Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண வலைபந்தாட்டச் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஜெமெய்க்காவிடம் இலங்கை பெருந்தோல்வி

29 JUL, 2023 | 01:56 PM
image
 

(நெவில் அன்தனி)

கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கு 2இல் வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற ஜெமெய்க்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் 25 - 105 என்ற கோல்கள் வித்தியாசத்தில்  இலங்கை  பெருந் தோல்வி அடைந்தது.

அத்துடன் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டிகளில் 100 கோல்களுக்கு மேல் புகுத்திய முதலாவது அணி என்ற பெருமையை ஜெமெய்க்கா பெற்றுக்கொண்டது.

உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் ஜெமெய்க்கா 100 கோல்களைப் போட்டது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். அத்துடன் முழு உலகக் கிண்ண வரலாற்றிலும் ஓர் அணி 100 கோல்களுக்கு மேல் போட்டது இது 14ஆவது தடவையாகும்.

இலங்கை இரண்டாவது தடவையாக இத்தகைய தோல்வியைத் தழுவியது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் (2015) நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் மலாவியிடம் 18 - 103 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

சி குழுவுக்கான போட்டியில் ஜெமெய்க்கா வீராங்கனைகளின் வேகம், விவேகம், சிறந்த பந்து பரிமாற்றம் என்பவற்றுக்கு இலங்கை வீராங்கனைகளினால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இலங்கை வீராங்கனைகளின் பந்து பரிமாற்றம் மிக மோசமாக இருந்ததால் ஜெமெய்க்காவுக்கு பல சந்தர்ப்பங்களில் இரட்டை வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாகவே ஜெமெய்க்கா கோல்களை சரமாரியாக புகுத்தியது.

உலக வலைபந்தாட்ட தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ள ஜெமெய்க்கா, போட்டியின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுமையான ஆதிக்கம் செலுத்தி இலங்கையை துவம்சம் செய்தது.

இடைவேளையின்போது 52 - 11 என்ற கோல்கள் அடிப்படையில் ஜெமெய்க்கா முன்னிலையில் இருந்தது.

நான்கு ஆட்ட நேர பகுதிகளிலும் ஜெமெய்க்கா தலா 20க்கு மேற்பட்ட கோல்களைப் போட்ட அதேவேளை, இலங்கையினால் ஒரு ஆட்ட நேர பகுதியில் அதிகப்பட்சமாக 7 கோல்களையே போட்டது.

முதலாவது ஆட்ட நேர பகுதியில் ஜெமெய்க்கா 26 கோல்களைப் போட இலங்கையினால் 5 கோல்களையே போட முடிந்தது.

2ஆவது ஆட்டநேர பகுதியிலும் ஜெமெய்க்கா 26 கொல்களைப் போட்டதுடன் இலங்கை 6 கோல்களைப் போட்டது.

இதற்கு அமைய இடைவேளையின்போது 52 - 11 என்ற கோல்கள் கணக்கில் ஜெமெய்க்கா முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னரும் ஜெமெய்க்காவின் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம்  இருந்தது.

3ஆவது ஆட்ட நேர பகுதியில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய ஜெமெய்க்கா 23 கோல்களைப் போட்டது. ஆனால் அப் பகுதியில் பெரும் தடுமாற்றத்திற்குள்ளான இலங்கையினால் 7  கோல்களையே   பெற முடிந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் ஜெமெய்க்கா சரமாரியாக கோல்களைப் போட அதனை எப்படி தடுப்பது என்று இலங்கை வீராங்கனைகள் புரியாமல் திணறிப்போயினர். ஜெமெய்க்கா 30 கோல்களை குவித்துத் தள்ளியது. இலங்கையினால் 7 கோல்களே போட முடிந்தது.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவி கயஞ்சலி அமரவன்ச, 'ஆசிய நாடான எங்களுக்கு இது மிகவும் கடினமான போட்டியாக அமைந்தது. ஜெமெய்க்காவுக்கு எதிராக நாங்கள் விளையாடியது இதுவே முதல் தடவையாகும். இதன் மூலம் எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இத்தகைய அணிகளுடன் நிறைய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது நலம் என்று கருதுகிறேன். கடினமாக போட்டியிட்டமை மற்றும் உடற்தகுதி என்பன எங்களுக்கு  நல்ல பாடங்களாக அமைந்தன. அந்தப் பாடங்களுடன் அடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்' என்றார்.

