Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

food-5.jpg

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகிக்கிறது எனவும் இந்த ஆண்டு வரி வருவாய் மூவாயிரத்து 130 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயிரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபா மாத்திரமே உண்மையான வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட்டுமே ஈட்டமுடியும் எனவும் வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://thinakkural.lk/article/268920

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டையே சுறுட்டி கொண்டொடுற அரசியல்வாதிகளில முதலாமிடம்!

Posted

கடன்  கொடுக்கும் நாடாக மாறும் என்றொரு அமைச்சர் சொன்ன நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானமுள்ள நாடாக இருந்தாலும் அதியுயர் இராணுவ பாதுகாப்பு செலவுகளுக்கும்  திடீர் விகாரை அமைப்பதற்கும் போதிய பணம் இருக்கெல்லோ....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருமானம் குறைந்த நாட்டில் இராணுவ முகாம்களும் விகாரைகளும் பெருகி எல்லா வளங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இதில இனவாதிகளின் கூச்சல்  நாட்டையே நாளும் பொழுதும் உலுக்குது, நாடும் குலுங்குது அந்த சத்தத்திலும் அச்சத்திலும். வறிய நாடுகளிற்தான் இந்தமாதிரியான இன மத வேறுபாடுகளை வளர்த்து சோம்பேறிகள் அதில் வயிறு வளர்த்து நாட்டை குடிச்சுவராக்குவது. அவர்களுக்கு தேவை இப்படியான பிரிவினைகளே, அதிலிருந்து வெளிவரவோ, பரந்து சிந்திக்கவோ விடாது அவர்களின் சுயநலமும் சோம்பேறித்தனமும். அவர்களின் முதலீடே நாட்டில் பிரிவினை உருவாக்கி வயிறு வளர்ப்பதுதான்.   



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.