Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உறுதிப் படுத்த படாத தகவல்

சிரியாவில் அமேரிக்க படைகள் கட்டுப்பாட்டில் உள்ள அல் ஓமார் எண்ணை வயல் மீது தாக்குதல். 

பைடன் - பத்திரிகை சந்திப்பை இடை நிறுத்தி - Situation room விரைந்தார்?

Edited by goshan_che

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் மேலும் இரு பணய கைதிகளை விடுவித்தது.

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

பைடன் - பத்திரிகை சந்திப்பை இடை நிறுத்தி - Situation room விரைந்தார்?

பெரியண்ணைக்கு இருட்டடி ஏதும் நடந்திருக்குமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பெரியண்ணைக்கு இருட்டடி ஏதும் நடந்திருக்குமோ? 😎

வடிவாத் தெரியேல்லை. பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

1990 இல் ஹாரிசுக்கு 19 வயது. ஜிகாத்தை வழி நடத்தி இருப்பது சந்தேகமே. ஆனால் சட்ட பீடத்தில் இனவாதியாக அறியப்பட்டார்.

ஜிஹாதிட்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை. பத்து வயதிலேயே ஜிஹாதில் சேர்ந்திருப்பார். இவரது இப்போதைய நடவடிக்கையிலேயே அப்போது எப்படி இருந்திருப்பார் என்று விளங்கிக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

பேசும்போதே உடைந்து அழுத Palestine Representative; "இஸ்ரேல் ஒரு குடும்பத்தை கூட விட்டு வைக்கல"

ஐநா அவையில் கண்ணீர்விட்டு அழுத பாலத்தீன பிரதிநிதி - அதே நிகழ்வில் இஸ்ரேல் பிரதிநிதி என்ன சொன்னார்?

இப்போது கண்ணீர் விட்டு அழுது என்ன பயன். உங்களிடம் கையளிக்கப்படட காசாவை நீங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை. பயங்கரவாத ஹமாஸிடம் பறிகொடுத்து அதை ஒரு பயங்கரவாத குகையாக மாற்றிவிடடீர்கள். அப்போதே உங்களுக்கு  முடியாவிடடாள் இஸ்ரவேலின் உதவியுடனாவது நீங்கள் அதனை தடை செய்திருக்கலாம். இப்போது எல்லாம் கை மீறி போனவுடன் அங்கு போய் அழுது பயங்கரவாதிங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். 

11 hours ago, ஏராளன் said:

‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’

ந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார்.

ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no

பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை விடுவிக்கும்வரைக்கும் இப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்க முடியாது. ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ambulance and text that says 'MOVEMENT സ STOP'

 

May be a black-and-white image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் மேலும் இருவரை விடுதலை செய்தது -கத்தார் எகிப்தின் முயற்சிகளிற்கு பலன்

Published By: RAJEEBAN   24 OCT, 2023 | 11:01 AM

image

ஹமாஸ்  தனது பிடியிலிருந்த மேலும் இரு பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது.

85 வயதான யொசெவ்ட் லிவ்சிட்ஸ் 79 வயதான நுரிட் கூப்பர் என்ற இரண்டு பெண்களையே ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

இவர்களை கடந்த 7 ம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்ரேலின் தென்பகுதி நகரான நிர் ஒஸ் கிப்புட்சிலிருந்து ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது.

ஹமாஸ் அவர்களின் கணவன்மார்களை விடுதலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

hamas_hostahe_released.jpg

இதேவேளை தயார் விடுதலை செய்யப்பட்டமை ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக யொசெவ்ட் லிவ்சிட்ஸின் மகள் தெரிவித்துள்ளார்.

கத்தார், எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி காரணமாக இருவரும் விடுதலை செய்யப்பட்டமை நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி என சரோனே லிவ்சிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தாயார் விடுதலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது உங்களிற்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்ற சிஎன்என்னின் கேள்விக்கு வார்த்தைகளால் அதனை வர்ணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனது தாயாரலும் நன்கு நடக்கவும் பேசவும் முடியும் அவர் நடந்து எல்லையை கடந்துள்ளார் என நினைக்கின்றேன் இது மிகவும் ஆச்சரியமான விடயம் என மகள் தெரிவித்துள்ளார்.