இதேவேளை, சி குழுவுக்கான மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 9ஆம் இடத்திலுள்ள வேல்ஸை 61 - 50 என்ற கோல்கள் கணக்கில் உலக தரவரிசையில் 5ஆம் இடத்திலுள்ள வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்காவை இன்று சனிக்கிழமை (29) எதிர்த்தாடவுள்ளது.

இது இவ்வாறிருக்க, பி குழுவில் பார்படொஸுடனான போட்டியில் இங்கிலாந்து 90 - 29 என்ற கோல்கள் கணக்கிலும், ஸ்கொட்லாந்துடனான போட்டியில் மலாவி 55 - 49 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்றன.

Rebekah_Robinson_-_Copy.jpg

jamaica_player_of_the_match_latanya_wils

https://www.virakesari.lk/article/161194

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் தென் ஆபிரிக்காவிடமும் இலங்கைக்கு படுதோல்வி ; தர்ஜினி சிவலிங்கம் விளையாடவில்லை

30 JUL, 2023 | 10:05 AM
image
 

(நெவில் அன்தனி)

கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்குகளில் நடைபெற்றுவரும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் இலங்கை இரண்டாவது தொடர்ச்சியான படுதோல்வியை சந்தித்தது.

2907_sorth_africa_vs_sri_lanka_world_cup

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியை முன்னின்று நடத்தும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற சி குழு போட்டியில் 32 - 87 என்ற கோல்கள் வித்தியாசத்தில்  இலங்கை தோல்வி அடைந்தது.

ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் போன்று பந்து பரமாற்றங்களில் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை எதிரணிக்கு 25க்கும் மேற்பட்ட கோல் போடும் இரட்டை வாய்ப்புகளைத் தாரைவார்த்து தொல்வி அடைந்தது.

முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் சகல ஆட்ட நேர பகுதிகளிலும் 10க்கும் குறைவான கோல்களையே இலங்கை புகுத்தியது.

இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கம் ஆரம்பப் போட்டியில் சில நிமிடங்கள் மாத்திரமே விளையாடிய நிலையில் இரண்டாவது போட்டியில் விளையாடவே இல்லை.

netball_world_cup_logo__2_.png

அவருக்குப் பதிலாக திசலா அல்கம அணியில் இணைக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் தென் ஆபிரிக்கா 24 - 9 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து இரண்டாவது ஆட்ட நேர பகுதியையும் 21 - 9 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கிக் கொண்ட தென் ஆபிரிக்கா, இடைவேளையின் போது 45 - 18 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் தென் ஆபிரிக்காவின் வேகத்திற்கும் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப் பகுதியை 6 - 23 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பறிகொடுத்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியிலும் திறமையாக விளையாடிய தென் ஆபிரிக்கா 19 - 8 என்ற கோல்கள் கணக்கில் அப் பகுதியையும் தனதாக்கி 87 - 32 என்ற கோல்கள்  அடிப்படையில் அமோக வெற்றியீட்டியது.

இலங்கை சார்பாக திசலா அல்கம 28 முயற்சிகளில் 24 கோல்களையும்  செமினி அல்விஸ் 8 முயற்சிகளில் 7 கோல்களையும்  உதவி அணித் தலைவி துலங்கி வன்னித்திலக்க 2 முயற்சிகளில் ஒரு கோலையும் போட்டனர்.

இலங்கை அதன் கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை (30) எதிர்த்தாடவுள்ளது.

