Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இந்த கேள்வியை கொஞ்சம் ஆழமாக யோசித்தால் - அதற்கான பதில் 👇

 எமது ஈழத்தமிழரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்ட  கொள்கை உடையவர்களுக்கு   உங்கள் பதில் சரியானது. ஏற்றுக் கோள்ளுகிறேன்.  

ஆனால்,  வீழ்வது நாமாக இருந்தாலும்  வாழ்வது சீமானாக இருக்க வேண்டும் என்று சதா சிந்திக்கும் மனநிலை உள்ளவர்களுக்கு  உங்கள் பதில் என்ன? 

  • Replies 196
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

உங்க நாம் கத்திறதை, தமிழகத்தில் மினக்கெட்டு யாரும் பார்ப்பார்கள், பதறுவார்கள் என்பதே பேதமை.

சும்மா பொழுது போகாமல், நமக்குள்ள பினாத்திறம்.

சபையேறாது!!

அவ்வளவு தான்!!

இது நித‌ர்ச‌ உண்மை 
இதை யாராலும் ம‌றுக்க‌ முடியாது............யாழில் அண்ண‌ன் சீமான் மீது அவ‌தூற‌ சில‌ர் அள்ளி கொட்டும் போது க‌டுப்பாகி அத‌ற்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ தான் இடை சுக‌ம் சீமான் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ திரிக்குள் வ‌ந்து போகிறேன்..............ம‌ற்றம் ப‌டி இதுக்கை எழுதுவ‌து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை சென்று அடையாது................

முக‌ நூல் யூடுப் இன்ஸ்த‌கிராம்
போன்ற‌வை மூல‌ம் உண்மைய‌ கொண்டு சேர்க்க‌லாம் அது ப‌ல‌ரை சென்று அடையும்.....................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் புகழ் முக‌நூல் யுரியுப் மூலம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் புலம்பெயர் ஈழதமிழர்களால் பரப்படும் 💪  கடந்த தமிழ்நாட்டு தேர்தலிலும்  யுரியுப் முக‌நூலை வைத்து சீமான் தான் வெற்றி பெறபோகிறார் என்று நம்பியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பாஜக=காங்கிரஸ்=திமுக= தமிழர் எதிரிகள்.

இதுதான் சீமான் இதுவரை சொன்னது.

இருவருக்கும் எதிராக சீமான் ஏன் போட்டியிட முடியாது?

இதை பற்றி இங்கே விடுதலை புலிகள் அணிசாரா கொள்கையை தமிழ் நாட்டில் பின்பற்றினார்கள் - அதை தொடர்வதே உசிதம் என பல தடவை நான் எழுதிய போது நீங்கள் கோமாவிலா இருந்தீர்கள்.

ஈழதமிழர் ஒன்றில் எவரையும் ஆதரிக்க கூடாது அல்லது பலவாறு பிரிந்து பல கட்சிகளை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்.

இல்லாடிவிடில் ஈழதமிழர் முழுவதும் திராவிட கொள்கை/கட்சிகளுக்கு எதிரிகள், சீமானின் ஆதரவாளர்கள் என்ற மாய விம்பம் கட்டி எழுப்பப்பட்டு, அதனால் ஈழத்தமிழர் மேலும் ஆப்பு அடிபடுவார்கள்.

இப்போ புரிகிறதா? ஏன் சீமானை எதிர்பவர்கள் நீங்கள் சொல்வது மோட்டு கூட்டங்கள் அல்ல, என்பது.

அய்யா ராசா,

திங்கள் காலை உங்களுடன் மல்லுக் கட்ட நேரமில்லை.

இருந்தாலும், ஒரு சிறு குறிப்பு:

2009ல், திமுக பெரிய ஆப்பாக எங்களுக்கு சொருகி விட்டது. இதுக்கு மேல, ஆப்பு, சொருக இடமில்லை. 

ஆகவே, ஆப்பு கதை வேணாமே....

தவிர, எனது முன்னைய பதிவுகளில் சொன்னது போலவே தெளிவாக இருக்கிறேன்.

இலங்கை முழுவதும், மத, இன பேதமின்றி தெளிவாக இருக்கும் ஒரே விடயம்: எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது என்பதை.

அமெரிக்காவை மீறி, கோத்தாவை காத்து, ரணில் ஏறுவதை தடுக்க துப்பில்லை. ஆப்பும், கத்தரிக்காயும்....

ஆகவே, அவர்களை, அவர்களது ஆப்புடன் வேறு எங்கவாது கிளம்ப சொல்லுங்கள். நாம், சீன, அமெரிக்க ஆப்புகளுக்கு தயாராவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஆனால்,  வீழ்வது நாமாக இருந்தாலும்  வாழ்வது சீமானாக இருக்க வேண்டும் என்று சதா சிந்திக்கும் மனநிலை உள்ளவர்களுக்கு  உங்கள் பதில் என்ன? 

பொதுவெளியில் எழுதினால் நான் தம்பி துரைமுருகனுக்கு போட்டியா வந்துவிட்டேன் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் புகழ் முக‌நூல் யுரியுப் மூலம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் புலம்பெயர் ஈழதமிழர்களால் பரப்படும் 💪  கடந்த தமிழ்நாட்டு தேர்தலிலும்  யுரியுப் முக‌நூலை வைத்து சீமான் தான் வெற்றி பெறபோகிறார் என்று நம்பியிருந்தார்கள்.

