Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலில் கத்திகுத்து தாக்குதல் - இருவர் பலி

Published By: RAJEEBANvvv05 AUG, 2024 | 03:51 PM

image
 

இஸ்ரேலின் ஹொலொன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரையை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

66வயது யூத பெண் ஒருவரும் 80 வயது ஆணும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நான் எனது நாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை நபர் ஒருவர் ஒடிவந்து முதுகில் கத்தியால் குத்தினார் என காயமடைந்த 26 வயது நபர் தெரிவித்துள்ளார்.

நான் பேருந்து தரிப்பிடத்தை நோக்கி தப்பிச்சென்றேன் கத்திக்குத்திற்கு மேலும் பலர் இலக்கானது அதன் பின்னரே எனக்கு தெரியவந்தது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஹெலொனில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை இஸ்ரேலிய பிரதமர் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190338

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 100க்கும் மேற்பட்டவர்கள் பலி

10 AUG, 2024 | 09:36 AM
image

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்குவைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது – பொதுமக்கள் தப்பமுடியாமல் அலறுகின்றனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190715

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஸாவில் ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?

நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர்

பட மூலாதாரம்,HOSTAGE FAMILIES FORUM

படக்குறிப்பு, மேல் இடமிருந்து வலம்: நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பென்னெட்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்கள் காஸா முனையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் பகுதியில் இருந்து யாகேவ் புச்ஷ்டாப், அலெக்சாண்டர் டான்சிக், அவ்ரஹாம் முண்டர், யோரம் மெட்ஸ்கர், ஹைம் பெர்ரி மற்றும் பிரிட்டிஷ் - இஸ்ரேலியரான நடவ் பாப்பிள்வெல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை அன்று வெளியான இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அவ்ரஹாம் முண்டர் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் மீதம் இருக்கும் ஐந்து நபர்களும் இறந்துவிட்டதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக பணயக்கைதிகளுள் ஒருவரான பாப்பிள்வெல் இறந்ததாக முன்பு ஹமாஸ் ஆயுதக்குழு கூறியிருந்தது.

 

பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் உடன் இணைந்து இஸ்ரேல் ராணுவப் படை, இந்த மீட்பு நடவடிக்கையை எடுத்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது இவர்கள் ஆறு பேரும் உயிரோடு கடத்தப்பட்டு, பின்னர் காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக 'பணயக்கைதிகள் குடும்பங்கள் மன்றம்' கூறுகின்றது.

"இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதே, இக்குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு தீர்வாக இருக்க முடியும். மீதம் உள்ள 109 பணயக்கைதிகளை காஸாவிலிருந்து விடுவித்து அழைத்து வருவது என்பது பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்" என்று அந்த மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு முடிவு காண தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும்" என்று அந்த மன்றம் இஸ்ரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இஸ்ரேல்-காஸா இடையே இது குறித்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி வருகிறார்.

திங்கட்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடர்பான "இணைப்பு முன்மொழிவு" (bridging proposal) ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாக பிளிங்கன் கூறினார்.

பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதற்கு பிறகு, "இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு இந்த துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம்" என்று செவ்வாய்கிழமை அன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறினார்.

"அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து நாட்டிற்கு அழைத்து வரும்வரை நமது முயற்சிகளை ஒரு கணம் கூட நிறுத்தக்கூடாது", என்று இஸ்ரேல் அதிபர் கூறினார்.

கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலாவின் புறநகர்ப் பகுதிகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

மேற்கு கான் யூனிஸில் உள்ள இணைய விநியோக மையம் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கான் யூனிஸின் கிழக்கே உள்ள அபாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் முன்னறிவிப்பின்றி நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டனர், பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி

பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் காரணமாக கடந்த 48 மணிநேர இடைவெளியில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர் 

இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் தலைமையிலான போராளிகளுடன்  போரை ஆம்பித்து பதினொரு மாதங்கள் ஆகியுள்ளன.

இராஜதந்திரங்கள்

இந்தநிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், காசாவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கும், மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திரங்கள், இதுவரை தோல்வியடைந்துள்ளன.

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி | Israeli Military Strikes In Gaza Kill 61 48 Hours

இதற்கிடையில் ஜபாலியா நகர்ப்புற அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாகச் செயல்படும் ஹலிமா அல்-சதியா பள்ளி வளாகத்தின் மீது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனினும் வளாகத்திற்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி | Israeli Military Strikes In Gaza Kill 61 48 Hours

காசா நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் இன்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

https://tamilwin.com/article/israeli-military-strikes-in-gaza-kill-61-48-hours-1725730591

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாசின் லெபனான் தலைவர் பலி

30 SEP, 2024 | 11:57 AM
image

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானிற்கான தனது தலைவர் பதா ஷெரீப் அபு அல் அமினே கொல்லப்பட்டுள்ளார் என  தெரிவித்துள்ளது.

பதா ஷெரீப் அபு அல் அமினே ஹமாஸ் அமைப்பின் வெளிநாடுகளிற்கான தலைவராகவும் அமைப்பின் வெளிநாட்டு தலைமைத்துவ குழுவில் ஒருவராகவும் விளங்கினார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தென்லெபனானின் அல் பாஸ் முகாமில் அமைந்திருந்த அவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195123

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் மூண்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனானில் ஹமாஸின் இராணுவப் பிரிவில் இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன்படி, முகமது ஹுசைன் அலி மற்றும் நயிஃப் அலி ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர்கள் எனவும் அந்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/310335

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றி எமக்கே; இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ”வடக்கு எல்லையில் இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர்கள் தொலைவில் எல்லைக் கோட்டுக்கு அப்பால், அவர்களின் நண்பர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் எங்களுடைய முகாம்களை தாக்குவதற்காக தயார் செய்த உள்கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள்தான் வெற்றி நாயகர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களான இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களும், காசாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.

ஓராண்டுக்கு முன்பு நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானோம். கடந்த 12 மாதங்களில் நாம் எதார்த்தத்தை முழுமையாக மாற்றியிருக்கிறோம். நமது எதிரிகளின் மீது நீங்கள் கட்டவிழ்க்கும் தாக்குதலைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது. உங்களுக்கு என்னுடைய வீரவணக்கம். வெற்றியின் தலைமுறையினர் நீங்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பின்புலம் என்ன? – பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

https://thinakkural.lk/article/310380

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் ரொக்கட் தாக்குதல்

07 OCT, 2024 | 04:58 PM
image

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காசாவின் கான் யூனிஸ் பகுதியிலிருந்து ஐந்து ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதை ஹமாஸ் உறுதி செய்துள்ளது.

அயோலொன் நெடுஞ்சாலையில்  வெடிப்புச்சத்தங்களை கேட்டதாக பிபிசி செய்தியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் காயமடைந்தனர் என இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை இரண்டு இஸ்ரேலிய படையினருக்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்லெபனானின் மருன் அல் ரஸ் பார்க் -ஜல் அல் அலாமில் இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195691

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி இலக்கை அடைந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா மற்றும் டைபிரியாஸ் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது.

இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/310423

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்....! கசிந்துள்ள தகவல்

ஹமாஸ் (Hamas) அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் கடந்த மாதம் 21 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இஸ்ரேலிய ஊடகங்கள்

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தார் அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்....! கசிந்துள்ள தகவல் | Hamas News Leader Yahya Sinwar Alive

ஹமாஸ் தலைவர் கத்தார் மத்தியஸ்தர்களுடன் தொடர்பில் உள்ளார் என்று அல் - அரேபியா மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் ராணுவம்

இதேவேளை, லெபனானின்(lebanon) பெய்ரூட் பகுதியில் நேற்று(07) தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மிக முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

சுஹைல் ஹுசைன் ஹுசைனி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர் ஈரானுக்கும்(iran) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் "முக்கியமான" பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.

https://ibctamil.com/article/hamas-news-leader-yahya-sinwar-alive-1728372450?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் - சிரேஸ்ட தலைவர்

image

ஹமாஸ் அமைப்பு பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என நாடு கடந்து வாழும் அதன் தலைவர்களில் ஒருவரான காலிட் மெசெல் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருடகால யுத்தத்தின் போது பலத்த இழப்புகளை ஹமாஸ் சந்தித்துள்ள போதிலும் அந்த அமைப்பு புதிய போராளிகளை சேர்த்து வருகின்றது ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் அமைப்பு பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருட மோதலை 76 வருடகால  வரலாற்றுடன்  பாலஸ்தீனியர்கள் நக்பா என அழைப்பதுடன் தொடர்புபடுத்தி ஹமாஸின் நாடு கடந்து வாழும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

1948 இல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணமான யுத்தத்தினால் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் இடம்பெயர நேர்ந்ததை நக்பா என பாலஸ்தீனியர்கள் அழைக்கின்றனர்.