உருவாகிவரும் பெரும் கதையில் இது ஒரு சிறிய ஒளிக்கீற்று என தெரிவித்துள்ள அவர் எப்போது எனது தாயாரை கட்டித்தழுவுவேன் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன் எனது சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

லிவ்சிட்சின் தந்தை தொடர்ந்தும் ஹமாசின் பிடியில் உள்ளார், என்னுடைய தந்தை இன்னமும் அங்கிருக்கின்றார் பலர் அங்கு உள்ளனர்  அனைவர் குறித்த நற்செய்திக்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவுக்குள் தரைவழியாகவும் இஸ்ரேலியப் படை தாக்குதல்

Published By: SETHU    24 OCT, 2023 | 02:32 PM

image

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் படையினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காஸா எல்லை வேலியின் மேற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினர் சென்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

ஹமாஸிடமிருந்து அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆயுதங்களைத் தேடியும், பணயக்கைதிகளை கண்டுபிடிப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலியப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரி

இதேவேளை காஸா எல்லைக்குள் இஸ்ரேலியப் படையினருடன் தாம் போராடியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

கான் யூனிஸ் நகருக்கு கிழக்குப் பகுதியில் இம்மோதல் நடந்ததாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினரின் இரு புல்டோஸர்கள், தாங்கி ஆகியனவற்றை தாம் அழித்ததாகவும், இஸ்ரேலியப் படையினர் வாகனங்களைக் கைவிட்டு வேலிக்கு கிழக்கே தப்பிச் சென்றனர் எனவும் ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஞாயிறு இரவு காஸாவுக்குள் மேலும் முற்றுகைகைள இஸ்ரேலியப் படையினர் நடத்தினர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி நேற்று தெரிவித்தார். 

222 பணயக் கைதிகள்

பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதேவேளை, இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, காஸாவில் பணயக்கைதிகளாக 222 பேர்  தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 

24 மணித்தியாலங்களில்  320 தாக்குதல்கள்

காஸா பிராந்தியத்தில் 24 மணித்தியாலங்களில் 300 இற்கும் அதிகமான தாக்குதல்களை தான் நடத்தியதாக இஸ்ரேல் நேற்று (23) தெரிவிததுள்ளது.

24 மணித்தியாலங்களில் 320 இற்கும் அதிகமான இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று தெரிவித்துள்ளது.  

ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகள், ஹமாஸின் செயற்பாட்டு கட்டளை மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் கண்காணிப்பு நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் 800 பேர் கைது

பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்தில் தேடப்பட்ட 800 பலஸ்தீனியர்களை கடந்த 7 ஆம் திகதியிலருந்து தான் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இவர்களில் 500 இற்கும் அதிகமானோர் ஹமாஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது. 

நேற்றுமுன்தினம் மாத்திரம் மேற்குக்கரையில் 37 ஹமாஸ் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, மேற்குக்கரையின் ரமல்லா நகருக்கு அருகிலுள்ள ஜலாஸோன் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினர் நேற்றுமுன்தினம் நடத்திய முற்றுகைகளில் இரு பலஸ்தீனர்கள் உயிரழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது.

நிவாரணங்களுடன் 34 லொறிகள்

கடந்த 7 ஆம் திகதியின் பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் தடவையாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்திலிருந்து காஸாவுக்குள் பிரவேசித்தன. 

கடந்த சனி, ஞாயிறு தினங்களில் 34 லொறிகள் காஸாவுக்குள் சென்றுள்ளதாக எகிப்திய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், காஸாவிலுள்ள சுமார் 24 இலட்சம் மக்களுக்காக தினமும் 100 லொறி நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167654

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2023 at 23:22, goshan_che said:

உறுதிப்படுத்த படாத தகவல்.

அமெரிக்க யுத்த கப்பலாகிய USS Gerald Ford இல் இன்று உணவாக Lobster உம் steak பரிமாறப்பட்டதாம்.

பொதுவாக இது துருப்புகளை சண்டைக்கு அனுப்பும் முன் பரிமாறப்படுவதாம்.

