Jump to content

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மதத்திற்கானதா?

பொதுவாக ஒன்றோடு ஒன்று முறுகும் குழுக்களை எடுத்து பாருங்கள். இனம் (மொழி) அல்லது மதம் வேறுபட்ட குழுக்களே இப்படி மோதி கொள்ளும்.

எமக்கும் சிங்களவருக்கும் இனம்(மொழி), மதம் இரெண்டும் வேறு அடிபடுகிறோம். நாம் அனைவரும் பெளத்தராக அல்லது சைவராக இருந்திருப்பின், சிங்களவர் எம்மீது இத்தனை மோசமான அடக்குமுறையை அவிழ்த்து விட்டு இருக்கார். இப்படி அடிபட்டிருக்க மாட்டோம்.

இங்கே - யூதர் ஒரு இன குழுவும், மதமும். உதாரணமாக ஒரு யூதராய் பிறந்த நாத்திகர் இப்போதும் யூதர்தான். அதே போல் ஒரு தமிழ் இந்துவாய் பிறந்து யூத மதத்தை தழுவினால் அவரும் யூதரே.

ஆனால் யூத அடையாளத்தின் மிக மிக மிக முக்கியமான கூறு யூத மதம். இஸ்ரேலில் உள்ள அதன் மத தலங்கள். குறிப்பாக ஜெருசலேமில் உள்ள கோவில் மலை (Temple Mount). மண் மீட்பில், மிக முக்கியமாக இந்த புனித மண் மீட்பும் அடங்குகிறது.

அதே போல் இஸ்ரேலிய நாட்டுரிமையில் (citizenship) - யூதருடன் 2.1 மில்லியன் அரபிகளும் (முஸ்லிம் +கிறிஸ்தவர்) அடங்குவர்.

மறுபக்கமாக - பலஸ்தீனியர் இனத்தால் அரபிகள். ஆனால் மதத்தால் முஸ்லிம், மிக சிறுபான்மையாக கிறிஸ்தவர்.

மெக்கா, மெதினா வுக்கு அடுத்து உலக முஸ்லிம்களின் 3வது புனித தலமான அல் அக்சா மசூதி, கோவில் மலைக்கு அருகில் சேர்ந்தாற்போல் உள்ளது.

இந்த புனித மண்ணை மீட்பது, பலஸ்தீனியரின் மண் மீட்பிலும் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆகவே இது ஆரம்பம் முதலே மதம் சம்பந்த பட்ட பிரச்சனையும்தான்.

மண், இனம், மதம் மூன்றும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவாறு பிண்ணி பிணைந்த பிணக்கு இது.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

island

@நியாயம் கோஷானின் இந்த கேள்விக்கான நேர்மையான பதிலை வழங்குவதே உங்கள் ஆதங்கத்திற்கான பதிலாக இருக்கும். பாலஸ்தீனிய பிரச்சனை அந்த மக்களின் பிரச்சனை. அதையும் இலங்கையில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இட

நிழலி

இந்த என் பதிலை, உங்களுக்கானது என்று ஏன் கருதினீர்கள் என விளங்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு தனி அலகு வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டில் இருக்கும் உங்களை நினைத்து அதை எழுதவில்லை. தாயகத்தில் முஸ்லிம

நிழலி

நான் 2007 வரைக்கும் அங்குதான் இருந்தேன். அத்துடன் மாற்று அரசியல் பத்திரிகை சரிநிகரில்  எழுதுகின்றவனாகவும் இருந்தேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு.... இன்று மலையக தமிழ் மக்கள் கூட, தம் இன அடையாள

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சொந்த மண்ணிற்கானது. இனத்திற்கானது. ஆனால்,   ஹமாஸ் இயக்கம் அதை மதப் போராட்டமக  மாற்ற  முனைகிறது.  இந்தச் சாட்டில் பலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்யலாம்  என்ற ரீதியில் இஸ்ரேலும் இதை மதப்போராட்டமாக பார்ககவே விரும்புவதாகத் தெரிகிறது. 

பலஸ்தீனத்திற்கென்று அப்பாஸ் தலைமியிலான ஒரு அரசாட்சி இருக்கின்றது என்பதையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொரு மிக முக்கியமான மதப்பிண்ணனியும் உண்டு.