பாலஸ்தீன வரலாறு பல சுற்றுக்களை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தியாகிகளை இழந்த எங்கள் இராணுவ திறமையின் ஒரு பகுதியை இழந்த தருணங்களை எதிர்கொண்டுள்ளோம், ஆனால் பின்னர் பீனிக்ஸ் போல பாலஸ்தீனியர்களின் உணர்வுகள் மீளஉயிர்த்தெழும் என அவர் தெரிவித்துள்ளார்.

1996 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக விளங்கிய மெசாலை விசஊசியை பயன்படுத்தி கொலை செய்வதற்கு 1997 இல் இஸ்ரேல் முயன்றமை குறிப்பிடத்தக்கது.

நெட்டன்யாகு அரசாங்கம் அதிகாரத்திலிருக்கும் வரை சமாதானத்திற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காணப்படும்வரை மத்திய கிழக்கு எந்த நேரத்திலும் வெடிக்ககூடிய குண்டு போல காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195745

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் - 28 பேர் பலி

image

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் டெய்ர் அல் பலாவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என செம்பிறை குழு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன செம்பிறை குழுவின் தலைமையகத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை அந்த பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதிகளை இலக்குவைத்து துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195965

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு காஸாவில் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையால் புதிய சந்தேகம்

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு காஸாவை படிப்படியாக சிதைக்க இஸ்ரேலிய ராணுவம் ஒரு புதிய தந்திரத்தை பின்பற்றுகிறதோ என்று ஐ.நா.வும் பாலத்தீனர்களும் சந்தேகிக்கின்றனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெர்மி போவன்
  • பதவி, சர்வதேசப் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ்
  • 13 அக்டோபர் 2024

இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் அவர் வடக்கு காஸாவில் உள்ள "D5" பகுதியில் வசிப்பவர்களை தெற்கே செல்லுமாறு எச்சரித்தார். "D5" என்பது பத்திற்கும் மேற்பட்ட சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்ட ஒரு மண்டலம்.

இந்த அறிவிப்பில், "பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் (IDF) பெரும் சக்தியுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலத்திற்கு அதன் செயல்பாடுகள் தொடரும். அங்கு அமைந்துள்ள முகாம்கள், குடியிருப்பு பகுதி என அனைத்தும் ஆபத்து ஏற்படும் இடங்களாக கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் சலாஹ் அல்-தின் சாலை வழியாக மனிதாபிமானப் பகுதிக்கு உடனடியாக செல்ல வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு வரைப்படத்தில், D5 மண்டலத்திலிருந்து ஒரு பெரிய மஞ்சள் அம்புக்குறி தெற்கு காஸாவை நோக்கி வரையப்பட்டுள்ளது.

 

சலாஹ் அல்-தின் நெடுஞ்சாலை வடக்கு-தெற்கு பயணங்களுக்கு முக்கிய பாதையாகும். D5 பகுதி ஒரு வருடமாக தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இம்முறை வெளியான அறிவிப்பை பார்க்கும் போது, இப்பகுதி மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதியளிக்கவில்லை.

இஸ்ரேல் ராணுவம் இந்த பகுதியில் "பெரும் சக்தியை (...) நீண்ட காலத்திற்கு" ("great force… for a long time") பயன்படுத்தும் என்பதுதான் அறிவிப்பின் மையக்கரு.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த இடத்திற்கு திரும்ப முடியும் என்று மக்கள் எதிர்பார்க்க வேண்டாம் .

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டுவீச்சுகள் இருந்தபோதிலும், இந்த பகுதிகளில் பலர் தங்கள் வீடுகளை விட்டு நகரவில்லை.

நெரிசல் நிறைந்த `அல் மவாசி’

அறிவிப்பின்படி, இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான மண்டலம் `அல் மவாசி’ ஆகும். இது முன்பு ரஃபா (காஸாவின் எகிப்து தெற்கு எல்லை) அருகே ஒரு கடற்கரையில் விவசாயம் செய்யும் பகுதியாக இருந்தது.

காஸாவின் பல பகுதிகளை விட இது அதிக நெரிசல் மிகுந்தது. அதே சமயம் பாதுகாப்பானது அல்ல. `பிபிசி வெரிஃபை’ இப்பகுதியில் குறைந்தது 18 வான்வழித் தாக்குதல்கள் நடந்ததை கண்டறிந்துள்ளது.

ஹமாஸ் தனது சொந்த செய்தி அறிக்கைகளை வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் 400,000 மக்களுக்கு அனுப்பியுள்ளது. காஸா முன்னர் 1.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதியாக இருந்தது.

ஹமாஸ் அவர்களை எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் குறிப்பிடும் தெற்கு பகுதி ஆபத்தானது என்பதே ஹைமாஸின் நிலைப்பாடு. மக்கள் இஸ்ரேலின் அறிவிப்புக்கு இணங்க இருப்பிடங்களை காலி செய்து விட்டால், மீண்டும் அங்கு திரும்ப முடியாது என்று ஹைமாஸ் கருதுகிறது. இஸ்ரேல், மக்களை தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல அனுமதிக்காது என்று ஹமாஸ் எச்சரிக்கிறது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டுவீச்சுகள் இருந்த போதிலும், இந்த பகுதிகளில் பலர் தங்கள் வீடுகளை விட்டு நகரவில்லை.

நான் வடக்கு காஸா அருகே ஒரு பகுதிக்குச் சென்றபோது, அங்கு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டேன், மேலும் புகை மூட்டம் எழுவதைக் கண்டேன். அந்த காட்சிகள் எனக்கு போரின் முதல் மாதங்களை நினைவுபடுத்தியது.

பலர் ஏற்கனவே ஆபத்துகளை உணர்ந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால் சிலர் வடக்கு காஸாவில் அபாயகரமான சூழலில் தங்கியிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு ஆதரவாக அங்கேயே இருக்கின்றனர். இடத்தை காலி செய்யாமல் இருப்பவர்களில் சிலர் ஹமாஸுடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

போர்ச் சட்டங்களின்படி, அங்கு தங்கி இருப்பதால் அவர்கள் போரிடுபவர்களாக கருதப்பட மாட்டார்கள்.

 

வடக்கு நோக்கி இடம்பெயரும் மக்கள்

காஸாவின் நெரிசல் மற்றும் ஆபத்து நிறைந்த தெற்கு பகுதிக்கு செல்வதை காட்டிலும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றனர். இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க மக்கள் கடைபிடிக்கும் வழி இது.

உதாரணமாக பீட் ஹனூனிலிருந்து காஸா நகரத்திற்கு செல்கின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பீட் ஹனூனில் வீடுகள் மற்றும் பிற தங்குமிடங்களில் இயங்கி வருகின்றனர். அங்கிருந்து ராணுவம் வெளியேறியதும், திரும்பிவிடலாம் என்பது மக்களின் எண்ணம்.

காஸாவில் உள்ள பாலத்தீனர்களுடன் தொடர்பில் இருக்கும் பிபிசி சகாக்களின் கூற்றுப்படி, இஸ்ரேல் ராணுவம் மக்களின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது, மக்களை சலாஹ் அல்-தின் சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சில பாலஸ்தீனர்கள் காஸாவில் "D5" என்று அழைக்கும் பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்ட பிறகு தெற்கு நோக்கி நகர்கின்றனர்.

"எங்கே செல்வது?"

காஸாவில் உள்ள பத்திரிகையாளர்களை இஸ்ரேல் போரைப் பற்றி செய்தி சேகரிக்க அனுமதிப்பதில்லை. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புடன், பத்திரிகையாளர்களின் குறுகிய நேர பயணங்கள் மட்டுமே அரிதாக அனுமதிக்கப்படுகிறது.

காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 128 பாலத்தீன ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது . அக்டோபர் 7 ஆம் தேதி அங்கு சென்றடைந்த பாலத்தீன பத்திரிகையாளர்கள் இன்னமும் துணிச்சலான பணியை செய்து வருகின்றனர்.

வடக்கு காஸாவில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியதில் இருந்து அங்கு பயத்தில் தவிக்கும் குடும்பங்களை அவர்கள் படம்பிடித்தனர். மக்கள் பயத்தில் தப்பியோடுவதைப் படம்பிடித்து வருகின்றனர். பெரிய பைகளை சுமந்தபடி சிறிய குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் நடந்து செல்லும் காட்சிகளை அவர்கள் படம்பிடித்தனர்.

அந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், கையில் குழந்தையுடன் தெருவில் ஓடிக்கொண்டிருந்த மனார் அல் பயார் என்ற பெண்ணுடன் நடத்திய ஒரு சுருக்கமான நேர்காணலை பகிர்ந்தார்.

ஜபாலியா அகதிகள் முகாமை விட்டு வெளியேறி வேகமாக நடந்து கொண்டிருந்த அந்த பெண், "பலூஜாவில் உள்ள பள்ளியை விட்டு வெளியேற ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி, பாதி தூரம் நடந்தும், பாதி தூரம் வேகமாக ஓடியும் இவ்வளவு தூரம் வந்தேன். நாங்கள் எங்கே போவது? காஸாவின் தெற்கில் கொலைகள் நடக்கின்றன. மேற்கில் காஸா மக்கள் கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனர். கடவுளை மட்டுமே நம்பி இருக்கிறோம்” என்றார்.

