Jump to content

திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம்


Recommended Posts

திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம்

ச. அகத்தியலிங்கம்

திராவிட மொழியியல் இன்று நல்லதொரு வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பல்வேறு அறிஞர்களும் இளைஞர்களும் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆய்ந்து வருதல் காணலாம். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர்கள் பலர். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி பற்றிய ஆராய்ச்சி நம் நாட்டில் தொடங்கிவிட்டது என்றாலும் ''திராவிட மொழிகள்” என்னும் ஒன்றிய எண்ணமும் ஆராய்ச்சியும் மிக அண்மைக் காலத்திலேயே தொடங்கின. இவ்வண்மைக்கால வளர்ச்சி யின் வரலாற்றினை வடிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். குறிப்பாகத் திராவிட மொழியியல் ஆராய்ச்சியின் தந்தை எனக் கருதப்படும் கால்டுவெல் காலம் வரை நடந்த வளர்ச்சி பற்றியே இக்கட்டுரை பேசும்.

மிகப் பழங்காலந் தொட்டே திராவிட மொழிகள் பற்றி மேனாட்டினர் அறிந்திருந்தனர். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் போர்ச்சிக்கீஸ் அறிஞர் ஒருவர் (Fernao Lape de Castanteda) தென்னிந்திய மொழிகள் பற்றித் தம்முடைய குறிப்பொன்றில் குறிப்பிட்டுள்ளமை காணலாம். (Grierson 1906. ல்ல்,350. 366)1 தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு தென்னிந்திய இலக்கிய மொழிகளும் மேனாட்டு அறிஞர்கள் பலருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம்.

1801இல் கல்கத்தாவில் வில்லியம், கல்லூரி (Fort Williams College) தோன்றியபோது இந்திய மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இதன் தலைவராக இருந்த வில்லியம் கரே என்பார் இந்திய மொழிகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து ஆராய முற்பட்டார். 1816இல் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழி யிலிருந்து உருவானவை என்று கூறியுள்ளார்.2 இதற்குக் காரணம் இம்மொழிகளில் ஏராளமான வடமொழிச் சொற்கள் காணப்படுவதே. மேலும் கி.பி. 18ஆம் நூற்றாண் டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்த அறிஞர்கள் பலர் இவ்வெண்ணத்தையே கொண்டிருந்தனர். ஸ்டீவன்சன், கோல் புரூக் , வில்கின்ஸ், ஜி.யு. போப் போன்ற பல மேனாட்டறிஞர்களும் ஞானப் பிரகாசர், சேஷகிரி போன்ற பல கீழை நாட்டு அறிஞர்களும் இக்கருத்தினைக் கொண்டிருந்தனர்.

ஆனால் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தபோது இம் மொழிகள் தங்களுக்கிடையே இன உறவினைக் கொண் டிருக்கின்றன எனக் கண்ட நிலையில் இம்மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன எனக் கூறியதுடன் இவற்றை ஒன்றாக இணைத்துத் 'தென்னிந்திய மொழிகள்” எனப் பெயரிட்டார்.3 மேலும் த, உ,ராபர்ட்ஸ் என்பார் எழுதிய மால்தோ பற்றிய குறிப்பினைக் கொண்டு தென்னிந்தியாவில் காணப்படும் மொழிகளும் மால்தோ மொழியும் தம்முள் ஒற்றுமையுடையனவாக இருக்கலாம் எனவும் எண்ணினார். இன்றையத் திராவிட மொழி ஆராய்ச்சிக்கு வித்திட்ட பெருமை அவரைச் சாரும்.

தென்னிந்திய மொழிகள் 1816

தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு, துளு, கொடகு, மால்தோ

என்ற நிலையில் தனி மொழிகளைப் பற்றிய செய்திகளும் இலக்கண அமைப்பும் பரவலாயின. பம்பாயில் இந்திய அரசாங்கப் படைத்துறையில் இருந்த மேஜர் லீச் என்பார் கி.பி. 1839இல் பிராகுய் மொழி பற்றியும் இதன் இலக்கண அமைப்பு பற்றியும் தம்முடைய கட்டுரையொன்றில் (An Epitome of the Grammer of Brahuiky, Journal of Asiatc Society of Bengal, 1839) குறிப்பிட்டார். லீச்சின் குறிப்பினைக் கண்ட கிறிஸ்தியன் லேசன் என்பார் பிராகுய் மொழி தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவற்றுடன் தொடர்புடையது என்று கூறியதுடன் இவற்றைத் தக்கண மொழிகள் (Dekhan Languages) எனவும் பெயரிட்டார். 5

கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் திராவிட மொழிகள் பற்றிய இலக்கண நூல்கள் பல எழுந்தன. 1832இலும் 1837இலும் வெளியான தோடா மொழி பற்றிய குறிப்புகள் இம்மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பினை விளக்குவனவாக அமைந்தன. 1837இல் இது பற்றி எழுதிய பெர்னாட் சிமித் என்பார் இதனைத் திராவிட மொழிகளில் ஒன்று என்றும் அவற்றிலும் தமிழ் மொழியுடன் இது நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் கூறினார்.

தோடா மொழியினைப் பற்றிப் பலர் குறிப்பிட்டிருக்கக் காணலாம். 1856இல் பிரடரிக் மெட்ஸ் இம்மொழிச் சொற்கள் பலவற்றைத் தொகுத்துள்ளார்.7 இவரைப் போன்றே ஹோட்க்செனும் (ஆ,ஏ, ஏர்க்ஞ்ள்ர்ய்) தோடா மொழிச் சொற்கள் பலவற்றைத் தம்முடைய கட்டுரையொன்றில் தொகுத்துத் தந்துள்ளார்.8 இத்தகைய கட்டுரைகள் தோடா மொழியின் அமைப்புப் பற்றியும் திராவிட மொழிகளுடன் இதற்குரிய தொடர்பு பற்றியும் அறிவதற்குக் காரணமாக அமைந்தன.

கி.பி. 1840க்கும் 1860க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் திராவிட மொழிகள் பற்றிய குறிப்புக்களும் இலக்கணங் களும் செய்திகளும் வெளிவரலாயின. 1844இல் கோண்டி மொழிச் சொற்கள் பலவற்றைத் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார் வாய்சே என்பார்.9 இதையொட்டி 1849இல் டிரிபெர்க் கோண்டி மொழி இலக்கண நூலொன்றை எழுதினார்.10 இந்நிலையில் கோண்டி மொழியின் அமைப்பும் அதற்கும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளுக்குமிடையேயுள்ள தொடர்பும் தெரியலாயிற்று.

படகா மொழி பற்றிய தெளிவானதொரு கருத்து அறிஞர்களிடையே ஏற்படவில்லையாயினும் இம்மொழி பற்றிப் பலர் அறிந்திருந்தனர். 1849இலேயே இம்மொழி பற்றிப் பூலார் என்பார் எழுதியுள்ளார்.11 இம் மொழி பேசும் மக்களை, பர்கர்கள் என்றும் படகர்கள் என்றும் அழைத்தனர். மேலும் இம்மொழி கன்னடத்துடன் தொடர்புடையது என்ற கருத்தும் இம்மக்கள் வடக்கே இருந்து நீலகிரி மலைப் பகுதியில் குடியேறியவர்கள் என்ற எண்ணமும் அறிஞர் களிடையே பரவியிருந்தமை காணலாம்.12

கூயி மொழி பற்றிய குறிப்பினை 1851 முதலே காணலாம். ஜான் பெர்சிவால் பிரய் என்பார் இவ்வாண்டில் கூயி மொழி இலக்கணம் ஒன்றை வெளியிட்டார்.13 கோண்டி மொழியுடன் தொடர்பு கொண்டிருந்தபோதிலும் இது வேறு தனியொரு மொழி என்ற எண்ணத்தைப் பிளண்டு (Campt.Blunt) என்பவர் தம்முடைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவு கூரத் தக்கதாம்.14 இதனை அடுத்து இம்மொழியைப் பற்றிய இலக்கணம் ஒன்று கி.பி. 1853 இல் தோன்றியது.15 ஒரியா மொழியில் எழுதப்பட்ட இவ்விலக்கண நூல் சிறந்ததொரு நூல் என்பது கால்டுவெல் கருத்தாம்.

துளு மொழி பற்றிய பழைய குறிப்புகள் அதிகமாக இல்லை. எல்லிஸ் தம்முடைய கட்டுரையொன்றில் துளு, மலையாள மொழியின் கிளை மொழியாகும் எனக் குறிப்பிட்டுள்ள தாகக் கால்டுவெல் குறிப்பிடுவார். கி.பி.1834இல் பாசல் கிறிஸ்தவப் பாதிரிகள் துளு மொழியில் சில நூல்கள் எழுதிக் கன்னட எழுத்தில் வெளியிட்டனர். 1842இல் மேத்தியூ வேதாகமமும் 1847இல் புதிய வேதாகமமும் துளு மொழியில் வெளியாயிற்று. இவை யெல்லாம் துளு மொழி பற்றி அறிவதற்குத் துணையாக இருந்தன.

