Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் பலி : பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 AUG, 2023 | 07:56 PM
image
 
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது  வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது  நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இன்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.

மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிரிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பல்கலைக்கழக மாணவர்கள், கிராம மக்கள்  இணைந்து குறித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட இரு மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் அவர்கள் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்களும் அதிகமாக பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் ஊடகவியலாளர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இணைந்து இருதரப்பினரையும் சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்ததுடன் துணைவேந்தரை பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்தும் அழைத்து சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14வயது மற்றும், 15வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளார்கள் .

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

c6385ffd-062f-4e69-8acb-0ca5357c45c9.jpg

285e944a-5267-4215-8088-d49b40724c6a.jpe

7d331e9d-6e87-4994-b79b-157d7766c549.jpe

c6385ffd-062f-4e69-8acb-0ca5357c45c9.jpe

https://www.virakesari.lk/article/162603

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது  வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது  நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் அவர்கள் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மாணவர்கள் குளத்தில் விழுந்து இறந்ததற்கு, துணை வேந்தருக்கு ஏன் அடிக்கின்றார்கள்.
ஓ... அவர் தமிழர் என்ற படியால்... அடிக்கிறார்கள் போலுள்ளது.

கிழக்கில்... ஒரு முஸ்லீம் பாடசாலையில், 20´ற்கும்  மேற்பட்ட மாணவிகளை 
ஒரு முஸ்லீம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த போது,
அவரை அடிக்காத இவர்கள், தமிழர் என்ற ஒரே காரணத்தால் 
துணை வேந்தர் மகேஸ்வரன் தாக்கப்பட்டாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இவனுகள் விளையாட்டு போட்டிக்கு போனால் விளையாடி விட்டு வர வேண்டும். எதுக்கு போய் தாட்கொலை செய்தார்கள். தமிழன் எண்டவுடன் எல்லோரும் தடியை தூக்குறானுகள். அதே வழியில் அவர்களுக்கும் பதில் சொல்லி இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!

image
 
வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை (18) அடக்கம் செய்யப்பட்டது.

FB_IMG_1692343535616.jpg

வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்றைய தினம்  நடைபெற்ற போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்திருந்தனர்.

20230818_110656.jpg

குறித்த இரு மாணவர்களின் ஜனசா பட்டாணிச்சூர் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

20230818_110920.jpg

இதன்போது,  முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுத்தீனும் வலயக் கல்வி திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,   உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு பொதுமக்கள்  பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்துடன், பலரதும் கண்ணீருக்கு மத்தியில் இருவரது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.              

வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்களை குறிப்பிட வேண்டும். 

1- இப்போது விபத்து, கொலை ஆகிய அவலங்களை நேரடியாக படங்களாக, வீடியோவாக பிரசுரம் செய்கின்றார்கள். இது சரியா/தவறா? முன்பு எல்லாம் இப்படி ஊடகங்களில் பிரசுரம் செய்வதை தவிர்ப்பார்கள்.  காலம் மாறிவிட்டதோ?

2-வவுனியாவில் வன்முறை அதிகரித்து செல்கின்றது. துணைவேந்தருக்கே அடிக்கின்றார்கள் என்றால்.. ஒரு பிரச்சனை வரும்போது சாதாரண பொதுமகனின் பாதுகாப்பு வவுனியாவில் கேள்விக்குறி ஆகின்றது.  

சம்மந்தப்பட்டவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் வவுனியாவில் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு உழைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2023 at 02:24, தமிழ் சிறி said:

மாணவர்கள் குளத்தில் விழுந்து இறந்ததற்கு, துணை வேந்தருக்கு ஏன் அடிக்கின்றார்கள்.
ஓ... அவர் தமிழர் என்ற படியால்... அடிக்கிறார்கள் போலுள்ளது.

கிழக்கில்... ஒரு முஸ்லீம் பாடசாலையில், 20´ற்கும்  மேற்பட்ட மாணவிகளை 
ஒரு முஸ்லீம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த போது,
அவரை அடிக்காத இவர்கள், தமிழர் என்ற ஒரே காரணத்தால் 
துணை வேந்தர் மகேஸ்வரன் தாக்கப்பட்டாரா? 

இளகின இரும்பைக்கண்டால் தூக்கி தூக்கி அடிப்பானாம் ஒருவன்.  விளையாட்டுப்போட்டி முடிந்தவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பொறுப்புடன் வீட்டுக்கு அழைத்துச்சென்றிருக்க வேண்டும், பாடசாலையில் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டுமென தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டு பல்கலை கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்துவது தமது பொறுப்பை வேறொருவர் மேல் சுமத்துவதையும், தமது காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகிறார்கள். வருங்காலத்தில் இப்படியான சமுதாயத்தை தமது நிகழ்ச்சிகளில் சேர்க்காமல் தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது. எங்கு போனாலும் இவர்களால் தமிழனுக்கு தலைவலி என்பது தலைவிதி. இவர்களை விட்டு நாம் படிப்படியாக விலகுவதே ஒரே வழி நாம் தப்புவதற்கும், நம்மை பாதுகாப்பதற்கும். இருந்தவர் இருந்திருந்தால்; இப்படி கண்டவன் நிண்டவன் எல்லாம் கை வைத்திருப்பானா எங்களில்? 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Cruso said:

இவனுகள் விளையாட்டு போட்டிக்கு போனால் விளையாடி விட்டு வர வேண்டும். எதுக்கு போய் தாட்கொலை செய்தார்கள். தமிழன் எண்டவுடன் எல்லோரும் தடியை தூக்குறானுகள். அதே வழியில் அவர்களுக்கும் பதில் சொல்லி இருக்க வேண்டும். 

இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.

மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிரிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர்,

பாடசலையில் ஒரு தவறு நடந்தால் அதிபரிடம் தானே கேட்ப்பார்கள். ஆத்திரம் கவலை கண்ணைமறைக்க அதிபரை தாக்கியிருக்கிறார்கள். தவ்ருத்தலாக  எ  விழுந்ததை கண்ட மாணவர் தான் சொல்லியிருக்கிறார்.  அவர்களது விதி ...அவ்வ்ளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

பாடசலையில் ஒரு தவறு நடந்தால் அதிபரிடம் தானே கேட்ப்பார்கள்

விளையாட்டுபோட்டி நடந்த இடத்தில விபத்து நடந்திருந்தால், சாதாரண நாளாக இருந்த்திருந்தால் அதிபர் பொறுப்பு. இங்கு இவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து மற்றவரை குற்றஞ்சாட்டி தண்டிப்பது அவர்களது இயற்கை விலங்குக்குணம். விளையாட்டுப்போட்டியில் பெற்றோரின் பங்குமுண்டு. எல்லாவற்றையும் அதிபரால் கண்காணிக்க முடியுமா? தங்கள் பிள்ளைகளை பொறுப்பெடுக்க முடியாதவர்கள் அதிபரை தாக்குவது அறிவற்றதனம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.