சில‌ கூமுட்டைக‌ளுக்கு நாம் சொல்ல‌ வ‌ருவ‌து புரியாது
இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் 
இப்போது சோச‌ல் மீடியாக்க‌ளை தான் அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்

அடுத்த‌வ‌ன் ப‌ல‌ ம‌ணி நேர‌ம் ஒதுக்கி பெரிய‌ ப‌ந்திய‌ க‌ட்டுரைய‌ எழுதினா இப்ப‌ இருக்கும் பிள்ளைக‌ள் வாசிப்பில் நாட்ட‌ம் காட்ட‌ மாட்டார்க‌ள்

தேர்த‌ல் நேர‌ம் அண்ண‌ன் சீமான் போடும் தேர்த‌ல் பிர‌ச்சார‌ கூட்ட‌த்துக்கு அந்த‌ அந்த‌ தொகுதி ம‌க்க‌ள் வ‌ந்து அவ‌ரின் பேச்சை கேட்க்கின‌ம்.........அதோடு நில்லாம‌ துண்ட‌றிக்கை அடிச்சு அந்த‌ அந்த‌ தொகுதி ம‌க்க‌ளுக்கு கொடுக்கின‌ம்..............

இந்த‌ நூற்றாண்டில் என்ன‌ ந‌ட‌க்குது என்று க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ............குடி போதையில் இருப்பவ‌ர்களுக்கு கூட‌ இப்ப‌த்த நாட்டு ந‌ட‌ப்பு தெரியுது 
உங்க‌ளுக்கு தெரியாம‌ இருப்ப‌து உங்க‌ட‌ அறியாமை! ந‌ன்றி....................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

2009ல், திமுக பெரிய ஆப்பாக எங்களுக்கு சொருகி விட்டது. இதுக்கு மேல, ஆப்பு, சொருக இடமில்லை. 

2009 இற்கு பின்பும் ஈழத்தில் தமிழ் இனம் இருக்கு.

2009 ற்கு பின்னும் அசுர அரசியல் பலத்தோடு தமிழ் நாட்டில் திமுக உண்டு.

இங்கே திராவிட கொள்கையை எதிர்கிறோம் என சீமான் விசுவாசிகள் சீண்டுவது தனியே திமுகவை மட்டும் அல்ல, திராவிடர் கழகம், மதிமுக, விஜைகாந்த் கெளத்தூர் மணி, வேல்முருகன், திருமா, கம்யூனிஸ்டுகள், இப்படி கிட்டத்தட்ட அறுதி பெரும்பான்மையான தமிழ் நாட்டு அரசியல் சக்திகளை.

அது மட்டும் அல்ல தெலுங்கு வெறுப்பை ஈழத்தமிழர் கையில் எடுப்பதால், நாயக்கர், நாயுடு, ரெட்டி….இன்னும் பல தமிழ் நாட்டில் ஆதிக்கம் மிக்க சாதிய அமைபுக்களையும் வலிந்து எதிரிகளாக்குகிறனர் ஈழத்தமிழரிடையே உள்ள சீமானியர்கள்.

2009 இல் திமுக ஆப்பு அடித்தது என்பதால் - மீண்டும், மீண்டும் அவர்களையும். இன்னும் பல வலுவான கூட்டங்களையும் சீண்டி….

தொடர்ந்தும் ஆப்பு கேட்டு வாங்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

தொடர்ந்தும் ஆப்பு கேட்டு வாங்க தேவையில்லை.

சிரிப்பு காட்டாதீங்க...

முதலில், அவர்கள் தமது மீனவர்களுக்கு இலங்கை கடற்படை, காவிரி நீருக்கு கர்நாடகம், முல்லை பெரியாருக்கு கேரளா சொருகும் ஆப்பினை புடுங்கி எறியட்டும்.

பிறகு எமக்கு சொருகக்கூடிய ஆப்பினை பற்றி கவலைப்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இலங்கை முழுவதும், மத, இன பேதமின்றி தெளிவாக இருக்கும் ஒரே விடயம்: எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது என்பதை.

முன்பே நானும் சொன்ன விடயம். 

ஈழதமிழராகிய எம்மை பொறுத்தவரை இந்தியா வேறு. தமிழ் நாடு வேறு.

தமிழ்நாட்டில் நாம் அனைவரிடமும் இருந்து சமதூரத்தில் இருப்பதே செல்வா-தலைவர் காலம் வரை பிரயத்தனப்பட்டு கடைப்பிடிக்க பட்ட அயலக கொள்கை.

இன்றும் அதுவே சரியான தெரிவு.

1 minute ago, Nathamuni said:

முதலில், அவர்கள் தமது மீனவர்களுக்கு இலங்கை கடற்படை, காவிரி நீருக்கு கர்நாடகம், முல்லை பெரியாருக்கு கேரளா சொருகும் ஆப்பினை புடுங்கி எறியட்டும்.

இது அவர்கள் பிரச்சனை. இதில் நாம் “ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கு” தார்மீக ஆதரவு என்பதை தாண்டி எந்த தலையீடும் செய்ய வேண்டியதில்லை.

தலைவர் எடுத்த நிலையும் அதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

முன்பே நானும் சொன்ன விடயம். 

ஈழதமிழராகிய எம்மை பொறுத்தவரை இந்தியா வேறு. தமிழ் நாடு வேறு.

தமிழ்நாட்டில் நாம் அனைவரிடமும் இருந்து சமதூரத்தில் இருப்பதே செல்வா-தலைவர் காலம் வரை பிரயத்தனப்பட்டு கடைப்பிடிக்க பட்ட அயலக கொள்கை.