இவ்விரு உறுதிப்படுத்த படாத தகவல்களும் - வதந்திகளாக இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை காண்க.

16 hours ago, goshan_che said:

மிகவும் உறுதிப் படுத்த படாத தகவல்

சிரியாவில் அமேரிக்க படைகள் கட்டுப்பாட்டில் உள்ள அல் ஓமார் எண்ணை வயல் மீது தாக்குதல். 

பைடன் - பத்திரிகை சந்திப்பை இடை நிறுத்தி - Situation room விரைந்தார்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் - பராக் ஒபாமா

Published By: RAJEEBAN    24 OCT, 2023 | 01:14 PM

image

காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டடுள்ளமையும் விமானக்குண்டுவீச்சுகளும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள பராக் ஒபாமா இது இறுதியில் மத்தியகிழக்கில் அமைதி ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவளித்தால் கூட இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து நாங்கள் தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

gaza_ho36.jpg

அதேவேளை தனது மக்களை இவ்வாறான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

மத்தியகிழக்கில் இடம்பெறும் விடயங்களை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள் எவையும் இறுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167646

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி

Published By: SETHU   24 OCT, 2023 | 01:04 PM

image

காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலிஇஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய பகுதியிலுள்ள அல் ரேமால், காஸாவின் மேற்குப்பகுதியிலுள்ள அல் ஷாதி முகாம், தென்பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில்  இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரில 48 பேரும், ரஃபாவில் 57 பேரும், காஸா மத்திய பகுதியின் அல் வுஸ்தாவில் 168  பேரும் காஸா சிற்றியில் 66  பேரும் வடக்கில் 44 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 7 ஆம் திகதியின் பின் இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இவர்களில் 2055 சிறார்கள், 1119 பெண்களும் அடங்குவர் என காஸாவிலுள்ள ஹமாஸ் நிர்வாகத்திலுள்ள காஸா சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களினால் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் 222 பேர்  ஹமாஸினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167642

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இவ்விரு உறுதிப்படுத்த படாத தகவல்களும் - வதந்திகளாக இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை காண்க.

இரெண்டாம் செய்தி ஓரளவு உறுதிபடுத்த படுகிறது.

ஈராக், சிரியாவில் கடந்த வாரம் தாக்குதலால் 24 அமெரிக்க சிப்பாய்கள் காயம் என அமெரிக்கா அறிவிப்பு.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் - சிஎன்என்

Published By: RAJEEBAN   25 OCT, 2023 | 10:49 AM

image

ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை  பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என  அமெரிக்காவிடம் பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

hamas_tunnel11.jpg

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

இரண்டு வருட கால திட்டமிடல்களின் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக  அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன - டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது  என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை  அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/167697

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

 

May be a doodle of text

 

May be an image of text

 

May be pop art of text

 

May be an image of suitcase and text

 

May be a doodle of bird and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:-

இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்.

இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.

இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உட்பட 38 தொன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/278469

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் - சிஎன்என்

Published By: RAJEEBAN   25 OCT, 2023 | 10:49 AM

image

ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை  பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என  அமெரிக்காவிடம் பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

hamas_tunnel11.jpg

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

இரண்டு வருட கால திட்டமிடல்களின் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக  அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன - டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது  என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை  அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/167697

விரைவில் சுரங்கங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்படும். 

10 hours ago, ஏராளன் said:

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:-

இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்.

இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.

இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உட்பட 38 தொன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/278469

தற்போதைக்கு போர்நிறுத்தத்துக்கு சந்தர்ப்பமே இல்லை. ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரைக்கும் போர் நிறுத்தம் வருமென்று கூற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of map and text

 

May be pop art

 

May be an illustration of text

 

May be an image of map and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளரின் மனைவி, மகன், மகள் உட்பட குடும்பத்தவர்கள் பலர் பலி

Published By: RAJEEBAN    26 OCT, 2023 | 06:41 AM

image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வைல் அல் டாடோவின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