இந்த பயணம் கடினமானது. சில நேரங்களில், நடந்து செல்லும் மக்கள் மீது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு நடத்துவதாக காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் இஸ்ரேலிய ராணுவம், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிகளை இஸ்ரேலிய வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் `பாலஸ்தீனர்களுக்கான மருத்துவ உதவி’ என்னும் பிரிட்டிஷ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் லிஸ் ஆல்காக், 'காயமடைந்த பொதுமக்கள் வழங்கிய சான்றுகள் அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறுகின்றன' என்றார்.

"நாங்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை பார்க்கையில், அதிக எண்ணிக்கையிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் போரிட முடியாத வயதினர் உள்ளனர். அவர்கள் தலையில், முதுகுத்தண்டில், கைகால்களில் நேரடியாகத் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர் என்பதை அந்த காயங்கள் சுட்டிக்காட்டுகிறது. " என்று அவர் குறிப்பிட்டார்.

 

நீடித்த மனிதாபிமான பேரழிவு சூழல்

காஸாவில் பணிபுரியும் ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள், 'இஸ்ரேலிய ராணுவ அழுத்தம் ஏற்கனவே இருக்கும் மனிதாபிமான பேரழிவை ஆழப்படுத்துகிறது' என்று கூறுகின்றன.

வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் மருத்துவமனைகளில் , ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கவும், மோசமாக காயமடைந்த நோயாளிகளின் உயிரை காக்கவும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக வருத்தம் தரும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

சில மருத்துவமனைகள் தங்கள் கட்டடங்கள் இஸ்ரேலால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.

"ஜெனரல்களின் திட்டம்"

பாலத்தீனர்கள், ஐ.நா மற்றும் உதவி முகவர்களிடையே ஒரு சந்தேகம் எழுகிறது. வடக்கு காஸாவை படிப்படியாக சிதைக்க இஸ்ரேலிய ராணுவம் ஒரு புதிய தந்திரத்தை பின்பற்றுகிறதோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுவே "ஜெனரல்ஸ் திட்டம்" (Generals’ Plan) என்று அழைக்கப்படுகிறது .

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜியோரா எய்லாண்ட் தலைமையிலான ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளின் குழுவால் இது முன்மொழியப்பட்டது.

பெரும்பாலான இஸ்ரேலியர்களைப் போலவே, இந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் விரக்தியும் கோபமும் அடைந்துள்ளனர், ஏனெனில் போர் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும், ஹமாஸை அழித்து, பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் இலக்கை அவர்களது நாடு இன்னும் அடையவில்லை.

"ஜெனரல்ஸ் திட்டம்" என்பது இஸ்ரேலின் கண்ணோட்டத்தில், முட்டுக்கட்டையை தகர்த்த முடியும் என்று அதன் ஆதரவாளர்கள் நம்பும் ஒரு புதிய யோசனை.

வடக்கு பகுதியில் மக்கள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் ஹமாஸ் மற்றும் அதன் தலைவரான யாஹ்யா சின்வாரை சரணடையுமாறு இஸ்ரேல் வற்புறுத்தும். இத்திட்டத்தின் நோக்கம் இதுதான்.

முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றும் வழித்தடங்களில் இருந்து அகலுமாறு உத்தரவிட வேண்டும். அந்த வழித்தடங்கள் அவர்களை வாடி காஸாவின் தெற்கே அழைத்துச் செல்லும். இது கடந்த அக்டோபரில் இஸ்ரேலிய படையெடுப்பிற்குப் பிறகு காஸாவில் ஒரு பிளவுக் கோடாக மாறிய கிழக்கு-மேற்கு பகுதி.

பிணைக் கைதிகளை மீட்க இஸ்ரேல் உடனடியாக ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்று ஜியோரா எய்லாண்ட் கருதுகிறார்.

காஸாவில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் கூட பிணைக் கைதிகளை மீட்க இஸ்ரேல் ஒப்பு கொண்டிருக்க வேண்டும் என்பது அவரின் கருத்து.

சரணடைதல் அல்லது பட்டினி கிடத்தல்

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த மாதம் ஜபாலியாவில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டது

மத்திய இஸ்ரேலில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் ஜெனரல்ஸ் திட்டத்தின் மையத்தை வகுத்தார்.

"கடந்த ஒன்பது அல்லது பத்து மாதங்களில் காஸாவின் வடக்குப் பகுதியை நாம் ஏற்கனவே சுற்றி வளைத்திருப்பதால், நாம் செய்ய வேண்டியது இதுதான். காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 300,000 குடியிருப்பாளர்களிடம் [ஐ.நா.வால் 400,000 என மதிப்பிடப்பட்டுள்ளது] வெளியேறும்படி கூற வேண்டும். இந்தப் பகுதியை விட்டு வெளியேறி, இஸ்ரேல் வழங்கும் பாதுகாப்பான வழிகளில் வெளியேற 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்றார்.

"அதற்குப் பிறகு, இந்த முழுப் பகுதியும் ஒரு ராணுவ மண்டலமாக மாறும். அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும், போராளிகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எஞ்சியிருப்பது இரண்டு வழிகள் தான்: சரணடைதல் அல்லது பட்டினி கிடத்தல் " என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பான வெளியேற்றும் வழித்தடங்கள் மூடப்பட்டவுடன் இஸ்ரேல் அந்தப் பகுதிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று எய்லாண்ட் விரும்புகிறார்.

வெளியேறாமல் இருக்கும் எவரும் எதிராளியாகவே கருதப்படுவார்கள். அதன் பிறகு இப்பகுதி முற்றுகைக்கு உட்பட்டது. உணவு, தண்ணீர் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விநியோகங்களையும் ராணுவம் தடுக்கும்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான எய்லாண்ட் , "அழுத்தம் தாங்க முடியாமல் ஹமாஸின் எஞ்சியிருக்கும் படையும் விரைவில் சிதைந்துவிடும். எனவே ஹமாஸ் வேறு வழியின்றி பணயக்கைதிகளை விடுவித்து, இஸ்ரேலுக்கு அது விரும்பும் வெற்றியைக் கொடுக்கும்’’ என்று நம்புகிறார்.

 
இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,OREN ROSENFELD/BBC

படக்குறிப்பு, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜியோரா எய்லாண்ட்

காஸாவில் நடக்கும் தற்போதைய தாக்குதல் "ஆயிரக்கணக்கான பாலத்தீன குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது " என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் கூறுகிறது.

வடக்கு காஸாவிற்கான முக்கிய பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் உணவு, உடைமை நிவாரண உதவிகள் எதுவும் அந்த பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறுகிறது.

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக மொபைல் கிச்சன்கள் மற்றும் பேக்கரிகள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வடக்கில் WFP ஆதரவுடன் இயங்கி வந்த ஒரே ஒரு பேக்கரியும் வெடிகுண்டு தாக்குதலில் தீப்பிடித்தது. தெற்கில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

"ஜெனரல்ஸ் திட்டத்தை" இஸ்ரேலிய ராணுவம் ஒரு பகுதியாக அல்லது முழுவதுமாக ஏற்றுக்கொண்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் காஸாவில் நிலவும் சூழ்நிலை சான்றுகள், குறைந்தபட்சம் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற யூகத்தை ஏற்படுத்துகின்றன.

பிபிசி இஸ்ரேலிய ராணுவத்திடம் கேள்விகளின் பட்டியலை அனுப்பியது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையில் உள்ள தீவிர தேசியவாதிகள் வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீனர்களை அப்புறப்படுத்தி யூத குடியேறிகளை தங்க வைக்க விரும்புகிறார்கள்.

"எங்கள் வீரமிக்க போராளிகள் மற்றும் வீரர்கள் ஹமாஸின் தீமையை அழித்து வருகின்றனர், நாங்கள் காஸா பகுதியை ஆக்கிரமிப்போம்.. குடியேற்றங்கள் இல்லாத இடத்தில், பாதுகாப்பு இருக்காது" என்று நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸை இயக்கிய இந்த 6 தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆனார்கள்?

இஸ்ரேல் - ஹமாஸ்
படக்குறிப்பு, ஹமாஸின் முக்கிய தலைவர்கள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அக்டோபர் 7 2023.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தினம். அந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் போரை அறிவித்தது. சுமார் ஒரு வருடக் காலமாக இன்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு வருடத்தில், காஸாவின் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. 40,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சில முக்கிய ஹமாஸ் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே போன்ற முக்கிய ஹமாஸ் தலைவர்களின் பெயரும் அடக்கம்.

ஹமாஸின் முக்கிய தலைவர்கள் யார்? இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்?

யாஹ்யா சின்வார்

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யாஹ்யா சின்வார்

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்.

இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் சின்வாரை குறிவைத்தது.

சின்வார் காஸாவில் ஹமாஸின் முக்கிய தலைவராக இருந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே இறந்த பிறகு, அவர் ஹமாஸின் தலைவரானார்.