இன்றும் அதுவே சரியான தெரிவு.

எமக்கு தமிழகம் ஒன்றுமே புடுங்க போவதில்லை என்ற தெளிவு முக்கியமானது.

அந்த தெளிவு இல்லாமல், நீங்கள் சொல்வது அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர்.

தமிழக அரசியலில், ஈழ அரசியலை கலக்காமல், அதனை அதன் போக்கிலேயே பாருங்கள் என்று சொல்வது இதனால் தான். 

நீங்கள், ஈழத்தமிழர்களை இளுத்துக்கொண்டு, தமிழக அரசியலை பார்க்கும் போக்கினாலேயே, குழப்பம் அடைந்து, குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பேசாமல், அமெரிக்கா, சீன போன்ற நாடுகளின், இலங்கை நிலைப்பாட்டினை உற்று கவனியுங்கள். (சீரியஸ் ஆகவே சொல்லுகிறேன்). எதிர்காலத்தில் அதுவே எமது அரசியலை தீர்மானிக்கப்போகிறது.

தமிழக அரசியலை பொழுது போக மட்டுமே கவனிக்கிறேன், அதனையே உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பிறகு எமக்கு சொருகக்கூடிய ஆப்பினை பற்றி கவலைப்படுவோம்.

நீங்கள் மேலே - நீங்கள் யாழில் தமிழகம் பற்றி எழுதுவது பொழுது போக்குக்கு என ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்.

ஆகவே நீங்கள் இப்படி ஒரு don’t care நிலைப்பாட்டை - ஒரு வெளிநாடு வாழ் இலங்கை குடிமகனாக எடுக்கலாம்.

ஆனால் நண்பர்கள் யாரும் அற்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனம், ஏலவே ஆப்பு அடித்த ஒரு கூட்டத்தை பற்றி இப்படி அசட்டையாக இருக்க முடியாது.

இத்தனைக்குப் பின்பும்,  திமுகவை ஈழத்தமிழர்  இராஜதந்திரமாக கையாள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். ஏனென்றால் தமிழ் நாட்டில் திமுக ஒரு தவிர்க முடியாத சக்தி.

Just now, Nathamuni said:

எமக்கு தமிழகம் ஒன்றுமே புடுங்க போவதில்லை என்ற தெளிவு முக்கியமானது.

அந்த தெளிவு இல்லாமல், நீங்கள் சொல்வது அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர்.

தமிழகம் ஒரு காலத்தில் புடுங்கி இராவிட்டால் - எமது போராட்டம் எப்போதோ அடித்து மூடப்பட்டிருக்கும்.

உண்மையில் அடைக்கலம் தேவைப்பட்ட (மேற்குக்கு ஓடி வந்த பொருளாதார தருணம் தப்பிகள் அல்ல) எமது மக்களும் காப்பாற்ற பட்டிருக்க மாட்டார்கள்.

உண்மையில் ஒரு மாநிலமாக நன்றி கெட்ட ஈழத்தமிழனுக்கு தமிழ் நாட்டு மக்கள் (எந்த கட்சியையும் குறிப்பாக சொல்லவில்லை) தேவைக்கும் அதிகமகவே புடுங்கி உள்ளார்கள்.

இனிமேல் புடுங்காமல் விட்டால் கூட பரவாயில்லை.

ஆனால் அவர்களை ஆப்பு அடித்தே ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு போவது - சொந்த செலவில் சூனியம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

2009 இற்கு பின்பும் ஈழத்தில் தமிழ் இனம் இருக்கு.

2009 ற்கு பின்னும் அசுர அரசியல் பலத்தோடு தமிழ் நாட்டில் திமுக உண்டு.

இங்கே திராவிட கொள்கையை எதிர்கிறோம் என சீமான் விசுவாசிகள் சீண்டுவது தனியே திமுகவை மட்டும் அல்ல, திராவிடர் கழகம், மதிமுக, விஜைகாந்த் கெளத்தூர் மணி, வேல்முருகன், திருமா, கம்யூனிஸ்டுகள், இப்படி கிட்டத்தட்ட அறுதி பெரும்பான்மையான தமிழ் நாட்டு அரசியல் சக்திகளை.

அது மட்டும் அல்ல தெலுங்கு வெறுப்பை ஈழத்தமிழர் கையில் எடுப்பதால், நாயக்கர், நாயுடு, ரெட்டி….இன்னும் பல தமிழ் நாட்டில் ஆதிக்கம் மிக்க சாதிய அமைபுக்களையும் வலிந்து எதிரிகளாக்குகிறனர் ஈழத்தமிழரிடையே உள்ள சீமானியர்கள்.

2009 இல் திமுக ஆப்பு அடித்தது என்பதால் - மீண்டும், மீண்டும் அவர்களையும். இன்னும் பல வலுவான கூட்டங்களையும் சீண்டி….

தொடர்ந்தும் ஆப்பு கேட்டு வாங்க தேவையில்லை.