2907_sorth_africa_vs_sri_lanka_world_cup

https://www.virakesari.lk/article/161239

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸூக்கு சவால் விடுத்து 12 கோல்களால் தோல்வி அடைந்த இலங்கை

31 JUL, 2023 | 10:10 AM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற சி குழுவுக்கான உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் தத்தமது முதலாவது வெற்றியை குறிவைத்து இலங்கையும்  வேல்ஸும் கடுமையாக விளையாடியதால் அப் போட்டி மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக அமைந்தது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 3 அணிகளே இரண்டாம் சுற்றுக்கு செல்ல தகுதிபெறும் என்ற நிலையில் இலங்கையை 68 - 56 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட வேல்ஸ் அந்த வாய்ப்பை சி குழுவிலிருந்து தனதாக்கிக்கொண்டது.

இக் குழுவில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த இலங்கை 13ஆம் இடத்திலிருந்து 16ஆம் இடம்வரையான நிரல்படுத்தல் சுற்றில் விளையாடவுள்ளது.

ஜெமெய்க்காவுடனான போட்டியில் சில நிமிடங்கள் விளையாடிய தர்ஜினி சிவலிங்கத்திற்கு தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் ஓய்வுகொடுக்கப்பட்டது.

அந்த இரண்டு அணிகளின் வேகத்திற்கும் பலத்திற்கும் தர்ஜினி சிவலிங்கத்தின் வயதும் உடல்வாகும் ஈடுகொடுக்காது என்பதாலும் நிரல்படுத்தல் போட்டிகளில் அவரது பிரசன்னம் அவசியம் என்பதாலும் அவருக்கு ஓய்வுகொடுக்கப்பட்டதாக தென் ஆபிரிக்காவிலிருந்து அறியக் கிடைத்தது.

இன்றைய போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் விளையாடியதுடன் அவர் திறமையாக விளையாடி 35 முயற்சிகளில் 33 கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார்.

அப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை திறமையாக விளையாடிய போதிலும் வேல்ஸ் அதனை விஞ்சும் வகையில் விளையாடி 17 -11 என்ற அடிப்படையில் 6 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

ஆனால், அடுத்த மூன்று ஆட்ட நேர பகுதிகளிலும் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 13 - 11 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கிய வேல்ஸ் இடைவேளையின்போது 30 - 22 என்ற கோல்கள் கணக்கல் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு ஆட்ட நேர பகுதிகளையும் இலங்கையின் கடும் சவாலுக்கு மத்தியில் முறையே 20 - 18, 18 - 16 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கிக்கொண்ட வேல்ஸ் இறுதியில் 68 - 56 என்ற கோல்கள் கணக்கில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இன்றைய தினத்துடன் சகல குழுக்களுக்குமான முதலாம் சுற்று லீக் போட்டிகள் நிறைவடைகின்றன.

https://www.virakesari.lk/article/161301

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது போட்டியில் மாத்திரம் 3ஆம் 4ஆம் சுற்றில் தர்ஷினி விளையாடினார். அதன்பின்னரே ஸ்ரீலங்கா ஓரளவாவது புள்ளிகளை எடுத்தது. இனத்துவேசம் விளையாட்டிலும் தொடர்கிறது. ஆசியக்கிண்ணத்தை வென்றுகொடுத்த தர்ஷினிக்கே இந்த நிலமையென்றால்??

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றாலும் பறவாயில்லை தர்சினியை போடக்கூடாது என திட்டமிட்டு  ஒதுக்கி உள்ளார்கள்.  ஜமேக்கா ஓட ஓட விரட்டியது போல் ஏனைய அணிகளும் இனவாத கும்பல்களை விரட்டியடிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிடம் சரிந்தது ஆசிய சம்பியன் இலங்கை : கடைசிக் கட்டத்தில் இலங்கை இழைத்த தவறு சிங்கப்பூருக்கு சாதகமாகியது

01 AUG, 2023 | 11:13 AM
image
 

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண வலைபந்தாட்ட தரவரிசையில் கடைநிலை அணிகளான இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில்  தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியில் சிங்கப்பூர் 55 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் அதி உயரமான வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தைக் கொண்டிருந்த ஆசிய சம்பியன் இலங்கைக்கு இந்தத் தோல்வி கடந்த 4 வருடங்களில் கிடைத்த மிகவும் மோசமான தோல்வியாகும்.

