Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாட்டலி தலைமையில் புதிய அரசியல் கட்சி?

பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார்.

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இராணுவப் பாதுகாப்பில் வசிக்கிற அதேசமயம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக விக்கிரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கத்தில் பணியாற்றுகிறார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சம்பிக்க ரணவக்க, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து நாரஹேன்பிட்டி கட்சி அலுவலகத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரு காலத்தில் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஹன்சீர் ஆசாத் மௌலானாவின் வெளிப்பாட்டின் அடிப்படையில் சனல் 4 ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

மேலும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்குமாறு கட்டளையிடும் வகையில் புலிகளுக்கு பணம் செலுத்தியமை தொடர்பிலும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு பாரிய குற்றச் செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக தமது கட்சியை உள்ளடக்கிய எதிர்கால அரசாங்கம் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட UNHRC மற்றும் பெயரிடப்படாத ஐரோப்பிய புலனாய்வு சேவைகள் பிள்ளையானின் உதவியாளர் மௌலானாவை அணுகியதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள சமர்ப்பிப்புகளை கருத்திற் கொண்டு மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் ஆராயப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆதரவை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை விளக்க வேண்டும் என்றும் ராஜபக்சக்களிடம் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2023/1348983

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பிக்க, புலம்பெயர்ஸ் பணத்துக்காகவும் சர்வதேசத்தின் சூழ்ச்சியிலும் நமது  நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுக்கும் கேள்விகளை கேட்கிறார். ஆனால் நேற்றுவரை இவையெல்லாம் நடந்தேறும்போது யாரும் தட்டிக்கேட்கவில்லை, கூடவே இருந்து  தட்டிக்கொடுத்து வேடிக்கை பார்த்தார்களே!  அது ஏன் என்று புரியவில்லை?  அப்போ கேட்கத்தோன்றவில்லை. அவர்களுக்கும் என்ன பிரச்சனையோ அன்றைய மௌனத்திற்கும் இன்றைய கேள்விக்கும்? இவர் தமிழரை அணைத்து தேர்தலில் வெல்வதற்கு முயற்சி எடுத்தவர் இன்று கேள்வி கேட்டுவிட்டார், இவர்தான் உண்மையான அரசியல்வாதி, தமிழர் இவரைதான் தெரிந்தெடுக்க வேண்டும்!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுவித்த போது அவையோட தான் உவர் இருந்தவர். அப்ப ஏன் இந்தக் கேள்வியை கேட்கவில்லை..??!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.