பல மொழிகளின் அமைப்பும் அவை பற்றிய அறிவும் ஒரு சில அறிஞர்களிடையே பரவிய நிலையில் இம்மொழிகளை இணைத்துக் காணும் எண்ணமும் வளர்ந்தது. 1842இல் ஸ்டீவன்சன் ''தென்னிந்திய மொழிகள் தனி இனம் என்றும், அவைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை அல்ல” என்றும், ''இம்மொழிச் சொற்கள் பல வட இந்திய மொழிகளில் காணக்கிடக்கின்றன” என்றும் கூறிச் சென்றார்.17 ஹோக்சன் 1848இலும் 1856இலும் கிழக்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி ஆகிய இடங்களில் வாழும் மக்கள் பேசும் மொழிகள் பலவற்றின் சொற்களைச் சேகரித்ததுடன் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்ற பொதுப் பெயரால் அழைத்தார். ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டன இவை என்றும் இம்மொழிகள் தமிழ் மொழியுடன் தொடர்புடையன என்றும் கருதினார்.18 இத்துடன் இம்மொழிகளை இணைத்துத் திராவிட மொழிகள் என அழைத்ததாகவும் தெரிய வருகிறது.19

1854இல் மாக்சுமுல்லர் இந்திய மொழிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்திய நாட்டில் காணப்படும் மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை அல்ல என்றும் இமாலயப் பாங்கில் காணப்படும் சில மொழிகளும் கோல்(முண்டா) மொழிகளும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருத மொழியுடன் இனத் தொடர்பு கொண்டவை அல்ல என்று கூறியதுடன் இவை மூன்றையும் இணைத்து நிஷாதா மொழிகள் எனவும் குறிப்பிட்டுச் சென்றார். மேலும் தென்னிந்திய மொழிகள் துரானியன் (ஸ்கித்தியன்) மொழிகளுடன் தொடர்பு கொண்டவை என்றும் கூறினார்.

இம்மொழிகளைப் பற்றிய தெளிவான கருத்தைத் தந்தவர் கால்டுவெல்லே. 1856இல் வெளியான இவருடைய நூலில் (A Comparative Grammer of the Dravidan or South Indian Family of Languages) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் இந்தோ - ஆரிய மொழிகளி லிருந்தும் கோலாரியன் (முண்டா) மொழி களிலிருந்தும் மாறுபட்டன என்றும் திட்ட வட்டமாக விளக்கியதுடன் இவற்றைத் திராவிட மொழிகள் என்ற பெயரில் மொழி நூல் உலகம் அறியுமாறு செய்தார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, தோடா, கோத்தா, கோண்டி, கூயி ஆகிய ஒன்பது மொழிகளையும் முக்கிய மொழிகளாகக் கருதும் இவர் குடகு, படகா, குறும்பா ஆகியவற்றையும் பிராகுய், குரூக், மால்தோ ஆகிய வட இந்திய மொழிகளையும் பற்றிக் கூறுவார். எனினும் முந்திய ஒன்பது மொழிகளையே திராவிட மொழிகள் என எவ்வித ஐயப்பாடுமின்றிக் கருதினார் எனலாம். வட இந்திய மொழிகளான குரூக், மால்தோ, பிராகுய் என்பவற்றில் திராவிடப் பண்புகள் காணப்படினும் அவை பற்றித் திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை என்று கூறிச் செல்லுதல் காணலாம். குடகு, போன்றவற்றைத் தனி மொழிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினார் இவர்.

எனவேதான் கால்டுவெல் தம்முடைய நூலின் முதல் பதிப்பில் ஒன்பது மொழிகளையே திராவிட மொழிகள் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இவற்றை இலக்கிய மொழிகள் (Literary Languages) என்றும் திருந்தாத மொழிகள் என்றும் Uncultivated Launguages) இரு பிரிவுகளாக்கி முதல் பிரிவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு என்ற மொழிகளையும் இரண்டாவது பிரிவில் தோடா, கோத்தா, கோண்டி, கூயி என்ற மொழிகளையும் அடக்கினார்.

திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டன என்று கூறியதுடன் இம்மொழிகள் சமஸ்கிருத மொழியிலும் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளன என்றும், இதனால் இம்மொழிகளின் பழைமை நன்கு உணரப் படுகிறது என்றும் கூறினார். மேலும் இம்மொழிகளை ராமஸ் ராஸ்க், உராலிக் அல்டய்க் மொழிகளுடன் இணைத்துக் கண்டார் என்றும் அவர் கருத்துக்கு ஒத்துக்கொள்ளத் தக்கது என்றும் கூறியதுடன் பல்வேறு இலக்கணக் கூறுகளை எடுத்துக்காட்டி இம்மொழிகளை ஒற்றுமைப்படுத்திக் காட்டினார் கால்டுவெல்.

அடிகுறிப்புகள்:

1. 1528இல் கோவா வந்த இவர் தாம் எழுதிய நூல் ஒன்றில் திராவிட மொழிகள் பற்றிக் (மளையாளம், கன்னடம்) குறிப்பிட்டுள்ளார், இதுவே இம்மொழிகள் பற்றிய முதல் குறிப்பு என்பார் கீரீயர்சன்.

2, That eight or nine languages had sprung from that great philological root. the sungskrit. we well know, But we imagined that the Tamul. the Kurnata. the Telunga. the Gugaratee. the Orissa. the Bengalee. the Punjabee. and the Hindoostanee. comprised nearly all the collateral branches springing from the Sanskrit language; and that all the rest were varieties of the Hindu and some of them. indeed; little better than Jargons capable of conveying ideas, - Linguistic Survey of India. Vol,I. P,11,

3, அ,ஈ, கேம்பல் (A.D. Campell, A Grammer of Teloogoo Languages, 1816) என்பார் எழுதிய தெலுங்கு மொழி இலக்கணம் என்ற நூலின் முன்னுரையில் (Note to the Introduction. ல்ல்,2-3) வில்கின்ஸ், கேவல் புரூக் போன்றோர்களின் கொள்கை தவறு எனக் காட்டி இம்மொழிகளுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இனத்தொடர்பில்லை எனக் கூறி இவை தனியானவை என்று கூறுவதுடன் இவற்றை “The dialects of Southern India” என்றும் பேரிடுவார்.

4, R,E, Roberts. Report of Rajmahal (Asiatic Researchs. 5. 127-130. (1798),

5, M,B, Emeneau. Brahui and Dravidian Comparative Grammar P,2,

6, Henry Harkness. A Description of a singular Aboriginal Race inhabiting the Summit of the Neilgherry Hills (1832) Bernhard Sebmid, On the Dialect of the Todavars. the Aborigines of the Neelgherries (Madras Journal of letters and science. V,1837. p,155-3) 1837,

7, Friedrich Metz. A Vocabulary of the Dialect Spoken by the Todas of the Nilagiri Mountains. in Madras Journal of Letters and Science. N,S,I, 1856-57,

8, B,H, Hodgson. Aborigines of the Nilgris. Journal of the Asiatic Society of Bengal XXV [1856]. 31-8. 498-522,

9, Vosysey. Vocabulary of Goand and Cole words. Journal of the Asiatic Society of Bengal. XIII [1844],

10, J,G, Driberg. H,J, Harrison. Narrative of the Second visit to the Gonds of the Nurbudda Territory [with a Grammar & Vocabulary of their language] Calcutta. 1849,

11, M, Buhler. Ueber das Volkund die Sprache der Badaga im dekhanischen Indion. Zeitschrift der Deukschen Morgen landischen Gesselshaft. III [1849]

12, M,B, Emeneau. The South Dravidian Languages. JAOS. 1967,

13, J,P, Fyre. A Grammar and progressive reading lessons in the Kondh language [1851]

14, ”

15, Lingum Letchmajee. An Introduction to the Grammar of the Kui or Kondh language [1853]

16, ”

17, J, Stevenson. An Essay on the languages of the aboriginal Hindus. The Journal of the Bombay Branch of the Royal Asiatic Society,

18, B,H, Hodgson. Aborigines of Eastern Ghats. JASB [1848]

B,H, Hodgson. Aborigines of the Nilgiris. JASB [1856]

19, திராவிட மொழிகள் பற்றி எழுதும்போது கிரியர்சன், எர்ஸ்க்கிள் பெரி பற்றியும் ஹோக்சன், பற்றியும் குறிப்பிடுகிறார். பெரி இம்மொழிகளைத் துரானியன் “Turanian” அல்லது தமிழினம் என்றும், ஹோக்சன் திராவிடம் என்றும் அழைத்ததாகச் சொல்லுவார்.