இலங்கை வீராங்கனைகளைவிட சிங்கப்பூர் வீராங்கனைகள் உயரத்தில் குறைவாக இருந்தபோதிலும் வேகமும் விவேகமுமான குறுந்தூர பந்து பரிமாற்றங்களுடன் விளையாடி முதலாவது ஆட்ட நேர பகுதியில் 19 - 10 என முன்னிலை அடைந்தது. கோல்கள் போடுவதிலும் இலங்கையை விட சிங்கப்பூர் திறமையை வெளிப்படுத்தியது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் தர்ஜினி சிவலிங்கத்திற்கு பதிலாக கோல் ஷூட்டராக திசலா அல்கம களம் இறக்கப்பட்டதும் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. இரண்டாவது பகுதியை 17 - 7 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய இலங்கை இடைவேளையின்போது 27 - 26 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் இடைவேளையின் பின்னர் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளைப் பயன்படுத்திக்கொண்ட சிங்கப்பூர் ஆட்டத்தின் 3ஆவது பகுதியை 16 - 13 என தனதாக்கியது. மூன்றாவது ஆட்ட நேர  பகுதி  முடிவில் 42 - 40 என்ற கோல்கள் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலையில் இருந்தது. ஆனால் வித்தியாசம் 2 கோல்களாக இருந்ததால் எதுவும் நிகழலாம் என்ற நிலை தோன்றியது.

எவ்வாறாயினும் நான்காவது ஆட்ட நேரப் பகுதியில் 2 நிமிடங்கள் மாத்திரமே இருந்தபோது மத்திய வலயத்திலிருந்து இலங்கையின் பந்து பரிமாற்றம் தவறாக இடம்பெற்றதால் அப் பகுதியை சிங்கப்பூர் 13 - 12 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி ஒட் டு  மொத்த நிலையில் 55 - 52 என்ற கோல்கள் கணக்கில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்தப் போட்டிக்குப் பின்னர் எஞ்சிய போட்டிகளில் தர்ஜினி சிவலிங்கம் விளையாடமலேயே ஓய்வு பெறுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.

netball_world_cup_logo.png

singapoer_player_of_the_match_jamie_lim_

https://www.virakesari.lk/article/161391

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயிடம் பணிந்த இலங்கைக்கு 5ஆவது நேரடி தோல்வி

02 AUG, 2023 | 10:29 AM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஈ குழுவுக்கான முன்னோடி சுற்று போட்டியில் ஸிம்பாப்வேயிடம் 36 - 71 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த இலங்கை கடைசி இடத்தில் இருக்கிறது.

ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகியவற்றுடன் சி குழுவுக்கான லீக் சுற்றில் இலங்கை தோல்விகளைத் தழுவியது.

netball_world_cup_logo__1_.png

இதனை அடுத்து ஒவ்வொரு குழுவிலும் கடைசி இடங்களைப் பெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் ஈ குழுவிற்கான முன்னோடி சுற்றிலும் இலங்கை பிரகாசிக்கத் தவறியது.

இந்தக் குழுவில் முதலாவது போட்டியில் சிங்கப்பூரிடம் 52 - 55 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, ஸிம்பாப்வேயிடம் படுதோல்வி அடைந்தது.

