Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கை செல்லும் புதிய கப்பலில் கட்டணம் எவ்வளவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,

இந்திய இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை(KKS) துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் 14-ஆம் தேதியில் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

இதற்காக 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்து நிற்க வசதியாக துறைமுகத்தின் கரை பகுதி ஆழப்படுத்தப்பட்டது, மேலும் நாகப்பட்டினம் துறைமுகம் நவீனமாக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவங்கப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர்கள் துவங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா வேண்டுமா? கப்பலில் பயணிக்க கட்டணமாக எவ்வளவு? இந்த கப்பல் சேவையால் இரு நாட்டு உறவுகள் மேம்படுமா?

 

இலங்கை செல்லும் கப்பலில் உள்ள வசதிகள் என்ன ?

நாகப்பட்டினம் - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டது.

இந்த பயணிகள் கப்பலுக்கு "செரியபாணி" என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் கொண்ட குழுவினர் இயக்கும் இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகள் அமர்ந்தபடி பயணம் செய்யலாம்.

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,

செரியபாணி" என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம்.

 

கப்பலில் இலங்கை செல்ல கட்டணம் எவ்வளவு?

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் கடல் வழியாக 60 நாட்டிகல் மைல் தூரம் உள்ளது. இதனை பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் கடக்கிறது.

தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.

ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட சுங்கத்துறை அனுமதி வழங்கியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

இந்த கப்பலில் பயணிக்க 6500 ரூபாய் மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 7670 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,

இந்த கப்பலில் பயணம் செய்ய ரூ.7500 டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும்.

 

கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட், விசா தேவையா?

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்கிறார் துறைமுக அதிகாரி.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாகப்பட்டினம் துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாகப்பட்டினம் துறைமுகம் கடந்த 2 மாதத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரு மினி விமான நிலையம் போல மாறி இருக்கிறது." என்றார்.

"இனி நாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் கப்பலில் பயணிக்கும் பயணிகள் நேரடியாக வந்து கப்பலில் ஏறிவிட முடியாது. விமான நிலையம் போன்று பல கட்ட சோதனைகள் பின்பே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்குள்ளாகவே துறைமுகத்திற்குள் பயணிகள் வந்து விட வேண்டும்." என்றார்.

"துறைமுகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்புச் சோதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து டிக்கெட், விசா பரிசோதனை நடத்தப்படும்", என்றார் அவர்.

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,

இந்த கப்பலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன

 

50 கிலோ பொருட்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி

ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பொதி என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

இந்தியர் கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.

விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் எப்படி சுங்கத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமோ அதேபோல் கப்பல் பயணத்தின் போதும் ஆய்விற்குட்படுத்தப்படும்.

கப்பல் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7670 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன் லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையத்தளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,

இதில் பயணம் செய்ய பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம்.

 

கப்பல் போக்குவரத்து வணிகத்தை ஊக்குவிக்கும்

ரத்னவேல்
படக்குறிப்பு,

இரு வழி வணிகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து பயனளிக்கும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.

இரு வழி வணிகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து பயனளிக்கும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வணிக தொடர்புகளை அதிகரிக்கும். ஏற்கனவே, இந்தக் கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் - இலங்கை இடையே இயக்கப்பட்டது.

ஆனால், இடையில் இந்தச் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தற்போது மீண்டும் மத்திய அரசு துவங்கி இருப்பதை வணிகராக நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்", என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "இலங்கையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் எந்தப் பொருட்களுக்கு எடுத்துச் வர அனுமதி வழங்குகிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஆடைகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படலாம்.

 

அதேபோல், இலங்கையில் இருந்து வாசனை திரவியங்கள், மிளகு, சோம்பு போன்ற உணவுப் பொருள்கள் இந்தியாவிற்கு ( தமிழ்நாட்டிற்கு) கொண்டு வரப்படும், இதன் வழியாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் அதிகரிக்கும்", எனக் கூறினார்.

மேலும், "மதுரையில் இருந்து இலங்கைக்கு சென்று வர விமானத்தில் 15 ஆயிரம் ரூபாய் ஒரு வழி கட்டணம். ஆனால், தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் வழியாக சென்றால் வெறும் 7600 ரூபாய் மட்டுமே செலவாகிறது. கப்பலில் சென்று வர 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.

இதனால் தொழில் செய்யும் வணிகர்கள் அடிக்கடி இலங்கை சென்று தங்களது வணிகத்தை விரிவுபடுத்த இந்த கப்பல் சேவை உதவும்" என்றார்.