மேல‌ நீங்க‌ள் எழுதின‌ க‌ட்சி கார‌ர்க‌ள்

திமுக்காவை எப்ப‌டி எல்லாம் விம‌ர்சித்தார்க‌ள்............வேல்முருக‌ன் அண்ண அதிமுக்காவுக்கு முட்டு கொடுக்க‌ போய் அவ‌ர்க‌ள் இவ‌ருக்கு 2016சீட் கொடுக்க‌ வில்லை அப்ப‌டியே திமுக்கா ப‌க்க‌ம் சாய்ந்து விட்டார்

அவ‌ர் திராவிட‌ பெய‌ரிலா அவ‌ரின் க‌ட்சிக்கு பெய‌ர் வைச்சார்.................தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தேமுதிக்கா மற்றும் வைக்கோவின் ம‌திமுக்கா க‌ட்சி இப்போது த‌மிழ் நாட்டில் எந்த‌ நிலையில் நிக்குது............இப்ப‌டியான‌ கொள்கை இல்லா க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து ம‌க்க‌ள் பிரிந்து தான் 

வேறு க‌ட்சிக‌ளை ம‌க்க‌ள் தெரிவு செய்து ஓட்டு போட்டு வ‌ள‌த்து விடுகின‌ம்..............

அர‌சிய‌ல் ஆய்வில் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் தான் இருக்கிறார்க‌ள்............30ல‌ச்ச‌ம் 50ல‌ச்ச‌ம் ஆகும் 50ல‌ச்ச‌ம் 75ல‌ச்ச‌ம் ஆகும் போது திராவிட‌ வாயில் ம‌க்க‌ள் ம‌ண் அள்ளி போடுவார்க‌ள்

த‌மிழ் நாட்டில் பாஜாக்காவும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது..............பெரியார் ம‌ண்ணுக்கு வ‌ந்த‌ சோத‌னை

எல்லாம் 2009இன‌ அழிப்புக்கு துணை போன‌த‌ன் வ‌ந்த‌ வினை................என‌க்கு திராவிட‌ குள்ள‌ ந‌ரிக‌ளை பிடிக்காது

மேல‌ நீங்க‌ள் சொன்ன‌ ஆட்க‌ள் எல்லாம் ஊழ‌ல் கூட்ட‌த்துக்கு சிங்சாங் போடுப‌வை..................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் மேலே - நீங்கள் யாழில் தமிழகம் பற்றி எழுதுவது பொழுது போக்குக்கு என ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்.

ஆகவே நீங்கள் இப்படி ஒரு don’t care நிலைப்பாட்டை - ஒரு வெளிநாடு வாழ் இலங்கை குடிமகனாக எடுக்கலாம்.

ஆனால் நண்பர்கள் யாரும் அற்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனம், ஏலவே ஆப்பு அடித்த ஒரு கூட்டத்தை பற்றி இப்படி அசட்டையாக இருக்க முடியாது.

இத்தனைக்குப் பின்பும்,  திமுகவை ஈழத்தமிழர்  இராஜதந்திரமாக கையாள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். ஏனென்றால் தமிழ் நாட்டில் திமுக ஒரு தவிர்க முடியாத சக்தி.

ஈழத்தமிழர்களை பற்றி கவலை கொள்ள வேண்டியது வேறு யாரும் அல்ல, இந்தியா தான். For its own interest.

ஏனெனில், குதிரை,  லாயத்திலிருந்து அமெரிக்கா, சீனா பக்கமாக ஓடி விட்டது. லாயம் நம்ம கையில் தான், உள்ளே இருக்கும் குதிரை... சா..ச அது கழுதை அப்படியே இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததன் விளைவு.

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு ஆப்படிக்க மும்மரமாக இருந்த போது, சீனா தென்பகுதியில் பெரிய ஆப்பாக இறுக்குவதை கவனிக்கவிலையே.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் கையில் இருந்து கொடுத்த பொதும், அதனை தடுக்க எதுவித முனைப்பும் காட்டாத பிராந்திய வல்லரசு, இன்று, அமெரிக்கா, பிரிட்டன் களத்தில் இறங்கி ஆப்படிக்கும் போது, கையை பிசைகிறதே.

So, bro... don't worry too much, we will be alright!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

தமிழக அரசியலில், ஈழ அரசியலை கலக்காமல், அதனை அதன் போக்கிலேயே பாருங்கள் என்று சொல்வது இதனால் தான். 

நீங்கள், ஈழத்தமிழர்களை இளுத்துக்கொண்டு, தமிழக அரசியலை பார்க்கும் போக்கினாலேயே, குழப்பம் அடைந்து, குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்

நாம் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி கொண்டு தமிழக அரசியலை பேசவே கூடாது என்பது என் நிலைப்பாடு.

நாம் இந்த் அடையாளத்தோடு என்ன சொன்னாலும் அது ஒரு பகுதிக்கு இனிக்கும், மறு பகுதிக்கு கசக்கும்.

இதனால்தான் சீமான் வரும் வரை தமிழக கட்சி அரசியலில் ஈழத்தினர் தலையிடா கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது.

சீமான் வந்து சிலருக்கு மண்டையை கழுவி, அவர்கள் உரக்க கத்துவதால் - ஏதோ ஈழத்தமிழர் எல்லாம் சீமான் ஆதரவு, ஏனைய கட்சிக்கு எதிர்ப்பு என்ற மாய விம்பம் உருவாக்கப்படுகிறது.

இதை உடைத்து - இல்லை சீமானை ஆதரிப்போர் போல எதிர்போரும் உள்ளனர் என காட்ட - சீமானை எதிர்ப்பது அத்தியாவசிமாகிறது.

மீண்டும் இதை வாசியுங்கள்.

10 hours ago, goshan_che said:

ஈழதமிழர் ஒன்றில் எவரையும் ஆதரிக்க கூடாது அல்லது பலவாறு பிரிந்து பல கட்சிகளை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்.

