Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கணினி தரவுகளின் அடிப்படையில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு பாரிய அழிவை பூமி எதிர்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டும்.
பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற “பாங்கேயா அல்டிமா” என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும் இந்த நிலை உருவாகும் என தெரியவந்துள்ளது.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பாரிய விண்வெளிப் பாறை மோதியதில் டைனோசர்கள் அழிந்த பிறகு இதுவே முதல் அழிவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

https://thinakkural.lk/article/274547

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, ஏராளன் said:

பூமியில் உயிர்கள் அழிந்துவிடும்

பூமியில் மிக உயர் வெப்பநிலையில் (70 - 90 பாகை செல்சியசில்  கூட உயிரினங்கள் (பக்ரீரியாக்கள் வாழ்கின்றன.).

இவங்கள் இப்படிச் சொல்லி சொல்லி மனித செயற்பாடுகள் மூலம் பூமியை உயிர்கள் வாழத்தகாததாக மாற்றாமல் விட்டால் சரி. அது தான் இப்போ மிகவும் அச்சத்துக்குரிய அச்சுறுத்தலாக இருக்குது பூமிக்கு. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/9/2023 at 07:35, nedukkalapoovan said:

பூமியில் மிக உயர் வெப்பநிலையில் (70 - 90 பாகை செல்சியசில்  கூட உயிரினங்கள் (பக்ரீரியாக்கள் வாழ்கின்றன.).

இவங்கள் இப்படிச் சொல்லி சொல்லி மனித செயற்பாடுகள் மூலம் பூமியை உயிர்கள் வாழத்தகாததாக மாற்றாமல் விட்டால் சரி. அது தான் இப்போ மிகவும் அச்சத்துக்குரிய அச்சுறுத்தலாக இருக்குது பூமிக்கு. 

தலைப்பு உலகம் அழியப்போகின்றது

பதில்: இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும். பயன்படுத்துகிறார்கள் ராசாக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நமது பிரபஞ்சம் பற்றி தொடர்சசியாகவே அறிவியல் ஆராய்சிகள் அந்தந்த கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப காலாகலமாக நடந்துவரும் ஒன்றுதான். அந்த ஆராய்சசிகள் இறுதியானவை அல்ல.  தொடர் ஆய்வுகள் அவை. 

அவ்வாறான ஒரு ஆராய்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்ட ஒரு இடைநிலை அறிக்கைகளில் ஒன்றை தினக்குரல் ஒரு பரப்புக்காக  தனது வாசகர்களை கவருவதற்காக, “அதிர்ச்சி தகவல்” என்ற தலையங்கத்தில்   வெளியிட்டுள்ளது. அவ்வளவு தான். 

Edited by island


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.