இராமநாதபுரம்: தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே குறைந்த தொலைவே உள்ளதால், சாலை போக்குவரத்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், மதுரையிலிருந்து யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cd172pwzxr2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 10 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒக்டோபர் (12) நேற்று என மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்றும் (12) சேவை ஆரம்பிக்காத நிலையில் தற்போது ஒக்டோபர் (14) நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் | India Srilanka Ship Service

சோதனை ஓட்டம்

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் கடந்த ஒக்டோபர் (08) இடம்பெற்றது.

காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் பங்கேற்பில் உள்ள சில சிக்கல் காரணமாக கப்பல் சேவை தாமதமடைவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 10 ம் திகதி சேவை ஆரம்பிக்கும் என நம்பி கப்பல் சேவையில் பயணிக்க இரண்டு நாட்டிலும் கணிசமானவர்கள் முகவர்கள் ஊடாக பயண சீட்டுக்களை பதிவு செய்த போதும் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கப்பல் சேவை எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் | India Srilanka Ship Service

கப்பல் போக்குவரத்து சேவை 

தற்போது சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் நிறுத்தப்பட்டு அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/india-srilanka-ship-service-1697162606?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 06:43, ஏராளன் said:

www.kpvs.in.

வெப்சைட்டை பார்த்தால் ஏதோ 3 வகுப்பு பிள்ளை project work க்கு செய்த மாதிரி இருக்கு.

Book now ஐ அமிழ்தினால். வட்சப்புக்கு போய் தனிப்பட்ட தகவல்களை கேட்கிறது.

நம்பிக்கை வரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார் !

Published By: DIGITAL DESK 3

14 OCT, 2023 | 10:02 AM
image
BBM__656x60__Virakesari.png

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது, 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்டதோடு மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும்.

596.jpg

இந்த பயணிகள் கப்பலுக்கு "செரியபாணி" என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. 

14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான குறித் கப்பல் சேவையை இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

Capture.JPG

இதன்போது உரையாற்றிய இந்திப் பிரதமர் நரேந்திர மோடி,

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்காக இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நன்றி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை இணைப்பை மேம்படுத்தவும்,  வர்த்தகத்தை மேம்படுத்தவும், நமது நாடுகளுக்கு  இடையே உள்ள நீண்டகால பிணைப்புகளை வலுப்படுத்தவும் உதவும் என இந்திய பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல அவசர உதவி மையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

386085512_895729988767056_17747965920786

இந்தியா சார்பல் இலங்கையில் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த முதலாவது பயணிகள் கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன்  இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம்  துறைமுகத்தை சென்றடையும்.

நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/166816

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வந்தடைந்தது இந்திய பயணிகள் கப்பல்

Published By: DIGITAL DESK 3

14 OCT, 2023 | 03:24 PM
image
 

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய பயணிகள் கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கப்பலில் பயணித்த பயணிகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த கப்பல் பயணமானது மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், பிரியோசனமாகவும் அமைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

370295282_849728199948101_44369245986085

குறித்த கப்பலானது நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம்  துறைமுகத்தை சென்றடையும்.

370330931_877155267172228_38978123219228

நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு பயணிகள் தயார் நிலையில் உள்ளனர். குறித்த கப்பல் மீண்டும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

387512742_246822414642120_58314486649195

https://www.virakesari.lk/article/166843

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231015-114110.jpg

5c34c33039786d56127814085996c054.jpg

☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் - எஸ்.ஜெய்சங்கர்

15 OCT, 2023 | 11:44 AM
image

(எம்.மனோசித்ரா) 

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆற்றல் சக்திகளை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குதல் என்பவற்றில் இருதரப்பு செயற்பாடுகள் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.  

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை படகு சேவை ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்றிருந்த நிலையில், நிகழ்நிலை ஊடாக உரையாற்றியபோதே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு சேவை  தொடங்கப்படுவதானது இலங்கை - இந்திய மக்களிடையேயான தொடர்புகளுக்கு முக்கியமான ஒன்றாகிறது. 

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகவே இது உள்ளது. பிரதமர் மோடி அரசாங்கத்தின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் உள்ளவர்களுக்கு உதவியுள்ளமை இந்த படகு சேவை மூலம் வெளிப்பட்டுள்ளது.

அயலகத்துக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கையுடன் இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நெருங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு தாராளமாக உதவ முடிகிறது. இதைத்தான் இந்தப் படகு சேவை வழியாகச் செய்ய முயல்கிறோம். இவ்வாறானதொரு முயற்சியின் பயனை பிரதமர் மோடி ஏற்கனவே அனுமதித்த சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவைகளில் வெளிப்பட்டுள்ளது.  