இல்லாடிவிடில் ஈழதமிழர் முழுவதும் திராவிட கொள்கை/கட்சிகளுக்கு எதிரிகள், சீமானின் ஆதரவாளர்கள் என்ற மாய விம்பம் கட்டி எழுப்பப்பட்டு, அதனால் ஈழத்தமிழர் மேலும் ஆப்பு அடிபடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

2009 இற்கு பின்பும் ஈழத்தில் தமிழ் இனம் இருக்கு.

2009 ற்கு பின்னும் அசுர அரசியல் பலத்தோடு தமிழ் நாட்டில் திமுக உண்டு.

இங்கே திராவிட கொள்கையை எதிர்கிறோம் என சீமான் விசுவாசிகள் சீண்டுவது தனியே திமுகவை மட்டும் அல்ல, திராவிடர் கழகம், மதிமுக, விஜைகாந்த் கெளத்தூர் மணி, வேல்முருகன், திருமா, கம்யூனிஸ்டுகள், இப்படி கிட்டத்தட்ட அறுதி பெரும்பான்மையான தமிழ் நாட்டு அரசியல் சக்திகளை.

அது மட்டும் அல்ல தெலுங்கு வெறுப்பை ஈழத்தமிழர் கையில் எடுப்பதால், நாயக்கர், நாயுடு, ரெட்டி….இன்னும் பல தமிழ் நாட்டில் ஆதிக்கம் மிக்க சாதிய அமைபுக்களையும் வலிந்து எதிரிகளாக்குகிறனர் ஈழத்தமிழரிடையே உள்ள சீமானியர்கள்.

2009 இல் திமுக ஆப்பு அடித்தது என்பதால் - மீண்டும், மீண்டும் அவர்களையும். இன்னும் பல வலுவான கூட்டங்களையும் சீண்டி….

தொடர்ந்தும் ஆப்பு கேட்டு வாங்க தேவையில்லை.

100 வீதம் சரியான கருத்து.. எதற்கு ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ஈழத்தமிழர்கள் மற்றக்கட்சிகளை மூர்க்கமாக எதிர்த்து எழுதுகிறார்கள் என்று புரியவில்லை.. தங்கள் தங்கள் விருப்பமான கட்சிகளின் மேல் ஆதரவோடு ஈழத்தமிழர்கள் நின்று கொள்வது நல்லது.. அதைத்தாண்டி அந்த அந்த கட்சிக்காரர்களுடன் சேர்ந்து எதற்கு இந்த வீணாய்ப்போன ஈழத்தமிழர்கள் களமாடுகிறார்கள்.. ஒரு நேர சோத்துக்குக்கூட பிரயோசனம் இல்லாத வேலை உது.. அவர்களுடைய ஆத்துமணல் பிரச்சினை இயற்கை பிரச்சினை சோத்துப்பிரச்சினை சம்பளபிர்ச்சினை உரிமைப்பிரச்சினை இதை எல்லாம் அவர்கள்தானே பேசி அரசியல் செய்யவேணும்.. எதுக்கு நம்மாளுங்க அதை செய்யுறானுங்க..? அவர்கள் எங்களைப்போல அரசியல் அனாதைகள் இல்ல.. அவர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கு மாநில அரசு இருக்கு அவர்கள் விரும்பும் கட்சிகள் இருக்கு.. சோ அவர்கள் தங்கள் அரசியலை பாத்துக்கொள்வார்கள்.. நாங்கள் குரல்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.. அவர்கள் எப்பவாவது எங்கள் ஊர் சம்பள பிரச்சினை மண் அள்ளுற பிரச்சினை ஆடுமாடு வளக்குற பிரச்சினை பற்றி கதைத்திருக்கிறார்களா.. சிங்களவர்களால் இனப்படுகொலை இன ஒதுக்கல் நடக்கும்போது மட்டும் குரல் கொடுப்பார்கள்.. அது தார்மீகக்கடமை.. இன ஒடுக்கல் இன அழிப்புக்கு குரல் கொடுப்பது வேறு அந்த நாட்டு லோக்கல் அரசியல் கதைப்பது வேறு.. அதே போல் ஒரு இன அழிப்பு நிலமை தமிழ் நாட்டில் ஏற்பட்டால் அப்போ நாம ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாம்.. இப்ப எதுக்கு லோக்கல் அரசியல்ல நாம பிரச்சாரம் செய்யணும்..? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே வெளிநாட்டவர்கள் இந்திய அர்சியலில் ஈடுபட தடை இருக்கு.. நாளைக்கே ஈழத்தமிழர்கள் ஆதரிக்கும் எதிர்க்கும் வேறு வேறு கட்சிகள் உதாரணத்துக்கு பாஜாகவை தமிழகத்துக்குள் விடக்கூடாது அதனால் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று தமது ஊர் நலத்தை சிந்தித்து ஒன்றாக போட்டியிட்டால் இந்த களமாடி ஈழத்தமிழர்கள் எந்த முக்காட்டை போத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.. அவர்கள் ஊர் நலனை முன்னிறுத்தி என்ன முடிவெடுப்பதும் அவர்களுக்கு சரியானது தானே..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

மேல‌ நீங்க‌ள் எழுதின‌ க‌ட்சி கார‌ர்க‌ள்

திமுக்காவை எப்ப‌டி எல்லாம் விம‌ர்சித்தார்க‌ள்............வேல்முருக‌ன் அண்ண அதிமுக்காவுக்கு முட்டு கொடுக்க‌ போய் அவ‌ர்க‌ள் இவ‌ருக்கு 2016சீட் கொடுக்க‌ வில்லை அப்ப‌டியே திமுக்கா ப‌க்க‌ம் சாய்ந்து விட்டார்

