Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபா பெறுமதியான அதி நவீன சொகுசு ஜீப் வண்டி பறிமுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

13 SEP, 2023 | 04:28 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வரி செலுத்தப்படாமல்  சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும்  அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக  குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குருநாகல் பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே குறித்த ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த ஜீப் வண்டியை கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து  நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வைத்தியர் ஜீப் வண்டியை விற்பனை செய்து தருமாறு குறித்த வர்த்தகருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கமைவாக அவர் மற்றொரு வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்காக ஜீப் வண்டியை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் போலி ஆவணங்களை தயாரித்து சுங்கத் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் வரி ஏய்ப்பு செய்து இந்தக் காரை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் இது வேறு நபர்களின் பெயரில் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த வாகனம் தொடர்பான ஆவணங்களும், வருமான வரி செலுத்தியதாகக் கூறப்படும் ஆவணங்களும் போலியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/164502

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட ஜீப் - Jeep வண்டி பறிமுதல் என்று செய்தி.  படத்தில் உள்ளது ரொயோராவின் LandCruiser Prado.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட ஜீப் - Jeep வண்டி பறிமுதல் என்று செய்தி.  படத்தில் உள்ளது ரொயோராவின் LandCruiser Prado.

இதுவும் இன்னொரு கண்டோஸ் தான்.

அது என்ன பிராண்ட் SUV என்றாலும் அது இலங்கையில் Jeep தான்🤣.

டொயோட்டா ஜீப், மிட்சுபிசி ஜீப், லாண்ட் ரோவர் ஜீப்🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இதுவும் இன்னொரு கண்டோஸ் தான்.

அது என்ன பிராண்ட் SUV என்றாலும் அது இலங்கையில் Jeep தான்🤣.

டொயோட்டா ஜீப், மிட்சுபிசி ஜீப், லாண்ட் ரோவர் ஜீப்🤣

உண்மை. ஜீப் என்ற பிராண்ட் பெயர் எப்படி வந்தது என்பதும் சுவாரசியமானது.

அமெரிக்க இராணுவம் உலகின் எல்லா வகையான நில அமைப்புகளிலும் பயன்படுத்தக் கூடிய ஒரு வாகனத்தை வடிவமைக்குமாறு கார் கம்பனிகளிடம் கோரிய போது, ஜெனரல் மோட்டர்ஸ் வடிவமைத்த வாகனத்தை general purpose வாகனம் என்று அழைத்தார்கள். அது GP ஆகச் சுருங்கி Jeep என்ற பிராண்ட் உருவாகியது.

#வரலாற்றில் ஓர் ஏடு😂.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதுவும் இன்னொரு கண்டோஸ் தான்.

விளங்கி கொண்டேன்  விளங்கி கொண்டேன்😂

(சுங்க திணைக்களத்தில் வேலை செய்தவர் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்தது என்பது ரொயோராவின் LandCruiser Prado வை,  ஜீப் என்று மாற்றி ஆவணம் தயாரித்தாக இருக்குமோ என்று கூட யோசித்தேன் )

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

உண்மை. ஜீப் என்ற பிராண்ட் பெயர் எப்படி வந்தது என்பதும் சுவாரசியமானது.

அமெரிக்க இராணுவம் உலகின் எல்லா வகையான நில அமைப்புகளிலும் பயன்படுத்தக் கூடிய ஒரு வாகனத்தை வடிவமைக்குமாறு கார் கம்பனிகளிடம் கோரிய போது, ஜெனரல் மோட்டர்ஸ் வடிவமைத்த வாகனத்தை general purpose வாகனம் என்று அழைத்தார்கள். அது GP ஆகச் சுருங்கி Jeep என்ற பிராண்ட் உருவாகியது.

#வரலாற்றில் ஓர் ஏடு😂.

நன்றி.

எனக்கு SUV இல் அதிக நாட்டம் இல்லை

ஆனால் Willies  ஜீப்பின் அத்தனை வகைகளிலும் நாட்டம் உண்டு. எனது தந்தையரிடம் உத்யோக பாவனைக்காக ஒரு மிட்ஸ்சுபிசி CJ3 இருந்தது அதுதான் எனது முதல் வாகனம். பின்னர் இந்தியன் ஆமி காலத்தில் அவர்கள் மகிந்திரா open top Thar இல் ஓடும் போது அதிலும் ஒரு ஈர்ப்பு.

பின் வெளிநாடு வந்து ஜீப்பின் நகலாகிய Asia Rocsta, Jago, Mahindra Indian Cheif, என பலதில் கண் வைத்தாலும் - காரை வாங்கி விட்டு கையோடு டிவோஸ் பத்திரத்தையும் வாங்கி வரவும் என்ற மிரட்டல் காரணமாக எதற்கும் செயல் வடிவம் கொடுக்கவில்லை. 

ஓரளவு நடைமுறை சாத்தியமானது Jeep Wangler. ஆனால் அது ஒன்றில் gas guzzler அல்லது டீசல்.

பார்க்கலாம்.   

 

10 hours ago, விளங்க நினைப்பவன் said:

(சுங்க திணைக்களத்தில் வேலை செய்தவர் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்தது என்பது ரொயோராவின் LandCruiser Prado வை,  ஜீப் என்று மாற்றி ஆவணம் தயாரித்தாக இருக்குமோ என்று கூட யோசித்தேன் )

நீங்கள் இலங்கையில் வாகன இறக்குமதி வியாபாரத்தில் இருக்க வேண்டிய ஆள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

எனக்கு SUV இல் அதிக நாட்டம் இல்லை

விளங்கிகொள்ளகூடியது .

Willies ஜீப், Jeep Wangler மாதிரி பலவகையான நில அமைப்புகளில் ஓடகூடிய உண்மையான ஓவ் றோட் வாகனத்தில் பயணிக்க விரும்புவது வேறு.   எரிபொருள் அதிகம் எடுக்கும் சுற்றாடலை பாதிக்கும் மந்தமான SUV கள் 😭

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

விளங்கிகொள்ளகூடியது .

Willies ஜீப், Jeep Wangler மாதிரி பலவகையான நில அமைப்புகளில் ஓடகூடிய உண்மையான ஓவ் றோட் வாகனத்தில் பயணிக்க விரும்புவது வேறு.   எரிபொருள் அதிகம் எடுக்கும் சுற்றாடலை பாதிக்கும் மந்தமான SUV கள் 😭

சலூன்/செடான் காரில் டிரைவர் சீட்டை தொங்கல் வரை இழுத்து விட்டு, “படுத்து கிடந்து” ஓடும் செளகரியம், எஸ்யூவியில் ஏதோ வேலையிடத்தில் கதிரையில் இருக்குமாப்போல் இருந்து ஓடுவதில் இல்லை என்பது என் அபிப்பிராயம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.