இதேவேளை, இந்த சுற்றுப் போட்டியில் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஸிம்பாப்வே, இலங்கையுடனான போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியின் இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் மாத்திரமே ஸிம்பாப்வேக்கு இலங்கை ஈடுகொடுத்து விளையாடியது. மற்றைய மூன்று ஆட்ட நேர பகுதிகளிலும் ஸிம்பாப்வே ஆதிக்கம் செலுத்தியது.

gayani_dissanayke_defending_sl_vs_zim.jp

போட்டியின் ஆரம்பத்திலேயே ஸிம்பாப்வே 4 கோல்களை அடுத்தடுத்து போட்டதை அடுத்து தடுமாற்றம் அடைந்த இலங்கை உடனடியாக வீராங்கனைகளின் நிலைகளில் மாற்றங்களை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது.

எனினும் அந்த மாற்றங்களாலும் ஸிம்பாப்வே அணியினரை இலங்கை வீராங்கனைகளால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

ஆட்டத்தின் முதலாவது கால் மணி நேர பகுதியில் அற்புதமாக விளையாடிய ஸிம்பாப்வே, இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளை நன்கு பயன்படுத்தி 18 - 10 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

இரண்டாவது ஆட்டநேர பகுதியில் இலங்கை திறமையாக விளையாடிய போதிலும் அப் பகுதியையும் 15 - 12 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக் கொண்ட ஸிம்பாப்வே இடைவேளையின்போது 33 - 22 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஸிம்பாப்வே முறையே 19 - 8, 19 - 6 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த நிலையில் 71 - 36 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

Progress_Moyo__zim_vs_sl.jpg

ஸிம்பாப்வே வீராங்கனைகளின் வேகம், சிறந்த பந்து பரிமாற்றம், துல்லியமாக பந்தை கோலினுள் செலுத்தியமை அனைத்தும் இலங்கை விராங்கனைகளுக்கு பாடமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை வீராங்கனைகளில் உதவி அணித் தலைவி துலங்கி வன்னித்திலக்க, திசலா அல்கம, ரஷ்மி பெரேரா ஆகிய மூவரே திறமையாக விளையாடினர். அணித் தலைவி கயஞ்சலி அவ்வப்போது திறமையை வெளிப்படுத்தியபோதிலும் பதற்றம் காரணமாக அவர் தடுமாற்றம் அடைந்தார்.

தர்ஜினி சிவலிங்கம் ஓரிரு நிமிடங்களே விளையாடினார். அவரால் எதிரணியின் பின்கள வீராங்கனைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இலங்கை சார்பாக துலங்கி வன்னிதிலக்க 23 முயற்சிகளில் 20 கோல்களையும் திசலா அல்கம 18 முயற்சிகளில் 14 கோல்களையும் செமினி அல்விஸ் ஒரு முயற்சியில் ஒரு கோலையும் தர்ஜினி சிவலிங்கம் 2 முயற்சிகளில் ஒரு கோலையும் போட்டனர்.

இலங்கை தனது கடைசி முன்னோடி சுற்றுப் போட்யில் பார்படோஸை இன்று சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் 13ஆம், 14ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடும். அல்லது கடை நிலைகளுக்கான போட்டியில் விளையாட வேண்டிவரும்.

sl_vs_zim_scores.jpg

https://www.virakesari.lk/article/161447

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஆட்ட நேர பகுதியில் எதிர்நீச்சல் போட்டு பார்படோஸை வீழ்த்திய இலங்கை முதல் வெற்றியை சுவைத்தது

Published By: VISHNU

03 AUG, 2023 | 11:55 AM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் புதன்கிழமை (03) நடைபெற்ற பார்படோஸுக்கு எதிரான ஈ குழுவுக்கான முன்னோடி சுற்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியின் கடைசி ஆட்ட நேர பகுதியில் எதிர்நீச்சில் போட்டு விளையாடிய இலங்கை 60 - 56 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

0308_sri_lanka_vs_barbados__1_.jpg

இதன் மூலம் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் முதல் ஐந்து போடடிகளில் தொடர் தோல்விகளைத் தழுவிய இலங்கை, இறுதியாக முதாலவது வெற்றியை சுவைத்து திருப்தி அடைந்தது.