அவ‌ர் திராவிட‌ பெய‌ரிலா அவ‌ரின் க‌ட்சிக்கு பெய‌ர் வைச்சார்.................தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தேமுதிக்கா மற்றும் வைக்கோவின் ம‌திமுக்கா க‌ட்சி இப்போது த‌மிழ் நாட்டில் எந்த‌ நிலையில் நிக்குது............இப்ப‌டியான‌ கொள்கை இல்லா க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து ம‌க்க‌ள் பிரிந்து தான் 

வேறு க‌ட்சிக‌ளை ம‌க்க‌ள் தெரிவு செய்து ஓட்டு போட்டு வ‌ள‌த்து விடுகின‌ம்..............

அர‌சிய‌ல் ஆய்வில் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் தான் இருக்கிறார்க‌ள்............30ல‌ச்ச‌ம் 50ல‌ச்ச‌ம் ஆகும் 50ல‌ச்ச‌ம் 75ல‌ச்ச‌ம் ஆகும் போது திராவிட‌ வாயில் ம‌க்க‌ள் ம‌ண் அள்ளி போடுவார்க‌ள்

அவர்கள் தம்முள் அணி மாறுவதும், அரசியல் செய்வதும் வேறு….

நாம் வெளியில் இருந்து அவர்கள் ஆடைகளை பக்கம் சார்ந்து நிலை எடுப்பது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாம் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி கொண்டு தமிழக அரசியலை பேசவே கூடாது என்பது என் நிலைப்பாடு.

நாம் இந்த் அடையாளத்தோடு என்ன சொன்னாலும் அது ஒரு பகுதிக்கு இனிக்கும், மறு பகுதிக்கு கசக்கும்.

இதனால்தான் சீமான் வரும் வரை தமிழக கட்சி அரசியலில் ஈழத்தினர் தலையிடா கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது.

சீமான் வந்து சிலருக்கு மண்டையை கழுவி, அவர்கள் உரக்க கத்துவதால் - ஏதோ ஈழத்தமிழர் எல்லாம் சீமான் ஆதரவு, ஏனைய கட்சிக்கு எதிர்ப்பு என்ற மாய விம்பம் உருவாக்கப்படுகிறது.

இதை உடைத்து - இல்லை சீமானை ஆதரிப்போர் போல எதிர்போரும் உள்ளனர் என காட்ட - சீமானை எதிர்ப்பது அத்தியாவசிமாகிறது.

மீண்டும் இதை வாசியுங்கள்.

தமிழக அரசியல்.... இலங்கை விடயத்தில் ஒன்றுமேயில்லை. ஊதிப்பெருப்பிக்கவேண்டிய அவசியமும் இல்லை.

சும்மா, ஒரு வேடிக்கைக்காக நாம் மல்லு கட்டினாலும், அதனால் எமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்ற தெளிவு முக்கியமானது.

அமெரிக்காவும் மேற்கும் எடுக்கும் நடவடிக்கை, அதனை எப்படி நகர்த்துகிறார்கள் என்பது குறித்த உங்கள் ஆய்வுகளை இங்கே வையுங்கள். அதுவே மிக முக்கியமானது.

எமக்கு ஒரு பிரயோசனம் இல்லாத தமிழக அரசியலை வேடிக்கையுடன் மட்டுமே அணுகுங்கள். Don't stress over it boss!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஈழத்தமிழர்களை பற்றி கவலை கொள்ள வேண்டியது வேறு யாரும் அல்ல, இந்தியா தான். For its own interest.

பாஸ் நீங்கள் எழுதியதை ஒருக்கா திரும்ப வாசியுங்கள்.

ஈழ தமிழனை இந்தியாவை விட அதிகம் கவலை பட வேண்டியவர்கள்…

சாட்சாத் ஈழத்தமிழர்களாகியா நாங்கள்.

ஆகவேதான் சொல்கிறேன். 

நண்பர்களை உருவாக்காவிட்டாலும்…எதிரிகளை வலிந்து உருவாக்காமலாவது இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நாம் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி கொண்டு தமிழக அரசியலை பேசவே கூடாது என்பது என் நிலைப்பாடு.

நாம் இந்த் அடையாளத்தோடு என்ன சொன்னாலும் அது ஒரு பகுதிக்கு இனிக்கும், மறு பகுதிக்கு கசக்கும்.

இதனால்தான் சீமான் வரும் வரை தமிழக கட்சி அரசியலில் ஈழத்தினர் தலையிடா கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது.

சீமான் வந்து சிலருக்கு மண்டையை கழுவி, அவர்கள் உரக்க கத்துவதால் - ஏதோ ஈழத்தமிழர் எல்லாம் சீமான் ஆதரவு, ஏனைய கட்சிக்கு எதிர்ப்பு என்ற மாய விம்பம் உருவாக்கப்படுகிறது.

இதை உடைத்து - இல்லை சீமானை ஆதரிப்போர் போல எதிர்போரும் உள்ளனர் என காட்ட - சீமானை எதிர்ப்பது அத்தியாவசிமாகிறது.

மீண்டும் இதை வாசியுங்கள்.