1962 ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த யாஹ்யா சின்வார், சிறு வயதிலேயே காஸா போரில் கலந்து கொண்டார்.

சின்வார், ஹமாஸின் அல்-மஜ்த் (al-Majd) என்னும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். இது உள் பாதுகாப்பு விஷயங்களை நிர்வகிக்கிறது. இந்த சேவை இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிப்பவர்களை விசாரிக்கிறது. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளையும் கண்காணிக்கிறது.

சின்வார் மூன்று முறை இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். 1988-இல் அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரருக்கு ஈடாக 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரபு கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. அவர்களில் சின்வாரும் ஒருவர்.

சின்வார் பின்னர் ஹமாஸில் ஒரு முக்கிய தலைவராக தனது பதவியை மீண்டும் பெற்றார். 2015ல் சின்வாரை "சர்வதேச பயங்கரவாதிகள்" பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி ரஃபாவில் இஸ்ரேலியப் படைகளால் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.

 

இஸ்மாயில் ஹனியே

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்மாயில் ஹனியே

ஹமாஸின் மிகப்பெரிய தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவின் மரணம் 31 ஜூலை 2024 அன்று இரானில் உறுதி செய்யப்பட்டது. இவர் பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர்.

இஸ்ரேல் 1989 இல் அவரை சிறையில் அடைத்து, மூன்று வருடங்கள் வரை வைத்திருந்தது. பின்னர் அவர் பல ஹமாஸ் தலைவர்களுடன் சேர்த்து, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் ஆள் நடமாட்டம் இல்லாத மார்ஜ் அல்-ஜுஹூர் என்னும் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். ஹனியே அங்கே ஒரு வருடம் தங்கியிருந்தார்.

அதன் பிறகு அவர் காஸா திரும்பினார். 1997-இல், அவர் ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவரான ஷேக் அகமது யாசின் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரது அந்தஸ்து உயர்ந்தது.

பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாலத்தீன அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹனியேவை பதவியில் இருந்து நீக்கினார். தனது பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என ஹனியே நிராகரித்தார். தனது அரசாங்கம் தனது கடமைகளைத் தொடரும் என்றும் பாலத்தீன மக்கள் மீதான தனது பொறுப்புகளை கைவிடாது என்றும் அவர் கூறினார்.

அவர் 2017-இல் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது. இஸ்மாயில் ஹனியே பல வருடங்களாக கத்தாரில் வசித்து வந்தார்.

 

முகமது டெய்ஃப்

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,MEDIA SOURCES

படக்குறிப்பு, முகமது டெய்ஃப் (Mohammed Deif)

ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார். அவர் 1965 இல் காஸாவில் பிறந்தார்.

பாலத்தீனர்கள் அவரை ஹமாஸின் முக்கிய தலைவராக கருதினார். பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மூளையாக இவர் செயல்பட்டார். இஸ்ரேலியர்கள் அவரை 'மரணத்தின் மனிதன்' என்று அழைத்தார்கள்.

ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் சுரங்கப் பாதைகளை நிர்மாணிக்க முகமது டெய்ஃப் திட்டமிட்டார். அவரது உண்மையான பெயர் முகமது தீப் அல்-மஸ்ரி, ஆனால் அவர் அபு கலீத் மற்றும் `அல் டெயிஃப்’ என்றும் அறியப்பட்டார்.

முகமது டெய்ஃப் காஸா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பல்கலைக் கழகத்தில், அவர் நடிப்பு மற்றும் நாடகத்தின் மீதான அவரது ஆர்வத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். அங்கு கலைஞர்கள் குழுவை உருவாக்கினார்.

ஹமாஸ் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட போது தயக்கமின்றி அதில் இணைந்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் அவரை 1989 இல் கைது செய்தனர். அவர் 16 மாதங்கள் காவலில் இருந்தார்.

சிறையில் இருந்த போது, ஜகாரியா அல்-ஷோர்பாகி மற்றும் சலா ஷெஹாதே ஆகியோருடன் பேசி, ஹமாஸிலிருந்து ஒரு தனி இயக்கத்தை நிறுவ திட்டமிட்டார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, டெய்ஃப் திட்டமிட்டப்படி இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் நோக்கில் அல்-காசிம் படையணியை சிலருடன் சேர்ந்து உருவாக்கினார். படைப்பிரிவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையப் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை கட்டிய பொறியாளர் இவர்தான். அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கான உத்தியை ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர்.

கடந்த 1996இல் பல இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது. இஸ்ரேலால் தேடப்படும் நபர்களில் ஒருவராக டெய்ஃப் இருந்தார்.

இஸ்ரேல் அவரை 2000-இல் சிறையில் அடைத்தது. ஆனால் இரண்டாவது பாலத்தீன எழுச்சி அல்லது `இன்டிஃபதா’ என்று அழைக்கப்பட்ட காலக்கட்டத்தின் போது அவர் சிறையில் இருந்து தப்பினார்.

பல படுகொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். 2002இல் நடந்த அத்தகைய ஒரு முயற்சியில் அவர் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அவர் ஒரு கால் மற்றும் கையை இழந்துவிட்டதாகவும், பேசுவதில் சிரமம் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியது.

2014 ஆம் ஆண்டு காஸா மீதான தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் டெய்ஃப்பை கொல்ல குறிவைத்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார். ஆனால் அவர்கள் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் கான் யூனிஸில் வான்வழித் தாக்குதலில் டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

 

மர்வான் இசா

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,MEDIA SOURCES

படக்குறிப்பு, மர்வான் இசா

ஹமாஸ் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாமின் துணைத் தலைவராக இருந்த மர்வான் இசா, அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்தார். 2006 இல் ஒரு படுகொலை முயற்சியில் காயமடைந்தார்.

சிறுவயதிலேயே ஹமாஸுடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக, "முதல் இன்டிஃபதா" என அழைக்கப்பட்ட காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவத்தினர் இவரை ஐந்து ஆண்டுகள் சிறை வைத்திருந்தனர்.

அதன் பிறகு அவர் 1997 இல் பாலத்தீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், ஆனால் 2000 ஆம் ஆண்டில் இரண்டாவது இன்டிஃபதா காலக்கட்டத்தின் தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.

பாலத்தீன நிர்வாக சபையால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளில் ராணுவ பிரிவை மேம்படுத்துவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

ஹமாஸ் இயக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதால், இவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றார்.

அவரது சகோதரிகள் 2014 மற்றும் 2021 இல் காஸா மீதான இஸ்ரேலிய படையெடுப்பின் போது உயிரிழந்தனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் அவரது வீட்டை இரண்டு முறை தாக்கியுள்ளன.

2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவர் விடுதலை செய்யப்பட்ட போது அதற்கு ஈடாக இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் மர்வான் இசாவும் ஒருவர்.

2011 வரை இவருடைய முகத்தை யாரும் பார்த்ததில்லை. கிலாத் ஷாலித் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின் வரவேற்பு விழாவின் போது ஒரு குரூப் போட்டோ வெளியானது. அதில் இசாவும் இருந்தார்.

மார்ச் 2024 இல் காஸாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு கீழே நிலத்தடியில் இருந்த சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

 

கலீத் மஷால்

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கலீத் மஷால்

மேற்குக் கரையில் 1965 ஆம் ஆண்டு பிறந்த கலீத் மஷால், ஹமாஸின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1997 இல், இஸ்ரேலிய பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஜோர்டானில் மஷால் வாழ்ந்த போது அவரைக் கொல்ல முயன்றது.

மொசாட் முகவர்கள் போலி கனேடிய பாஸ்போர்டுடன் ஜோர்டானுக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் ஜோர்டானிய குடியுரிமை பெற்ற கலீத் மஷால், தலைநகர் அம்மானில் ஒரு தெருவில் நடந்து சென்றபோது மொசாட் முகவர்கள் அவர் மீது விஷ ஊசியை செலுத்தினர்.

கலீத் மஷால் மீதான படுகொலை முயற்சியைக் கண்டுபிடித்த ஜோர்டானிய அதிகாரிகள் இரண்டு மொசாட் உறுப்பினர்களைக் கைது செய்தனர்.

ஜோர்டானின் மறைந்த மன்னர் ஹுசைன் இஸ்ரேலிய பிரதமரிடம் மஷாலுக்கு கொடுக்கப்பட்ட விஷ ஊசிக்கு மாற்று மருந்தைக் கேட்டிருந்தார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அழுத்தத்தை எதிர்கொண்ட நெதன்யாகு, முதலில் கோரிக்கையை நிராகரித்த பிறகு, அதன் பிறகு மாற்று மருந்தை வழங்கினார்.

கத்தாரில் வசித்த மஷால், 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக காஸாவிற்குள் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, அவரை பாலத்தீன அதிகாரிகள் வரவேற்றனர். அவரை வரவேற்க பாலத்தீனர்கள் திரண்டிருந்தனர்.

ஹமாஸ் 2017 இல் அதன் அரசியல் பணியகத்தின் தலைவராக மஷாலுக்குப் பதிலாக இஸ்மாயில் ஹனியேவைத் தேர்ந்தெடுத்தது. மஷால் அரசியல் பணியகத்தின் வெளிநாட்டு பிரிவுத் தலைவரானார்.

