Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image
 

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

47744006.jpg

பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

4675505.jpg

அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.

57855_4.jpg

கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பெட்டிக்கலோ கெம்பஸ் விடுவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி மீண்டும் களைகட்டும் அரபு வசந்தம்...புல்லாவின் தொல்லை இனி கட்டுக்கடங்காது...அணிலுக்கு அரபு வோட்டு தேவைப்படுகுது... இனி செந்தில் தொண்டமானின் ஆட்டமும் முடிஞ்சுது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணிலுக்கு ஆதரவு தருகிறேன் என்று நானா சொல்லி இருப்பார். பிறகு என்ன ரணில் ஐயா எல்லாவற்றையும் காலி செய்ய சொல்லி இருப்பார். இனி மீண்டும் ISIS பயங்கரவாதம் தலை தூக்குவதை யாராலும் தடுக்க முடியாது. இவர்களுக்கு எப்படி கோடி கணக்கில் பணம் வந்தது என்று யாருக்குமே தெரியாது. கண் துடைப்பு விசாரணைகளுடன் , கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் எல்லாமே சுபம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது அரபு உலகின் கடும்போக்கு நாடுகளின் உதவியோடு உருவான..  ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மூளைச் சலவை செய்யும் கூடமே அன்றி.. வேறில்லை.

இது தொடர்ந்து இயங்குவதை இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் குண்டுக்கு இலக்கான மக்கள் என்ற வகையில் மட்டக்களப்பு மக்கள் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும்.

1990 காத்தான்குடி சம்பவத்தை வைச்சு உலகை ஏமாற்றிப் பிழைக்கும் ஹிஸ்புல்லா போன்ற கொடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.. மீண்டும் பலமூட்டப்படுவது.. தமிழ் மக்களுக்கே ஆபத்து. 

இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் தமிழ் மக்களின் உயிரைப் பறிக்க இடமளிக்கக் கூடாது. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.