Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவேண்டும் - அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

17 SEP, 2023 | 02:25 PM
image
 
அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார்.

aus_-yes3.jpg

இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் உங்கள் இதயத்தில்  என்ன உள்ளது உங்கள் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்துகொண்டேன் என தெரிவித்துள்ள அமைச்சர் நீங்களும் என்னை போல இந்த நாடு இணைந்து முன்னேறுவதை விரும்புகின்றீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மெல்பேர்னின் அரச நூலகத்திலிருந்து 60,000 பேர் பெடரேசன் சதுக்கத்தினை நோக்கி பேரணியாக சென்றனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உரைகளும் வீதி நாடகங்களும் இந்த பேரணியில் இடம்பெற்றுள்ளன.

aus_-yes2.jpg

பலர் கைதட்டியபடி யெஸ் என தெரிவித்தபடி பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்கள் பெடரேசன் சதுக்கத்திற்கு வந்ததும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பீட்டர் கரெட் சர்வஜனவாக்கெடுப்பு அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என தெரிவித்தார்.

சர்வஜனவாக்கெடுப்பு குறித்து இன்னமும் தீர்மானிக்காமல் உள்ள நண்பர்கள் குடும்பத்தவர்களுடன் அது குறித்து பேசுங்கள் என அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களை கேட்டுக்கொண்டார்.

நாடுகள்  இவ்வாறான  தீர்மானங்களை வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் எடுக்கின்றன இது உங்களின் தீர்மானம் இதனை வீணடிக்க முடியாது என்பது எங்கள்அனைவருக்கும் தெரியும் நியாயமான நாடாக நாங்கள் செய்யக்கூடிய மிகவும் முக்கியமான விடயம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.

aus_-yes1.jpg

கன்பெராவில் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக பேரணியில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/164767

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம்.   இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2023 at 23:00, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம்.   இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔

உண்மையில் இது எதிர்கட்சி செய்த பித்தலாட்டங்களைக்கேட்டு நம்பியவர்களாலான பிரச்சனை. Liberal party யிற்கு பூர்வீக குடிகளை அங்கீகரிப்பது பிரச்சனை, அதனால அந்த referendum ஒரு தார்வையும் தராது எ்னறு பிரச்சாரம் செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2023 at 14:00, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம்.   இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔

இவர்களுக்கு ஒரு binding authority இல்லாமல் வெறும் ஆலோசனை நிலையே வழங்கப்படுவதால் - இது வெறும் கண்துடைப்பு என அபொர்ஜினிகள் உட்பட பலர் கூறுவதாயும்.

இதனால் வரிச்சுமை கூடும் என்றும்.

அபொர்ஜினிகள் சோம்பேறிகள், சமுகமாக போதை பொருள் பாவிப்போர். அவர்களை முதலில் “திருத்தி”, அவுஸ்ரேலிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.

இவ்வாறும், சில தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் என்னுடன் பேசும் போது கூறினர்.

எனக்கு இதில் நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு அறிவு, பரிச்சயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ragaa said:

உண்மையில் இது எதிர்கட்சி செய்த பித்தலாட்டங்களைக்கேட்டு நம்பியவர்களாலான பிரச்சனை. Liberal party யிற்கு பூர்வீக குடிகளை அங்கீகரிப்பது பிரச்சனை, அதனால அந்த referendum ஒரு தார்வையும் தராது எ்னறு பிரச்சாரம் செய்கிறார்கள். 

அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது தானே.  இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு என ஒரு நிரந்தர பிரதிநிதி(Voice) இருக்கப் போகிறது அவ்வளவுதான். மற்றப்படி அரசு எடுக்கும் எந்த திட்டங்கள், கொள்கைகளில் அவர்களது கருத்துகளை கூறமுடியுமே தவிர மாற்றும் அதிகாரமே தடுக்கும் அதிகாரமோ அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் இந்தளவு நிலைக்கு வந்ததே அவர்களது போராட்டதினால் என்பதால் இதிலிருந்து எதிர்காலத்தில் வேறு வகையில் உதவக்கூடும்.  

14 hours ago, goshan_che said:

இவர்களுக்கு ஒரு binding authority இல்லாமல் வெறும் ஆலோசனை நிலையே வழங்கப்படுவதால் - இது வெறும் கண்துடைப்பு என அபொர்ஜினிகள் உட்பட பலர் கூறுவதாயும்.

இதனால் வரிச்சுமை கூடும் என்றும்.

அபொர்ஜினிகள் சோம்பேறிகள், சமுகமாக போதை பொருள் பாவிப்போர். அவர்களை முதலில் “திருத்தி”, அவுஸ்ரேலிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.

இவ்வாறும், சில தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் என்னுடன் பேசும் போது கூறினர்.

எனக்கு இதில் நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு அறிவு, பரிச்சயம் இல்லை.

அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளை வீணாடிப்போராக இருக்கலாம். ஆனால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், குடும்ப வன்முறைகளுக்கு  தொடங்கி குறைந்த ஆயுட்காலம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. அவர்களை அரசாங்கம் பெயரளவில்தான் கவனிக்கிறதோ என நினைப்பதுண்டு, ஏனெனில் அவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கான “ Closing the gap “ என்பது கூட 2007 ஆண்டளவில்தான் அதிகம் பேசப்பட்டது, அப்படியிருக்க அவர்களை சோம்பேறிகள் என்றும் சமூகமாக போதைப் பொருள் பாவிப்போர் என்று தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் கூறுவது சரியோ தெரியவில்லை. 

பழங்குடிகளுக்கான உரிய அங்கீகாரமும் அவர்களுடைய நிரந்தர பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தில் இருந்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ஒழுங்கான/உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என நினைக்கிறேன்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.