Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Cannula.jpg
அண்மையில் இலங்கை மக்களை குறிப்பாக இலங்கையின் வடபகுதி மக்களை பீதியில் ஆழ்த்திய விடயம்தான் யாழ் போதனா வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்ட்தால் ஒரு சிறுமியின் கை அகற்றப்படடமை, உண்மையில் தவறான மருந்துதான் வழங்கப்பட்ட்தா? கனுலா எனப்படும் மருந்தை உடலுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியை பத்துவருடங்களுக்குமேல் அனுபவம் கொண்ட தாதி தவறாக ஏற்றினாரா? ஓரிரு நாட்களுக்குள் கை அழுகுமா? போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன் எத்தனை தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறுமி சென்றிருந்தார்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன, ஆனால் இங்கே நான் இந்த சம்பவம் தொடர்பான தர்ம நியாயங்களை விவாவதிக்கப்போவதில்லை, மாறாக எதாவது ஒரு நோய்க்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களைப்பற்றியே நான் இங்கே கூறப்போகின்றேன். வைத்தியசாலைக்கு முதல்தடவை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் நிச்சயம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார் ஏனென்றால் அவரது அன்றாட கடமைகள் வேலைகள் அனைத்துமே தலைகீழாக்கப்பட்டிருக்கும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்ன கூறுவார்கள் எங்கே அனுப்புவார்கள்? என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு சில நிமிடங்களுக்கு முன்பே கூறப்படும். இதை நான் ஒரு தொடராக எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன் மருத்துவ உலகில் உங்களுக்கு தெரியவேண்டிய அத்தனை விடயங்களையும் சாமானியனுக்கு விளங்கும் வகையில் விளக்குவதற்கு முயற்சிசெய்க்கின்றேன்.

 

 

வாருங்கள் மருத்துவ உலகிற்குள் நுழைவோம்...........

 


IVpH2.png
 
கனுலா/வென்லோப்  cannula/ venflon நீங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட்தும் உங்கள் உடலில் ஏற்றப்படும் ஊசி போன்ற ஒரு பொருள்தான் இது இதை உங்கள் உடலினுள்ளே மருந்துக்களையோ இரத்தத்தையோ ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். இது பல்வேறு நிறங்களிலும் அளவுகளிலும் காணப்படுகின்றது. சாதாரணமக்களிடம் கேட்டால் "கனுலாவை நரம்பில் ஏற்றுவார்கள்" என்றுதான் கூறுவார்கள் அனால் நரம்பு என்பது மூளையில் இருந்து உடலுக்கும் உடலின் பகுதிகளில் இருந்து மூளைக்கும் செய்திகளை கடத்தும் தொழிலை செய்யும் எனவே அதில் கானுலாவை போடமுடியாது. மனித உடலில் நாடி நாளம் என இரு இரத்தக்குழாய்கள் இருக்கின்றன , இதில் நாடி இதயத்தில் இருந்து குருதியை உடலின் பகுதிகளுக்கு கடத்தும் இதில் விரலால் அழுத்தி இதயத்துடிப்பு எண்ணிக்கையை கணக்கிடமுடியும் அடுத்தது நாளம் இது உடலின் பிற பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக்கடத்தும் இந்த நாளத்தில்தான் கனுலா ஏற்றப்படும்  உடலில் எங்கெங்கு இவற்றை ஏற்றமுடியும் பொதுவாக இதை கையில்தான் ஏற்றுவார்கள் ஆனாலும் சிலருக்கு சில நோய் நிலை காரணமாகவோ முதுமை காரணமாகவோ இலகுவில் கானுலாவை ஏற்றமுடியாது எனவே கால்களிலும் இல்லையெனில் கழுத்திலும் கனுலா போடப்படுகின்றது கீழே உள்ள படத்தில் கனுலா போடப்படும் பொதுவான பகுதிகள் காட்டப்பட்டிருக்கின்றது 

 

 

