Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

கேரள செவிலியர் நிமிஷா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 14 டிசம்பர் 2023, 06:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்தால் தப்பித்துவிடலாம்’ என்பதுபோன்ற பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறார்கள் நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

பணத்தைவிட இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

அது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தரும் மன்னிப்பு.

இந்த மன்னிப்பைப் பெறவே தாம் முயன்று வருவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஏமன் செல்லவிருப்பதாகவும் கூறுகின்றனர், நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

 

என்ன வழக்கு?

2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது. இதனால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு.

ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது.

 

ஏமனுக்கு செல்ல அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏமன்

இது குறித்து முன்னர் பிபிசியிடம் பேசியிருந்த நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி. "நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்," என்று கூறினார்.

நிமிஷாவை மீட்க ஏமன் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து நிமிஷாவின் தாயார் பிரேமா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், பயண விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

 

ஏமன் வரலாற்றில் இது முதல்முறை

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் நிமிஷாவை மீட்க முயற்சித்து வருகிறார்

"ஏமனில் பல கொலை வழக்குகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிமிஷா தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு ஏமன் அரசு தண்டனை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஏமன் வரலாற்றில் ஒரு வழக்கிற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை," என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம்.

நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ஜெரோம். ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் இவர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளார். நிமிஷாவின் தாயாருடன் ஏமன் செல்ல இவருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து பேசிய சாமுவேல், "ஒரு சக இந்தியர் என்பதால் தான் நிமிஷா குறித்து ஊடகங்களிடம் கூறினேன். ஆரம்பத்தில் நானும் அவரை குற்றவாளியாக தான் பார்த்தேன். ஆனால் பின்னர் அவரது நிலையைக் குறித்து முழுதாக தெரிந்து கொண்டதால் அவர் பக்க நியாயம் எனக்கு புரிந்தது. நிமிஷாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது மன்னிக்கப்பட அவர் தகுதியானவரே," என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா கொலை செய்து விட்டார், இப்போது பணம் கொடுத்து அவரை நாங்கள் மீட்க போகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறப் போகிறோம்.

"பணம் இங்கு ஒரு முக்கியமான விஷயமே அல்ல, மன்னிப்பிற்கான ஒரு குறியீடு மட்டுமே. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம்," என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம்.

'பணம் கொடுக்க அல்ல, மன்னிப்பு பெறவே செல்கிறோம்'

"ஏமன் நாட்டின் ஒரு குடிமகனைக் கொலை செய்துவிட்டு, பணம் கொடுத்தால் மட்டும் விட்டுவிடுவார்களா? பல கொலை வழக்குகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நிமிஷாவின் நிலையைப் புரிந்து ஏமன் நாட்டு அதிகாரிகள் பொறுமை காத்து வருகிறார்கள். நிமிஷா செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் அதை செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

அவர் மேலும் கூறியது, "ஏமன் நாட்டின் ஷரியத் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே முக்கியம். முதலில் ஏமன் பழங்குடி இனத்தலைவர்களுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்கள் மன்னிப்பை ஏற்க வேண்டும்.

அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பழங்குடித் தலைவர்கள் பேசுவார்கள். அந்த குடும்பம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஏமன் நீதிமன்றத்தில் தெரிவித்த பின் நிமிஷா விடுதலை செய்யப்படுவார். இது ஒரு கூட்டு முயற்சி," என்கிறார் சாமுவேல்.

"பணம் மட்டுமே பிரதானம் என்பது போல சில ஊடகங்கள் சித்தரித்து விட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனம் புண்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிட்டு மிகப்பெரிய தொகையைத் தருகிறோம் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"எனவே நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், நிமிஷா ஒரு சூழ்நிலைக் கைதி. அவரது நிலையைப் புரிந்து அந்த நாட்டினரே மன்னிப்பைக் குறித்து யோசிக்கும் போது, பலரும் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம் என்று எழுதுகிறார்கள். அது உண்மையில்லை," என்று கூறுகிறார் சாமுவேல்.

 

ஜனவரியில் ஏமனுக்கு பயணம்

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏமனில் நிலவும் போர் சூழல்

நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரிக்கு விசா கிடைத்தவுடன் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏமனுக்கு செல்லவிருப்பதாக கூறினார் சாமுவேல்.

"டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கேரளாவைச் சேர்ந்த சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழுவின் முயற்சியால் தான் இது நடந்தது. நிமிஷாவை மீட்பதில் அவர்களது பங்கு முக்கியமானது. இந்திய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளனர். எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறோம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

பிரேமா குமரியின் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரனிடம் பேசிய போது, "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வருட போராட்டத்திற்கு கிடைத்துள்ள பலன். 2020-இல் நிலைமை ஏமனில் சீராக இருந்தபோதே அங்கு செல்ல எனக்கும் நிமிஷாவின் தாயாருக்கும் இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

"பின்னர் போர் சூழல் நிலவியதால் எங்களால் அங்கு செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் அடுத்த மாதம் ஏமன் செல்ல பிரேமா குமரிக்கு விசா கிடைத்து விடும். நிமிஷாவை கண்டிப்பாக மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு போர் சூழல் உள்ளதால் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது, ஆனாலும் பிரேமா குமாரி தன் மகளை மீட்பதில் உறுதியாக உள்ளார்," என்று அவர் கூறினார்.