Caldwell. A Comparative Grammar of the Dravidian or South Indian Languages, 1961 third revised edition p,4,

I have not included. however. the Brahui. or the Rajmahal and Uraon. in the list of Dravidian Languages which are to be subjected to systematic comparison (though I shall give some account of them in the sequel and shall refer to them occasionally for illustration). because the Dravidian element contained in those languages bears a small proportion to the rest of their component elements,

(கட்டுரை எடுக்கப்பட்ட நூல்: ஆய்வு மலர்- கேரளப் பல்கலைக்கழகப் பழைய மாணவர் மன்ற ஆண்டு மலர் Vol. I 1972, ஜெயகுமார்ஸ்டோர்ஸ், நாகர்கோவில்.)

http://keetru.com/kavithaasaran/jan07/akathiyalingam.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியெண்டால் திராவிடமொழிகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் எல்லாம் ஒண்டாகச் சேர்ந்து சாதிக்க முடியும் எண்டு நம்புறியளா?

இண்டைக்கு வடக்கில் இருக்கின்றவையை விட, தமிழன் மேல படுவெறுப்பில் உள்ளவை மலையாளிகளும், கன்னடர்களும் தான்.

இப்படி இருக்கேக்க சாத்தியமில்லாத திராவிட் கொள்கையை ஏன் தலையில் தூக்கிக் கொண்டு திரிகின்றியள்

Link to comment
Share on other sites

தமிழர்கள் பிரித்தாளப்பட்டபோது பல்வேறு காலங்களில் இருந்த "elites" பிரிந்து தமக்கு என்று ஒரு குழுமத்தை உருவாக்கியதால் வந்தவை தான் மலையாளம் தெலுங்கு என்பன.

இன்று கூட அதிகரித்துவரும் தமிங்கிலம் அல்லது தங்கிலிஸ் பேசும் கூட்டம் அப்படி ஒரு நிலைக்கு போகாது இருக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

இவற்றிற்கான வரலாற்றுப் பின்னணியை காசியானந்தன் மிக அழகாக தரிசனத்தில் ஒரு தொடராக சொல்லி வருகிறார்.

கதிர்காமரும் திருச்செல்வமும். கூல்களும் சேர்ந்து ஒரு தனிக்குழுமாக உருவானால் எப்படி அவர்களது எதிர்கால சந்ததி தமிழர்களை வெறுக்குமோ அப்படிப்பட்ட ஒரு வெறுப்புத்தான் மலையாளிகளிடம் இன்று காவிவரப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெறுப்பு வந்தது என்பதைச் சொல்லுறத விடஇப்படி நாங்கள் திராவிடம் பற்றிக் கதைக்கின்றதால ஏதாவது பலன் வருமோ எண்டு தான் பார்க்க வேணும். எக்காலத்திலும் அவை கூட மனரீதியாகவோ, இனரீதியாகவோ ஒன்றாகிச் சாதிக்கலாம் எண்ட நம்பிக்கை எனக்கில்லை.

நீங்கள் சொல்லுற மாதிரி தமிழிங்கிலம் வாறதைத் தடுக்கின்ற பணி தான் இப்போதைக்கு அவசியமே தவிர, அது வந்தால் என்ன செய்யலாம் எண்டது தேவையில்லாத ஒன்று. வரும்முன் அணை கட்டணும்.

Link to comment
Share on other sites

ஏன் வெறுப்பு வந்தது என்பதைச் சொல்லுறத விடஇப்படி நாங்கள் திராவிடம் பற்றிக் கதைக்கின்றதால ஏதாவது பலன் வருமோ எண்டு தான் பார்க்க வேணும். எக்காலத்திலும் அவை கூட மனரீதியாகவோ, இனரீதியாகவோ ஒன்றாகிச் சாதிக்கலாம் எண்ட நம்பிக்கை எனக்கில்லை.

நீங்கள் சொல்லுற மாதிரி தமிழிங்கிலம் வாறதைத் தடுக்கின்ற பணி தான் இப்போதைக்கு அவசியமே தவிர, அது வந்தால் என்ன செய்யலாம் எண்டது தேவையில்லாத ஒன்று. வரும்முன் அணை கட்டணும்.