தாதி ஒருவரே பொதுவாக கானூலாவை போடுவார் முதலில் கனுலா போடவேண்டிய கையில் கயிறு போன்று ஒரு சேலைன் வயரை கட்டுவார்கள் ( tourniquet ) 

 

605e1b5c64d3e0562950d062_apply-the-tourniquet.jpeg


 

 

இப்படி கட்டும்போதுதான் நாளங்கள் புடைத்து தோலின் வெளியே தெரியும் இலகுவாக காணூலாவை போடமுடியும்அப்படியும் சிலரது தொழில் நாளத்தை பார்க்க முடியாது இப்படியான சந்தர்ப்பங்களில் விரலாலோ கையாலோ கனுலா போடவேண்டிய பகுதியின் மேல் தட்டுவார்கள் இப்படி தட்டும்போது நாளம் புடைத்து வெளியே தெரியும் 

 

06c08571625665.Y3JvcCw4MDgsNjMyLDMyLDA.jpg

 

 

ஒருவேளை என்ன செய்தும் உங்களுக்கு கானுலாவை போட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம் உள்ளே இருக்கும் நாளத்தை கண்டுபிடிப்பதற்காக இன்பிரா லைட் ஸ்கானர் வைத்த்து கண்டுபிடிக்கமுடியும் அதுவும் இல்லையென்றால் Ultra சவுண்ட் ஸ்கானரை வைத்த்துத்தான் கண்டுபிடிப்பார்கள்.

 

Sasha-hand-1920x1280.jpg
5ed58cff9d29f.webp

 

கனுலாவை போடும்போது கானுலாவை தோலுடன் சேர்த்து ஓட்டும் பிளாஸ்டரில் ஒரு திகதியை எழுதிவிடுவார்கள். எந்த நாளில் கனுலா போடப்படடதோ அந்த திகதியை எழுதுவார்கள் அல்லது எந்த திகதியில் கானுலாவை கழற்ற வேண்டுமோ அந்த திகதியை எழுத்திவிடுவார்கள் இந்த முறை வைத்தியசாலைக்கு வைத்தியசாலை வேறுபடலாம் எப்படி இருந்தாலும் கனுலா போடப்பட்டு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கானுலாவை கழற்றி விடவேண்டும்.

 

iv-hwa.jpg

 

 

கனுலாவின் பகுதிகள் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

 

parts%20of%20cannula.png

 

 

கனுலா போடப்படடால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? 

கனுலா போடப்படட பகுதியை நனைக்கக்கூடாது அதோடு கானுலாவில் இருக்கும் மூடியை ( luer lock plug ) திறக்க முயறசிக்க கூடாது. புதிதாக போடப்படட கனுலாவின் மூடியை கழற்றினால் இரத்தம் அதிக அளவில் வெளியேறும். நித்திரையில் தவறுதலாக கழன்றால் கூட நோயாளிக்கு தெரியவராது நோயாளி இரத்தப்போக்கால் இறந்துவிடுவார்.

பொதுவாக பயன்பாட்டில் உள்ள கானுலாவின் நிறங்களும் அவற்றின் அளவுகளும் 

 

image.png


 

 

பெரியவர்களுக்கு பொதுவாக பச்சை நிற கனுலாவே போடப்படும் , சிறுவர்களுக்கு நீலம் அல்லது பிங்க் நிறத்தையும் குழந்தைகளுக்கு மஞ்சள் அல்லது நீல நிறம் பயன்படுத்தப்படும்.

கனுலா சரியாக போடப்பட்டிருக்கின்றது என்பதை எப்படி அறிந்துகொள்வது?

