Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

‘பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் விரிவான பகுப்பாய்வு இல்லாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.

‘எனவே, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவது அவசியம்’ என்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தை தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, இடதுபுற சிறுநீரகத்தை அகற்ற அறிவுறுத்திய மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக குறித்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருந்தபோதிலும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்ததாக குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும், எந்த சிறுநீரகமும் செயற்படாத குழந்தைக்கு, தகுந்த சிறுநீரகம் மாற்றப்படும் வரை, ஹீமோடையாலிசிஸ் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் கிருமியால் குழந்தை இறந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்ததுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் , குறித்த சிறுவன் உயிரிழந்தமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, முஹம்மது ஹம்தி எனும் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://athavannews.com/2023/1342512

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான   மரணங்கள்    நடக்கின்றன . உயிர் காக்கும் மருத்துவமனையே    கொலைக்  களமாக மாறுகிறது. வைத்தியர்களின் கவனயீனமா ?  கால தாமதமா ? போதிய பயிற்சியற்ற ஊழியர்களா ?   

  • கருத்துக்கள உறவுகள்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழப்பு: பாரபட்சமற்ற விசாரணைக்கு GMOA அழைப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

“பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் விரிவான பகுப்பாய்வு இல்லாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.” என GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.

“எனவே, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவது அவசியம்” என்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தை தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, இடதுபுற சிறுநீரகத்தை அகற்ற அறிவுறுத்திய மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக குறித்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருந்தபோதிலும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்ததாக குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும், எந்த சிறுநீரகமும் செயற்படாத குழந்தைக்கு, தகுந்த சிறுநீரகம் மாற்றப்படும் வரை, ஹீமோடையாலிசிஸ் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் கிருமியால் குழந்தை இறந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்ததுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளது.

https://thinakkural.lk/article/266094

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகம் என வைத்திய அறிக்கையில் தெரிவிப்பு - ஒன்று என்கின்றது பிரேதபரிசோதனை அறிக்கை - விசாரணைக்கு உத்தரவு

04 AUG, 2023 | 11:06 AM
image
 

பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவஅறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும்  எனினும் பிரேதபரிசோதனையில்  ஒரு சிறுநீரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மருத்துவபரிசோதனை அறிக்கை இரண்டுசிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/161597

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2023 at 20:39, நிலாமதி said:

மிகவும் கவலையான   மரணங்கள்    நடக்கின்றன . உயிர் காக்கும் மருத்துவமனையே    கொலைக்  களமாக மாறுகிறது. வைத்தியர்களின் கவனயீனமா ?  கால தாமதமா ? போதிய பயிற்சியற்ற ஊழியர்களா ?   

முல்லைத்தீவில் சிசேரியன் பண்ணிய பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்துள்ளார்கள் வயிற்றில் வலி உண்டாகி பெண் வைத்தியசாலைக்கு சென்று முறையிட ஸ்கேன் செய்து பார்த்ததில் துணி இருந்தது தெரிய வர  மீண்டும் ஒப்பரேசன் செய்து துணி அகற்றப்பட்டது 😒😒

 

  • கருத்துக்கள உறவுகள்

லேடி ரிஜ்வே சிறுநீரக சிகிச்சை சம்பவம் ; 5 அம்சங்களை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அசாத் சாலி கடிதம்!

Published By: DIGITAL DESK 3

07 AUG, 2023 | 12:31 PM
image
 

பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடந்த முறைகேடான சிறுநீரக அறுவைச் சிகிச்சை குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்து விடயங்களை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முஹம்மட் ஹம்தி எனும் குழந்தைக்கு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட சிறுநீரக அறுவைச் சிகிச்சையின்போது இடம்பெற்ற கொடூரத்தை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். சிறுவனின் செயலிழந்த இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்குப் பதிலாக, திறம்படச் செயற்பட்ட வலது பக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருக்கிறது. இதனால், முஹம்மட் ஹம்தி என்ற மூன்று வயதுக் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரிய அதிருப்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால், அறுவைச் சிகிச்சையில் நடந்த தவறை மறைக்கும் வகையிலேயே மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், இச் சிகிச்சைக்குப் பின்னால் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக பலத்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டுத் திருடப்பட்டதா? என்பதை அறிவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவயங்கள் அபகரிப்பு மற்றும் சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய மோசடிப் பேர்வழிகளின் கரங்கள் இதற்குப் பின்னாலிருந்திருக்கலாம். எனவே, இதுகுறித்த பின்னணிகளை அறிவதற்கு சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணைகளை நடத்துமாறு நான் கோருகிறேன்.

