Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

வடக்கு- கிழக்கில் இன்று இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கில் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடுக்கவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

http://www.samakalam.com/வடக்கு-கிழக்கில்-பூரண-ஹர/

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து முடங்கியது மன்னார்

Published By: VISHNU

28 JUL, 2023 | 10:08 AM
image
 

மன்னார் உட்பட  வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

IMG_8433.jpg

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

IMG_8427.jpg

எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_8418.jpg

IMG_8424.jpg

IMG_8412.jpg

IMG_8402.jpg

IMG_8404.jpg

https://www.virakesari.lk/article/161090

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து முடங்கியது முல்லைத்தீவு

Published By: VISHNU

28 JUL, 2023 | 10:41 AM
image
 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட  தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும்  வெள்ளிக்கிழமை (28) காலை 9 மணிக்கு  முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட  பகுதியில்  ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

received_6638158302912031.jpeg

குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

received_1638222756684511.jpeg

இந்நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு  தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரசியல் கடசிகள் ,தனியார் போக்குவரத்து சங்கங்கள்,வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

received_1979888045697532.jpeg

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்  போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு இன்று போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை.

received_1488945818592673.jpeg

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு  ,மல்லாவி  ,உடையார்கட்டு  ,மாங்குளம்  ஒட்டுசுட்டான் முள்ளியவளை உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரங்களில் கடைகளை மூடி  போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றனர்.

received_1514503939354759.jpeg

பாடசாலை பலவும் மாணவர்கள் வரவின்மை போக்குவரத்து இன்மை காரணமாக இயங்கவில்லை. 

received_663963841926991.jpeg

received_298054322747296.jpeg

received_258113306971374.jpeg

received_262766716495583.jpeg

received_251551104316806.jpeg

received_250490594525473.jpeg

received_247997191380045.jpeg

received_242428222053041.jpeg

received_241881682008729.jpeg

புதுக்குடியிருப்பு

மன்னார் உட்பட  வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

363835884_290064783571068_21573206882224

இந்நிலையில், ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதி மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த  அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

363832071_829490638379415_78073625348647

363520590_1245825242743496_5774770874130

363803814_3536799543246949_5773674142767

363593363_1330977757540008_7182506961221

363507023_1935375676846316_5444722467321

363499448_237656069190231_75982201055341

363301036_2266492803523664_3851705715872

https://www.virakesari.lk/article/161095

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து முடங்கியது யாழ்ப்பாணம்

Published By: VISHNU

28 JUL, 2023 | 11:39 AM
image
 

 

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும்  முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிக கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகிய பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளனர்.

image_6483441__2_.JPG

யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின்  சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

image_6483441__1_.JPG

இதனால் தூரப்பயணங்களுக்கு செல்லவுள்ள பயணிகள் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்ததை அவதானிக்க முடிந்துள்ளது.

image_6487327.JPG

image_6483441.JPG

image_50364929.JPG

image_50399745.JPG

VideoCapture_20230728-092457.jpg

VideoCapture_20230728-092425.jpg

VideoCapture_20230728-092505.jpg

VideoCapture_20230728-092538.jpg

image_50378241.JPG

VideoCapture_20230728-092530.jpg

VideoCapture_20230728-092549.jpg

https://www.virakesari.lk/article/161106

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இதற்கு ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11-12-1024x381.jpg

22-5-1024x386.jpg

33-4.jpg

https://thinakkural.lk/article/265592

  • கருத்துக்கள உறவுகள்

வெறிச்சோடிக் காணப்படும் யாழ் மாவட்டம்

வெறிச்சோடிக் காணப்படும் யாழ் மாவட்டம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி  யாழ்  மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதோடு,  வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகளும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில்  இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதால் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1342132

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

வட கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் திறந்திருப்பதனையும், போக்குவரத்து வழமை போன்று நடைபெறுவதனையும் காணக்கூடியயாக இருந்தது.

ஏனைய மாவட்டங்களை ஒப்பிடுகையில் திருகோணமலை நகரில் ஹர்த்தாலுக்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா வர்த்தக சங்கம் தமக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னர் தெரிவித்திருந்தனர்.

எனினும் இன்று வவுனியாவிலும் முழு அளவில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1342118

  • கருத்துக்கள உறவுகள்

மனித புதைக்குழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைகுழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1342098

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

பூரண ஹர்த்தால் : முடங்கியது வடக்கு- கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழி விவகாரமானது, தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன், சர்வதேச கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
ஹர்த்தாலை முன்னிட்டு, பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் பேருந்துகளும் சில மாவட்டங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை என்று பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களின் நெடுந்தூர பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் மனித புதைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையாக ஆதரவினை வழங்கியுள்ளனர்.

ஹர்த்தால் காரணமாக, வடக்கு – கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் ஆள் நடமாற்றமின்றி, வெறிச்சோடி காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

https://athavannews.com/2023/1342077

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் இன்று தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தது.

வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், மிற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் பகிரங்கமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடாத நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் தமது வர்த்தக நிலையத்தை மூடியிருந்தமையினால் ஏனைய வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தமையும் குறிப்படத்தக்கது.

vab-600x337.jpg

https://athavannews.com/2023/1342061

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடுக்கவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_8412-600x338.jpg

https://athavannews.com/2023/1342056

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது.

எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kok-3-600x338.jpg

kok-5-600x338.jpg

kok-1-600x338.jpg

https://thinakkural.lk/article/265723

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை எனக் கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே - சி.சிறீதரன்

Published By: VISHNU

28 JUL, 2023 | 05:46 PM
image
 

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடகிழக்கு தழுவிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் கொக்குதொடுவாயில் அளவுகணக்கு தெரியாதளவில் போராளிகள், மக்கள் ஆயிரக்கணக்கில் புதைக்கப்பட்ட மனித புதைகுழிக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டி சர்வதேசத்தின் மேற்பார்வையோடு நீதியான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் தேசிய மண்ணிலே பல்வேறுபட்ட இடங்களில் மனித புதைகுழிகள் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த மனித புதைகுழிகள் வெளியில் வருமானால் இலங்கை இராணுவம் இலங்கையினுடைய கடற்படை, விமானப்படை , பாதுகாப்பு படைகள் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.

குறிப்பாக இப்போது கொக்குத்தாெடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மண்டைதீவிலே இருக்கின்ற மனித புதைகுழி , இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரசபடைகளால் மிகவும் வன்மமான முறையிலே அவர்கள் அழைத்து செல்லப்பட்டு மிக நுட்பமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுடையதாக இருப்பதனால் இப்போராட்டத்தில் இன்று மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்திடம் நாம் கோருவது ஒரு நீதி விசாரணை வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றோம். இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நீதி விசாரணை என்பதற்காகத்தான் ஒரு சர்வதேச நீதி கோரி இன்று  மக்கள் அணியாக திரண்டு தமது ஆதங்கத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக இப்போராட்டம் அமைந்துள்ளது.

மனித புதைகுழிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படவில்லை. இந்நேரத்தில் புதிதாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றது . இதற்கு நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் என்பது உண்மையில் நீதியாக நடப்பதில்லை. தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் கூட அதனை பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை சரியாக செயற்படுமா? இவர்களால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது கேள்விக்குறியே அதனால்தான் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மனித புதைகுழி மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்ட தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம். அந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது அதனால் தான் இந்த சர்வதேச நீதி விசாரணையை கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161168

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் ஹர்த்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: தமிழர் பகுதிகளை முடக்கிய போராட்டம் - மனித புதைகுழி விவகாரத்தில் மக்கள் எழுப்பும் சந்தேகங்கள்

இலங்கையின் தமிழர் பகுதிகள் முடங்கின - முல்லைத்தீவில் பாரிய போராட்டம்
 
படக்குறிப்பு,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரத்தில் நீதியை பெற்றுத் தரக் கோரி மக்கள் போராட்டம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 26 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(ஜுலை 28) முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரத்தில் நீதியை பெற்றுத் தரக் கோரி இந்த முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு மனிதப் புதைக்குழி உள்ளிட்ட நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழிகளுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மனிதப் புதைக்குழி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக பிரதான வீதியோரத்தில் குழி தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, சில மனித எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், குறித்த இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமான சீருடையை ஒத்ததான சில ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போன தமது உறவுகளே, கொலை செய்யப்பட்டு, இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என காணாமல் போனோரின் உறவினர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

எனினும், தமிழர் தரப்பின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் மனித புதைக்குழியொன்று உள்ளமையை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த 6ம் தேதி முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த அகழ்வு பணிகளின் ஊடாக, குறித்த இடத்தில் மனிதப் புதைக்குழியொன்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகள் முடங்கின - முல்லைத்தீவில் பாரிய போராட்டம்
 
படக்குறிப்பு,

அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதையடுத்து, முல்லைத்தீவு நீதவான் தலைமையில் கடந்த 13ம் தேதி விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டிருந்தனர்.

குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அத்தியாவசியமானது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை முன்னிலைப்படுத்தியே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகள் முடங்கின - முல்லைத்தீவில் பாரிய போராட்டம்
 
படக்குறிப்பு,

சர்வதேசத்தின் கண்காணிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் போராடும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றோம். அண்மை காலத்தில் கொக்குத் தொடுவாய் பகுதியில் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது பிடிப்பட்ட பிள்ளைகள், சரணடைந்த பிள்ளைகளை அங்கே புதைத்திருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்குள்ளது.

அதை சர்வதேசத்தின் கண்காணிப்புடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையின் தமிழர் பகுதிகள் முடங்கின - முல்லைத்தீவில் பாரிய போராட்டம்
 
படக்குறிப்பு,

உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை இல்லை என போராடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உள்நாட்டு விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

''உள்நாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை. எனெனில், ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட பல காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுக்களிடம் போயிருந்தோம். அங்கே எங்களுக்கு சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. இதுவரை எங்களில் ஒருவரை கூட சண்டையில் இறந்தார்கள், பிடித்து வைத்திருக்கின்றோம் என்ற எந்தவொரு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான தீர்வாக அமையும்" என அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20திற்கு மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சரியான விசாரணைகளை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில், அந்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/c1rzlr51y9jo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.