Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்பதில் ஏழு மாகாண சபைகளில் சிங்கள மக்கள்: குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஒன்பதில் ஏழு மாகாண சபைகளில் சிங்கள மக்கள்: குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும், எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1341788

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு ஒன்றும் தனியாக கொடுக்கவில்லை என காட்ட மிச்சம் 7க்கும் கொடுத்த வேண்டாச் சீதனம்தான் மா.சபை.

அவர்களிடம் கருத்து கேட்டால் அதிகாரம் எல்லாவற்றையும் மத்திக்கே எடுங்கள் என்றே சொல்லுவர்.

1 hour ago, தமிழ் சிறி said:

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்

1 hour ago, goshan_che said:

தமிழருக்கு ஒன்றும் தனியாக கொடுக்கவில்லை என காட்ட மிச்சம் 7க்கும் கொடுத்த வேண்டாச் சீதனம்தான் மா.சபை.

அவர்களிடம் கருத்து கேட்டால் அதிகாரம் எல்லாவற்றையும் மத்திக்கே எடுங்கள் என்றே சொல்லுவர்.

 மாகாணசபை என்பது வெள்ளையானை. பெரும் செலவு செய்து நிர்வகித்தும் பயன் எதுவும் கொடுக்காத ஒரு முறைமை. இலங்கை போன்ற ஒரு சிறு தேசத்துக்கு இது பொருத்தமில்லை. 

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க கொண்டு வந்த இந்த முறையால், தமிழர்களுக்கும் பயன் இல்லை. சிங்களவர்களுக்கும் பயன் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஒன்பதில் ஏழு மாகாண சபைகளில் சிங்கள மக்கள்: குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும், எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1341788

ரணிலுக்கு  தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க விருப்பமில்லை..துணிவுமில்லை   அறிவுமில்லை   சிங்கள மக்களே   உன்னால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை  வயதும் போய்விட்டது  வீட்டில் இருக்கும்படி வாக்களித்தார்கள்.  ...எதோ ஒரு வகையில் குறுக்கால். சுத்தி  வந்து ஐனதிபதி கதிரையில் அமர்ந்து  விட்டது  ...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

 மாகாணசபை என்பது வெள்ளையானை. பெரும் செலவு செய்து நிர்வகித்தும் பயன் எதுவும் கொடுக்காத ஒரு முறைமை. இலங்கை போன்ற ஒரு சிறு தேசத்துக்கு இது பொருத்தமில்லை. 

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க கொண்டு வந்த இந்த முறையால், தமிழர்களுக்கும் பயன் இல்லை. சிங்களவர்களுக்கும் பயன் இல்லை. 

நீங்களும் பார்த்திருப்பீர்கள், அது 90களின் மத்திய காலம், TNL இல் லசந்த நடத்தும் வாராந்த நிகழ்ச்சியில் குமார் பொன்னம்பலமும், எஸ் எல் குணசேகரவும் காரசாரமாக விவாதிப்பார்கள். அதில் எஸ் எல் அடிக்கடி சொல்லுவார்… யூகேயில் கூட ஒற்றையாட்சி முறைதான் வேல்ஸ், ஸ்கொட்லாந்து எங்கும் என.

அப்படி சொல்லி சில வருடங்களுக்குள், 2000 ஆண்டு பிறக்க முன்பே ஸ்கொட்லாந்து, வேல்ஸ் இரெண்டும் அதிக அளவிலான அதிகார பரவாலாக்கத்தை அடைந்து விட்டன.

அது மட்டும் இல்லை, இங்கே வந்து பார்த்த பின் தான் புரிகிறது ஒவ்வொரு local council உம் எவ்வளவு கூடிய அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள்,  எந்த பெரிய பட்ஜெட்டை நிர்வகிக்கிறார்கள் என. அதே போல் பொலிசும் பல உள்ளூர் constabulary களால்தான் நிர்வகிக்கப்படுகிறது.

லண்டன் பெரு நகர பகுதியில் மட்டும், City of London Police, The Met, British Transport  Police, என மூன்று சுயாதீன பொலீஸ் பிரிவுகள் ஒன்றில் ஒன்று வேறுபட்டு செயல்படுகிறன. லண்டனை தாண்டியவுடன், Surrey, Thames Valley என ஒவ்வொரு அலகுக்கும் ஒரு constabulary.

இதனுடன் ஒப்பிட்டால் இலங்கையை 9 அலகாக பிரித்தது ஒன்றும் அத்தனை பெரிய வெள்ளை யானை இல்லை.

ஆனால் அதிகாரத்தை பகிராமல் மா.சபைகளை சும்மா ஒப்புக்கு வைத்கிருப்பதாலேயா அவை வெள்ளையானை ஆகிறன.

அதிகாரத்தை பகிர்ந்து, ஜனநாயகத்தை உள்ளூர் மயப்படுத்தி, வினைதிறனான உள்ளூர் முடிவெடுத்தலை மா.சபைகள் மூலம் கூட்டினால் - ஒட்டு மொத்த நாடும் செழிக்கும்.

ஆனால் சிங்களவர், தமிழர், சோனகர் எவரும் விரும்பாத தீர்வு என்பதால் - மா. சபைகள் வெள்ளையானை ஆக்கப்பட்டுள்ளன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு மாகாண சபை சம்பந்தமாக எல்லா கட்சிகளும் அடக்கி வாசிக்கவே முயட்சிக்கிறது. பொதுவாக சிங்கள கட்சிகள் இந்த மாகாண சபையை இல்லாதொழிக்க பார்க்கிறார்கள். புலிகள் இல்லாததால் இனப்பிரச்சினை முடிந்து விடடதென்பது அவர்களது எண்ணம்.

ஜனாதிபதி தேர்தல் வருவதால் அது பற்றி உரக்க பேச முடியாமல் இருக்கிறார்கள். மற்றப்படி எல்லா சிங்கள அரசியல் வாதிகளும் இதனை இனவாத நோக்கத்துடந்தான்தான் பார்ர்கிறார்கள்.

ரணில் ஐயா அவர்களுடன் ஒப்பிடும்போது நல்ல இனவாதியாக தோற்றமளிக்கிறார். இருந்தாலும் இவர் எடுக்கும் முயட்சியளவுக்கு மற்ற சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கமாடடார்கள் என்பது எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.