 

மஹ்மூத் ஜஹர்

இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மஹ்மூத் ஜஹர்

ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மஹ்மூத் ஜஹர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.

ஜஹர் 1945 இல் காஸாவில் பிறந்தார். அவரது தந்தை பாலத்தீனர் மற்றும் அவரது தாயார் எகிப்தியர். அவர் தனது குழந்தைப் பருவத்தை எகிப்திய நகரமான இஸ்மாலியாவில் கழித்தார். அவர் தனது ஆரம்ப, இடைநிலை கல்வியை காஸாவில் பெற்றார்.

கெய்ரோவில் உள்ள ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் 1971 இல் பொது மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1976 இல் பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

காஸா மற்றும் கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அவரது அரசியல் செயல்பாடுகள் காரணமாக இஸ்ரேல் வெளியேற்றும் வரை அவர் அங்கு பணியாற்றினார்.

ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜஹர் கருதப்படுகிறார். அவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைமையின் உறுப்பினராகக் கருதப்படுகிறார். 1988 இல், ஹமாஸ் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, மஹ்மூத் ஜஹார் ஆறு மாதங்கள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டார். 1992-இல் மற்ற தலைவர்களுடன் இஸ்ரேல் அவரை நாடு கடத்தியது. அவர் ஒரு வருடம் அங்கேயே இருந்தார்.

2005 இல் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மையைப் பெற்றது. பிரதமர் இஸ்மாயில் ஹனியேவின் அரசாங்கத்தில் ஜஹர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். இதையடுத்து, பாலத்தீன அதிகார சபை தலைவராக இருந்த மஹ்மூத் அப்பாஸ், இந்த அரசை கவிழ்த்தார். இது பாலத்தீனர்களிடையே பிளவை ஏற்படுத்தியது.

இஸ்ரேல் 2003 ஆம் ஆண்டு ஜஹரை படுகொலை செய்ய முயற்சித்தது. காஸா நகருக்கு அருகில் ரிமாலில் உள்ள ஜஹரின் வீட்டின் மீது F-16 விமானம் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு ஐந்து குவிண்டால் எடை கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது மூத்த மகன் காலித் இறந்துவிட்டார்.

கடந்த 2008 ஜனவரி 15 அன்று காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் அவரது மற்றொரு மகன் ஹொசாம் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஹொசாம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். ஹொசாம் காசிம் படைப்பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார்.

ஜாஹர் அறிவுசார், அரசியல் மற்றும் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். 'நமது சமகால சமூகத்தின் பிரச்னை... ஒரு குர்ஆனிய ஆய்வு', 'சூரியனுக்குக் கீழே இடம் இல்லை' போன்றவை இதில் அடங்கும். இந்த புத்தகங்கள் பெஞ்சமின் நெதன்யாகுவின் புத்தகத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. இதுதவிர 'On the Pavement' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Posted

இஸ்ரேலிய அரசு தங்களால் கொல்லப்பட்ட 3 லெபனான் இராணுவத்தின் கொலைக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குட்டிப் பாப்பாவை தோளில் சுமந்து நடந்த சிறுமி; கலங்கவைத்த காணொளி | Israel Gaza Issue

ஆறு வயது கமர் தனது சகோதரியை மருத்துவமனையில் இருந்து தெற்கு காஸாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்துசென்றார்.

குண்டுவெடிப்புக்குப் பிந்தைய சச்சரவில் அவரது சகோதரி சுமய மீது கார் மோதியது.

அல்- புரேஜ் முகாமில் தாயுடன் உடன் அவர்கள் வசிக்கின்றனர். 

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

Posted

ஆயுதங்களையும் கொடுத்து கொன்ற பின் அழுது புலம்பும் மேற்குலகில் நாம் வாழ்கிறோம்.மனிதாபிமானத்தின் விலை என்ன என்பதை எப்படி எமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவின் மத்திய பகுதியில் உள்ளநகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் - 90க்கும் அதிகமானவர்கள் பலி என அச்சம்

image

காசாவின் மத்திய பகுதியில் உள்ள  பெய்ட் லகியா நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர் என ஹமாசின் மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஐந்து மாடிக்கட்டிடமொன்றே தாக்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தரையில் துணியால் போர்த்தப்பட்ட உடல்களின் படங்கள் சமூக ஊடக ங்களில் வெளியாகியுள்ளன.

GbDiWoZXkAAezdc.jpg

தனது மருத்துவமனையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஜபாலியாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குநர் குசாம் அபு சைபா தெரிவித்துள்ளார்.

GbDiWjzWMAAopMq.jpg

போதிய மருந்துகள்  இன்மையால் தனது மருத்துவமனை சிகிச்சை அளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

GbDiXNcXYAA1il4.jpg

https://www.virakesari.lk/article/197452

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டில் இல்லை.

மேலும் வீசப்பட்ட வெடிகுண்டுகள் நெதன்யாகுவின் வீட்டின் அருகே புல்வெளியில் விழுந்து தீப்பிடித்தன.

இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபரில் இதே பாணியில் ஹிஸ்புல்லா அமைப்பினர், நெதன்யாகுவின் வீட்டின் அருகே டிரோன் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீசப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://thinakkural.lk/article/312220

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உயிரிழப்பு

December 5, 2024

 

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்  குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு  முதல் ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்கும் விதத்தில்  இஸ்ரேல் காசாவில் தாக்குதலை நடத்தி வருகின்றது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய  தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் மீது   தாக்குதல் நடத்தியதில் மூன்று மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இது அண்மையில் மருத்துவ கட்டமைப்பின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஐந்தாவது தாக்குதல் என கூறப்படுகிறது.
 

https://www.ilakku.org/israeli-attack-on-gaza-food-distribution-center-children-killed/

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’; இஸ்ரேல்

ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராக தொடங்கிய போரை இஸ்ரேல் அப்படியே மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையச் செய்தது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹவுத்திக்கள் என்று தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில்,“ஹவுத்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் இந்த நாளில் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ்களை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். இன்னும் அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தலையைத் துண்டிப்போம்.

ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்கிவிட்டோம். சிரியாவில் ஆசாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டோம். தீவிரவாத அச்ச ரேகைக்கு பெரிய அடி கொடுத்துள்ளோம். அதேபோல் ஏமனில் உள்ள ஹவுத்திகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம். ஹவுத்திகளின் உட்கட்டமைப்பு உத்திகளை தவிடுபொடியாக்குவோம். செங்கடலில் சரக்கு கப்பல்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடி தருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா மீண்டும் தலைதூக்கியது. அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டார்.

இவற்றையெல்லாம் பட்டியலிட்டே தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தீவிரவாதத்தை ஒழித்து வருவதாகப் பேசியுள்ளார்.

https://thinakkural.lk/article/314086

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 27/10/2024 at 21:50, nunavilan said:

ஆயுதங்களையும் கொடுத்து கொன்ற பின் அழுது புலம்பும் மேற்குலகில் நாம் வாழ்கிறோம்.மனிதாபிமானத்தின் விலை என்ன என்பதை எப்படி எமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்???

மனிதாபிமானமாவது மயி,.....வது. 

2009 க்குப் பின்னர் எனது நலன் மட்டுமே. 