மேல் உள்ள ஆய்வு ஒரு மொழியியல் வரலாற்று ஆய்வு.எவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என்பன ஒரே திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்து வந்தன என்பதைச் சொல்வது.இங்கே பலரும் வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பார்க்கமால் தங்கள் தங்கள் கற்பனைகள் முழுப் பொய்களினூடாக இந்து மத நிலைப்பாடுகளூடாகத் திரிக்க முனைகின்றனர் அதற்காகவே இந்தக்கட்டுரை இணைக்கப்படுகிறது.இனக் குழுமம அடையாளம் தனித்துவம் என்பது எல்லாக்காலத்திலும் ஒன்றாக இருப்பதில்லை.இன்றிருக்கும் நிலையில் தமிழர் தெலுங்கர் கன்னடிகர் எல்லோரும் தங்களை வெவ்வேறு இனக்குழுக்களாகவே உணருகின்றனர்.ஆனால் ஆரிய வழி வந்த பார்ப்பனர்கள் அவர்கள் கன்னட மொழி பேசினாலும் தமிழ் பேசினாலும் தங்களைப்பார்ப்பனராகவே உணருகின்றனர் அவ்வறே அரசியல் ரீதியாக்ச் செயற்படுகின்றனர்.ஆகவே இன்றைய நிலையில் ஆரியர் யார் திர்ராவிடர் யார் எங்கிற வரலாற்று உண்மையையும் அதன் இன்றைய அரசியற் தொடர்ச்சியையும் கூறுவது ஆரியரின் ஆதிக்க அரசியலை அம்பலப்படுதவே.இதன் மூலம்தமிழர்கள் விழிப்படைந்து தங்களை ஆட்டிப்படைக்கும் இந்த ஆதிக்கச் சக்திகளில் இருந்தும் அதன் ஆணிவேரான் சாதியதில் இருந்தும் விடுபடுவார்கள் என்பதற்காகவே இங்கே இந்த வரலாற்று ஆதாரங்கள் முன் வைக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

பெரியார் போன்றவர்களால் திராவிடம் தூக்கப்பட்டதே வரலாற்றில் நடந்த சதிகளை புரிந்து மொழவாரியாக இவ்வாறு பிரிக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தான்.

இப்போம் நாம் கூட மதத்தால் வேறுபட்டிருக்கும் ஈழத்து இஸ்லாமியர்களை மொழியால் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகிறோம் இல்லையா?

ஏன் எமது நிகழ்கால சதியான பிரதேசவாதம் தற்காலிகமாக கூட வெற்றி பெற்றிருந்தால் அந்தத் தவறை உணர்ந்து எதிர்காலச் சந்ததிகள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்கா கல்வியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில் பழக்க வழக்கங்களில் பலவிடையங்களை புகுத்தி ஒரு தீர்க்க முடியாத பகையை 2 தரப்பிற்கும் வழர்த்து விடுவார்கள். அந்தப் பகையை தாண்டி ஒற்றுமைப் படுத்த வெளிக்கிட்டால் எதிர்காலத்தில் அப்போ உள்ள வரலாற்று விளக்கமில்லாத இரண்டு இனக்குழுமத்தின் காவலர்களும் எமது அடையாளத்தை சிதைத்து வேறு ஒன்றைப் புகுத்துகிறார்கள் என்று முழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி வாரியாக மெட்ராஸ் என்ற மாகாணம் பிரிக்கப்பட்டதே பெரியாரின் வேலையால் தானே? அதில் தமிழரின் நிலங்களை பல பறி போய்ச்சுதே? அதெப்படி இல்லை எண்டுறியள். சொல்லுறது முரணாகத் தெரியல்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தக் கட்டுரை.. அறிவியல் ரீதியானது என்று காட்டுதல் தவறானது. இது ஏலவே உள்ள மாயைத்தனமான திராவிடவாத அடிப்படையில் எழுத்தப்பட்ட கட்டுரைகளின் ஒப்பியல் கட்டுரை மட்டுமே.

தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் எல்லாம் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதற்காக அவை திராவிடம் என்ற நிலைக்குள் வர வேண்டும் என்றில்லை. தமிழ் மொழி உட்பட்ட "திராவிட" மொழிகள் என்பவற்றுக்கான ஆதியான மொழி எது..???! மொழிக் கூர்ப்பில்.. இவை எங்கிருந்து பிறந்தன...???! இவற்றுக்கான எந்த அறிவியல் அடிப்படைகளும் இல்லை. வடமொழிகளை எப்படி ஆரிய மொழிகள் என்று வகுத்தனரோ அப்படித்தான் இங்கும் ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர்.