0308_Dulangi_Wannithilake_player_of_the_

இந்த உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இல்லாமலும் தங்களால் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்பதை இந்த வெற்றியின் மூலம் இலங்கை நிரூபித்தது. இப் போட்டியில் தர்ஜினிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

0308_sri_lanka_vs_barbados__3_.jpg

பார்படோஸுடன் இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. கடைசியாக 8 வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பார்படோஸ் 67 - 33 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

netball_world_cup_logo.png

இதன் காரணமாகவும் இந்த வருடப் போட்டிகளில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்ததாலும் பார்படோஸ்  வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு அமைய போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் ஒரு கட்டத்தில் 8 - 6 என்ற கோல்கள் கணக்கில் பார்படோஸ் முன்னிலையில் இருந்தது.

எவ்வாறாயினும் அதன் பின்னர் வீறுகொண்டு விளையாடிய இலங்கை கோல் நிலையை 15 - 15 என சமப்படுத்தி முதலாவது ஆட்ட நேர பகுதியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் அற்புதமாக விளையாடிய இலங்கை தொடர்ச்சியாக 5 கோல்களைப் போட்டு முன்னிலை அடைந்தது.

இதன் காரணமாக பார்படோஸ் அணியில் விங் அட்டேக் நிலையில் சாஷா கோபின் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது சகோதரி காடீன், கோல் அட்டாக் நிலைக்கு மாற்றப்பட்டார். இவர் இங்கிலாந்து சார்பாக விளையாடி பொதுநலவாய விளையாட்டு விழா தங்கப் பதக்கத்தை வென்றவர்.

இந்த மாற்றங்கள்   பார்படோஸுக்கு சாதகமாக அமையவில்லை. தொடர்ந்த சிறப்பாக விளையாடிய இலங்கை, இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 15 - 11 என தனதாக்கி இடைவேளையின் போது 30 - 26 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

இடைவேளையின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. மொத்தமாக 35 கோல்கள் போடப்பட்ட 3ஆவது ஆட்ட நேர பகுதியில் பார்படடொஸ் 23 முயற்சிகளில் 22 கோல்களைப் போட்டதுடன் இலங்கை 13 முயற்சிகளில் 13 கோல்களைப் போட்டது. இதற்கு அமைய 3ஆவது ஆட்ட நேர பகுதி முடிவில் 48 - 43 என்ற கோல்கள் கணக்கில் பார்படோஸ் முன்னிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் முதலாவது நிமிடத்தில் பார்படோஸ் மேலும் 2 கோல்களைப் போட்டு 7 கோல்கள் வித்தியாசத்தில் (50 - 43) முன்னிலை அடைந்தது. ஆனால், அதன் பின்னர் எதிர்நீச்சல் போட்டு திறமையாக விளையாடிய இலங்கை சிறுக சிறுக ஆட்டத்தை தன் வசப்படுத்த ஆரம்பித்தது.

இறுதியாக 4ஆவது ஆட்ட நேர பகுதியை 17 - 8 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய இலங்கை, 60 - 56 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

கடந்த 20 வருடங்களில் சிங்கப்பூரைவிட வேறு ஒரு நாட்டு அணியை வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை சார்பாக திசலா அல்கம 50 முயற்சிகளில் 47 கோல்களையும் செமினி அல்விஸ் 9 முயற்சிகளில் 9 கோல்களையும் துலங்கி வன்னிதிலக்க 4 முயற்சிகளில் 4 கோல்களையும் போட்டனர்.

பார்படொஸ் சார்பாக லெட்டோனியா ப்ளக்மன் 35 முயறச்சிகளில் 29 கோல்களையும் காடின் கோபின் 31 முயற்சிகளில் 27 கோல்களையும் போட்டனர்.

