Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக்ஜாம் புயல் | நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

 

 

 

மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மிக்ஜாம் புயல் | நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி | Actors Suriya and Karthi Rs 10 lakh financial support michaung cyclone - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இன்று நள்ளிரவு வரை மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசுகையில், “சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் மேற்கு நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பழவேற்காடு அருகே உள்ள கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. மேலும் நகர்ந்து நெல்லூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது. இருப்பினும் மேற்கு மற்றும் தென் பகுதியில் அடர்ந்த மழை மேகங்கள் காணப்படுகின்றன. இதனால், இன்று நள்ளிரவு வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

இன்று காலை 8.30 மணி அளவில் செம்பரம்பாக்கத்தில் 16.2 செ.மீ., ஆவடியில் 28 செ.மீட்டர் மழையும் பதிவானது. நகரப்பகுதிகளில் 20 செ.மீட்டர் மழை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் காலை முறையே 23, 25 செ.மீட்டர் மழை பதிவானது. தற்போது நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 40 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்தப் புயலானது சென்னைக்கு அருகே மையம் கொண்டதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடலுக்கு அருகில் புயல் இருந்தால் கடல் எப்போதும் சீற்றமாகவே இருக்கும்.” என்றார்.சென்னையில் இன்று நள்ளிரவு வரை மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு | Cyclone Michaung rain update by tamilnadu weather man - hindutamil.in

மிக்ஜாம் புயல் | மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு - பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதாலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதாலும், ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கின்றது.இந்நிலையில் அரசு எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மிக்ஜாம் புயல் வலுவடைந்து 5.12.23 செவ்வாய்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணி அமைப்புகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளையும் (0 5.12.2023 செவ்வாய்கிழமை) பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதாலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதாலும், ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிருவாகங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இம் முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

 

 

 

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் | மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு - பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் | Cyclone Michaung: TN government requests people to cooperate with government in relief, rescue measures - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

Cyclone Michaung Live: அதிகரிக்கும் நீர்வரத்து; பூண்டி ஏரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

அதிகரிக்கும் நீர்வரத்து; பூண்டி ஏரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

 
 
 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் மிகவும் வேகமாக நிரம்பிவருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுமார் 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. புழல் ஏரியிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 40,000 கன அடியாக இருக்கிறது. அதன் காரணமாக ஏரியிலிருந்து 45,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், பேபி கால்வாய், கிருஷ்ணா நீா் முதன்மைக் கால்வாய் ஆகியவை மூலம் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்குக் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Cyclone Michaung Live: அதிகரிக்கும் நீர்வரத்து; பூண்டி ஏரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்! | michaung cyclone will form in next 12 hours, rain alert to several districts include சென்னை - Vikatan

ஆற்றுநீரைக் கடல் உள்வாங்கவில்லை, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்" -  அரசு அறிவிப்பு!

மிக்ஜான் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 5,000 பேர் நேற்றே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கூவம், அடையாறு ஆற்றின் நீரைக் கடல் உள்வாங்கவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எச்சரித்திருக்கிறார்.

Cyclone Michaung Live: அதிகரிக்கும் நீர்வரத்து; பூண்டி ஏரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்! | michaung cyclone will form in next 12 hours, rain alert to several districts include சென்னை - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

406384983_754416480046802_50412894913764

 

406773003_368238442396645_17796148101374

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.