத்தை மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் தொலைக்காட்சிகள், பெரிய திரைகள் மூலம் நேரலையில் போட்டியை கண்டு ரசித்தனர்.

மகுடத்திற்காக ஸ்பெயின்-இங்கிலாந்து பலப்பரீட்சை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

இந்த தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்தித்திராத இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடியது.

மறுபுறம், கடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை காலியிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து முதன்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஸ்பெயின் வீராங்கனைகள் விளையாடினர்.

இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றது இல்லை என்பதால் முதன்முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

 
மகளிர் உலகக்கோப்பை - ஸ்பெயின் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டித் தொடங்கிய 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா கோல் அடிக்க 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது. அதற்குப் பதில் கோல் திருப்ப இங்கிலாந்து அணி கடுமையாக போராடியது. ஆனால், ஸ்பெயின் அணியின் தற்காப்பு மிகச்சிறப்பாக இருந்ததால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயற்சித்தனர். அதற்காக தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்தனர். ஆனாலும் கூட ஸ்பெயின் அணியின் தற்காப்பை மீறி அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதேநேரம், ஸ்பெயின் அணியும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை.

ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால், முடிவில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன் முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்துவிட்டது.

மகளிர் உலகக்கோப்பை - ஸ்பெயின் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிறைவேறாமல் போன 56 ஆண்டுகால கனவு

இங்கிலாந்து ஆடவர் அணி கடைசியாக கடந்த 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர், இதுவரை இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகள் எந்தவொரு சர்வதேச தொடரையும் வென்றது இல்லை.

இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையான இங்கிலாந்து அணி முன்னேறியதோடு, இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்கவில்லை என்பதால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடரில் அபாரமாக செயல்பட்டு ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அந்த அணி ஸ்பெயினிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

 
மகளிர் உலகக்கோப்பை - ஸ்பெயின் சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோப்பையை கைப்பற்றிய 5வது நாடு

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டு கால வரலாற்றில் அதிகப்பட்சமாக அமெரிக்கா 4 முறையும் ஜெர்மனி 2 முறையும் நார்வே மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்த பட்டியலில் 5வது நாடாக ஸ்பெயின் இணைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c25zn1z81vqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு தந்தை இறந்த செய்தி பின்னரே தெரிவிக்கப்பட்டது

Published By: RAJEEBAN

21 AUG, 2023 | 12:55 PM
image
 

உலககிண்ண இறுதிப்போட்டியில் தனது அணிக்காக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் தலைவியிடம் அவரது தந்தை உயிரிழந்த  தகவல் போட்டி முடிவடைந்த பின்னரே தெரிவிக்கப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்து அணியை தோற்கடித்த - வெற்றிக்கு காரணமான அந்த ஒரு கோலை அணித்தலைவி ஒல்கா கார்மொனா அடித்தார்.

இந்த நிலையில் நோய்காரணமாக நீண்டகாலமாக போராடிக்கொண்டிருந்த அவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நீங்கள் அந்த இரவு என்னை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் என்னை பற்றி பெருமைப்பட்டிருப்பீர்கள் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியுடன் தனது வெற்றிபதக்கத்தை முத்தமிடும் படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஒல்கா கார்மொனாவின் தந்தையின் இறப்பு குறித்து அறிவித்துள்ள ஸ்பானிஸ் கால்பந்தாட்ட சங்கம் இறுதிப்போட்டிக்கு பின்னரே அவருக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடும் துயரமான தருணத்தில் நாங்கள் எங்களது அனுதாபத்தை அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்  என தெரிவித்துள்ள ஸ்பானிஸ்  கால்பந்தாட்ட அமைப்பு நாங்கள் ஒல்காவை நேசிக்கின்றோம், நீங்கள் எங்கள் வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

0900aa80-3f56-11ee-bdff-b01b910211c9.jpg

https://www.virakesari.lk/article/162833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினை உலுக்கும் கால்பந்தாட்ட முத்தம் - உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் நடந்தது என்ன?

Published By: RAJEEBAN

26 AUG, 2023 | 12:49 PM
image
 

ஸ்பெயினின் கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வீராங்கனையொருவரை உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் பல வீராங்கனைகள் எதிர்காலத்தில் போட்டிகளை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

ஸ்பெய் கால்பந்தாட்ட சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் ஜெனி ஹேர்மசோ என்ற வீராங்கனையை முத்தமிட்டதே பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரை பதவி நீக்கும்வரை தாங்கள் ஸ்பெயின் அணிக்காக விளையாடப்போவதில்லை என 81 வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வெற்றியை தொடர்ந்தே ரூபியாலெஸ் அந்த வீராங்கனையை முத்திமிட்டுள்ளார்.

ஸ்பெயின் அவரை நீக்குவதற்கான சட்டநடவடிக்கைகளை எடுத்துள்ள அதே வேளை பீபா அமைப்பும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

எனினும் ரூபியாலெஸ் பதவி விலக மறுத்துள்ளார்.

ஜெனியிடம் தான் முத்தமிடவா என கேட்டதாகவும் அதற்கு அவர் இணங்கியதாகவும் ரூபீயாலெஸ் தெரிவித்துள்ளார்.

அது ஒரு தன்னிச்சையான முத்தம் பரஸ்பர மகிழ்ச்சி மற்றும் ஒருமித்தகருத்தின் வெளிப்பாடே  என தெரிவித்துள்ள ரூபீயாலெஸ் இதுவே முக்கியம் அது சம்மதத்துடனான முத்தம் அதுவே எனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை அந்த வீராங்கனை நிராகரித்துள்ளார்.

அவர் சொல்வது திட்டவட்டமாக தவறானது மேலும் அவர் உருவாக்கிய சூழ்நிலையை தனக்கான பயன்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வேலை சமூக சூழ்நிலைகள் எவற்றிலும் எவரும் விருப்பமற்ற நடத்தைக்கு பலியாகக்கூடாது என நான் கருதுவதால் நான் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ள அந்த வீராங்கனை நான் பாதிக்கப்படக்கூடியவளாக உணர்ந்தேன் எனது சம்மதம் இல்லாமல் மனக்கிளர்ச்சியால் தூண்டப்பட்ட பாலியல்ரீதியிலான செயலுக்கு பலியாகிவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை மதிக்கவில்லை எனவும் அந்த வீராங்கனை குறிப்பிட்டுள்ளார்.

ரூபியாலெசின் நடத்தையை நியாயப்படுத்தவேண்டும் என கடும் அழுத்தங்களுக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாது நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என ஜெனிக்கு ஆதரவாக இறுதிப்போட்டியில் தோற்ற இங்கிலாந்து மகளிர் அணியினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/163228

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜெனியிடம் தான் முத்தமிடவா என கேட்டதாகவும் அதற்கு அவர் இணங்கியதாகவும் ரூபீயாலெஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது.

1 hour ago, ஏராளன் said:

எனினும் அதனை அந்த வீராங்கனை நிராகரித்துள்ளார்.

ஆம் என்றீர்கள். பிறகேன் மறுப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.