அல்ஜசீராவின் காசாவிற்கான குழுவின் தலைவர் வைல்அல் டாடோவின் மனைவி மகன் மகள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்து மத்திய காசாவில் நுசெய்ரட் அகதிமுகாமில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற  விமானக்குண்டுவீச்சு இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளரின் மனைவி மகன் மகள் உட்பட குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்த பேரன் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்தான் என மருத்துவமனை அறிவித்துள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட தனது மகனின் உடலின் முன்னால் பத்திரிகையாளர் கதறி அழுதபடி காணப்படும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

காசாவின் அல் அக்சா மருத்துவமனையிலிருந்து அவர் தனது பேரனின் உடலை துயரத்துடன் கொண்டுவரும் படமும் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட மகனிற்கு 15 வயது மகளிற்கு ஏழு வயது என அல்ஜசீரா  தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167752

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்குகள்

பட மூலாதாரம்,X: @IDF

படக்குறிப்பு,

இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள தாக்குதல் வீடியோவில், வேலியை உடைத்துக்கொண்டு செல்லும் ஒடு டாங்கி

15 நிமிடங்களுக்கு முன்னர்

நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த இந்தத் தாக்குதல் ‘அடுத்த கட்டத் தாக்குதலுக்கான தயாரிப்பு’ என்று கூறியிருக்கிறது.

 

இதற்குமுன் காஸாவுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியபின் இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைந்து இலக்குகளைத் தாக்குவது இது முதன்முறையல்ல.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, முதன்முறையாக காஸாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்து ஹமாஸ் ராக்கெட் குழுவினரைத் தாக்க துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை இஸ்ரேல் காஸாவுக்குள் அனுப்பியது.

அன்றுதான் வடக்கு காஸாவில் வசித்தவர்களைத் தெற்கு நோக்கி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

அதையடுத்து, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போது, இஸ்ரேல் டாங்கியை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஏவுகணையால், ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார், மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘இது படையெடுப்புக்கான அறிகுறி’

இத்தகைய தாக்குதல்கள், ஒரு முழுமையான தரைவழிப் படையெடுப்பு நிகழவிருப்பதறகான அடையாளம் என்கிறார் ஜெருசலேமில் செய்தி சேகரித்துவரும் பிபிசியின் நிருபரான டாம் பேட்மன்.

இஸ்ரேலின் துருப்புக்கள் தரையில் உள்ள எதிராளியின் பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கண்டுபிடித்து அழிக்க ஆய்வு செய்கின்றன, என்கிறார் அவர்.

இதுவரை வெளியாகியிருக்கும் படங்கள் ‘டாங்கிகள் மற்றும் கவசமிடப்பட்ட புல்டோசர்கள் காஸாவுக்கு உள்ளே செல்வதைக் காட்டுகின்றன’, என்னும் பேட்மன், “இஸ்ரேலிய அறிக்கை தரையில் சண்டையிடுவதைக் குறித்துப் பேசுகிறது. இருப்பினும் படங்கள் அதனைக் காட்டவில்லை,” என்கிறார்.

தாக்குதலின் முடிவில் துருப்புக்கள் வெளியேறியதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனாலும், இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலைப் பற்றிப் பயன்படுத்தியிருக்கும் மொழி முந்தைய தாக்குதல்களின்போது பயன்படுத்தப்படதைவிட விட வலுவானது, என்கிறார் பேட்மன். இது ‘அடுத்த கட்ட தாக்குதலுக்கானத் தயாரிப்பின் ஒரு பகுதி’ என்று கூறியிருக்கிறது.

 

தாக்குதலுக்கான எதிர்பார்ப்பு ஏன் முக்கியமானது?

ஆனால், கதையாடலின் வழியே நடத்தப்படும் போரும் முக்கியமானது, என்கிறார் பேட்மன்.