அப் போட்டியில் ஆட்டநாயகி விருதை துலங்கி வன்னித்திலக்க வென்றெடுத்தார்.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அணித் தலைவி கயாஞ்சலி அமரவன்ச, 'இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. எனது அணியையிட்டு பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில் இதுதான் எமது முதலாவது வெற்றி' (இந்த உலகக் கிண்ணப் போட்டியில்) என்றார்.

https://www.virakesari.lk/article/161538

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிடம் மீண்டும் சரிந்த இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 16ஆவது இடம்

05 AUG, 2023 | 09:54 AM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை ஒரே ஒரு வெற்றியுடன்  ஒட்டுமொத்த நிலையில்  16ஆவது  இடத்தைப் பெற்றது.

ஈ குழுவுக்கான முன்னோடி சுற்றில் பார்படோஸை வெற்றிகொண்ட இலங்கை, நிரல்படுத்தலுக்கான கடைசிப் போட்டியில் சிங்கப்பூரிடம் 46 - 49 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்து   கடைசி இடத்தைப் பெற்றது.

சிங்கப்பூருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற நிரல்படுத்தலுக்கான போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 15 - 8 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

netball_world_cup_logo__2_.png

ஆனால், இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை விட்ட ஏகப்பட்ட தவறுகளைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கப்பூர் அப் பகுதியை 12 - 11 என்ற கோல்கள் கணக்கில் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. எனினும் இடைவேளையின்போது இலங்கை 26 - 20 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தின் பிடியை சிறுக சிறுக நழுவவிட்ட இலங்கை, 3ஆவது ஆட்ட நேர பகுதியை சிங்கப்பூரிடம் 10 - 16 என்ற கோல்கள் கணக்கில் தாரை வார்த்தது. இதன் காரணமாக மூன்றாவது ஆட்ட நேர பகுதி முடிவில்  கோல்கள்   நிலை 36 - 36 என சமநிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் விளையாடிய இலங்கை 10 கோல்களை மாத்திரம் போட, சிங்கப்பூர் 13 கோல்களைப் போட்டு ஒட்டுமொத்த நிலையில் 49 - 45 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி 15ஆவது இடத்தைப் பெற்றது.

0408_sri_lanka_v_singapore__2_.jpg

நான்கு வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரை முன்னோடி சுற்றிலும் நிரல்படுத்தல் போட்டியிலும் வெற்றிகொண்ட இலங்கை, இம்முறை அந்த இரண்டு சுற்றுகளிலும் சிங்கப்பூரிடம் தோல்வி அடைந்தது.

இலங்கை சார்பாக திசலா அல்கம 46 முயற்சிகளில் 43 கோல்களையும் செமினி அல்விஸ் 2 முயற்சிகளில் 2 கோல்களையும் துலங்கி வன்னித்திலக்க ஒரு முயற்சியில் ஒரு கோலையும் போட்டனர்.

சிங்கப்பூர் சார்பாக ஆமன்தீப் சஹால் 43 முயற்சிகளில் 38 கோல்களையும் காய் வெய் டோஹ் 14 முயற்சிகளில் 11 கோல்களையும் போட்டனர்.

இந்த சுற்றுப் போட்டியில் சாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் முன்னாள் வலைபந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கத்திற்கு ஓரிரு போட்டிகளைத் தவிர்ந்த மற்றைய போட்டிகளில் வெறும் பார்வையாளராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தர்ஜினி சிவலிங்கத்தை அணியில் சேர்க்க வெண்டும் என்பதில் தெரிவாளர்கள், பயிற்றுநர், இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் சில அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தபோதிலும் அவர்களது நோக்கம் நிறைவேறாமல் போனது.

அத்துடன் இந்தப் போட்டியுடன் தர்ஜினி சிவலிங்கம் தனது 20 வருட வலைபந்தாட்ட விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.

0408_sri_lanka_v_singapore__4_.jpg

https://www.virakesari.lk/article/161661

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண வலைபந்தாட்டத்தில் அவுஸ்திரேலியா மகுடம் சூடியது

07 AUG, 2023 | 12:17 PM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 61 - 45 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தங்கப் பதக்கத்தை சுவீரிகரித்து மீண்டும் உலகக் கிண்ண வலைபந்தாட்ட சம்பியனானது. 