1. யூதர்கள் தம்மை ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு என நம்புகிறார்கள். இஸ்ரேல் என்ற தேசத்தை ஆண்டவன் அவர்களுக்கு வாக்களித்தார் என நம்புகிறார்கள். தொலைக்கப்பட்டு, யூத இனம் சிதறடிக்கப்பட்டு பின் இந்த நாடு தெய்வச்செயலால் (divine intervention) யூதரிடம் மீளும் என நம்புகிறார்கள்.

பல ஜடா முடி பழமைவாத யூதர் இஸ்ரேலை எதிர்ப்பதை கண்டிருப்பீர்கள்? ஏன்? ஏன் என்றால் இவர்கள் இப்போ இருக்கும் இஸ்ரேல் மனித முயற்சியால் உருவானது - இறைவன் உருவாக்கி தரும் வரை நாமாக அதை உருவாக்குவது தெய்வ நிந்தனை என நினைப்போர்.

2. மறுவளமாக முஸ்லிம்கள் இறுதி நாளில் அட் டஜ்ஜால் (கிறிஸ்தவருக்கு அண்டி கிறைஸ்ட்) க்கும் மீள இறங்கி வந்த ஈஸா நபிக்கும் (யேசு) யுத்தம் வரும் என நம்புகிறார்கள்.  ஈஸா முதல் முறை வந்த போது யூதர் அவருக்கு இழைத்த தீமை, மேலும் அல்லாஹ் (ஏக இறைவன்) வின் கட்டளைகளை மீறிய பல குற்றங்களுக்காக முஸ்லிம்கள் யூதரை அழித்தொழிக்கும் படி ஆகும் என நம்புகிறார்கள்.

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِىءَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ وَالشَّجَرُ: يَامُسْلِمُ يَاعَبْدَاللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُود»

(The Hour will not start, until after the Muslims fight the Jews and the Muslims kill them. The Jew will hide behind a stone or tree, and the tree will say, `O Muslim! O servant of Allah! This is a Jew behind me, come and kill him.' Except Al-Gharqad, for it is a tree of the Jews.)

முஸ்லிம்கள் யூதருடன் போரிட்டு அவர்களை கொல்லும் வரை, இறுதி மணத்தியாலம் வந்து சேராது. யூதர் மரங்கள் அல்லது பாறைகள் பின்னால் ஒழிந்து கொள்வர். ஆனால் அவை “ஓ நம்பிக்கையாளனே, அல்லாஹ்வின் சேவகனே, யூதன் என் பின்னால் உள்ளான், வா வந்து அவனை கொல்” என கூறும்.

ஒரே ஒரு மரம் மட்டும் யூதனை பாதுகாக்கும், ஏன் என்றால் அது யூதனிம் மரம்.

https://quran.com/en/an-nisa/155/tafsirs 

இந்த வரிகளை முஸ்லிம்கள் தமது இறுதி தீர்ப்பு நாளும், அல்லாஹ்வின் ஆட்சியும், நிரந்தர அமைதியின் ஆட்சியகமாக (தாருஸ்ஸலாம்) உலகம் அமைய முன் முஸ்லிம்களுக்கும் யூதருக்கும் போர் நடந்து அதில் யூதர் அழித்தொழிக்கப்படுவர் என நம்புகிறார்கள்(யூதரை காட்டி கொடுக்காத ஒரே மரம் அமரிக்க?).

ஆகவே ஹமாசின், ஹிஸ்புல்லாவின், தாலிபானின், குறிப்பாக ஈரானின் - இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தொழிப்போம் என்ற அறைகூவலின் ஊற்றுக்கண் இந்த நம்பிக்கைதான்.

இங்கே எப்படி இறுதி நாள் பற்றிய யூதரினதும், முஸ்லிம்களினதும் நம்பிக்கை எதிரும், புதிருமாக இருக்கிறது என்பதை காண்கிறோம்.

நான் மேலே சொன்ன, மண், இன காரணங்கள் சகலதையும் விட மிக வலிமையான காரணி இந்த நம்பிக்கை.

இந்த நம்பிக்கையே யூத-முஸ்லிம் முறுகலின் முதலும், முடிவும்.