ஒரு மைக்கை எடுத்து கொண்டு புல‌ம்பெய‌ர் நாடுக‌ளுக்கு சென்று த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் நீங்க‌ள் யாரை ஆத‌ரிக்கிறீங்க‌ள் என்று கேட்டு அதை நேர்மையோடு ஒட்டி வெட்டி ஒட்டாம‌ உண்மைய‌ வெளியிடுங்கோ அப்போது தெரியும் சீமானுக்கு எவ‌ள‌வு புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் ஆத‌ர‌வு கொடுக்கின‌ம்.............

ஊழ‌ல் திராவிட‌த்துக்கு ஈழ‌ ம‌க்க‌ள் எவ‌ள‌வு ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் என்னு அப்ப‌ தெரிய‌ வ‌ரும்......யாழில் இருந்து க‌ண்ட‌ கின்ட‌ அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌திலும் பார்க்க‌ இதையாவ‌து ஒழுங்காய் செய்ய‌ முய‌லுங்கோ🤣😁😂.............

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பாஸ் நீங்கள் எழுதியதை ஒருக்கா திரும்ப வாசியுங்கள்.

ஈழ தமிழனை இந்தியாவை விட அதிகம் கவலை பட வேண்டியவர்கள்…

சாட்சாத் ஈழத்தமிழர்களாகியா நாங்கள்.

ஆகவேதான் சொல்கிறேன். 

நண்பர்களை உருவாக்காவிட்டாலும்…எதிரிகளை வலிந்து உருவாக்காமலாவது இருங்கள்.

திரும்பவும் சொல்கிறேன்.

ஈழ தமிழ் அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு தான் கணெக்கெடுக்கப்படும்.

உங்களதோ, எனதோ அல்ல. இங்கிருந்து நாம் எழுதுவத்தை வைத்து, ஈழத்தமிழர் நிலைப்பாடு இதுதான் என்று நினைக்க அங்கேயுள்ள அரசியல் வாதிகள் வெத்து வேட்டுக்கள் அல்ல.

அதேவேளை, தமிழகமோ, இந்தியாவோ எமக்கு செய்ய எதுவுமே இல்லை. செய்திருக்க வேண்டிய காலமும் கடந்து விட்டது...

களமும் இல்லை.

ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையின் எதிர்காலமே, அமெரிக்கா, சீனா கைகளில். அதாவது வல்லரசுகளின் கைகளில்.

இந்தியா... இனி பார்வையாளார் மட்டுமே. அது துரதிஷ்ட்டமானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஏனெனில், குதிரை,  லாயத்திலிருந்து அமெரிக்கா, சீனா பக்கமாக ஓடி விட்டது. லாயம் நம்ம கையில் தான், உள்ளே இருக்கும் குதிரை... சா..ச அது கழுதை அப்படியே இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததன் விளைவு.

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு ஆப்படிக்க மும்மரமாக இருந்த போது, சீனா தென்பகுதியில் பெரிய ஆப்பாக இறுக்குவதை கவனிக்கவிலையே.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் கையில் இருந்து கொடுத்த பொதும், அதனை தடுக்க எதுவித முனைப்பும் காட்டாத பிராந்திய வல்லரசு, இன்று, அமெரிக்கா, பிரிட்டன் களத்தில் இறங்கி ஆப்படிக்கும் போது, கையை பிசைகிறதே.

இது உண்மையில் “பேக் கதை”.

புவிசார் அரசியல் நீங்கள் நினைப்பது போல் black and white ஆக நடக்கும் ஓடி பிடிச்சு விளையாட்டு அல்ல. அது மிகவும் நெகிழ்வுதன்மையானது.

பிரிக்ஸ் - சீனா, இந்தியா இணைந்து டாலருக்கு ஆப்பு என கதை எழுந்து, ஒரு மாதத்தில் G20 அமரிக்காவோடு இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் என கதை வரும்.

நாம் சும்மா வரும் செய்திகளை வைத்து, ஆரூடம் சொல்லலாம்…ஆனால் நிலமை it’s a lot more complex.

இலங்கையை பொறுத்தவரை எல்லாரும் ஒரு வகிபாக போட்டியில் உள்ளார்கள்.

அதில் யார் யார் பக்கம் என்பதோ, யார் இறுதி வெற்றியாளர் என்பதோ இன்னும் முடிவாகவில்லை.

இப்போதைக்கு முடிவும் ஆகாது.

ஆனால் தமிழ்நாடு வேறு. இந்தியா வேறு. அவை இரெட்டைகள், ஆனால் ஒரே ஆட்கள் அல்ல.

8 minutes ago, Nathamuni said:

எமக்கு ஒரு பிரயோசனம் இல்லாத தமிழக அரசியலை வேடிக்கையுடன் மட்டுமே அணுகுங்கள்

 பூனைக்கு விளையாட்டு வேணும் என்பதால், எலிக்கு சீவன் போக கூடாது.

நீங்கள் லண்டனில் இருந்து ஈழதமிழன் என்ற அடையாளத்தோடு எழுதுவது, தமிழ் நாட்டில் கணிசமான மக்களுக்கு ஈழதமிழன் மீதான வெறுப்பை உருவாக்கி, அதனால் நாட்டில் உள்ள ஈழதமிழனுக்கு உள்ள சிறு ஆதாயமாவது பாதிக்கப்படக்கூடாது.

எழுத்தும் கத்தியும் ஒன்று. தமது எழுத்தின் பெறுமதி தெரியாமல் கண்மூடித்தனமாக, விளையாட்டாக கத்தியை சுழட்டுவதற்கு - மடக்கி கொண்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இது உண்மையில் “பேக் கதை”.