 
  •  கனுலாவின் ஊசி தொழில் ஏறும்போது ஏற்படும் வலியைத்தவிர வேறு எந்த வலியையும் நீங்கள் உணரமாட்ட்ர்கள்.
  •  கனுலாவினுள் மருந்து செலுத்தும்போது எந்த வலியும் இருக்காது.
  •  மருந்து ஏற்றும் தாதி, சிரின்சின் மூலம் மருந்த்தேற்றும் பொது மிக இலகுவாக செல்லும், வலிந்து செலுத்த தேவையில்லை.
  • கனுலா போடப்பட்டதும் வெள்ளை மூடியின் அருகில் இரத்தத்தை பார்க்கமுடியும் 
 
கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்வது?
( கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை கனுலா அவுட்டக்கிவிட்ட்து ( cannula out of vein ) என்று கூறுவார்கள் )
  • கனுலா போடப்படட இடம் வீங்கியிருக்கும்.
  •  கனுலாவில் இருந்து இரத்தம் வராது மருந்தோ சேலைனா எதுவும் உள்ளே செல்லாது.
  •  சிரிஞ்சின் மூலம் மருந்து ஏற்றும்போது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
  •  ஏற்றப்படட இடம் மருந்து தோலின் கீழ் சென்று தேங்குவதால் வீங்கும்.
 
4-Figure5-1.png

 

iv-infiltrations.jpg

 

 
 
கனுலா சரியாக நாளத்தினுள் செல்லவில்லையாயின் கனுலாவினூடு செலுத்தப்படும் மருந்தோ அல்லது இரத்தமோ சுற்றி இருக்கும் திசுக்களுக்கும் மற்றும் தோலிற்கு கீழாக தேங்கும் இதை Extravasation என்று அழைப்பார்கள்.
 
அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை Thrombophlebitis என்று அழைப்பார்கள் என்று அழைப்பார்கள்.  
 
18086.jpg

 

 
 
 
இது ஏற்பட்டால்  தோலினுள்ளே, இழையங்களினுள்ளே கிருமித்தொற்று ஏற்பட்டு ( cellulitis ) இழைய இறப்பு ஏற்படும், இதனால் பாதிக்கப்படட பகுதியை வெட்டி அகற்றவேண்டியேற்படும் (amputation) இல்லையெனில் அதீத கிருமித்தொற்று (sepsis) காரணமாக இறப்பு ஏற்படலாம்.
 
 
நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி ஏற்படும் நோய்த்தொற்றை அளப்பதற்கு கீழே காட்டப்பட்டிருக்கும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது 
 
VIP-Score-003.png

 

 
பாதிப்புக்கள் .....
a-1b-Skin-necrosis-thrombophlebitis-with-impending-digital-gangrene-on-admission.png

 

images.jpg

 

 
 
வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட்தும் கனுலாவை கழற்றிவிட்டுத்தான் வீடுசெல்லவேண்டும், வார்டு இருக்கும் வேலை நெரிசலில் தாதியர்கள் கழற்றமறந்தாலும் நீங்களாகவே கேட்டு கழற்றிவிடுங்கள். கனுலாவை கழற்றும்ப்போது பஞ்சு ஒன்று தருவார்கள் அதை கனுலா போடப்பட்ட இடத்தில் நன்றாக அழுத்தி குறைந்தது 05 நிமிடங்களாவது வைத்திருக்கவேண்டும் அப்படி செய்தால்தான் இரத்தம் வெளிவருவதை நிறுத்தமுடியும்.
 
நீங்கள் ஆஸ்பிரின் போன்ற குருதியுறையா மருந்துகள் பாவிப்பவராக இருந்தால் 10 நிமிடங்களுக்குமேல் நன்றாக அழுத்தி வைத்திருக்கவேண்டும்.
 
 
 
தொடரும் ......
 
 
 
 
 
 
  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக்க நன்றி வேங்கையன் . எனக்கு மிகவும் பயனுள்ள விடயம் அது போல  இது மற்றவர்களுக்கும் பயன் படட்டும் . தொடருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நிலாமதி said:

மிக்க நன்றி வேங்கையன்.