 

 

 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.[1] இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துகொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_இராமநாதன்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த சொந்த மண் என்ற கான்செப்ட் கொஞ்சம் மேலோட்டமானது. 

இலங்கை நாகர்களினதும் இயக்கர்களினதும், வேடர்களினதும் சொந்த மண் என்கிறார்கள்.

ரோமன் (இத்தாலி), வைகிங் (ஸ்கெண்டினேவியா),  சக்சன் (, ஜேர்மனி), நோர்மன் (பிரெஞ்சு) இத்தனை பேரும் - உள்ளூர்வாசிகளான கெல்டிக்/செல்டிக் மக்களிடம் இருந்து பறித்த இடம்தான் இங்கிலாந்து. இவர்கள் எல்லாரினதும் கூட்டு கலவைதன் இன்றைய ஆங்கிலேயர்.

அவுஸ்ரேலியாவில் அபர்ஜினிகள் பூர்வ குடிகள் என்கிறோம். அவர்களே இடம்பெயர்ந்து அங்கே போனவர்கள் என்கிறது அண்மைய ஆராய்சி முடிவுகள்.

இப்படி அலை அலையாக குடியேற்றமும், குடியகலலும் மீள் குடியேறறமும் நிகழ்ந்த பூமிதான் இன்றைய இஸ்ரேல்/பலஸ்தீன்.

ஆகவே இது இருவருக்குமான  சொந்த மண்.

இந்த போராட்டங்கள் அடிப்படையில் மண்ணுக்கானதே.

குறித்த ஒரு மண்ணின் ஆளுகை இனம் சார்ந்துதானே இருக்கிறது. இன்ன இனத்தின் ஆட்புலம் இந்த மண். இல்லை அது வேறு ஒரு இனத்தின் ஆட்புலம் என்பதுதான் இலங்கை முதல் இஸ்ரேல் வரை பிரச்சனை. 

ஆகவே மண்ணுக்கானது = இனத்துக்கானது.

நான் நினைக்கின்றேன்.....

இன்று....இனி வரும் காலங்களில் வெள்ளையோ கறுப்போ சொந்த மண், இன வரலாறுகள் எங்கும் எடுபடாது என....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நான் 2007 வரைக்கும் அங்குதான் இருந்தேன். அத்துடன் மாற்று அரசியல் பத்திரிகை சரிநிகரில்  எழுதுகின்றவனாகவும் இருந்தேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு....

இன்று மலையக தமிழ் மக்கள் கூட, தம் இன அடையாளத்தை 'மலையகம்' என்ற ஒற்றைப் பதத்துக்குள் கொண்டுவர அரசியல் ரீதியிலான முயற்சிகளை காத்திரமாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

ஒரு இனம், தன்னை எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என்பதை வெளியார் தீர்மானிக்க முடியாது. அது தன்னை நிலை நிறுத்த எது அவசியமோ அதை தெரிவு செய்யும்.

மற்றது வடக்கு கிழக்கு இணைப்பு: இதில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களில் எத்தனை வீதமானோர் இதற்கு சம்மதிப்பார்கள் என்பதே கேள்விக் குறி. சாதி வெறி பிடித்து, தமக்குள் இருக்கும் மக்களையே ஒதுக்க நினைக்கும் வடக்கு தமிழ் மக்களின் மேலாதிக்கத்தை வெறுக்க நினைப்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல.
 

உங்களின் நிலைமை எனக்கு புரிகின்றது. ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும். 

10 hours ago, island said:

அவர்கள் இலங்கையர்களாக அடையாளப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும. என்று சிங்கள பேரினவாதி கூறுவதைப் போன்றது உங்கள் கருத்து. 

தமிழர்களோ, சிங்களவர்களோ யாராக இருந்தாலும் இலங்கையில் பிறந்தால் இலங்கையர்கள்தான். வேறு எங்கும் போய் குடியுரிமையை மாற்றும் வரைக்கும் இலங்கையர்கள்தான். அதை பேரினவாதிகள்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை இலங்கையர்கள் என்று அடையாளப்படுத்தி பிரச்சினை தீர்க்கப்படுமானால் பிரச்சினை இல்லை. 