 

1_Neball_World_Cup_Presentation_by_Sourt

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் அவுஸ்திரேலியா சம்பியனானது இது 12 ஆவது தடவையாகும்.

உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமாஃபோசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித் தலைவி லிஸ் வொட்சனிடம் கையளித்தார்.

ஞாயிறன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் 2019 சம்பியன் நியூஸிலாந்தை 52 - 45 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ஜெமெய்க்கா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது.

கேப் டவுனில் 10 தினங்கள் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வலைபந்தாட்ட வீராங்கனையாகவும் அதிசிறந்த எதிர்த்தாடும் வீராங்கனையாகவும் இங்கிலாந்தின் கோல்நிலை எதிர்த்தாடும் வீராங்கனை ஹெலன் ஹூஸ்பி தெரிவுசெய்யப்பட்டார்.

அதிசிறந்த மத்திய கள வீராங்கனையாக நியூஸிலாந்தின் கேட் ஹெஃபனானும் சிறந்த தடுத்தாடும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் கேர்ட்னி ப்றூசும் தெரிவாகினர்.

அவுஸ்திரேலியா 61 - 45 இங்கிலாந்து

இங்கிலாந்தின் லிவர்பூல், நெட்போல் அரினா அரங்கில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந்திடம் ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா, இம்முறை மிகத் திறமையாக விளையாடி தோல்வி அடையாத ஒரே  ஒரு  அணியாக உலக வலைபந்தாட்ட சம்பியனானது.

2_Australian_Netball_Team__1_.jpg

இந்த வருட இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 61 - 45 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

ஜெமெய்க்காவுடனான அரை இறுதிப் போட்டியில் 57 - 54 (14-14, 15-15, 13-11, 15 -14) என்ற கோல்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 46 - 40 (9-9, 11-11, 12-12, 14-8) என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப முதலாவது கால் மணி நேர ஆட்டம் 13 - 13 என்ற கோல்கள் அடிப்படையில் சம நிலையில் இருந்தது.

ஆனால், 2ஆவது கால் மணி நேர ஆட்டத்தை 14 - 10 என தனதாக்கிய அவுஸ்திரேலியா 27 - 23 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

3_Silver_medalists_-_England__1_.jpg

இடைவேளைக்கு பின்னர் 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் திறமையாக விளையாடிய அவுஸ்திரேலியா 19 - 13 என்ற கோல்கள் கணக்கில் அப் பகுதியைத் தனதாக்கி 46 - 36 என முன்னிலை அடைந்தது.

கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா அப் பகுதியையும் 15 - 9 என தனதாக்கி ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் 61 - 45 என வெற்றிபெற்று உலக சம்பியனானது.

இறுதி ஆட்ட நாயகியாக அவுஸ்திரேலியாவின் கியேரா ஒஸ்டின் தெரிவானார்.

ஜெமெய்க்காவுக்கு வெண்கலப் பதக்கம்

மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் நியூஸிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி 52 - 45 (14-11, 10-10, 14-11, 14-13) என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஜெமெய்க்கா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

4_Bronze_Medalists_-_Jamaica.jpg

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் 16 வருடங்களின் பின்னர் ஜெமெய்க்காவுக்கு பதக்கம் ஒன்று கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.

மேலும் இந்த வெற்றியானது ஜெமெய்க்காவின் சுதந்திர தின (திங்கட்கிழமை 07) கொண்டாட்டமாகவும் அமைந்தது.

ஆட்டநாயகி: ஜூடி ஆன் வோர்ட் (ஜெமெய்க்கா)

16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்ட அத்தியாயத்தில் பங்குபற்றிய ஆசிய சம்பியன் இலங்கை ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்று தரவரிசையில் கடைசி இடத்தைப் (16ஆவது) பெற்றது.

https://www.virakesari.lk/article/161769

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி சிம்பிலா இங்லாந்தை வென்ற‌து............

அவுஸ் ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.