அக்கா அவருடைய பெயர் நீங்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருளின் பெயரை ஒத்ததாக எனக்கு விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2023 at 02:54, venkkayam said:

ஒருவேளை என்ன செய்தும் உங்களுக்கு கானுலாவை போட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம் உள்ளே இருக்கும் நாளத்தை கண்டுபிடிப்பதற்காக இன்பிரா லைட் ஸ்கானர் வைத்த்து கண்டுபிடிக்கமுடியும் அதுவும் இல்லையென்றால் Ultra சவுண்ட் ஸ்கானரை வைத்த்துத்தான் கண்டுபிடிப்பார்கள்.

உங்கள் தெழிவான விளக்கத்துக்கு நன்றி.

(காப்பி பேஸ்ட் என்றாலும்)

எனக்கு 1997 இல் நெஞ்சு வருத்தம் வந்ததில் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை இரத்தம் எடுத்து சோதிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இரத்தமெடுக்க இலகுவாக இருந்தது.

இப்போ இரண்டு கையிலும் மாறி மாறி தேடி குத்தி சிலவேளைகளில் நாளைக்கு நிறைய தண்ணி குடித்துவிட்டு வா என்று திருப்பி அனுப்புகிறார்கள்.

நானும் எப்ப போனாலும் நிறைய தண்ணீரை குடித்துவிட்டே போகிறேன்.

எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது.

14 minutes ago, ஏராளன் said:
44 minutes ago, நிலாமதி said:

மிக்க நன்றி வேங்கையன்.

அக்கா அவருடைய பெயர் நீங்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருளின் பெயரை ஒத்ததாக எனக்கு விளங்குகிறது

நானும் முதலில் அப்படித் தான் உணர்ந்தேன்.

அக்கா எழுதியதைப் பார்த்துட்டே நல்லவேளை எதுவுமே எழுதலை என்று இருக்கிறேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த‌ சிறுமி வேறு யாரும் இல்லை என்ற‌ ம‌ச்சாளின்ட‌ ம‌க‌ள்..............இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து இர‌ண்டு மாத‌த்துக்கு மேல்............நஷ்ட ஈடு கொடுத்து என்ன‌ ப‌ல‌ன்.............ம‌ல்லாக‌த்தில் வ‌சிக்கும் என‌து உற‌வின‌ர்க‌ள் இந்த‌ சோக‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்த‌ மாதிரி தெரிய‌ல‌...............இன்னொரு முறை வேறு யாருக்கும் இப்ப‌டி ஒரு நில‌மை வ‌ர‌க் கூடாது...............

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Cannula.jpg

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் கனூலா என்ற ஒன்றை உங்கள் நாளத்தில் ஏற்றிவிடுவார்கள். அனுமதிக்கப்படும் அனைவருக்கும் இது ஏற்றப்படுவதில்லை ஆனாலும் அனுமதிக்கப்படும் நபருக்கு அண்டிபயோட்டிக் போன்ற மருந்துகளோ வேறுமருந்துகளோ வழங்கும் தேவையிருந்தால் கனுலா அவசியம் போடப்படும். கனுலாபற்றிய விளக்கத்தை முந்தையபதிவில் பதிவிட்டிருந்தேன் வாசிப்பதற்கு இங்கே கிளிக்கவும்.
 
Cannula வை 2 தொடக்கம் 3 நாட்களுக்கு கையில் தொடர்ச்சியாக வைத்திருக்கமுடியும், இதற்குமேலும் கனுலாவை தொடர்ந்துபயன்படுத்தும்போது கனுலா போடப்பட்ட இடத்தில் எரிச்சல், மருந்துகளை ஏற்றும்போது கடுமையான வலி போன்றவை ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் அவசியம் கனுலாவை அகற்றவேண்டும். கனுலாவை எப்படி போடுவது என்பதுதொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
 
கனுலாபோடப்பட்டும் கனுலா பிளாஸ்டரில் கனுலா போடப்பட்ட நாள் பதியப்படும். கனுலாவூடாக மருந்துகளை ஏற்றும்போது வலி ஏற்பட்டாலோ, எரிச்சல் ஏற்பட்டாலோ பிளாஸ்டரில் எழுதப்பட்டிருக்கும் திகதியை அவதானித்து கனுலாவை அகற்றி புதிய கனுலாவைப்போடமுடியும்.
 