Edited by Cruso
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதில் இன்னொரு மிக முக்கியமான மதப்பிண்ணனியும் உண்டு.

1. யூதர்கள் தம்மை ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு என நம்புகிறார்கள். இஸ்ரேல் என்ற தேசத்தை ஆண்டவன் அவர்களுக்கு வாக்களித்தார் என நம்புகிறார்கள். தொலைக்கப்பட்டு, யூத இனம் சிதறடிக்கப்பட்டு பின் இந்த நாடு தெய்வச்செயலால் (divine intervention) யூதரிடம் மீளும் என நம்புகிறார்கள்.

பல ஜடா முடி பழமைவாத யூதர் இஸ்ரேலை எதிர்ப்பதை கண்டிருப்பீர்கள்? ஏன்? ஏன் என்றால் இவர்கள் இப்போ இருக்கும் இஸ்ரேல் மனித முயற்சியால் உருவானது - இறைவன் உருவாக்கி தரும் வரை நாமாக அதை உருவாக்குவது தெய்வ நிந்தனை என நினைப்போர்.

2. மறுவளமாக முஸ்லிம்கள் இறுதி நாளில் அட் டஜ்ஜால் (கிறிஸ்தவருக்கு அண்டி கிறைஸ்ட்) க்கும் மீள இறங்கி வந்த ஈஸா நபிக்கும் (யேசு) யுத்தம் வரும் என நம்புகிறார்கள்.  ஈஸா முதல் முறை வந்த போது யூதர் அவருக்கு இழைத்த தீமை, மேலும் அல்லாஹ் (ஏக இறைவன்) வின் கட்டளைகளை மீறிய பல குற்றங்களுக்காக முஸ்லிம்கள் யூதரை அழித்தொழிக்கும் படி ஆகும் என நம்புகிறார்கள்.

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِىءَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ وَالشَّجَرُ: يَامُسْلِمُ يَاعَبْدَاللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُود»

(The Hour will not start, until after the Muslims fight the Jews and the Muslims kill them. The Jew will hide behind a stone or tree, and the tree will say, `O Muslim! O servant of Allah! This is a Jew behind me, come and kill him.' Except Al-Gharqad, for it is a tree of the Jews.)

முஸ்லிம்கள் யூதருடன் போரிட்டு அவர்களை கொல்லும் வரை, இறுதி மணத்தியாலம் வந்து சேராது. யூதர் மரங்கள் அல்லது பாறைகள் பின்னால் ஒழிந்து கொள்வர். ஆனால் அவை “ஓ நம்பிக்கையாளனே, அல்லாஹ்வின் சேவகனே, யூதன் என் பின்னால் உள்ளான், வா வந்து அவனை கொல்” என கூறும்.

ஒரே ஒரு மரம் மட்டும் யூதனை பாதுகாக்கும், ஏன் என்றால் அது யூதனிம் மரம்.

https://quran.com/en/an-nisa/155/tafsirs 

இந்த வரிகளை முஸ்லிம்கள் தமது இறுதி தீர்ப்பு நாளும், அல்லாஹ்வின் ஆட்சியும், நிரந்தர அமைதியின் ஆட்சியகமாக (தாருஸ்ஸலாம்) உலகம் அமைய முன் முஸ்லிம்களுக்கும் யூதருக்கும் போர் நடந்து அதில் யூதர் அழித்தொழிக்கப்படுவர் என நம்புகிறார்கள்(யூதரை காட்டி கொடுக்காத ஒரே மரம் அமரிக்க?).

ஆகவே ஹமாசின், ஹிஸ்புல்லாவின், தாலிபானின், குறிப்பாக ஈரானின் - இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தொழிப்போம் என்ற அறைகூவலின் ஊற்றுக்கண் இந்த நம்பிக்கைதான்.

இங்கே எப்படி இறுதி நாள் பற்றிய யூதரினதும், முஸ்லிம்களினதும் நம்பிக்கை எதிரும், புதிருமாக இருக்கிறது என்பதை காண்கிறோம்.

நான் மேலே சொன்ன, மண், இன காரணங்கள் சகலதையும் விட மிக வலிமையான காரணி இந்த நம்பிக்கை.