😡

Edited by Kapithan



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மது போதையில் விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 m அப்பால் பாதையை விட்டு வெளியே நிற்கும் டிப்பர் வாகனம். அம்மா,அப்பா 02 குழந்தைகள் என்று அறியப்படுகிறது தந்தை ஆசிரியர் ஒருவர் என அறியப்படுகிறது டிப்பர் மக்களால் அடித்து உடைப்பு பரிதாப மரணத்தின் எதிரொலி இடம் மின்சார சபை- வலயக்கல்வி பணிமனை கிளிநொச்சி.   All reactions   மலையக தாய்
    • மிருசுவில் படுகொலையின் வீரநாயகன் சுனில் ரத்நாயக்க - 19.12.2000 பிலியந்தலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், உறுதிப்படுத்தப்படாத சந்தேக நபராக ஆனந்தசுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் தந்தையின் அன்பைத்தேடும் அநாதையானாள். மறுபுறத்தே மிருசுவிலில் எட்டுப்பொதுமக்களைக் சித்திரவதை மூலம் கொலைசெய்து, ஒரு தமிழ்ப் பாலகனின் தோலை உரித்துக் கொலைசெய்து சேலையொன்றில் சுற்றிப் புதைத்தது உறுதியாகி, வழக்காடுமன்றில் மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டபோதும்; நாட்டின் போர் நாயகனாகக் மதிப்பளிக்கப்பட்டு, கோத்தபாயவினால் விடுதலைசெய்யப்பட்ட சிறிலங்காவின் "மதிப்புக்குரிய" இராணுவத் தந்தை சுனில் ரத்நாயக்கவின் மகள் பெருமைக்குரியவளாக வாழ்கிறாள். சிறிலங்காவின் சிறந்த நீதிக்கு இவ்வாறு ஆயிரம் நிகழ்வுகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்றாகும். முழுச் செய்தியின் இணைப்பு: https://30sec2remember.com/mirusuvil-massacre-2000/ / https://30sec2remember.com/de/mirusuvil-massacre-2000/ படம்: Oorukaai          
    • *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........        
    • இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள்  ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.  நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி  வெளிப்பட்டு அடங்கியது.   உலகைமுடக்கிய கொரோனாவின் பின்  நிரந்தரமானதொரு வேலை கிடைத்திருக்கவில்லை. அரச உதவிப்பணத்தோடு காலத்தைக்  கடத்தவேண்டியிருந்தது. அவ்வப்போது கிடைத்த வேலைகளும் நேரம் அதிகமாகவும்  சம்பளம் குறைவாகவும் இருந்தன. முதலில் வேலைசெய்த உணவகங்களின் முதலாளிகளுக்கு அழைப்பெடுத்து  வேலைக்காக விண்ணப்பித்தும் பலனேதும் கிடைக்கவில்லை. சிலர் தங்களது உணவகங்களை வாடகைக்கு கொடுத்துவிட்டதாக கூறினார். சிலர்  மகன்களிடம் கொடுத்துவிட்டதாகவோ அல்லது  விற்றுவிட்டதாகவோ கூறினார்கள்.  இன்னும் சிலர்  அழைப்பதாக கூறினாலும் அழைக்கவில்லை.  சீராக சென்றுகொண்டிருந்த நாள்களைக் கடந்து, சிறிய சேமிப்பை செய்து ஊரில் எதாவதொரு முதலீடுசெய்து தொழிலை ஆரம்பித்து விடவேண்டுமென்று எண்ணிய நாள்களில்தான் கொரோனா வந்து எல்லாவற்றையும் சிதைத்துத் தள்ளியது. சேமிப்பு எல்லாம் கரைந்து கடனில் நாள்களைக் கடத்தவேண்டியதாயிற்று. ஒருவாறு கொரானாவின் தாக்கம் குறைய ஆரம்பித்ததும்,  வேலைநிறுத்த போராட்டங்களும் மானியக்குறைப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும் ஆரம்பித்தது. மஞ்சள் ஆடையணிந்த பெருந்தொகை மக்கள் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக  வீதிகளில் இறங்கியிருந்தனர். பல தடவைகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளும் நடந்தன. வல்லரசு எனப் பெயர்கொண்ட, இன்னமும் காலனித்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி சில நாடுகளை சுரண்டிக் கொண்டிருக்கிற இந்தத்  தேசத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் மற்றும் பொருளாதார  இழப்பினால் தற்கொலை செய்துகொண்டிருந்தார்கள்.  இந்தத் தேசத்தின் குடியானவர்களாலேயே பொருளாதார சரிவை தாங்கமுடியாதபோது முப்பது வயதுகளின் தொடக்கத்தில், கையில் எதுவுமே இல்லாமல் அகதியாக, வந்தேறியாக ஆரம்பத்திலிருந்து வாழ்வைத் தொடங்கிய நானெல்லாம் எப்படி  சமாளிப்பது. போதாக்குறைக்கு ரசியா – உக்ரைன் யுத்தம்,  பாலஸ்தீனிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என விலைவாசியெல்லாம் உச்சத்தை தொட்ட இந்தநாள்களில் இவன் ஒருவனின் கதைக்காக,  அலைந்துதேடிக் கிடைத்த வேலையை விட்டுவிட்டு செல்லவா முடியும்.  திரும்ப திரும்ப அவன் சொன்னதொனி மூளைக்கு உருவெற்றிக் கொண்டிருந்தது. கையில் மிகக் கூரியகத்தி.  கொஞ்சம் கவனக்குறைவாக வேலையை செய்தாலும் கையைப் பதம் பார்த்துவிடக்கூடும். இரண்டு நாள்களுக்கு முன்னர்தான்,  சிறியவயதிலேயே இங்கு வந்துவிட்டதாகவும், ஊரில் யாருமில்லை. இன்றுவரை அங்கு   போயிருக்கவுமில்லை. அந்த மண்ணின் நிறம்கூட மறந்துபோய்விட்டது என்று கூறியிருந்தான். ஒரு நிதானமான நடத்தை அவனில் தெரிந்திருந்தது. பரவாயில்லை. இவனுடன் சச்சரவில்லாமல் வேலைசெய்யலாமென எண்ணிக்கொண்டிருந்தேன். வார்த்தைகளை அளந்து பக்குவமாக பேசும் அவனைப்பற்றி நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது. அது வளர்ந்து விருட்சமாகுவதற்கிடையில் தனக்குள்ளும் ஒரு விசச்செடி இருக்கிறது என்பதனை மிக சாதாரணமாக எந்தவொரு தயக்கமுமில்லாமல் தான் யார் என்பதை வெளிப்படுத்தி தன்னை  உணர்த்த முற்படுகிறான். இனி எப்படி  இவனோடு நெருங்கி வேலை செய்வது. அதைவிட முகம் கொடுத்து ஒரு உரையாடலை செய்வது. எப்படியாவது இந்தப் பொழுதைக்  கடத்தி விடவேண்டுமென்ற மனவூக்கத்துடன் வேலைத் தொடர்ந்து செய்யத்தொடங்கினேன்.  மனதுக்குள் எழுந்த பேரிரைச்சல், கிணற்றுக்குள் இறங்க இறங்க விளையும் அசாதாரண அமைதியைப்போல குறைந்துகொண்டிருந்தது. அதேவேளை அதற்குள் எழும் எதிரொலியைப்போல அவனது சொற்கள் என்னைச் சூழ்ந்து மோதிக்கொண்டிருந்தன. வெளிச்சத்தைக் கண்டதும் ஒளிந்துகொள்ளும் கரப்பான் பூச்சியைப்போல என்னை எங்காவது ஒளித்துவிட இயலாதா எனத்  தவித்துக்கொண்டிருந்தேன்.  கைகளுக்கும் மனதிற்கும் இடையே ஒரு இடைவெளி எழுந்தது. கத்தியைப் பிடித்திருந்த கையின்  இறுக்கம் தளர்வதுபோல இருந்தது. காலிலிருந்து ஒருவித சோர்வு மேலெழுவது போலத்  தோன்றியது. அவன் சொன்னது எந்த விதத்திலாவது என்னைப்  பாதித்துவிடக்கூடாது எனச் சொல்லிக்கொண்டேன். தாடைகளால் பற்களை இறுக்கிக்கொண்டேன். இது நிகழ்வது முதல் தடவையல்லத்தான். முன்னர் நிகழ்ந்த போதெல்லாம்  தூசுபோலத் தட்டிவிடும் வல்லமை வாய்த்திருந்தது. அந்தச் சூழலும் காலமும் அதை வழங்கியிருந்தது. இப்போதைய சூழல், வாழ்வுத் தேவைகள் அவமானத்தை கண்டும் காணாமல் கடந்துபோகச்செய்கிறது. கத்தியை மெதுவாக வெட்டுப்பலகையில் வைத்தேன். திடீரென உருவாகியிருந்த அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தான். பின் இங்கு எதுவுமே நிகழவில்லை என்பதுபோலச்  சாதாரணமாகவே கேட்டான். “என்ன  கத்தியை கீழ வைச்சிட்டியள். வெட்டி முடியுங்க. “கை வழுக்குது. கழுவிட்டு வெட்டுறன்” . நான் சொல்லிமுடிக்கவில்லை. அவனிடமிருந்து பதில் வந்தது. “உங்களுக்கே கத்தி வழுக்குது எண்டால் என்ன கதை. இண்டைக்கு நேற்றே கத்தி பிடிச்சனிங்கள்.”  “இப்ப என்ன சொல்லுறியள்?” எல்லாக்காலங்களிலும் நடந்த நிகழ்வுகளை ஒரே கணத்தில் முடிச்சுப்போட்ட மனது சட்டென குரலுக்குள் இறங்கியது. மனது  குரலால் வெளிப்படுத்திய  அயர்சியைப் பார்த்ததும் அவன், “இல்லை இங்கு வந்தகாலம் முதல் ரெஸ்ரோரண்டில தானே வேலை செய்கிறீர்கள் அதைச் சொன்னேன்” என்றான்.  எதுவும் சொல்லப் பிடிக்காமல் விலகிச்சென்று கையைக் கழுவினேன். பின் அந்தக் குளிர்ந்த நீரை கைகளில்  ஏந்தி முகத்தில் ஏத்தினேன். முகத்தசைகளில் இருந்த இறுக்கம் குறைந்ததுபோல இருந்தது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீரை முகத்தில் ஏத்தினேன்.  எத்தனை தடவைகள், எத்தனை விதமாக குத்திப் பேசுகிறார்கள். தங்கள் எங்கெல்லாம் வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் தேவைப்படாத இடத்திலும் கூழைக்கும்பிடு போட்டு அவற்றை தக்கவைத்தும் கொள்கிறார்கள். அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். நிலம் மாறியும், மொழி மாறியும், நிறம் மாறியும்,  பழக்கவழக்கங்கள் கூட மாறியும், இந்தக்குணத்தில் மாத்திரம் எந்த மாற்றமுமில்லை. எங்காவது இது குறித்து கதைத்தால், இப்ப முந்தின மாதிரியெல்லாம் இல்லை. யாரும் யாரையும் ஒதுக்கி வைப்பதில்லை. வீடுகளுக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் போய்வர யாருமே மறிப்பதில்லை. எல்லாம் மாறிவிட்டது என்பார்கள். என்ன, கல்யாணத்தில் மட்டும்தான் கொஞ்சம் இருக்கு அதை விட்டுவிட ஏலாது தானேயென்று இன்னொரு விசித்திரத்தையும் கூடவே வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். இவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது. அன்றைக்கு இருத்திக்கதைக்க முற்றத்து மணல்கும்பி. இன்றைக்கு விறாந்தையின் மெத்தைக்கதிரை.  இந்த மாற்றத்தைவிட வேறு என்னதான் சொல்லமுடியும். அந்த இடத்திலிருந்து கொஞ்ச நேரமென்றாலும் விலகியிருக்க வேண்டும்போலத் தோன்றியது. வேலை செய்த இடத்தை  துடைத்துவிட்டு  அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமைதியாக இருந்தேன். ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழை சுற்றியோடும் பூச்சி கண்ணில் பட்டது. இன்றைய பொருளாதார நிலைதான் மின்குமிழ். நான் தான் அந்தப் பூச்சி.  யார் என்ன செய்தாலும் வெளிச்சத்தைவிட்டு விலகமுடியாத நிலை. கைகளால் மெதுவாக அந்தப் பூச்சியை தள்ளிக்கொண்டு மேசையின் விளிம்பில் விட்டேன். ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. பின் சுதாரித்து வெளிச்சத்தை நோக்கி ஒடத்தொடங்கியது. தொலைபேசியை எடுத்து பூச்சியை  வீடியோவாக பதிவு செய்தேன்.  தன்னிச்சையாக கைகள் தொலைபேசியிலிருந்த வங்கிக்கணக்கை திறந்தது. அந்த மாதத்தின் பில்கள் ஒவ்வொன்றாக கழிந்திருந்தன. முதலாம் திகதி வரவாக இரண்டாயிரம் யூரோக்களையும் பதினைந்தாம் திகதி மிகுதியாக இருநூறு யூரோக்களையும் பச்சை நிறமாக காட்டியது. பச்சை நிறத்தை பார்த்ததும் ஒரு திருப்தி உண்டானது. மீண்டும் ஒருதடவை கணக்கை மாதத் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்தேன். வீட்டுவாடகை, தொலைபேசி, இன்சூரன்ஸ் என முக்கியமானவை எல்லாம் கழிந்திருந்தன. இந்தமுறை இளையவளுக்கு சப்பாத்து எடுத்துவிடவேண்டும். சப்பாத்து கிழிந்திருப்பதை போனமாதமே காட்டியிருந்தாள். இளையவளுக்கு எடுத்தால் மூத்தவளுக்கும் எடுக்கவேண்டும். சரி இந்தமாதமும் ஓடியிலதான் போகப்போகுது. தொலைபேசியை வைத்துவிட்டு பூச்சியைத் தேடினேன். மின்குமிழின் அடியில் இருளும் வெளிச்சமும் கலக்குமிடத்தில் அசைவில்லாமல் இருந்தது. அதை கண்டதும் வேலையை செய்துமுடிக்க வேண்டுமேயென்ற நினைவு வந்தது.  தொலைபேசியில் நேரத்தைப் பார்த்தேன். இதற்கு மேலும் இருந்தால் இன்று செய்யவேண்டிய வேலையை செய்து முடிக்கவியலாது போய்விடும் எனத் தோன்றியது. எழுந்து வேலைசெய்யுமிடத்திற்குள்  சென்றேன். அந்த இடமெல்லாம் இருளின் குரலால் நிறைந்திருப்பதைப்போல தோன்றியது. முதன் முதலாக அப்படியானதொரு அனுபவம் பாடசாலையில் ஏற்பட்டிருந்தது. அந்த ஆசிரியையை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்தான் எங்களுக்கு வகுப்பு ஆசிரியருமாக இருந்தார். என்னை வகுப்புத்தலைவனாக நியமித்துமிருந்தார். அதனாலோ என்னவோ மற்றைய எல்லா ஆசிரியர்களையும் விட ஒருபடி நெருக்கமாக நினைத்துக்கொண்டிருந்தேன். எழுதுகின்ற சோக்கட்டி முடிந்தாலோ, டஸ்ரர் தேவைப்பட்டாலோ, வருகைப்பதிவேடு  எடுத்து வருவதென்றாலோ அல்லது என்ன தேவையென்றாலும் என்னைப் பெயரை சொல்லி அழைப்பார். தேவையை கூறுவார். நானும் சிட்டாக பறந்துபோய் அந்தத் தேவை நிறைவேற்றுவேன். அதில் ஒரு பெரிய மகிழ்வு எனக்கு. சிலநாள்களில் தண்ணீர் போத்தலையோ, உணவினையோ அல்லது தனது உடல் தேவைக்களுக்கான மருந்துவகைகள் எதனையாவதோ ஆசிரியர்கள் அறையில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் அதனை எடுத்தவர என்னை அழைப்பதில்லை. அதற்கு மட்டும் வேறு ஒரு மாணவனை அனுப்பி எடுப்பிப்பார். முதலில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. வகுப்பறை தலைவன் நான் என்பதால் வகுப்பறை  சார்ந்த குறிப்பிட்ட வேலைகளை எனக்கு தருகிறார் என நினைத்துக்கொண்டேன்.  நாளாக நாளாக சின்ன உறுத்தல் உருவாகியிருந்தது. அது அவருக்கு நான் மட்டும் நெருக்கமான மாணவனாக இருக்கவேண்டுமென்ற சிறுவயது அலாதி. அதனைக் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். சந்தர்ப்பம் வாய்த்தபொழுதில் கேட்டும்விட்டேன். தீர்க்கமான பார்வையொன்றின் பின் அவரது சொற்கள் வெளிப்பட்டன. அவ்வப்போது பாடசாலையில் கல்வி சார்ந்து சில சந்தர்ப்பங்களில்  கேள்விப்பட்டு உளைச்சலுக்குள்ளான  பலசொற்கள் அதில் விரவிக்கிடந்தன. எப்போதுமில்லாமல் “அவரவரை அந்தந்த இடத்திலதான் வைக்கிறது. பதினெட்டுப்புத்தியோட கேள்வி கேளாதே” என்று அவர் இறுதியாக சொன்னதுமட்டும் தெளிவாக கேட்டது. மறுநாள் எனது ஊரவரான உடற்கல்வி ஆசிரியரையும் அழைத்துக்கொண்டு அதிபரிடம் சென்று வகுப்பறையை மாற்றிக்கேட்டேன். உடற்கல்வி ஆசிரியர் நிகழந்தவற்றை அதிபரிடம் எடுத்துக்கூறி வகுப்பினை மாற்றிக்கொள்ள உதவினார். சிலநாள்களில் பாடசாலை முழுவதற்கும் இந்தக்கதை பரவியிருந்தது. மரநிழல்கள்  கதிரைகள் கரும்பலகைகள் தும்புத்தடிகள் எல்லாவற்றுக்கும் வாய் முளைத்தன. பிடிவாதமாக பாடசாலை சென்றேன். சிலர் நண்பர்களானார்கள். சில நண்பர்கள் ஒதுங்கிக்கொண்டனர். அந்தக் காலத்திலேயே என்னை விழுங்கிவிடும் கருமையென ஒரு இருள் எனக்குள் உருவாகியிருந்து.  அது என்னோடேயே வளரவும் தொடங்கியது. இருளின் குரல் சில இடங்களில் வழிகாட்டியது. சில இடங்களில் என்னை மூழ்கடித்தும் கொண்டது. சில இடங்களில் எதிரொலிகளை தின்று செமித்தது. சில இடங்களில் காறி உமிழ்ந்தது.  