 

'தடைகளைத் தாண்டி மகளை மீட்டு வருவேன்'

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,

நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி

"அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை. அங்கு நிலைமை சரியில்லை, பாதுகாப்பில்லை எனக் கூறுகிறார்கள், ஆனாலும் அங்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பம் எனது மகளை நிச்சயமாக மன்னித்து விடுவார்கள்," எனக் கூறுகிறார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி.

நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. "நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும்," என்கிறார் பிரேமா.

அவர் தொடர்ந்து கூறியது, "நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கினார். நாங்கள் வறுமையில் இருந்ததால் அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டது. ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை. எனவே தான் ஏமன் சென்றார்," என்கிறார் பிரேமா குமாரி.

"வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க ஏமன் சென்ற என் மகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை மீட்டு விடுவேன்," எனக் கூறுகிறார் பிரேமா குமாரி.

https://www.bbc.com/tamil/articles/c8v2pn86pepo

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nimisha Priya: Yemen-ல் Kerala Nurse-க்கு மரணதண்டனை; இறுதி நாட்கள் நெருங்குகிறதா? பின்னணி என்ன?

 

கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். அவரை மீட்க முயற்சிகள் நடந்துவரும் நிலையில், குருதிப்பணம் அளித்தால் அவர் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது. ஒரு இந்திய பெண்ணுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? குருதிப்பணம் என்றால் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமன்: இரான் அல்லது சௌதி அரேபியா நினைத்தால் கேரள செவிலியர் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமா?

நிமிஷா பிரியா
படக்குறிப்பு, நிமிஷா பிரியா தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் (கோப்புப் படம்- நிமிஷா பிரியா தனது கணவர் டோமி தாமஸ் உடன்) கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில், தனக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மன்னிப்பு வழங்கப்படுமா எனத் தெரியாத நிலையில் தவித்து வருகிறார் நிமிஷா பிரியா.

கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிச்சயம் தனது மகளை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சனாவில் தங்கியுள்ளார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி. ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் 'மன்னிப்பு' வழங்கினால் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படலாம்.

உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமனில், எந்த அரசு நிமிஷாவின் வழக்கை கையாள்கிறது? ஏமனின் அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் சௌதி அரேபியா அல்லது இரான் தலையிட்டால் வழக்கின் போக்கு மாறுமா?

 

ஏமனின் தற்போதைய நிலை என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்குப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. 'ஏமன் நாட்டின் இந்த உள்நாட்டுப் போர் தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி' என்று ஐக்கிய நாடுகள் சபை ஒருமுறை கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது (தற்போது இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது). இதில், இஸ்ரேலுக்கு எதிராக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழுவும் போரில் ஈடுபட்டது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு 2023 நவம்பர் முதல் செங்கடலைக் கடக்கும் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகும் காஸாவின் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இதைச் செய்வதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையும், செங்கடல் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

"இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கான பதிலடி இப்போதுதான் தொடங்குகிறது" என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.

அப்போது பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் முகம்மது அல்-புகைதி, "காஸா இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்தாத வரை, அதன் ராணுவ நிலைகள் மீது குறி வைப்பதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை" என்று கூறியிருந்தார்.

ஹூதி கிளர்ச்சிக் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் புதன்கிழமையன்று (ஜனவரி 16) தெரிவித்தன.

இந்த புதிய முடிவு, ஏமனிலும் தற்காலிக அமைதியை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமனின் சனாவில் உள்ள 'குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்' தலைமை மருத்துவராக பணிபுரியும் சாயா சாவந்த், அந்நாட்டின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.

"உள்நாட்டுப் போர் பதற்றம் மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போன்றவை, இதுவரை எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை. தாக்குதல்கள் நடப்பது பெரும்பாலும் எல்லைப் பகுதியில் என்பதால் தான் இந்த நிலை."

"கடந்த மாதம், சனாவின் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது சற்று அதிர்ச்சி அளித்தது. ஆனால், இப்போதும் சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு பெரிய பாதிப்பில்லை. அதனால் தான் இன்னும் இந்தியர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர்." என்று கூறினார்.

சாயா சாவந்த்
படக்குறிப்பு,ஏமனின் சனாவில் உள்ள 'குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்' தலைமை மருத்துவராக பணிபுரியும் சாயா சாவந்த்

நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்தது யார்?

நிமிஷா பிரியா தற்போது ஏமனில் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமன் நாடு தற்போது 3 பிரிவினரால் ஆளப்படுகிறது.

சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின் (சனா) அதிபராக செயல்படுகிறார்.

சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு ஏமனின் மற்றொரு பகுதியை கட்டுப்படுத்துகிறது. இந்த அரசின் தலைவராக, அதிபர் ரஷாத் அல் அலிமி செயல்படுகிறார்.

மேற்கண்ட இரண்டும் அல்லாத, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற சதர்ன் டிரான்ஸிஷனல் கவுன்சில் ஏடன் துறைமுகம் உள்ளிட்ட ஏமனின் பகுதிகளை கட்டுப்படுத்துகிறது.

நிமிஷாவின் வழக்கில் அனைத்து முடிவுகளையும் எடுப்பது, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசியல் பிரிவே. ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை.

அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது.

அதிபர் ரஷாத் அல் அலிமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது

நவம்பர் 2023இல் நிமிஷாவுக்கு உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவர் மெஹ்தி அல் மஷாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்தார். சில ஊடகங்களில், இந்த ஒப்புதலை அளித்தது அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான அரசு என்ற செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் இருக்கும் ஏமன் நாட்டு தூதரகம், "ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவின் சிறையில் உள்ளார்."

"இந்த வழக்கு முழுவதையும் கையாள்வது ஹூதி கிளர்ச்சிக் குழுவே. அதிபர் ரஷாத் அல் அலிமி நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை." என்று விளக்கமளித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.

ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை

இந்திய அரசு செய்யக்கூடியது என்ன?

"நிமிஷாவின் வழக்கில் தன்னால் முடிந்த அனைத்தையும் இந்திய அரசு செய்யும். ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவுடன் நேரடி தூதரகத் தொடர்பு இல்லாதது, மத்திய கிழக்கு நாடுகளின் கடுமையான தண்டனைச் சட்டங்கள் போன்றவற்றையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்," என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்கள் நிபுணருமான கிளாட்ஸன் சேவியர்.

இதற்கு உதாரணமாக, இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் என்ற பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் வழங்கப்பட்ட தண்டனையை சுட்டிக்காட்டுகிறார் கிளாட்ஸன் சேவியர்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு பணிப்பெண்ணாக சௌதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார் ரிஸானா. பணியின்போது, அவரது பராமரிப்பில் இருந்த ஒரு 4 மாத குழந்தையை கொலை செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால், ரிஸானா அதை மறுத்தார். பால் புட்டியில் குழந்தைக்கு பால் புகட்டும்போது, மூச்சுத் திணறி குழந்தை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார் என்றும், இந்த சம்பவம் நடந்தபோது ரிஸானாவுக்கு வெறும் 17 வயது தான் என்றும் அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ரிஸானா 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார், 2007ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சௌதியின் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தது.

பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்
படக்குறிப்பு,ஏமன் நாட்டு குடிமகனின் கொலை தொடர்பான வழக்கு என்பதால், இதில் இந்திய அரசுக்கும் சில வரம்புகள் உள்ளன என்கிறார், பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்

"மத்திய கிழக்கு நாடுகளின் சட்டங்கள் கடுமையானவை. அங்கு வேலைக்கு செல்பவர்கள் அதை நன்கு அறிந்து தான் செல்வார்கள். அப்படியிருக்க தனது நாட்டு குடிமகன் ஒருவரது கொலை தொடர்பான வழக்கு எனும்போது, அதை அந்த நாட்டு அரசுகள் இன்னும் கடுமையாகவே கையாளும்."

"இதில் பிற நாட்டு அரசுகளின் தலையீடுகளுக்கு வரம்புகள் இருக்கும். இறுதி முடிவு என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் இருக்கும். கொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றங்களில் அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்." என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.

ஷரியா சட்டம் அமலில் இருக்கும் இந்த மத்திய கிழக்கு நாடுகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் 'குருதிப் பணம்' எனும் இழப்பீடு கொடுத்து, மன்னிப்பு பெற்றால், குற்றவாளியின் தண்டனை குறைக்கப்படலாம் அல்லது முழு விடுதலையும் பெறலாம். கொலை, காயப்படுத்துதல் அல்லது சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும்.

ரிஸானாவின் வழக்கில் தண்டனையை சௌதி உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, அவருக்கு மன்னிப்பு வழங்க பாதிக்கப்பட்ட குடும்பம் மறுத்துவிட்டது.

ரிஸானாவைக் காப்பாற்ற அப்போதைய இலங்கை அரசு பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் அவை பலனளிக்கவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் உட்பட மனித உரிமை குழுக்கள் வன்மையாக கண்டித்தன.

"இந்திய அரசு தனது ராஜ்ஜிய தொடர்புகள் மூலம் தேவையான உதவிகளைச் செய்கிறது. ஆனால், ஏமன் நாட்டு குடிமகனின் கொலை தொடர்பான வழக்கு என்பதால், இதில், நமது அரசுக்கும் சில வரம்புகள் உள்ளன," என்கிறார் பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்.

இரான் அல்லது சௌதி அரேபியா தலையிட முடியுமா?

பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி
படக்குறிப்பு,ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் இரான் போன்ற ஒரு நாடு, இந்த விவகாரத்தில் உதவ வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சமூக அறிவியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி, "இந்த வழக்கில் முழுக் கட்டுப்பாடும், ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கையில் உள்ளது. எனவே, சௌதி அரேபியா அரசோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அதிபர் ரஷாத் அல் அலிமி அரசோ இதில் ஆர்வம் காட்டாது" என்கிறார்.

ஏமனின் அரசியலில், குறிப்பாக ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் இரான் போன்ற ஒரு நாடு, இந்த விவகாரத்தில் உதவ வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்.