பேக்கதையா இல்லையா என்பதனை காலம் சொல்லும்.

சில விடயங்களில் சிறப்பாக ஆய்வு செய்யும் நீங்கள், சில விடயங்களில் அவசர படுகிறீர்கள் போலவே படுகிறது.

ரணில் இந்தியாவின் தெரிவு அல்ல என ஒத்துக்கொள்வீர்கள் என்றால், அமெரிக்காவின் பலம் என்ன என்று புரியும்.

அது புரிந்தால், இது போன்ற தமிழக அரசியல் சில்லறை விசயங்களை வேடிக்கையாக மட்டும் பார்க்கும் நிலை வரும். அப்படி வரும்போது, இதில் மினக்கெடுவது நேர விரயம் என்பதும் தெளிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

ஒரு மைக்கை எடுத்து கொண்டு புல‌ம்பெய‌ர் நாடுக‌ளுக்கு சென்று த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் நீங்க‌ள் யாரை ஆத‌ரிக்கிறீங்க‌ள் என்று கேட்டு அதை நேர்மையோடு ஒட்டி வெட்டி ஒட்டாம‌ உண்மைய‌ வெளியிடுங்கோ அப்போது தெரியும் சீமானுக்கு எவ‌ள‌வு புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் ஆத‌ர‌வு கொடுக்கின‌ம்..........

நீங்கள் இதை செய்யுங்கள். எனக்கு புலம்பெயர் தமிழர் மத்தியில் எந்த தமிழக அரசியல்வாதிக்கு அதிக செல்வாக்கு என்பதை அறிய எந்த அவசியமும் இல்லை.

ஏன் என்றால் தமிழ் நாட்டில், ஈழத்தில் வாக்குரிமை அற்ற புலம்பெயர் தமிழர் செல்லாக்காசுகள்.

11 minutes ago, Nathamuni said:

இந்தியா... இனி பார்வையாளார் மட்டுமே. அது துரதிஷ்ட்டமானது.

இது உண்மை எனில் உண்மையில் இது அதிஸ்சவசமானது (எமக்கு).

ஆனால் இது அதீத கற்பனை.

12 minutes ago, Nathamuni said:

ஈழ தமிழ் அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு தான் கணெக்கெடுக்கப்படும்.

இல்லை - ஈழதமிழர் தலைவர்கள் மெளனமாக (அணிசேரா கொள்கை) இருக்க - மூளை கழுவப்பட்ட ஈழ தமிழ் புலம்பெயர் தம்பிகள் சோசல் மீடியாவில் உரக்க கத்த - இதுதான் ஈழத்தமிழர் நிலைப்பாடு என்ற விம்பம் (perception) வலுவாக கட்டமைக்கப்படுகிறது.

அரசியலில் perception மிக முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது உண்மை எனில் உண்மையில் இது அதிஸ்சவசமானது (எமக்கு).

ஆனால் இது அதீத கற்பனை.

கோத்தவினை வெளியே துரத்தும் போராட்டத்தின் பின்னால், முழுமையாக அமெரிக்கா தான் இருந்தது என்று விமல் வீரவன்ச மட்டும் சொல்லவில்லை.

ஒரு குரூப், புத்தகம் அடித்து, வெளிவிவகார அமைச்சரிடம் கொடுத்தும் விட்டார்கள்.

அந்த போராட்டம் நடந்த காலத்தில், இந்தியாவின் வகிபாகம்? 

எதுவுமே இல்லை.

சரி பின்னர் வந்த ஜனாதிபதி தேர்தலில், ரணிலை எதிர்த்த மொட்டு கட்சிகாரரை இந்தியா ஆதரித்தே.... என்ன நடந்தது?

ரோ விலும் பார்க்க, சிஐஏ இலங்கையில் பலமாக உள்ளது என்பது உறுதியாகிறதா?

தமிழர் பகுதியில், சீன ஆதரவு பௌத்த ஆலயங்கள் தீடீரென முளைப்பது ஏன் என்று இந்தியாவுக்கு கரிசனையை இல்லை. ஆனால் அமெரிக்க தூதர் கேட்டார்.

ஆகவே, இந்தியாவே ஒன்னும் செய்ய முடியாத கள சூழலில், தமிழக சில்லறை அரசியலை பூதாகாரமாக்கி வேடிக்கை பண்ணாமல், நடப்பதற்கும் உன்னிப்பாக கவனிப்போம்.

இந்த களேபரத்தில், கஜேந்திரன் எம்பிக்கு அடி விழுந்ததை கவனிக்கவில்லை....   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ரணில் இந்தியாவின் தெரிவு அல்ல என ஒத்துக்கொள்வீர்கள் என்றால், அமெரிக்காவின் பலம் என்ன என்று புரியும்.

அமெரிக்காவின் பலம் ஒரு போதும் உலகில் எங்கும் இந்தியாவை விட குறையாது என்பது வெளிப்படை உண்மை.

ஆனால் ஒரு கணத்தில் வகிபாகம் கூடும், குறையும் அதை வைத்து, அமெரிக்கா இந்தியாவை ஓரம் கட்டி விட்டது என்றோ, இலங்கையில் இந்தியா தோத்து விட்டது என்ற முடிவுக்கு வருவது என்னை பொறுத்தவரை - too simplistic.

இலங்கை ஒரு சின்ன விடயம் - இன்னும் பல பெரிய விடயங்களில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை.

ஆகவே இதை இப்படி எளிமையாக விளங்கி கொள்ள கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.