Jump to content

பூனைக்கு இறங்கத் தெரியவில்லை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி நிடசாக்ஸன் மாநிலத்தின் டெல்மன் கோர்ஸ்ட்  நகரத்துப் பூனைக்கு மரத்தில் இருந்து இறங்கத் தெரியவில்லை.

அந்தப் பூனைக்கு வயது ஒன்றுதான்.பெயர் சிட் (Sid). கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட், ஓக் (oak) மரத்தில் விறி விறு என ஏறி விட்டது. 12 மீற்றர் உயரத்துக்கு ஏறிய பூனைக்கு இறங்குவதற்கு பயமாக இருந்ததால் மரத்தில் இருந்து அவலமாகக் கத்திக் கொண்டிருந்தது. சிட்டினுடைய சோகமான முகத்தை தரையில் இருந்து பார்த்த  அதன் உரிமையாளர்(27), அதை மரத்தில் இருந்து  தரைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக வெறும் காலுடன் மரத்தில் ஏற ஆரம்பித்தார்மாலை 8மணி. கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். இருள் மெதுவாக பரவத் தொடங்கியது.

மரத்தின் மேலே  ஏறி, பூனையை தன் கையில் எடுத்துக் கொண்ட உரிமையாளர் கீழே தரையைப் பார்த்தார். ஒரு வயது பூனை சிட்டுக்கு வந்த அதே பயம் இருபத்தியேழு வயது உரிமையாளருக்கும் வந்து விட்டது. அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. பூனையை ஒரு கையாலும் மரத்தை மறுகையாலும் பிடித்துக் கொண்டு மரத்திலேயே  இருந்து விட்டார்.

இதை அவதானித்த அவரின் தம்பி உடனடியாக அவசரப் பிரிவுக்கு அழைப்பை எடுத்தார். அவர்கள் தீயணைப்புப் படையை அனுப்பி வைத்தனர். தீயணைப்புப் படையினரால் இருவரும் மரத்தில் இருந்து தரைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

சாதாரணமாக இப்படியொருவருக்காக தீயணைப்புப்படை வந்திருந்தால் அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தியாக வேண்டும். இங்கு அவர் ஒரு பூனையைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதால் அவரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

“ஏறியவனுக்கு இறங்கத் தெரியவில்லை என்பது அவமானமாக இருந்ததுஎன்று பூனையின் உரிமையாளர் குறிப்பிட்டார்

பூனைக்கு ஒரு வயதுதான். விபரம் போதாது. மறுபடி எதில் ஏறப் போகிறதோ?

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயரத்தில இருந்து கீழே பார்க்கும்போது எனக்கும் அச்சமாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உயரமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயில்லை, நானெல்லாம் விமானத்தில் இருந்தே கீழே பார்த்திருக்கிறன் ஒருநாளும் பயந்ததே இல்லை..........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

யேர்மனி நிடசாக்ஸன் மாநிலத்தின் டெல்மன் கோர்ஸ்ட்  நகரத்துப் பூனைக்கு மரத்தில் இருந்து இறங்கத் தெரியவில்லை.

அந்தப் பூனைக்கு வயது ஒன்றுதான்.பெயர் சிட் (Sid). கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட், ஓக் (oak) மரத்தில் விறி விறு என ஏறி விட்டது. 12 மீற்றர் உயரத்துக்கு ஏறிய பூனைக்கு இறங்குவதற்கு பயமாக இருந்ததால் மரத்தில் இருந்து அவலமாகக் கத்திக் கொண்டிருந்தது. சிட்டினுடைய சோகமான முகத்தை தரையில் இருந்து பார்த்த  அதன் உரிமையாளர்(27), அதை மரத்தில் இருந்து  தரைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக வெறும் காலுடன் மரத்தில் ஏற ஆரம்பித்தார்மாலை 8மணி. கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். இருள் மெதுவாக பரவத் தொடங்கியது.

மரத்தின் மேலே  ஏறி, பூனையை தன் கையில் எடுத்துக் கொண்ட உரிமையாளர் கீழே தரையைப் பார்த்தார். ஒரு வயது பூனை சிட்டுக்கு வந்த அதே பயம் இருபத்தியேழு வயது உரிமையாளருக்கும் வந்து விட்டது. அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. பூனையை ஒரு கையாலும் மரத்தை மறுகையாலும் பிடித்துக் கொண்டு மரத்திலேயே  இருந்து விட்டார்.

இதை அவதானித்த அவரின் தம்பி உடனடியாக அவசரப் பிரிவுக்கு அழைப்பை எடுத்தார். அவர்கள் தீயணைப்புப் படையை அனுப்பி வைத்தனர். தீயணைப்புப் படையினரால் இருவரும் மரத்தில் இருந்து தரைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

சாதாரணமாக இப்படியொருவருக்காக தீயணைப்புப்படை வந்திருந்தால் அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தியாக வேண்டும். இங்கு அவர் ஒரு பூனையைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதால் அவரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

“ஏறியவனுக்கு இறங்கத் தெரியவில்லை என்பது அவமானமாக இருந்ததுஎன்று பூனையின் உரிமையாளர் குறிப்பிட்டார்

பூனைக்கு ஒரு வயதுதான். விபரம் போதாது. மறுபடி எதில் ஏறப் போகிறதோ?

எனக்கு விளங்கீட்டு அருணாச்சலம் ஐயா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2023 at 16:20, Kavi arunasalam said:

நல்லதொரு சுவாரசியமான பதிவு. பூனை ஏறிவிட்டு இறங்க தெரியாமல் மீயா மீயா என்று கத்துவதை நாங்கள் பலரும் அவதானித்துள்ளோம். நல்லாய் கத்திப்பார்த்துவிட்டு கடைசியில் ஏதோ ஒரு வழியாக தனக்குள் வீரத்தை வரவழைத்துக்கொண்டு பூனை கீழே வந்துவிடும். ஆனால் இங்கே எஜமான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
    • அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
    • எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.