Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.

யாழ்ப்பாணம் - கோப்பாய்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.

 

 

IMG_9139.jpg

IMG_9122.jpgIMG_9160.jpg

IMG_9182.jpg

IMG_9159.jpg

IMG_9152.jpg

IMG_9180.jpg

 

கொடிகாமம்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர் தின நிகழ்வுகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டன.

அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,சகோதரர்கள்,உறவுகள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

IMG-20231127-WA0201.jpg

IMG-20231127-WA0188.jpg

IMG-20231127-WA0185.jpg

IMG-20231127-WA0200.jpg

IMG-20231127-WA0189.jpg

IMG-20231127-WA0195.jpg

 

முல்லைத்தீவு 

இரட்டைவாய்க்கால்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம்  ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

IMG-20231127-WA0416.jpg

IMG-20231127-WA0412.jpg

IMG-20231127-WA0411.jpg

 

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற்கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.

IMG_20231127_20084065.jpg

IMG_20231127_20105252.jpg

IMG_20231127_20081670.jpg

IMG_20231127_20112439.jpg

IMG_20231127_20075435.jpg

IMG_20231127_20103950.jpg

IMG_20231127_20091949.jpg

IMG_20231127_20104304.jpg

IMG_20231127_20091470.jpg

IMG_20231127_20095146.jpg

IMG_20231127_20104676.jpg

IMG_20231127_20102404.jpg

 

வவுனியா

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றது.

இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகைச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதில் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

IMG-20231127-WA0098.jpg

IMG-20231127-WA0077.jpg

IMG-20231127-WA0073.jpg

IMG-20231127-WA0082.jpg

IMG-20231127-WA0074.jpg

IMG-20231127-WA0069.jpg

IMG-20231127-WA0079.jpg

IMG-20231127-WA0085.jpg

IMG-20231127-WA0097.jpg

IMG-20231127-WA0063.jpg

IMG-20231127-WA0088.jpg

IMG-20231127-WA0071.jpg

IMG-20231127-WA0064.jpg

IMG-20231127-WA0099.jpg

IMG-20231127-WA0089.jpg

IMG-20231127-WA0067.jpg

IMG-20231127-WA0076.jpg

IMG-20231127-WA0086.jpg

IMG-20231127-WA0068.jpg

IMG-20231127-WA0093.jpg

IMG-20231127-WA0100.jpg

IMG_20231127_20105252.jpg

 

மட்டக்களப்பு

மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை (27.11.2023) மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எனினும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடவோ, கார்த்திகை பூ சின்னங்கள் காட்சிப்படுத்தவோ அங்கு பொலிசார் அனுமதியளித்திருக்கவில்லை. மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள கற்பாறையில் ஏற்கனவே கார்த்திகை பூ ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதனையும் அகற்றுமாறும் பொலிசார் கோரினர். ஆனாலும் அதனை ஏற்பாட்டாளர்கள் கருத்திற் கொள்ளவில்லை.

மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளாத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு பொலிசார் நீதிமன்றத்தினூடாக ஞாயிற்றுக்கிழமை தடைஉத்தரைவைப் பிறப்பித்திருந்தனர். 

ஆனாலும் திங்கட்கிழமை நீதிமன்றிற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களது  சட்டத்தரணிகளுடாக தமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை விலக்கக் கோரி முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு  இந்நிகழ்வில் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் வகையிலான எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது கலந்து கொள்வதற்கு அனுமதியளித்திருந்தது.

அதற்கிணங்க இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மற்றும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

pho_mavadi__10_.jpeg

pho_mavadi__5_.jpeg

pho_mavadi__16_.jpeg

pho_mavadi__4_.jpeg

pho_mavadi__9_.jpeg

pho_mavadi__24_.jpeg

405891137_766529598824213_28796085804396

406213017_766529775490862_34104342260223

406240725_766529772157529_32398343736824

406265566_766529745490865_38273839001597

406332372_766529725490867_77952994986705

 

மட்டக்களப்பு - வாகரை

மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

406222502_766533615490478_91611517263420

406269793_766533552157151_75809734498827

405958361_766533598823813_84455941682412

406284907_766533562157150_74055351067332

405797849_766533572157149_77577103599242

406179137_766533602157146_85359631322052

 

மன்னார் 

மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக,கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது..

அந்த வகையில் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட   மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்..

 பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அரசியல் பிரதி நிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு   கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.15_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.14_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.02_PM_

WhatsApp_Image_2023-11-27_at_6.48.06_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.10_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.09_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.13_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.48.14_PM_

 

ஆட்காட்டிவெளி

மாவீரர் தினத்தையொட்டி மன்னார்   ஆட்காட்டிவெளி   மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு,மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர்  நினைவு   தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.  

தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர்  துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை  ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,  என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க   உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதே நேரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0132.JPG

WhatsApp_Image_2023-11-27_at_6.19.23_PM.

WhatsApp_Image_2023-11-27_at_6.19.24_PM_

WhatsApp_Image_2023-11-27_at_6.19.21_PM.

DSC_0174.JPG

DSC_0133.JPG

DSC_0125.JPG

 

திருகோணமலை

திருகோணமலை மாவட்டம் சம்பூர்  ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால்  தடுக்கப்பட்ட நிலையில்,  சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.

20231127_192927.jpg

வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் : கொடிகள் பொலிஸாரால் அறுப்பு ! | Virakesari.lk

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உறவுகளை உதிரத்தைக் கொட்டி போராடிய மக்கள் தெளிவா இருக்கினம். அவர்களின் உதிரக்கறையில் வெளிநாடுகளில் வாழ்வமைச்சுக் கொண்டவை தான் தாங்களும் குழம்பி.. அடுத்தவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு - விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் கார்த்திகை 27ஆம் திகதியான இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

அதிக அளவிலான மக்கள்

விசுவமடு மாவீரர்  துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ள மக்கள் கண்ணீர் மல்க மலர் தூவி சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த மாவீரர்களுக்கும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இம்முறை மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வில் வழமைக்கு மாறாக அதிக அளவிலான மக்கள் பங்கேற்று தமது அஞ்சலி செலுத்துவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video) | Maaveerar Thinam 2023 Mullitivu

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video) | Maaveerar Thinam 2023 Mullitivu

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video) | Maaveerar Thinam 2023 Mullitivu

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video) | Maaveerar Thinam 2023 Mullitivu

https://tamilwin.com/article/maaveerar-thinam-2023-mullitivu-1701093640

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மூன்று மாவீரர்களின் சகோதரியும், தமிழீழ மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்களின் புதல்வியுமாகிய அனந்தி பிரதான சுடரினை ஏற்றி வைத்தார். 

பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு தமது  மாவீரர்களாகிப் போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

“தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என அனைவரும் ஒரே குரலாய் சங்கமித்து  இன்னுயிர் ஈந்த தமது உறவுகளை நினைவுகூரும் உணர்வுபூர்வமான தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் அமைகிறது...

https://tamilwin.com/article/maaveerar-thinam-2023-kilinochchi-1701086150

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களை போற்ற வேண்டும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.