பல்வேறு வடமொழிகள் பேசும் வட இந்தியர்கள் "ஆரியர்கள்" என்ற மாயைக் கோட்பாட்டைக் கையிலெடுத்துக் கொண்டு அரசியலோ.. அல்லது... தாயக் கோட்பாடுகளையோ நிறுவ முயலவில்லை. "ஆரியக்" கட்சிகள் என்றொரு கட்சி அங்கில்லை...!

தமிழர்கள் தான் பிரிந்து வெவ்வேறு மொழி பேசும் குழுமமாகினர் என்பதும்.. அதுதான் திராவிடம் மூலம் நாங்கள் கன்னடர்களையும் மலையாளத்தவர்களையும் தெலுக்கர்களையும் தமிழர்களாக்கிறம் என்பதும் சாத்தியமில்லாத ஒன்றுக்கான குருட்டுப்பயணம்.

மொழிரீதியாக மலையாளத்தவர்களும்.. கன்னடர்களும்.. தெலுங்கர்களும் தமிழர்கள் போல தனி இனக்குழுமமாக வாழத் தகுதியுடையவர்கள். அவர்களுக்கு என்று பாரம்பரிய நிலம் தனித்துவமான கலாசார பண்பாட்டுக் கோலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் எப்படி "திராவிடம்" என்ற மாயைப் பதத்தை வைத்து அவர்களை மொழிப் பூர்வீகம் கருதி ஒன்றிணைக்க முடியும். ஆங்கில மொழியின் பூர்வீக அடிப்படையில்.. ஐரோப்பியர்களை ஒன்றினைக்க முடியுமா..??! ஆங்கிலம் பேசுவதற்காக அமெரிக்கர்கள் கனேடியர்கள் அவுஸ்ரேலியர்கள்... பிரிட்டிஷ்காரர் ஆகிட முடியுமா..??! ஆனால் நம்மவர்கள் அப்படி ஒரு ஒன்றிணைப்பினை ஈ வெ ரா முன்னிறுத்த அறிவியல் என்று பொய்த் தோற்றம் காட்டிக் கொண்டு முன் வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈ வெ ரா.. " திராவிடத்தை" கையாண்டது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைக்க மட்டுமே அன்றி.. தமிழர்களின் விடிவுக்காக என்பது சரியான கண்ணோட்டமே அல்ல. திராவிட மொழிகள் தொன்மையானவை என்பதை ஈ வெ ரா ஏற்றுக் கொண்டிருந்தால்.. ஏன் கன்னடத்தைப் பழிக்கவில்லை.. தெலுங்கைப் பழிக்கவில்லை.. மலையாளத்தைப் பழிக்கவில்லை. தமிழையும்.. தமிழர்களையும் மட்டும் ஏன் பழிக்க வேண்டும்..???! ஆக திராவிடம் என்ற மாயைப் போர்வைக்குள் தமிழர்களை அடக்கி.. தமிழர்களின் தனித்துவமான கோரிக்கைகளான தமிழ்நாடு.. தமிழர் தேசம்.. தமிழர் ஆட்சி போன்ற தமிழ் தேசிய உணர்வுமிக்க கோரிக்கைகளை சீரழிப்பதும்.. தமிழர்களின் இருப்பை அழிப்பதுமே ஈ வெ ராவின் செயற்பாட்டின் பெறுதிகளாக இருந்திருக்கின்றன. ஆனால்.. அது தமிழறிஞர்கள் பலரின் ஒரு மித்த தமிழ் மொழியுணர்வு மிக்க தமிழ் தேசிய உணர்வால் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய துரோகத்தைப் புரிந்த ஈ வெ ராவையும்.. அவரின் திராவிட மாயைப் போர்வையும் பாதுகாக்க முனைவது.. காலத்துக்கு ஒவ்வாத.. குருட்டுப் பாதையில் வெற்றிடத்தை நோக்கிப் பயணிப்பது போன்றது. அது முழுமையான தமிழ் மொழி விரோதப் போக்கு.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! பெரியார் கன்னடர்களை மானமற்றவர்கள், அறிவற்றவர்கள் என்று சாடியிருக்கிறார். பெரியார் பற்றி தவறான தகவலை பரப்பும் நோக்கில் நீங்கள் வெட்டி ஒட்டுவதற்கு எடுத்த கட்டுரைகளில் இந்தத் தகவலை நீங்கள் படித்திருக்கக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! பெரியார் கன்னடர்களை மானமற்றவர்கள், அறிவற்றவர்கள் என்று சாடியிருக்கிறார். பெரியார் பற்றி தவறான தகவலை பரப்பும் நோக்கில் நீங்கள் வெட்டி ஒட்டுவதற்கு எடுத்த கட்டுரைகளில் இந்தத் தகவலை நீங்கள் படித்திருக்கக்கூடும்