"இதற்கு முன்னும் பல சமயங்களில் தனது ராஜ்ஜிய தொடர்புகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்க, இந்த வழக்கில் கூடுதலாக அவகாசம் கிடைத்தால், நிமிஷா மீட்கப்பட வாய்ப்பு உள்ளது." என்று கூறும் பெர்னார்ட் டி சாமி, அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பு முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

"இஸ்லாமியர்களின் புனித மாதமான 'ரமலான்' மாதம் நெருங்கிவருகிறது. அந்த மாதத்தில் பல வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்படும். எனவே, அதைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளது." என்று கூறினார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல்

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு – என்ன நிலவரம்?

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 8 ஜூலை 2025

ஏமனில் கொலை வழக்கில் சிக்கிய கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம், நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னமும் வழியிருப்பதாக கூறியுள்ளார்.

நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு தொடர்பாக பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

என்ன நடந்தது?

ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிமிஷா பிரியாவை மீட்பதற்கு 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 'ப்ளட் மணி (Blood Money)' என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும்.

அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத்(ஹூதி பிரிவு) கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார்.

மரண தண்டனை தேதி அறிவிப்பு

நிமிஷா பிரியாவை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.

மத்திய சிறையின் தலைவர் தொடர்புகொண்டு மரண தண்டனை தேதி முடிவு செய்யப்பட்டது குறித்துத் தனக்குத் தெரிவித்ததாக ஜெரோம் கூறுகிறார்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நேற்று சிறைத் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தெரிவித்துள்ளேன். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் சனாவில் உள்ள இந்திய அதிகாரிகள் நேரடியாகச் சென்று மரண தண்டனை ஆவணத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதோடு, "நான் ஏமனுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சென்றபிறகு என்ன வாய்ப்புகள் நம் முன் இருக்கின்றன என்பதைப் பார்க்கவுள்ளேன். இன்னமும் இதில் இந்திய அரசு தலையிட முடியும்" என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஏமனில், கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஹூதி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை என்பதால், நிமிஷா பிரியா விவகாரத்தை சௌதியில் உள்ள இந்திய தூதரகமே கவனிக்கிறது.

நிமிஷா பிரியாவை காப்பாற்ற இருக்கும் வழி என்ன?

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு – என்ன நிலவரம்?

படக்குறிப்பு, நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம்

நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பை நிமிஷாவுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

கடந்த 2023 டிசம்பரில் பிபிசி தமிழிடம் பேசியபோது, மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறிய ஜெரோம், "ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்புக்கான ஓர் அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுக்க முன்வந்தும்கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவேதான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது," என்றார்.

இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், "மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பார். அதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து 'நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்'. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்" என்று கூறினார்.

இப்போதுள்ள சூழலில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் முன்பு கூறியிருந்தார்.

நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு – என்ன நிலவரம்?

படக்குறிப்பு, நிமிஷா பிரியா தனது கணவருடன் உள்ள புகைப்படம்

நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார்.

"மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும்.

எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்" என்று பிரேமா குமாரி தெரிவித்தார்.

அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை 'ஆபரேஷன் ரஹாத்' என்ற பெயரில் இந்திய அரசு மீட்டது. அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர்.

மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்துப் பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு – என்ன நிலவரம்?

படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏமன் சென்றார்

கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மஹ்தி, உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில், "மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்" மற்றும் "நிமிஷா நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்தபோது, "மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்" கூறப்பட்டுள்ளது.

"தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர்தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.

கடந்த 2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன்.

"இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்" என்று கூறுகிறார் பாலச்சந்திரன்.

தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.

நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.

ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg5lvd1mgro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து வரமாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார் பிரேமா குமாரி, உடன் சாமுவேல் ஜெரோம்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

    பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா.

ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், 'ப்ளட் மணி' எனப்படும் பணத்திற்கு ஈடாக மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் நிமிஷாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.

இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 2024 ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.

ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிமிஷா பிரியா குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும், சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோமும் காணொளி நேர்காணல் மூலமாக ஜூலை 11ஆம் தேதி இரவு பிபிசி தமிழிடம் உரையாடினார்கள்.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, மகளைக் காப்பாற்றும் நம்பிக்கையில் இருக்கிறார் நிமிஷாவின் தாய் (2023இல் கேரளாவில் எடுக்கப்பட்ட கோப்புப் படம்)

தண்டனை குறித்த அறிவிப்பு நிமிஷாவுக்கு சொல்லப்பட்டதா?

கேள்வி: ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை நிமிஷாவுக்கு தெரியப்படுத்திவிட்டார்களா?

இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "எனக்கு ஜூலை 7ஆம் தேதி, மரண தண்டனைக்கான தேதியை உறுதி செய்துவிட்டோம் என சனா மத்திய சிறையின் தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி கிடைத்தது. என்னிடம் சொல்வதற்கு முன்பே, நிமிஷாவுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்திவிட்டோம் என்றே சிறை நிர்வாகம் கூறியது. நான் அப்போது தனிப்பட்ட வேலைக்காக இந்தியா வந்திருந்தேன். செய்தி கேட்டவுடன் உடனடியாக ஏமனுக்கு புறப்பட்டு வந்தேன்" என்கிறார்.

மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானவுடன், ஏமனின் சனா நகரின் சிறையில் இருந்து சிறைத்துறை நிர்வாகம் மூலமாக நிமிஷா தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி கூறினார்.

