Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைவெளி: The Good German

Featured Replies

THE GOOD GERMAN

இயக்கம்: Steven Soderbergh

எழுத்து: Joseph Kanon(நாவல்), Paul Attanasio (திரைக்கதை)

நடிப்பு: George Clooney, Cate Blanchett, Tobey Maguire

இசை: Thomas Newman

ஒளிப்பதிவு: Steven Soderbergh as Peter Andrews

விநியோகம்: Warner Bros.

வெளியீடு: December 8, 2006

நாடு: USA

மொழி: English

செலவு: $ 32,000,000 (கிட்டத்தட்ட)

goodgerman.jpg

இந்தக் கிழமை திரைவெளியில் நாங்கள் பார்க்கப் போவது THE GOOD GERMAN என்ற திரைப்படம். நாற்பதுகளில் நடைபெறுகிற கதை தான் இது. JOSEP KANON என்ற எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

அமெரிக்காவின் போர் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான செய்தித்தொடர்பாளர் JAKE என்பவர் POTSDAM மாநாட்டை பற்றி எழுதுவதற்காக பெர்லினுக்கு வருகிறார். நாசிக்களின் அரசு வீழ்ச்சி அடைந்த பிறகு, அதாவது இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, நடக்கிற பெரிய சந்திப்பு இது. அமெரிக்கா - சோவியத் என்று இரண்டு களங்களாக பிரிந்து கிடக்கிறது யேர்மனி. JAKE இந்த வேலைய ஏற்றுக்கொண்டதுக்கு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. அவரின் காதலியைத் தேடுவது தான் அந்தக் காரணம்.

பெர்லினுக்கு வந்த JAKE இன் வாகன ஓட்டுனராக TULLY என்பவர் ஒழுங்கு செய்யப்படுகிறார். TULLY க்கு கள்ளச்சந்தைத் தொடர்பு இருக்கிறது. அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். அவளின் பெயர் LENA. LENA தான் JAKE இன் முன்னாள் காதலி. யுத்தம் நடப்பதற்கு முதல் பெர்லின் வந்தபோதுதான் LENA வை JAKE முதன் முதலாக சந்தித்தார். இப்போது LENA ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் யெர்மனியில் இருக்கிற அமெரிக்க - சோவியத் எல்லைப்பகுதியில் TULLY கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் இரண்டு தரப்பு அதிகாரிகளும் அதில் அக்கறை செலுத்தவில்லை. இதற்குப் பின்னால் ஏதோ விடயம் இருக்கென்று நினைக்கிற JAKE அதுபற்றி ஆராயத் தொடங்குகிறார். அப்போதுதான் LENA வை சந்திக்கிறார். இப்படி காதலும், அரசியலும் கலந்து அழகாகச் சொல்லப்பட்டிருக்கிற கதை.

இந்தப் படத்தில் இருக்கிற சிறப்பு என்னவென்றால், இது கறுப்பு வெள்ளைப் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. மற்றது 40 களின் கமராத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. வண்ணங்களால் வித்தைகள் காட்டும் இன்றைய காலகட்டத்தில் "கறுப்பு வெள்ளை"த் திரைப்படமாக இதனை எடுத்திருப்பது வியக்கவைக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்க அதனை இன்னும் உயிர்ப்புள்ளதாகக் காட்ட இதுபோன்ற நுணுக்கங்களை படங்களில் பயன்படுத்துவதுண்டு. (தமிழில் Autograph படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், அந்தத் திரைப்படத்தில் நான்கு காலகட்டங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நான்கு வகையான வண்ணத் தோற்றங்களை பயன்படுத்தியிருப்பார்கள். அத்தோடு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் வெவ்வேறு ஒளிப்பதிவுக் கலைஞர்களைப் பயன்படுத்தி பதிவு செய்திருந்ததாகவும் அறிந்தேன்.)

JAKE ஆக நடித்திருப்பவர் GEORGE CLOONEY. இவர் ஒரு நடிகர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்பரிமாணம் கொண்டவர். 2006 ம் ஆண்டு SYRIANA என்ற படத்துக்கு சிறந்த துணைநடிகருக்கான OSCAR விருதும், GOLDEN GLOBE விருதும் பெற்றிருக்கிறார். அதேபோல GOOD NIGHT AND GUD LUCK என்ற படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கார் விருதுக்கு முன்மொழியப் பட்டிருக்கிறார்.