இலங்கையில் உள்ள அனைவரின் நலனிலும் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழ்நாட்டை தனது இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருக்கும் பிரதமரின் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதை யாரும் மறக்க முடியும்.

இதன் மூலம் இலங்கையில் வீடமைப்புத் திட்டங்கள், கலாசார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான வாய்ப்புகளுக்கு வழிவகுத்தன. எதிர்காலத்தில் ஆற்றல், சக்திகளை மையப்படுத்திய குழாய் இணைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்தியுள்ளோம்.  

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கு ஆதரவு வழங்குவோம்.

தொடர்புடைய இரண்டாவதாக, கடல் சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பேரிடர் ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இலங்கையுடன் மீண்டும் செயலில் ஈடுபட்டுள்ளோம். 

இந்த படகு சேவை மக்களிடையே கடல்சார் களத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் சுமுகமாக இயங்குவதற்கு இந்தியா வழங்கிய உதவிகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது. 

மேலும், இந்த படகு சேவை நேரடியாக சரக்கு சேவைகளை எளிதாக்கும். குறிப்பாக, சிறு வணிகத்துக்கு உதவும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/166891

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை ரத்து

இந்தியா – இலங்கைக்கு இடையேயான செரியபாணி கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் மூன்று நாட்களில் மாத்திரம் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கப்பல் சேவையை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக, இந்தியாவில் இருந்து 50 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து 30 பயணிகளும் செரியபாணி கப்பலில் பயணம் செய்தனர்.

இந்தநிலையில், போதிய அளவு பயணச்சீட்டு முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/277074

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை கப்பல் சேவை | ஜீ யின் டுபாக்கூர் திட்டம் | SHIP TO SRILANKA | DETAIL REPORT

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இந்தநிலையில், போதிய அளவு பயணச்சீட்டு முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பல் சேவைக்கு யார் target market? இந்திய இலங்கை வெளிநாட்டு மத்திய தர மக்கள்?

இப்படியானோரை கவர. கப்பல், விமான பயணங்களில் உயிர் ஆபத்து இல்லாமல் கொண்டு போய் சேர்பார்கள் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை அவசியம். 

ஒரு முறையான வெப்சைட், ஒன்லைன் புக்கிங் வசதி கூட இல்லை இவர்களிடம். இவர்களின் கப்பலில் உள்ள மிதவைகள், உயிர் காக்கும் உபகரணங்கள் என்ன நிலையில் இருக்குமோ? இந்த ஐயம் போதும், வியாபாரத்தை இழுத்து மூட.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

இந்திய இலங்கை கப்பல் சேவை | ஜீ யின் டுபாக்கூர் திட்டம் | SHIP TO SRILANKA | DETAIL REPORT

 

இவர் சொல்லுவதும் சிலது டுபாக்கூர் கதைதான். சென்னை கொழும்புக்கு 18 மணி நேரம் என நினைக்கிறேன். ஒருத்தரும் போகாமல் பல அண்மைய முயற்சிகள் நின்றன.

சென்னை-கொழும்பு, ராமேஸ்வரம்-தலைமன்னார்ரை விட, சென்னை-காங்கேசன்துறை தான் உள்ளதிலேயே வாய்ப்புள்ள தடம்.

இதை 6 மணியில் ஓட்டி, விலையையும் கம்மி பண்ணி, லகேக்கேஜையும் கூட்டினால் வாரம் 3 சேவையாவது நடத்த கூடிய வருமானம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 01:43, ஏராளன் said:

இதனால் தொழில் செய்யும் வணிகர்கள் அடிக்கடி இலங்கை சென்று தங்களது வணிகத்தை விரிவுபடுத்த இந்த கப்பல் சேவை உதவும்" என்றார்

 

பயணம் செய்யும் போது தண்ணீர் சாப்பாடுகளையும் கொண்டு போங்கள்.

ஏற்கனவே பயணம் செய்தவர்கள் தொண்டை வரண்டு போய் வந்திறங்கியுள்ளனர்.

On 13/10/2023 at 14:24, goshan_che said:

வெப்சைட்டை பார்த்தால் ஏதோ 3 வகுப்பு பிள்ளை project work க்கு செய்த மாதிரி இருக்கு.

Book now ஐ அமிழ்தினால். வட்சப்புக்கு போய் தனிப்பட்ட தகவல்களை கேட்கிறது.

நம்பிக்கை வரவில்லை.

அவளைத் தொடுவானேன்

கவலைப்படுவானேன்.