"ஆனால், அதில் சமீபத்திய அறிவிப்பு குறித்து அவள் ஏதும் சொல்லவில்லை. நான் நலமோடு இருக்கிறேனா என்று மட்டுமே கேட்டிருந்தாள். நான் கவலைப்படக் கூடாது என்பதற்காக அவள் அதை சொல்லவில்லை. சாமுவேல் ஜெரோம் கூறிய பின்பே எனக்கு விவரம் தெரிந்தது." என்கிறார் பிரேமா குமாரி.

கடந்தாண்டு ஏமன் சென்ற பிரேமா குமாரி, நிமிஷாவை இரண்டு முறை சிறையில் சந்தித்துள்ளார்.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, டோமி- நிமிஷா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

கேள்வி: சிறையில் முதல்முறை நிமிஷாவைப் பார்க்கும்போது என்ன பேசினீர்கள்? அந்த உணர்வு எப்படி இருந்தது?

இதற்குப் பதிலளித்த பிரேமா குமாரி, "நான் 12 ஆண்டுகள் கழித்துதான் நிமிஷாவை பார்த்தேன். முதல்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பார்த்தேன். ஏப்ரல் 23, தூதரக அதிகாரிகளும் நானும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவளை பார்க்க முடியாதோ என்று கவலைக்கு உள்ளானேன்.

அதன் பிறகு அவளை பார்க்கும் போது அவளுடன் இரண்டு பேர் வந்தனர். ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்தனர். அவள் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். நானும் அழுதேன். உடன் இருந்தவர்கள் அழாதீர்கள் என்று சொன்னார்கள். 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அவளை பார்த்தேன். நான் இறந்தால்கூட அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. தான் சந்தோஷமாக இருப்பது போல நிமிஷா என் முன் நடித்தாள்." என்று கூறினார்.

கேள்வி: கேரளாவில் உள்ள நிமிஷாவின் கணவர் டோமி மற்றும் நிமிஷாவின் மகளுடன் இந்த தண்டனை அறிவிப்பு குறித்து பேசினீர்களா?

"டோமியுடன் பேசினேன், அப்போது என் பேத்தியும் பேசினாள். எப்போது பேசினாலுமே அம்மாவை கூப்பிட்டுதானே வருவீர்கள் என்று என்னிடம் பேத்தி கேட்பாள்.

அம்மாவை சிக்கீரம் கூப்பிட்டு வரவேண்டும், அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது என்று சொன்னாள். நிமிஷாவிடம் பேசும் போதும் இதை சொன்னேன். 'அம்மாவை கூப்பிட்டு வருவேன் என்று சொன்னேன், அவர்கள் முன்பு நான் எப்படி போய் நிற்பேன். என்னால் திரும்பி போக முடியாது' என்று நிமிஷாவிடம் சொன்னேன்." என்று கூறினார் பிரேமா குமாரி.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, 2015இல், ஏமனில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்குடன் சாமுவேல் ஜெரோம்.

கேள்வி: இந்த வழக்கில், இந்திய அரசின் தூதரக உதவிகள் ஏதும் கிடைத்ததா?

இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய தூதரகம் உதவி வருகிறது. 2017இல் இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டபோது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் இருந்த இந்திய தூதரகம் செயல்படவில்லை.

அப்போது ஏமனைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தான் எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த விஷயத்தில் நீங்கள் இந்திய அரசை அணுகவில்லை என்றால், நிமிஷாவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறாது என்று கூறினார். நான் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன்.

உடனடியாக என்னுடன் தொலைபேசியில் அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரக முகாம் மூலமாக ஒரு கடிதத்தை (Note Verbale) ஏமனுக்கு அனுப்பிவைத்தார். அதைக் கொண்டுபோய் ஹூத்திகளின் வெளியுறவு அமைச்சகத்திடம் கொடுத்தோம். அதன் பிறகே அல்-பைதா எனும் பகுதியிலிருந்து சனா நகரத்திற்கு நிமிஷா கொண்டுவரப்பட்டார். முறையான விசாரணைகள் நடைபெற்றது." என்றார்.

"வி.கே.சிங் அனுப்பிய அந்தக் கடிதம் தான் நிமிஷா இன்றுவரை உயிரோடு இருப்பதற்கு காரணம்" என்று கூறினார் சாமுவேல் ஜெரோம்.

தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் பங்கு

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

கேள்வி: மஹ்தியின் குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்துவிட்டார்களா?

இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "அவர்கள் இதுவரை நிமிஷாவை மன்னிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.

கேள்வி: தொடக்கம் முதல் நீதிமன்ற விசாரணைகள் வரை, இந்த வழக்கில் மஹ்தி குடும்பத்தின் பங்கு என்ன?

