Jump to content

காதல் என்பது எதுவரை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“பள்ளிச் சிநேகிதம் எல்லாம் படலைவரைதான்” என்று ஊரில் அப்போது சொல்வார்கள். அதையும் தாண்டி இது புதுமையானது.

இந்தக் காதல் கதை இதுவரை அறியாததொன்று.  தோமாஸ் மக்மெக்கினும்(78) நன்ஸி ஹாம்பெல்லும் (78)  அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலம் முடிந்த பின்னர் இருவரும் அவரவர் பார்வையில் இருந்து காணாமல் போய்  தங்கள் தங்களுக்கான குடும்பங்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு பாதையில் போய் விட்டார்கள்.  என்னதான்  இருவரும் விலகி வெகு தூரம் பயணித்தாலும், காலங்கள் நீண்டுதான் போனாலும் கல்லூரி நினைவுகள் மட்டும் அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன.

“அவள் ஒரு உற்சாகமான பெண். நிறைந்த அழகி. அவளைக் காணும் போதெல்லாம் நான் நொறுங்கிப் போவேன். அவளுடன் இருப்பதற்கு எப்போதாவது எனக்கு நேரம் தருவாளா? என கல்லூரிக் காலத்தில் நான் ஏங்கி இருக்கிறேன். ஆனால் நடந்தது வேறாக இருந்தது. இருவரும் பிரிந்துவிட்டோம்இப்படித் தனது நினைவுகளைச் சொல்கிறார் தோமாஸ் மக்மெக்கின். அவர் மேலும் குறிப்பிடுகையில், “கலிபோர்னியாவி்ல் உள்ள எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களின்  60ஆவது ஒன்று கூடலுக்கு எனக்கு நன்ஸியிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. 63 வருடங்களுக்குப் பின்னர் அவளிடம் இருந்து வந்த தகவல் அது

என்னைச் சந்திக்க உனக்கு விருப்பம் இருந்தால் தெரிவி, நான் உனக்கான விமான ரிக்கெற்றை அனுப்பி வைக்கிறேன்என அவளுக்குப் பதில் ஈமெயில் அனுப்பினேன். அவள் அதற்கு ஒத்துக் கொண்டாள். என்னைத் தேடிப் பறந்து வந்தாள். விமான நிலையத்தில் அவள் முன்னால் மண்டியிட்டு, நான் எப்பொழுதும் உன்னைக் காதலித்தவன்எனக்கு வேண்டியது  எல்லாம்   நீதான். எப்பொழுதும் உனது காதலனாக, துணைவனாக, நண்பனாக நான் இருப்பேன். என்னை மணந்து கொள்கிறாயா? எனக் கேட்டேன். நன்ஸிக்குநீண்ட நேரம் யோசிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உடனேயே சம்மதித்துவிடாள்

கண்ணதாசன் ஒரு பாட்டில் இப்படி எழுதியிருப்பார்,

 “முழுமை பெற்ற காதல் எல்லாம் 

முதுமை வரை கூடவரும்

மண்டியிட்ட ரோமியோவைப் பார்க்க விரும்பினால் கீழே உள்ள வீடியோவைப்  பாருங்கள்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூடவரும்" சரிதான், பின்பு வரும் கடமைகளும் கூடி வருமோ தெரியவில்லை.......!   😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.