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20231015-114110.jpg

5c34c33039786d56127814085996c054.jpg

☺️..😊

இது தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு முறையான வெப்சைட், ஒன்லைன் புக்கிங் வசதி கூட இல்லை இவர்களிடம். இவர்களின் கப்பலில் உள்ள மிதவைகள், உயிர் காக்கும் உபகரணங்கள் என்ன நிலையில் இருக்குமோ? இந்த ஐயம் போதும், வியாபாரத்தை இழுத்து மூட.

வெப்சைட் ஒன்லைன் பாவிக்காதர்களுக்காகத் தான் ஓடுதோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4918.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2023 at 22:56, ஏராளன் said:

இந்திய இலங்கை கப்பல் சேவை | ஜீ யின் டுபாக்கூர் திட்டம் | SHIP TO SRILANKA | DETAIL REPORT

 

ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நாகை - இலங்கை கப்பல் சேவை: அதிகாரிகள் விளக்கம்

ஒரே வாரத்தில் நாகப்பட்டினம்-இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தமா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆனால், ஒரே வாரத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் பயணிகள் பயணிக்க ஆர்வம் இல்லாதது கப்பல் சேவையை நிறுத்தக் காரணமா?

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் துவங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று "இந்த கப்பல் போக்குவரத்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்," எனப் பேசினார்.

 

கப்பலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு?

ஒரே வாரத்தில் நாகப்பட்டினம்-இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தமா?

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான 60 கடல் கடல் தொலைவை இந்த கப்பல் 3 முதல் 4 மணிநேரத்தில் கடக்கும். அதில், 150 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் அளவுக்கு இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கப்பலில் பயணிக்க 6,500 ரூபாய் கட்டணம் 18% ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 7,670 ரூபாய் வசூல் செய்யப்பட்டும் என அறிவக்கப்பட்டது.

நாகையில் இருந்து காலையில் புறப்பட்டு நண்பகல் வேளையில் இலங்கையைச் சென்றடையும். பிறகு பிற்பகலில் இலங்கையின் காங்கேசன்ட் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடையும்.

இந்த கப்பலில் பயணிக்க விமானத்தில் பயணிக்கத் தேவைப்படுவது போல விசா கட்டாயம் பெறவேண்டும். அதேபோல் 50 கிலோ எடையை மட்டுமே பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

மூன்று நாட்களாக மாற்றப்பட்ட கப்பல் சேவை

ஒரே வாரத்தில் நாகப்பட்டினம்-இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தமா?

நாகைக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை போதிய பயணிகள் டிக்கெட் முன்பதிவு இல்லததால் தொடங்கிய நாளில் 60% வரை டிக்கெட் சலுகை அளிக்கப்பட்டது.

ஆனால், கப்பல் சேவை தொடங்கியதற்கு அடுத்த நாள் அக்டோபர் 15ஆம் தேதி கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அன்று கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 16ஆம் தேதியில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

ஒரே வாரத்தில் நாகப்பட்டினம்-இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தமா?

இந்நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் நாகை - இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியது.

பயணிகளிடம் கப்பலில் இலங்கை செல்ல ஆர்வம் குறைவாக இருப்பதால் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கப்படுமா?

இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இத குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், "நாகப்பட்டினம், இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பதால் நிறுத்தப்படவில்லை.

 
ஒரே வாரத்தில் நாகப்பட்டினம்-இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தமா?

அடுத்த இரண்டு மாதத்திற்கு இலங்கை, இந்தியாவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும்.

அந்த மோசமான வானிலையின்போது கடலில் பயணிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் இந்தக் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்தக் கப்பல் போக்குவரத்து கடல் சீரான பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும்," என பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணித்த பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு?

நாகப்பட்டினம், இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்து அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

கடந்த 7 நாட்களில் மட்டும் எவ்வளவு பேர் பயணித்தார்கள் என்பது குறித்து டிக்கெட் விற்பனை செய்த ஏஜெண்ட் நிறுவனத்திடம் கேட்டபோது, "இந்த கப்பலில் எவ்வளவு பேர் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து தற்போது தெரிவிக்க இயலாது.

நாளை வரை பயணிகள் கப்பல் சேவை இருப்பதால் நாளை இலங்கையில் இருந்து கப்பல் நாகப்பட்டினம் வந்து அடைந்த பிறகே எவ்வளவு பேர் பயணித்தார்கள் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்," என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c3gr3771yx8o

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

அந்த மோசமான வானிலையின்போது கடலில் பயணிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் இந்தக் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஏனைய மாதங்களில் கடல் கொந்தளிக்காதா ஆபீசார்?

அப்படி கொந்தளித்தால்….கோவிந்தா…கோவிந்தா வா ஆபீசார்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.