“படையெடுப்பு எந்த நேரமும் நடக்கலாம் என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருப்பது முக்கியம் என்று இஸ்ரேல் கருதுகிறது. மூன்று முக்கியக் காரணங்களுக்காக: ஒன்று, தன் மன உறுதியைத் தக்க வைத்துக்கொள்ள, அடுத்து, இஸ்ரேலின் உள்நாட்டு மக்களிடம் பதிலடி கொடுக்கப்படுகிறது என்பதைச் சொல்ல, மூன்றாவது, பணயக்கைதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க,” என்கிறார் பேட்மன்.

https://www.bbc.com/tamil/articles/ckred17dn42o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் வயெல்டாடோ தனது குடும்பத்தை இஸ்ரேலின் தாக்குதலில் இழந்துள்ள போதிலும அவரது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் - அல்ஜசீரா

Published By: RAJEEBAN   26 OCT, 2023 | 11:29 AM

image

காசாவின் மத்தியில்  இஸ்ரேலின் தாக்குதலால் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வயெல் டாடோசின் குடும்பத்தினர் கொல்லப்பட்டமைக்கு அல்ஜசீரா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நுசெய்ரட் அகதி முகாமில் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் அடைக்கலம் புகுந்திருந்தவேளை  இடம்பெற்ற இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனியர் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஊடகவியலாளரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் அராபிய பிரிவின் ஊடகவியலாளர் டமெர் அல்மிசால் ஊடகவியலாளர் டாடோசினை காசாவின் குரல் என வர்ணித்துள்ளார்.

வயெல் டாடோஸினை உலகபத்திரிகை துறையினதும் காசாவின் பத்திரிகை துறையினதும் தூண் என வர்ணித்துள்ள  அவர் பல வருடங்களாக இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்தியை அவரே வெளியிட்டுள்ளார் எனவும் டமெர் அல்மிசால் குறிப்பிட்டுள்ளார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் வயெல் தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவந்தார், காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக அவர் அங்கிருந்து வெளியேற மறுத்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது குரல் தொடரும் அதற்கான உத்தரவாதத்தை எங்களால் வழங்க முடியும் ஒவ்வொரு நாளும் உண்மையை கண்டுபிடிப்பதற்காக இந்த தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167774

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை - ஐநா

Published By: RAJEEBAN    26 OCT, 2023 | 03:55 PM

image

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை என பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லைன் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாக்குமாறும் அவர்கள் எங்கிருந்தாலும் உயிர்பிழைப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

வெளியேற்றும் பாதைகள் மீது குண்டுவீச்சு இடம்பெறுகின்றபோது வடக்கு தெற்கு மக்கள் மோதலில் சிக்குப்படும்போது உயிர் பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத போது மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்கள் இல்லாத போது மக்களிற்கு அசாத்தியமான வழிமுறைகளை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள்

இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது .

கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள் | Isreal New Announcement

எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள சிலர் ஆயுதங்கள் கொண்டு போராடியும் உள்ளனர்.

தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களிடம் ஆயுதங்கள் வைத்து கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி 

இந்நிலையில் தான் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலானது துப்பாக்கி விதிகள் அதிகம் கொண்ட நாடாகும்.துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதியும் கிடையாது .

இந்நிலையில் இஸ்ரேல் அரசு துப்பாக்கி விதியை தளர்த்தியுள்ளதோடு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவ அவசர உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளது.

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள் | Isreal New Announcement

குற்றப்பின்னணி

அத்துடன், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் மற்றும் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன் 50 துப்பாக்கிக்குண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 100 குண்டுகள் வைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/isreal-new-announcement-1698309257

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஊடகவியலாளர் வயெல்டாடோ தனது குடும்பத்தை இஸ்ரேலின் தாக்குதலில் இழந்துள்ள போதிலும அவரது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் - அல்ஜசீரா

இவர் மீள தொழிலுக்கு திரும்பி கடமையை செய்ய தொடங்கியுள்ளார்.

நினைத்துபார்க்க முடியாத சோகம், நெஞ்சுரம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன மனங்களை தலைமுறை தலைமுறையாக இறுகிப் போகும்படி ஆக்காதீர்கள். இஸ்ரேலின் அணுகுமுறையை மிதமாக கண்டிக்கிறார் ஒபாமா.

https://www.breitbart.com/middle-east/2023/10/23/obama-criticizes-israel-over-gaza-dont-harden-palestinian-attitudes-for-generations/

(இது ஒரு மோசமான அதி தீவிர வலதுசாரி தளம் என்பதை கருத்தில் கொள்க).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.