தமிழகத்தில் தான் செய்யும் நாசகாரமானதும் கன்னடத்துக்கு உபயோகமானதுமானதை.. கன்னட தேசத்துக்கான சேவையை அது கண்டுக்குதே இல்லை என்ற விளைவால் எழுந்த வெறுப்புணர்வு. அவர் கன்னட மொழியை தமிழ் போல் பழிக்கவில்லை... அதன் தொன்மையைப் பழிக்கவில்லை... கன்னட மொழி இலக்கண கர்த்தாக்களை ஆரிய அருவருடிகள் என்று கூறித் திரியவில்லை.. ஏன் திராவிடம் என்பதைக் கையில் எடுத்தவருக்கு... தமிழும் தமிழர்களு தான் முதன்மையான பழிப்புக்கு காரணமாயிருந்தது..??! "திராவிடக்" குடும்பம் என்று வரையறுத்துக் கொண்ட பிறமொழிகளின் தொண்மை.. ஏன் கணக்கில் வரல்ல...????! அப்ப திராவிடம் என்பது ஈ வெ ரா பார்வையில்.. தமிழும் தமிழரும் மட்டும் தானா...??! அப்ப "திராவிடம்" என்பதாக மாயை கொண்டு வரையறுக்கப்பட்டவை...????!

Link to comment
Share on other sites

திராவிட மொழியியல் பற்றிய இக்கட்டுரையின் கீழ் அது தொடர்பான ஆக்கங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பதிவு செய்யுங்கள். பெரியார், பார்ப்பனர், ஆரியம், இந்துமதம் போன்ற கருத்துக்களை அவற்றுக்கென ஏற்கனவே உள்ள தலைப்புகளின் கீழ் பதிவுசெய்யுங்கள். அங்கும் இங்குமாக கருத்துக்களையும் முரண்பாடுகளையும் காவித் திரியாதீர்கள். தயவுசெய்து கருத்துக்கள நிர்வாகத்துக்கு ஒத்துழையுங்கள்.

Link to comment
Share on other sites

மொழி வாரியாக மெட்ராஸ் என்ற மாகாணம் பிரிக்கப்பட்டதே பெரியாரின் வேலையால் தானே? அதில் தமிழரின் நிலங்களை பல பறி போய்ச்சுதே? அதெப்படி இல்லை எண்டுறியள். சொல்லுறது முரணாகத் தெரியல்லையோ

மதனராசா,

தலைப்பு திராவிட மொழியியல் பற்றியது.பெரியாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.பெரியார் திராவிட மொழியியல் பற்றிய ஆய்வுகளில் இருந்தே தனது அரசியற் கொள்கைகளை வகுதுக்கொண்டார் என்பதைத் தவிர பெரியாருக்கும் திராவிட மொழியியல் ஆராச்சிக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

அடுத்து மெட்றாஸ் மாகணாம் பெரியாரினால் பிரிக்கப்பட்டது என்று நீங்கள் ஒரு தகவலைச் சொல்கிறீர்களா அல்லது கேள்வி கேட்கிறீர்கள்? முதலில் ஒரு விடயத்தைப்பற்றி பேச முன்னர் அதுபற்றி அறிந்து விட்டு கருத்து எழுதுங்கள்.உங்களது யூகங்களுக்கோ கற்பனைகளுக்கோ பதிற் கருத்து எழுதமுடியாது.அதுவும் தலைப்புகுச் சம்பந்தமாக் கருதாடுங்கள் ,தலைப்பைத் திசை திருப்பாமால்.

ஒரு நெடுக்கலபோவான் ***, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் புனைகதைகளையும் தூற்றல்களையும் பொய்களையும் எழுதி விடுவதாலோ அல்லது தடித்த எழுதுக்களில் எழுதவதாலோ பொய்கள் உண்மையாகி விடாது. ***

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்ப். இன்.   முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள்.  பாதிக்கப்படுவார்கள்  என்று     செய்திகள் சொல்கின்றன     உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.