மருத்துவத்துறையை மாபியாக்களின் செல்வாக்கிற்குள் கொண்டுவரும் இவ்வாறான மறைமுக முயற்சிகளை நிறுத்துவதற்கு இவ்விசாரணைகள் உதவட்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில், இவ் விசாரணைகள் அமைவது அசியம். தங்களது நேர்மையான தலைமைத்துவம் இதைச் செய்யுமெனவும் நான் நம்புகின்றேன்.

01. மருத்துவ நிபுணர்கள், தடயவியல் திறமையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட குழுவினரின் தலைமையில் விசாரணை நடாத்தப்படல்.

02. முஹம்மட் ஹம்தியின் சிறுநீரக அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த அறுவைச் சிகிச்சையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களை விசாரணைக்குட்படுத்தல்.

03. சிறுவனின் சிறுநீரக மோசடியுடன் தொடர்புற்றிருந்த சகல வஞ்சகர்களையும் சட்டத்தின் வெளிச்சத்துக்கு கொண்டுவருதல்.

04. குழந்தையின் சிறுநீரக சிகிச்சை சம்பந்தமான தகவல்களை வழங்குவோரின் அல்லது வழங்க முன்வருவோரின் இரகசியங்களைப் பாதுகாத்தல்.

05. அறுவைச் சிகிச்சைகளின்போது அவயங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் வகையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

என்பவற்றை வலியுறுத்தியே அசாத் சாலி இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/161779

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் ஒரேயொரு சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளது ; எனக்கு எதிராக திட்டமிட்ட முயற்சிகள் - பொரளை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுவனிற்கு பிரேதபரிசோதனைசெய்த சட்டவைத்திய அதிகாரி

Published By: RAJEEBAN

10 AUG, 2023 | 09:45 AM
image
 

பொரளை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுவனின்  பிரேதப்பரிசோதனை குறித்த விவகாரத்தினால்  சர்ச்சையில் சிக்குண்டுள்ள சட்டவைத்திய அதிகாரி தான் தலைமை சட்டவைத்திய அதிகாரியாக பதவி உயர்வுபெறுவதை தடுப்பதற்காகான சதிதிட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் மாத்திரமே என்னை பணியிலிருந்து இடைநிறுத்த முடியும் எனவும் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் ரூகுல் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள சட்டவைத்திய அதிகாரியான ரூகுல் ஹக் தொடர்ந்தும் பிரேத பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பல நீதிமன்றங்களில் இடம்பெறுகின்ற மருத்துவ சட்ட வழக்குகளில் தான் அரசதரப்பு சாட்சியாக ஆஜராவதை எவரும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றுவயது சிறுவனின் மரணம் குறித்த மரண அறிக்கையில் நான் சிறுவனின் ஒரேயொரு சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

எனது எட்டுபக்க பிரேதபரிசோதனை அறிக்கையில் நான் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவறான சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் குறித்து கவனம் செலுத்தாமல் ஊடகங்கள் மரண அறிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ பேரவை டிசம்பர் மாதம் முதல் 8 மாதங்களுக்கு எனது பதிவை இடைநிறுத்தியது, இது குறித்து சுகாதார அமைச்சிடம் நான் மேன்முறையீடு செய்துள்ளேன். ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்தோ அமைச்சின் செயலாளரிடமிருந்தோ எந்த பதிலும் இல்லாததால் எனக்கு எனது பணியை தொடர்வதற்கான உரிமையுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எனது கௌரவத்தி;ற்கு பாதிப்பு  ஏற்படுத்தி நான் தலைமை சட்டவைத்திய அதிகாரியாக நியமிக்கப்படுவதை தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/162006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.