இந்த நம்பிக்கையே யூத-முஸ்லிம் முறுகலின் முதலும், முடிவும்.

 

 

 

 

இப்போது நடப்பது ஒரு மத போராட்டமே. பாலஸ்தீனர்கள் என்று சொல்பவர்கள் அரபியர்கள் இல்லை. எல்லா அரபு நாடுகளும் அவர்கள் முஸ்லீம் என்ற ரீதியிலேயே அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன.

சுருக்கமாக கூறினால், இஸ்ரவேலரின் தேசம் இஸ்ரவேலரால் குடியேற்றப்பட்டு அந்த பூமி  செழிப்படையவேண்டும். சிதறுண்ட இஸ்ரயேலர் எல்லாம் வந்து சேர வேண்டும். இப்போது அவை எல்லாம் நடந்து முடியும் நிலைமையில் இருக்கின்றது.

விவிலிய நூலின்படி கிறிஸ்துவின் ரகசிய வருகையின் பின்னர் உலகில் அந்தி கிறிஸ்து (Anti Christ ) வருவான். அப்போது உலகெங்கும் சமாதானம் உண்டாகும். யூதர்கள் தங்களது தேவாலயத்தை அப்போது எருசலேமில் கட்டுவார்கள்.

ஆனால் மூன்றரை வருடங்களின் பின்னர் யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அதுவரைக்கும் யூதரை எவராலும் அழிக்க முடியாது. ஒரு சிறிய கூடடம் மட்டும் பாதுகாக்கப்படும். அதன் பின்னர் millennium அரசாட்சி உருவாகும்.

இப்போது யுத்தம் அழிவுகள் நடந்தாலும் அந்த நாள் வரைக்கும் Israel  தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அதே போல் இஸ்ரேலிய நாட்டுரிமையில் (citizenship) - யூதருடன் 2.1 மில்லியன் அரபிகளும் (முஸ்லிம் +கிறிஸ்தவர்) அடங்குவர்.

மறுபக்கமாக - பலஸ்தீனியர் இனத்தால் அரபிகள். ஆனால் மதத்தால் முஸ்லிம், மிக சிறுபான்மையாக கிறிஸ்தவர்.

 

ஆம் உண்மை 25 வருடங்களுக்கு முன் துபாயில் என்னுடன் வேலை செய்த வில்லியம் ஒரு கிறிஸ்தவர், இவர் ஒரு பல‌ஸ்தீனியராக தன்னை அடையாளப்படுத்தி கொள்வார். ஆனால் இவருடையா கடவுச்சீட்டு ஜோர்டான். 

இவருடைய தாயர் ஒரு பலஸ்தீனியர் ஆனால் இஸ்ரேல் கடவுச்சீட்டுள்ளவர். இவர் ஜோர்டானில் இறங்கி தரைவழியூடாக விசேட அனுமதி பெற்றே இஸ்ரேல் சென்று தனது தாயரை ஒவ்வோரு வருடமும் சந்தித்து வருவார். அக்காலத்தில் தாயாரை துபாய்க்கு அழைக்க முடியாது ஏனென்றால் அவர் இஸ்ரேலிய குடிமகள். 

பெரும்பாலனா பலஸ்தீனியர்கள் ஜோர்டான் நாட்டு கடவுச்சீட்டையே வைத்துள்ளார்கள், ஆனால் தம்மை ஜோர்டானியர்களாக அடையாளபடுத்துவதில்லை, பலஸ்தீனியர்களாகவே அடையாளப்படுத்துவார்கள். இவர்களது கடவுச்சீட்டு வேறு ஒரு சீரியல் இலக்கத்தில் இருக்கும், இது ஒரிஜினல் ஜோர்டானியன் குடிமகனுக்கு தெரியும், அவர்களது அரச நிர்வாகத்தில் அப்படியுள்ளது. 