8330-2007-09-11-07:57:50_1.jpg

LENA ஆக நடித்திருப்பவர் CATE BLANCHET. இவர் THE LORD OF THE RINGS, THE AVIATOR போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

o-cateblanket.jpg

TULLY ஆக நடித்திருப்பவர் அமெரிக்க நடிகர் TOBIAS VINCENT MAGUIRE. இவர் யாரென்று தெரியுமா? இவர்தான் SPIDER MAN படத்தில் SPIDER MAN ஆக நடித்தவர். இந்த ஆண்டு (2007) SPIDERMAN 3 வெளிவந்திருந்தது. அதிலும் இவர்தான் SPIDERMAN ஆக நடித்திருக்கிறார்.

108915-269890.jpg

இந்தப் படத்தை இயக்கியவர் STEVEN SODERBERG. 1989 ம் ஆண்டு இவரின் SEX LIES VIDEOTAPE என்ற படம் சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2000 ம் ஆண்டு இவரின் TRAFFIC என்ற திரைப்படம் சிறந்த இயக்கத்துக்கான ஒஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

PG475.jpg

WARNER BROTHERS வெளியீடான இது 2006ம் ஆண்டு டிசெம்பர் 8ம் திகதி வெளியாகியிருகிறது. அந்தக் கால யேர்மனியை காணவும், போருக்குப் பின்னான மக்களின் வாழ்வியலைப் பற்றி அறியவும் இந்தத் திரைப்படத்தைக் கட்டாயம் பார்க்கலாம்.

முன்னோட்டக் காட்சி: இங்கு சென்று பார்க்கவும்

உத்தியோகபூர்வத் தளம்: http://thegoodgerman.warnerbros.com/

Potsdam Conference பற்றிய மேலதிக தகவல்கள்: http://en.wikipedia.org/wiki/Potsdam_Conference

நன்றி: reuters, imdb.com

பட உதவி: http://img.pathfinder.gr, http://www.cnnturk.com, http://www.cinemacomrapadura.com.br, http://www.simifilm.ch, http://www.cinereporter.com

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி ஜேமனை பற்றி பார்க்கதான் வேண்டுமோ?

  • 2 weeks later...

மலிவான விலையில் DVD வரும் போது கட்டாயமாக வாங்கி பார்த்து விடுகிறேன்...

  • 4 years later...

நான் அதிகளவில் புதியபடங்களை (அதிகளவில் ஆங்கிலம், அத்துடன் சில வேளைகளில் இதரமொழிகள்) பார்த்து வருகின்றேன். தமிழ்ப்படமும் பார்ப்பது உண்டு (யாராவது ஆகோ ஓகோ என்று கூறினால்). நேற்று The King's Speech எனும் படத்தை இணையத்தளம் ஊடாக பார்த்தேன். இந்தப்படத்தின் சிறப்பு பற்றி இன்னொருவர் கூறியதன் காரணத்தால் ஆர்வக்கோளாறு காரணமாக King's Speechஐ நேற்று பார்த்தேன். இது 1930களில் நடைபெற்ற உண்மைக்கதை. மனிதவியலில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்தப்படத்தை விரும்புவார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பில் மேலிருந்து கீழாக இரண்டாவதாக உள்ள காணொளியை சொடுக்குங்கள். காணொளியின் தரம் பரவாயில்லை. பார்க்கக்கூடிய தரத்தில் உள்ளது. சுமார் இரண்டு மணித்திலாயங்கள் ஓட்டம் உள்ளது இந்தப்படம். இந்தப்படத்திற்கு ஏராளம் சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

http://www.watchonlinemovies.co.in/2011/12/watch-kings-speech-megavideo-videobb.html#.UCCLCvXhfh8

the_king_s_speech05_002.jpg

இதில ஏன் பிரட் பிற் இன் படம் போட்டிருக்கு ?

இளைஞன் அதை சும்மா பொலிவுக்கு இணைத்திருக்கக்கூடும். Brad Pitt அவர்களின் Money Ball பார்த்தேன். சொல்லி வேலை இல்லை, அருமையான படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.