சாமுவேல் ஜெரோம், "மஹ்தியின் கொலை நடந்தது ஏமனின் வடக்குப் பகுதியில், ஆனால் நிமிஷா கைது செய்யப்பட்டது ஏமனின் மாரிப் எனும் பகுதியில். மாரிப் நகரின் சிறையில் இருந்த நிமிஷாவை, மீண்டும் வடக்கு ஏமனுக்கு அழைத்து வந்ததே மஹ்தியின் குடும்பம் தான். தங்கள் சொந்த வாகனத்தில் சென்று அவர்கள் அல்-பைதாவுக்கு அழைத்து வந்தனர். தெற்கு ஏமனில் நிமிஷா இருந்திருந்தால், அவருக்கு சட்டரீதியான விசாரணை நடந்திருக்காது. எனவே நிமிஷாவுக்கு நீதி விசாரணை நடந்ததற்கு மஹ்தியின் குடும்பமும் ஒரு காரணம். ஆனால் அவர்கள் நிமிஷாவை அழைத்து வந்தது வேறு நோக்கத்திற்காக." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மஹ்தியின் குடும்பத்தினர் 'ஒசாப்' எனும் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் சனாவுக்கு அருகில் தமார் என்ற பகுதி. ஆனால் அவர்கள் வணிகம் செய்து, வாழ்வது அல்-பைதா பகுதியில். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைக்காக வசிப்பது போல. ஸ்வாதியா எனும் பழங்குடி குழுவின் பூர்வீகம் தான் அல்-பைதா.

அப்படியிருக்க அங்கு வைத்து மஹ்தி கொலை செய்யப்பட, அதற்கான பழி ஸ்வாதியா பழங்குடி மீது விழும் அபாயம் உருவானது. ஏனென்றால், ஏமனில் தங்கள் எல்லையில் வாழும் வேறொரு பழங்குடி நபர் உயிரிழந்தால், அதற்கு பூர்வீக பழங்குடி இனமே பொறுப்பு. நிமிஷா தான் குற்றவாளி என்பது அப்போது தெரியாது. இரு பழங்குடி குழுக்கள் இடையே சண்டை உருவாகும் சூழல் இருந்தது.

பிறகு மஹ்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தவுடன், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாரிப் நகரம் சென்று நிமிஷாவை அழைத்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்த கோபத்திற்கு, நிமிஷாவை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நிமிஷாவை பத்திரமாக அல்-பைதாவிற்கு அழைத்து வந்தார்கள்.

அதன் பிறகு, நிமிஷாவை சனாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஹூத்தி வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்ததும் . அதை மதித்து அனுப்பி வைத்தார்கள்" என்றார்.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.

கேள்வி: ஏமன் நீதிமன்றங்களால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிமிஷாவை மீட்க முயற்சிப்பதற்கான காரணம் என்ன?

"நிமிஷா குற்றம் செய்துள்ளார். அவருக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போது ஷரியா சட்டத்தில் மன்னிப்பு என்ற வழி உள்ளதால் தான் நிமிஷாவைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் பதிலல்ல.

நிமிஷாவுக்கு ஒரு மகள் உள்ளார், அவரது தாயார் இந்த வயதில் ஏமன் வந்து கஷ்டப்படுகிறார். மஹ்தியின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொள்ளும் நாம், இவர்கள் தரப்பையும் பார்க்க வேண்டும். அதேசமயம், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு அளித்தால் மட்டுமே நிமிஷாவை மீட்க முடியும். இல்லையென்றால் அவரது தண்டனை நிறைவேற்றப்படும்" என்றார் சாமுவேல் ஜெரோம்.

ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வை

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சனா நகரில் ஒரு மத நிகழ்விற்காக கூடியிருக்கும் ஏமன் மக்கள் (கோப்புப் படம்)

கேள்வி: ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வழக்கை எவ்வாறு பார்க்கிறார்கள்?

இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "தங்கள் நாட்டு குடிமகனை கொன்றுவிட்டார் என்ற கோபத்தில் தான் ஏமன் பொதுமக்களும், ஊடகங்களும் நிமிஷாவைப் பார்க்கின்றன. அதே சமயம், நிமிஷாவைப் பற்றி நன்கு அறிந்த சிலர் அவர் காப்பாற்றப்பட வேண்டுமென நினைக்கிறார்கள்" என்றார்.

கேள்வி: நிமிஷாவின் தண்டனையை ஒத்திவைக்க வழியுள்ளதா?

"தெரியவில்லை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பாப்போம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகள்

நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற தன்னார்வலர் குழு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஜூலை 14-ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.

அதே நேரம், ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியிருப்பதால், வழக்கின் தன்மை மற்றும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, மனுவின் நகலை இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கோரினர்.

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp86d21p53no

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா பிரியா

15 ஜூலை 2025, 09:03 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹூதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

முன்னதாக, இதுகுறித்து சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்திருந்தார்.

அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, "கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் இருக்கிறது. தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று நடக்கும்.

ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனைப்படி, ஹொடைடா மாநில தலைமை நீதிபதியும், ஏமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான, மரணமடைந்த மஹ்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்க மஹ்தியின் சொந்த ஊரான தமருக்கு வந்துள்ளார். அவர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபி கட்டளையைப் பின்பற்றுபவர் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சூஃபி தலைவரின் மகன் என்பதும் நம்பிக்கை தருவதாக உள்ளது."

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார்.

"மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை"

"மஹ்தியின் கொலை அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மஹ்தி வாழ்ந்த பிராந்தியத்தின் பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதனால்தான் இதுவரை அந்தக் குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. புகழ் பெற்ற அறிஞரும் சூஃபியுமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இன்றைய விவாதம் 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈட்டை (பெரும்பாலும் பணம்) ஏற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார். உடன் சாமுவேல் ஜெரோம்.

"மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக பொருளல்ல"

ஏமனில் நிமிஷா பிரியா வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோமும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.

"எல்லாம் நேர்மறையாக இருக்கிறது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அதற்கு பொருளல்ல. நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பகிர்ந்து கொள்வேன்" என்று அவர் கூறினார்.

"மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மரண தண்டனை ரத்து செய்யப்படும், மரண தண்டனையை ஒத்திவைப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி, இது மன்னிப்பு பெறுவதற்காக மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அதிக நேரத்தை கொடுக்கும்." என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c307249pzjjo

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-184.jpg?resize=750%2C375&ssl

கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய ஒருவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜூலை 16 ஆம் திகதி (நாளை) அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன.

தற்போது தலைநகர் சனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷாவின் வழக்கு, ஏமனில் இந்தியாவின் இராஜதந்திர பிரசன்னம் இல்லாததாலும், ஆளும் அதிகாரிகளை அங்கீகரிக்காததாலும் மேலும் சிக்கலாகியுள்ளது.

இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக மத்திய அரசு திங்களன்று (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1439273

நான் மஹ்தியின் குடும்பத்தில் ஒருவராக இருப்பின், இறுதிவரைக்கும் இவரை மன்னிக்க மாட்டேன். கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடலை அப்புறப்படுத்த முயன்ற ஒருவர் இவர். காரணம், தனது பாஸ்போர்ட்டினை மஹ்தி வாங்கி வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தினார் (பாலியல் துன்புறுத்தல் அல்ல) என கூறுகின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, தலால் மஹ்தி

படக்குறிப்பு, நிமிஷா பிரியா (இடது) மற்றும் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிபிசி அரபு சேவை நிமிஷா பிரியாவின் முன்னாள் தொழில் கூட்டாளியான, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தியுடன் பேசியது.

தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் நிமிஷா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அவரது மரண தண்டனையை ஏமனின் உள்ளூர் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலால், நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், நிமிஷா பிரியாவின் வழக்கறிஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அப்தெல் ஃபத்தா மஹ்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

2017ஆம் ஆண்டில், தலால் மஹ்தியின் உடல் ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. 36 வயதான நிமிஷா தற்போது ஏமன் தலைநகர் சனாவின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்து, பின்னர் உடலை துண்டாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிமிஷா மறுத்தார். மஹ்தி, நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு தரப்படுமா?

இப்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, "தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தார், அவரை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்று கூறியுள்ளார்.

"இது ஒரு தவறான கூற்று, இதற்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று அப்தெல் மஹ்தி கூறினார்.

"குற்றம்சாட்டப்பட்ட நிமிஷா கூட இதைக் குறிப்பிடவில்லை அல்லது தன்னுடைய பாஸ்போர்ட்டை அவர் (தலால் மஹ்தி) பறித்துக் கொண்டதாக கூறவில்லை" என்று அவர் கூறினார்.

தனது சகோதரர் தலால், நிமிஷாவை 'கொடுமைப்படுத்தியதாக' வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் அப்தெல் கூறினார்.

நிமிஷாவிற்கும் அவரது சகோதரர் தலாலுக்கும் இடையிலான உறவைப் பற்றி பேசிய அப்தெல் மஹ்தி, "இருவருக்கும் (தலால் மற்றும் நிமிஷா) இடையில் ஒரு இயல்பான உறவே இருந்தது" என்று கூறினார்.

"அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொண்ட பிறகு, ஒரு கிளினிக் நடத்துவதற்கான தொழில் கூட்டாண்மையை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு, 3-4 ஆண்டுகள் வரை அந்த திருமண உறவில் இருந்தனர்" என்று அப்தெல் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையை மறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொலையாளியை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, ஒரு குற்றத்தை நியாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் 'சமரசம்' குறித்த கேள்விக்கு, அதாவது நிமிஷா பிரியாவை மன்னிப்பது குறித்து பேசிய அப்தெல், "அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் 'கடவுளின் சட்டம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை விடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்றார்.

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, தலால் மஹ்தி

படக்குறிப்பு, நிமிஷா 2011ஆம் ஆண்டு டோமி தாமஸை திருமணம் செய்து கொண்டார்.

நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி முன்னதாக ஜூலை 16 ஆம் தேதி (புதன்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பிபிசி ஹிந்தியின் பத்திரிகையாளர் இம்ரான் குரேஷியின் கூற்றுப்படி, "இந்திய அதிகாரிகள் நிமிஷாவைக் காப்பாற்ற ஏமனின் சிறை நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணை அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தனர். இதன் காரணமாக இந்த மரண தண்டனை தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."

மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் முறையிட்டனர்.

இதன் பின்னர், இந்திய அரசாங்கம் நிமிஷா குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது. சமீப காலங்களில், இரு தரப்பினருக்கும் (மஹ்தி மற்றும் நிமிஷா) இடையே ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்ட கூடுதல் அவகாசம் கிடைக்க உதவும் வகையில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

நேற்று (ஜூலை 15), பிபிசி தமிழிடம் பேசிய ஏமனில் நிமிஷா வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம், "எல்லாம் நேர்மறையான திசையில் நகர்கிறது. இன்று (ஜூலை 15) இறுதிக்குள் சில நல்ல செய்திகள் வரக்கூடும். ஆனால் அது நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியாக இருக்காது. மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் மட்டுமே ஒத்திவைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "இதுவரை மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிக்கவில்லை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். தற்போது, மரணதண்டனை நிறைவேற்றும் நாளை ஒத்திவைப்பது மட்டுமே எங்களுக்கு இருக்கும் வழி, இது மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எங்களுக்கு அதிக அவகாசம் கொடுக்கும்" என்றும் அவர் கூறியிருந்தார்.