நீண்ட காலத்தின் பின் மீண்டும் அந்த இருளின் குரல் என்னை மீறி  ஒலிக்கத்தொடங்கியிருந்தது. இந்த வேலையை விட்டு விலகிவிடவேண்டும். எதற்காக விலகவேண்டும். இந்த மனஅழுத்தத்துடன் எப்படி வேலைசெய்வது. செய்துதான் ஆகவேண்டும். நாளைக்கும் இப்படியொரு கதையை சொன்னால். சொன்னால் என்ன சொல்லிவிட்டுப்போகட்டும். காசுக்காக எல்லாவற்றையும் பொறுக்க வேண்டுமா. நாளைக்கு வீட்டு வாடகைக்கு, இதர செலவுகளுக்கு  என்ன செய்வது. மனம் இரண்டு பட்டுகொண்டது.  அரசியல்காரணங்களால் அகதியாக வந்திருந்தாலும், காலநீட்சி  பொருளாதார அகதியாக்கிவிட்டது. வேலையில்லை என்றால் ஒன்றும் செய்யவியலாது. நான் தனியன் இல்லை. பிள்ளைகளுக்காக, அவர்கள் படித்து நல்ல வேலையொன்றில் அமர்வதற்காக, ஏன் நானின்று அடைகின்ற அவமானத்தையும் இழிவையும் அவர்கள் அடைந்துவிடாமல் இருப்பதற்காக வேலைத்தளத்தில் நிகழ்பவற்றை மறந்து வேலை செய்யத்தான் வேண்டும். மனது தனக்கு இனக்கமான ஒரு இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அது தற்காலிகமாக இருந்தாலும் பரவாயில்லை.  இல்லை இந்த இணக்கம் தான் அவர்களை இன்னும் இப்படியெல்லாம் பேசவைக்கிறது தூக்கி முகத்துக்கு நேரேயே  எறிந்துவிட்டு போனால் மற்றவர்களுடன் இப்படி பேசவோ நடக்கவோ முனையமாட்டார்கள். எரிச்சலுடனும் கையேலாத் தனத்துடனும் உள்ளே நுழைந்தபோது அவன் இல்லை. புகைப்பிடிக்கப் போயிருப்பான் என நினைத்துக்கொண்டு எனது வேலையை ஆரம்பித்தேன்.  மனது தனியாக வெளிப்பட்டு எனக்குள் முரண்டு பிடித்தது.  “யாரும் எங்களுக்கு படியளக்கப் போவதில்லை. எங்களின் கைதான் படியளக்கும்.” அப்பர் நெடுக சொல்லும்  வசனம் நினைவுக்கு வந்தது. அப்பாவின் நினைவு தோன்றியது அந்தநேரத்தில் பெரும் நெகிழ்வாக இருந்தது. உழைப்பின் வண்ணம் என்ன என்று கேட்டால், எந்தப்பொழுதிலும் அப்பாவின் வியர்வை படிந்த உடலின் நிறம்தான் தோன்றும். முதன்முதலாக அப்பாவில் சிறிய வருத்தம் உண்டான நாளொன்றும் இருந்தது. அது சிறுவயதின் அறியாமை. அது எனது பத்தாவது வயதில் நிகழந்தது. அப்பாவின் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது நாகைய்யா கடையைக் கண்டதும்  இனிப்பு வாங்கித்தரும்படி அடம்பிடித்துக் கேட்டேன். சைக்கிளை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்குவதற்காக சென்றார். அப்போது  ஒருவன், தனது வீட்டு வாசலுக்கு நேரே நிறுத்திவிட்டதாக சொல்லி சைக்கிளை தள்ளி  விழுத்திவிட்டு உனக்கெல்லாம் எவ்வளவு திமிர். இதில் சைக்கிளை நிறுத்துகிறாய் என சண்டைக்கு வந்தான். அப்பா அவனது வயதையும் பொருட்படுத்தாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு  விலகிவந்தார். எனக்கு மனதுக்குள் ஒரு நெருடல். அப்பா ஏன் அவனுக்கு அடிக்கவில்லை.  அன்று, அவனிடம் அப்பா எதற்காக அவ்வளவு கண்ணியத்துடன் நடந்துகொண்டார்.  ஏன் சைக்கிளை தள்ளிவிழுத்தினாய் என்று  கேட்கவில்லை என்று கேட்டதற்கு, எங்களிலும் பிழை இருக்குதானே அப்பன். அதைவிட கேட்டு சண்டை பிடிக்கிறதால என்ன பலன். அவங்களுக்கு வசதி வாய்ப்பு பணம் எல்லாம் இருக்கு. நாங்கள் அப்படியில்லைத்தானே. அப்பா நாளைக்கு வேலைக்கு போனால்தான் உங்களை நன்றாக படிக்கவைக்க முடியும். நீங்கள் படித்து பெரியாளாக வந்தால் காணும். இப்படியெல்லாம் நடக்காமல் இருக்கும் என்றார்.  அத்தோடு மறந்துபோன அந்த நிகழ்வின் உண்மையான பக்கம் ஓரளவு அறிவு வந்த போதுதான் புரிந்தது. அபபாவின் மீது இருந்த வருத்தம் மறைந்து பெரும் ஆசுவாசம் உண்டாகியது. பின் எங்களுக்காக, எங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எபபடியெல்லாம் தன் கோபத்தை அடக்கிக்கொண்டாரென்று உணர்ந்த நாள்களிலெல்லாம்  அவர் குறித்து உருவாகிய பெருமிதம் எள்ளளவேனிலும்  குறைந்ததில்லை.  நான் இதையெல்லாம் அனுபவித்த பொழுதுகளில் அப்பா எவ்வளவு வலிய சீவன் என்று எண்ணிக்கொள்வேன். எனக்கு கிடைத்த வலிமை அப்பாவிடமிருந்து கிடைத்தது போல, அப்பாவுக்கு  அவரின் அப்பாவிடமிருந்து கிடைத்திருக்கும். தலைமுறைகளாக வலி மட்டுமல்ல வலிமையும்தான் தொடர்கிறது. வலி மட்டும் என்னோடு நின்றுவிடவேண்டும் என்று தீர்மானித்ததும், அப்பாவும் அவ்வாறுதான் நினைத்திருப்பார் என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது. கூடவே தமிழ் பள்ளிக்கூடத்தில் “உங்களிடம் ஒன்றும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என அம்மா சொன்னவ”  என்று மகளிடம் யாரோ ஒரு சகமாணவி சொன்னதாக இளையமகள் கூறியதும். காலடிச் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன். கையில் இரண்டு கஃபேகளுடன் வந்துகொண்டிருந்தான். என்னருகில் வந்து கஃபே ஒன்றையும், சீனி பைக்கற்றுக்கள் இரண்டையும் வைத்துவிட்டு சென்றான்.நெருக்கமாக வந்து கஃபேயை வைத்துச்சென்றதும், முழு உடலும் பதற்றமடையத் தொடங்கியது. ஏதாவது செய்யென மன இருளுக்குள்ளிருந்து ஒருகுரல் ஒலிக்கத் தொடங்கியது. என்னிடம் அப்பாவின் கண்ணியமோ பொறுமையோ இல்லை என்பதை உணர்ந்தேன்.  ஒன்றும் சொல்லாமல் கஃபேயை எடுத்து  மேல் தட்டில் கண்ணில் படும்படியான இடத்தில் வைத்தேன். அந்தக் கஃபே கண்ணில் படவேண்டும்.  அது என்னை இன்னும் குற்றவுணர்க்குள் தள்ளி வருத்தப்பட  வைக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன். இருளின் ஓரங்களில்  வேலை  ஏறி அமர்ந்துகொண்டது. இரண்டுபட்ட மனநிலையில் வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தேன். எந்தவொரு தேவையில்லாத உரையாடல்களிலும் ஈடுபாடு காட்ட விரும்பவில்லை என்பதை அவனுக்கு உணர்த்திவிடும் வகையில் முரட்டுத்தனமாக வேலையை செய்துகொண்டிருந்தேன். அந்தநேரத்தில்  அவ்வாறு வேலை செய்வது மனதிற்கு அமைதியை தருவதுபோல் இருந்ததால் அவனை புறக்கணித்துவிட்டு முழு உடல் உழைப்பால் இயங்கத் தொடங்கினேன். என்னவேலை, எவ்வளவு வேலையென்றெல்லாம் கவனிக்கவில்லை. என்றுமில்லாத சோர்வும் அசதியும் ஏற்பட நேரத்தைப்பார்த்தேன். எனது வேலை நேரம் முடிவுக்கு வந்திருந்தது. கஃபே வைத்த இடத்தைப்பார்த்தேன். அது  ஆறிப்போய் அதன்மேல் மெல்லிய வெள்ளைப் படலம் படிந்திருந்தது. மனதின் இருளுக்குள் மெல்லியதாக ஒரு வெள்ளையொளி.  வேலையறையில் இருந்து வெளியேறினேன். ஓய்வறைக்கு சென்று ஆடைகளை மாற்றிவிட்டு முதலில் வெளியால் போகவேண்டும் என மனது உந்திக்கொண்டிருந்து. வழமையை விட துரிதமாக ஓய்வறையை நோக்கி சென்றேன். ஓய்வறைக்கதவைத் திறந்ததும் மேசையில்,  வெளிச்சமும் இருளும் கலந்திருந்த இடத்தில் இன்னமும் அந்தப்பூச்சி அமைதியாக இருந்தது.  அருகில் இருந்த கனமான மட்டையை எடுத்து ஓங்கி அந்தபூச்சி மீது அடித்தேன். மட்டையை அப்படியே போட்டுவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக ஆடையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். https://akazhonline.com/?p=9181&fbclid=IwY2xjawHZbHdleHRuA2FlbQIxMQABHURj1eGHSq0-m7TxL3OoQ_isjI4tNXoL3kKCiaQssdhfB1Woo2uZHkS_LA_aem_Q15VuymTeLFQpTmmS4Qbl      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.