இதில் இன்னொரு விந்தையென்ன‌வென்றால் பலஸ்தீனிய அரசும் இவ்ர்களுக்கு கடவுச்சீட்டு வழகுகின்றது, இதை பாவித்து சில அரபு நாடுகளுக்கு செல்லலாம் வேலை செய்யலாம், ஆனல் எந்த ஒரு ஐரோப்பிய / அமெரிக்கா நாடும் வீசா கொடாது. மேலைத்தேய நாடுகளை பொறுத்தவர பலஸ்தீன் ஒர் அங்கீகரிக்கப்பட்ட்ட  நாடல்ல. காரணம் இவர்கள் நாடற்றவர்கள் (stateless) எந்த மேலைத்தேய நாட்டிலும் இவர்களுக்கு இந்த stateless அடிப்படையில்  அகதிக்கோரிக்கை வைத்து இலகுவாக உட்பிரவேசித்து அந்த‌ நாட்டின் குடியுரிமையை இலகுவாக பெறலாம்.   

மூன்றாவதாக இன்னுமோர் வகையுண்டு, இவர்கள் லெபனான் போன்ற நாட்டின் Travel Document மாத்திரம் கொண்டவர்கள் என்னுடடைய முன்னாள் மேலதிகாரி ரம்ஸி, லெபனான் நண்பியின் கணவர் இந்த  குறுப்பில் உள்ளார்கள். டுபாயில் பிறந்து படித்து வளர்ந்த இவர்களுக்கு டுபாய் அரசாங்கம் ஒருபோதும் குடியுரிமை வழங்குவதில்லை, இரண்டு தலை முறைறையாக லெபனான் Travel Document வைத்திருக்கும் இவருக்கு லெபனான் கடவுச்சிட்டு கொடுக்காது. இன்றுரை ரம்ஸிக்கு கட்டருக்கு வர முடியவில்லை காரணம் இவர் ஒரு Travel Document Holder (பாஸ்போட் அல்ல) எல்லா வசதியிருந்தும், குறிப்பிட்ட ஒன்றிரண்டு அரபு நாடுகளை தவிர எங்கும் செல்ல முடியாது.  எந்த மேற்கத்தேய நாடும் இவர்களுக்கு வீசா கொடுக்காது.

இதானால்தான் இவர்கள் எப்படியாவது பணத்திற்கு  இலகுவாக கடவுசீட்டு விற்கும் நாடுகாளான, சிலீ, பெரு, வெனிசுவேலா, சென். லுசியா, க்ர‌னாட போன்ற தென்னமேரிக்க, கரீபியன் நாடுகளில் பண்த்தை கொடுத்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்கின்றார்கள். 

6 hours ago, goshan_che said:

இதில் இன்னொரு மிக முக்கியமான மதப்பிண்ணனியும் உண்டு.

1. யூதர்கள் தம்மை ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு என நம்புகிறார்கள். இஸ்ரேல் என்ற தேசத்தை ஆண்டவன் அவர்களுக்கு வாக்களித்தார் என நம்புகிறார்கள். தொலைக்கப்பட்டு, யூத இனம் சிதறடிக்கப்பட்டு பின் இந்த நாடு தெய்வச்செயலால் (divine intervention) யூதரிடம் மீளும் என நம்புகிறார்கள்.

பல ஜடா முடி பழமைவாத யூதர் இஸ்ரேலை எதிர்ப்பதை கண்டிருப்பீர்கள்? ஏன்? ஏன் என்றால் இவர்கள் இப்போ இருக்கும் இஸ்ரேல் மனித முயற்சியால் உருவானது - இறைவன் உருவாக்கி தரும் வரை நாமாக அதை உருவாக்குவது தெய்வ நிந்தனை என நினைப்போர்.2.

3 hours ago, Cruso said:

இப்போது நடப்பது ஒரு மத போராட்டமே. பாலஸ்தீனர்கள் என்று சொல்பவர்கள் அரபியர்கள் இல்லை.

 

இவர்கள் அரபியர்களே

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

பாலஸ்தீனர்கள் என்று சொல்பவர்கள் அரபியர்கள் இல்லை

யாழ்ப்பாணத்தில் ஒரே சாதியைசேர்ந்தோரே “நாம் அவர்களை விட கொஞ்சம் கூட” எண்டு சொல்லகேட்டிருப்பீர்கள்.