நாம் பயன்படுத்தவேண்டிய பிளாஸ்டர்
நாம் பயன்படுத்தவேண்டிய பிளாஸ்டர்

 

ஆனால் அரசவைத்தியசாலையில் இருப்பது
DSC_0005-300x168.jpg

 

 
நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கனுலா 3 நாட்களில் out ஆகலாம், அப்படி ஆகும்போது மருந்தை எவளவுதூரம் முயன்றாலும் ஏற்றமுடியாது கையில் (கையில் கனுலா ஏற்றப்பட்டிருந்தால்) வலி ஏற்படும், அதோடு அந்த இடத்தில் வீக்கமும் ஏற்படும். உடனடியாக மருந்தோ, சேலைனோ எது ஏற்றப்படுவதாக இருந்தாலும் அதை நிறுத்தவேண்டும்.இல்லையாயின் அந்தப்பகுதிக்குரிய இரத்த ஓட்டம் தடைப்படவாய்ப்புக்கள் இருப்பதுடன்,  நாளடைவில் இழைய இறப்பு ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது.
 
syringe-1.webp
 
மருந்துகள் ஏற்றப்பயன்படுட்தப்படும் ஊசியின் பகுதிகள்தான் மேலே காட்டப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சின் வகைகள் கீழே காட்டப்பட்டுள்ளது.
syringe-sizes.webp

 

 
சிரிஞ்சின் அளவுகள் சிசி CC என்றுதான் அழைக்கப்படுகின்றது. 20 சிசிcc=20mil சிரிஞ், பொதுவாக பயன்பாட்டில் 20சிசி,10சிசி,5சிசி,1 சிசி சிரிஞ்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் சைஸ்களுக்கு ஏற்றவாறு சிரிஞ்சில் இருக்கும் ஊசியின் சைஸும் வேறுபடும். இதில் 1 சிசி சிரிஞ்சை இன்சுலின் சிரிஞ் என்று அழைப்பார்கள், காரணம் இது இன்சுலின் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
 
"ஹொஸ்பிட்டல்ல குளுக்கோஸ் ஏத்தினவை"  நம் சனம் பொதுவாகப்பயன்படுத்தும் வசனம் இதுதான், ஆனால் இதிலும் தவறு இருக்கின்றது. நோயாளிக்கு ஏற்றுவதற்காக என்னென்ன திரவங்கள் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுகின்றது?
 
IV-Fluids.webp

 

ஒவ்வொன்றும் வேறுவேறுவகை திரவங்கள்தான் அதோடு அவற்றின் லேபிளும் வேறுவேறு நிறங்களில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். பொதுவாக ஏற்றப்படும் திரவம் Normal saline இதை NS என்று சுருக்கமாக அழைப்பார்கள். ஒட்டுமொத்தமாக இந்த திரவங்கள் அனைத்தையும் வகைப்படுத்தமுடியும்.
 
முதலாவது வகை- Crystalloids VS colloids இப்படி வகைப்படுத்தலாம் 
 
e5115cd6-7b9f-41a7-915c-d67b9fb1a784.webp

 

இரண்டாவது வகை- எமது இரத்தத்தின் பாகுமைத்தன்மை, அடர்த்தி என்பவற்றிற்ற்கு ஏற்ப கீழே காட்டப்பட்டிருப்பதுபோல் திரவங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
 
iv-fluids-types-of-iv-fliuds-8-320.webp

 

"Antibiotic ஆல் ஏற்பட்ட அலேர்ஜியால் பேராதனையில் பெண் ஒருவர் மரணம்"
இவற்றை எப்படித்தவிர்க்கலாம்? உங்களுக்கு ஏதாவது ஒரு உணவுக்கோ, மருந்துக்கோ ஒவ்வாமை இருப்பின் என்ன செய்யவேண்டும்?
srilanka.png

 

 
 
அடுத்த பதிவில் சந்திப்போம்
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.