Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
12 OCT, 2023 | 07:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்து கொள்ளுமாறு  எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூலம் எங்களுக்கு  பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரியான விடயங்கள் இருக்கின்றன. அதுதான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்பட அவர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசியல் பேதங்களை பின்தள்ளிவிட்டு ஒன்றாக இணைந்துசெயற்பட இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீர்மானம் இலங்கைக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது. 

இலங்கை பொருளாதார ரீதியில் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில்  இலங்கையிலும் எதிர்க்கட்சிக்கும் வேறு அரசியல் கட்சிகளுக்கும் தற்போது இருக்கும் பொறுப்பு இதுவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேல் இளைஞர் யுவதிகள் தங்களின் நாட்டுக்கு வந்து, தற்போது நாட்டுக்காக செயற்பட தயாராகி வருகின்றனர்.

 தங்கள் நாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் இளைஞர் யுவதிகள் தங்களின் கடமையை செய்வதற்கு முன்னுக்கு வருகிறார்கள். இதுவும்  எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.

அதனால் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு  நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு  இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/166731

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:
 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூலம் எங்களுக்கு  பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரியான விடயங்கள் இருக்கின்றன. அதுதான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்பட அவர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சியில் இருந்து கரு ஜயசூரிய உடன் ஒரு கூடடம் அரசுக்கு ஆதரவு வழங்கியதை இவருக்கு தெரியாது போலும். இஸ்ரேலிலும் அப்படிதான் அவர்கள் ஆதரவு வழங்குகிறார்கள். மற்றப்படி கொள்ளை அடிப்பதட்கு  ஆதரவை இவர் எதிர்பார்க்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏலவே இஸ்ரேலின் மொசாட்டின் வழிகாட்டலில் தானே ரணில்..ஜே ஆர் தலைமையில்.. தமிழினப் படுகொலையை.. இன  அழிப்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தவை.... இப்பவும் தொடருது.. ! இது போதாதோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1950 களின் ஆரம்பத்தில் இஸ்ரேல், விரல் சூப்பி கொண்டிருந்த போதே….

கல்லோயா திட்டம் என்ற குடியேற்ற திட்டத்தை சுதந்திரம் கிடைத்து சொற்ப நாட்களில் தயாரித்து, அமல் படுத்தி, 1956 கல்லோயா படுகொலைகளையும் நடத்தி, தனி சிங்கள சட்டத்தையும் கொண்டு வந்த முன்னோடிகள் ஐயா நீங்கள். 

இன்று வரை இனநலம் என்றால் ஒற்றுமையாகி விடுவதில் இஸ்ரேலும், முஸ்லிம்களும் கூட உங்களுக்கு பின்னேதான்.

உங்களுக்கு இஸ்ரேல் எல்லாம் ஜுஜுப்பி. உங்களை பார்த்துத்தான் இஸ்ரேல் பாடம் படிக்க வேண்டும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.