அதே போலத்தான் இதுவும். சவுதி, யூஏஈ, பக்கத்து அரபிகள் தம்மை தூய அரபிகளாயும், ஏனையோரை ஜிப்சிகள், கிரேக்கர், பார்சி, ஆப்கானி, கலந்த, பெடுயீன் இனங்கள் கலந்த கலப்பு அரபிகளாயும் கருதுகிறனர்.

இது ஓரளவு உண்மையும் கூட, அரேபிய தீபகற்பத்துக்கு அருகில் இருப்பவரே மொகமதுவுடன் பரம்பரை தொடர்புடைய அரபிகள். எகிப்து, ஜோர்தான், வட ஆபிரிக்கா வந்தேறி+பல்லின கலப்பு அரபிகள். இதில் எல்லாரும் இளக்காரமாக, சில அரபிகள் அரபி என்றே ஏற்காதோர் பலஸ்தீனர்.

இவர்கள் பேசும் அரபு மொழிகள் கூட வேறு வேறு பட்டவை.

ஒரு யேமன் அரபி பேசுவதை ஒரு எகிப்திய அரபி புரிந்து கொள்ள மிகவும் கஸ்டப்படுவார். 

7 hours ago, colomban said:

இவர்கள் அரபியர்களே

 

இந்த சவுதி அரேபிய அரபி, பலஸ்தீனரை பற்றி கூறுவதை கேளுங்கள். அவர்களை அரபிகளே இல்லை என்கிறார். இதுதான் பல தீபகற்ப அரபிகளின் நிலைப்பாடு.

அரபாத் அரபி தலைப்பாகை போடுவதை கூட நக்கலடித்தனர் என்பார்கள்.

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

மேலைத்தேய நாடுகளை பொறுத்தவர பலஸ்தீன் ஒர் அங்கீகரிக்கப்பட்ட்ட  நாடல்ல. காரணம் இவர்கள் நாடற்றவர்கள் (stateless) எந்த மேலைத்தேய நாட்டிலும் இவர்களுக்கு இந்த stateless அடிப்படையில்  அகதிக்கோரிக்கை வைத்து இலகுவாக உட்பிரவேசித்து அந்த‌ நாட்டின் குடியுரிமையை இலகுவாக பெறலாம்

இது சரியல்ல. Stateless என்பதன் அர்த்தம் இந்த வகையில் நாடற்றவர் என்பதல்ல. அதன் அர்த்தம் எந்த ஒரு நாட்டினதும் குடியுரிமை அல்லது Right to return இல்லாதவர் என்பதே. அப்போது இப்படி மேற்கில் தங்குவது கொஞ்சம் சுலபமாகும். பெரும்பாலான பலஸ்தீனருக்கு, மேற்கு கரை/காஸா/ஜோர்டான் மூன்றில் ஒரு இடத்துக்கு right to return இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2023 at 10:20, நன்னிச் சோழன் said:

சரி, அதெல்லாம் கிடக்கட்டும்.

வசன அமைப்பில் மழுப்பல் வழுவல் இல்லாமல் தெளிவாகச் சொல்லுங்கள்.

  1. 1954 இங்கினியாக்கலை படுகொலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் முடிவாக தமிழர் படுகொலைகள் நடந்தது இனப்படுகொலையா இல்லையா?
  2. 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தமிழர்களுக்கு மேற்கொண்ட அட்டூழியங்கள் சரியா பிழையா? மன்னிப்பு முஸ்லிம் தரப்பு கேட்க வேண்டுமா இல்லையா? 

எங்க தெளிவாகச் சொல்லுங்கோ பார்ப்போம். 

முதலடியை நீங்கள் எடுத்து வையுங்கோ பார்ப்போம்!
 

1. இனப்படுகொலை

2. பிழை. மன்னிப்பு கேட்க வேண்டுமா இல்லையா என முஸ்லீம் தரப்புத்தான் கூறவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூராவும் இஸ்லாமியர்கள் இனவழிப்பு செய்கின்றனர் ,அரபு தேசத்து பணத்தில்...இதை ஒருத்தரும் கண்டு கொள்வதில்லை.யூதர்கள் மதம் பரப்புவதில்லை அவர்கள் பணம் கொடுத்து எந்த கிராமங்களையும் உருவாக்குவதில்லை..ஆனால் இஸ்லாமியர்கள் அப்படி இல்லை...

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.