ஜூலை 14, திங்கட்கிழமை, கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக 'ஏமனைச் சேர்ந்த சில ஷேக்குகளுடன் பேசினார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசி ஹிந்தியிடம், "சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்தனர். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினர்" என்று கூறினார்.

"மஹ்தியின் உறவினர்கள் உள்பட, ஏமனில் செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சுபாஷ் சந்திரா கூறினார்.

மரண தண்டனை ஏன்?

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, தலால் மஹ்தி

படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் கணவர் 2014 ஆம் ஆண்டு மகளுடன் கொச்சிக்குத் திரும்பினார்.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

நிமிஷாவை காப்பாற்ற ஒரே வழி மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிப்பதே ஆகும். நிமிஷாவின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும், 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 8.59 கோடி) வரை தியா அல்லது 'ப்ளட் மணி' ஆக மஹ்தியின் குடும்பத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர்.

ஆனால் இந்தத் தொகையை ஏற்றுக்கொண்டு நிமிஷாவை மஹ்தியின் குடும்பத்தினர் மன்னித்தால் மட்டுமே அவரது விடுதலை சாத்தியமாகும்.

ஏமன் உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா தரப்பு மனு நிராகரிப்பு

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, தலால் மஹ்தி

படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, 2024 ஏப்ரல் முதல் ஏமனில் இருக்கிறார்.

2020ஆம் ஆண்டு, ஏமன் உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவரது குடும்பத்தினர் இந்த முடிவை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், ஆனால் அவர்களின் மேல்முறையீடு 2023இல் நிராகரிக்கப்பட்டது.

ஜனவரி 2024 இல், ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் உச்ச அரசியல் கவுன்சிலின் தலைவரான மஹ்தி அல்-மஷாத், நிமிஷாவின் மரண தண்டனையை அங்கீகரித்தார்.

ஏமனின் 'ஷரியா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்ட அமைப்பின் கீழ், இப்போது ஒரே ஒரு இறுதி வழி மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவரின் (மஹ்தி) குடும்பம் விரும்பினால், 'தியா' (Blood Money) பணத்தைப் பெற்று அவர்கள் நிமிஷாவை மன்னிக்கலாம்.

நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, 2024 ஏப்ரல் முதல் ஏமனில் இருக்கிறார். தனது மகளைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்து வருகிறார்.

மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏமனில் வசிக்கும் சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோமிற்கு அவர் அதிகாரமளித்துள்ளார்.

'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற குழு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பணம் சேகரிக்கிறது. அதன் மூலம், மஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் வரை வழங்க தயாராக இருப்பதாக சாமுவேல் ஜெரோம் கூறியுள்ளார்.

இந்திய அரசு என்ன செய்தது?

கடந்த ஆண்டு டிசம்பரில், நிமிஷாவின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசிடம் முறையிட்டனர்.

இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து எங்களுக்குத் தெரியும். நிமிஷாவின் குடும்பத்தினர் அவரை மீட்க சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.

"இந்த விஷயத்தில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgwed177rwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம்

17 JUL, 2025 | 09:36 AM

image

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள தாதி நிமிஷாவின் குற்றத்துக்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய ஊடகங்கள் குற்றவாளி நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கும் பணியில் ஈடுவருகின்றன. இது எங்களது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனது சகோதரர் தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காகவே நிமிஷா பிரியாவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இந்த குற்றத்துக்கு அவருக்கு மன்னிப்பு வழங்க முடியாது‘‘ என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காக கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நேற்று அது நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், நீண்டகாலமாக நடைபெற்ற பலமுனை பேச்சுவார்த்தைக்கு பிறகு நிமிஷாவின் மரண தண்டனை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியாரின் மத்தியஸ்தம் மற்றும் இந்திய அரசின் தீவிர முயற்சியின் பலனாக இந்த தண்டனை நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், கொலையான மெஹ்தியின் குடும்பத்துக்கு குருதிப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

https://www.virakesari.lk/article/220186

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-360.jpg?resize=750%2C375&ssl

நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா?

2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது.

அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி போராளிகள் இரத்து செய்துள்ளதாக கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் திங்கட்கிழமை (28) அறிவித்தது.

இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என்று அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கண்ட தகவல் வந்துள்ளது.

நிமிஷாவின் மரணதண்டனை முதலில் ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கிராண்ட் முப்தி முஸ்லியார் ஏமன் அதிகாரிகளிடம் கருணை கோரி நேரடியாக முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்பு நிறுத்தப்பட்டது.

குற்றப் பின்னணி எனன்?

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015 இல் அரசு செவிலியர் பணியை இராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து, ஜூலை 16 ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.

சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு 8.6 கோடி இந்திய ரூபா குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.

கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு இல்லை' - இந்தியர்களின் கருத்தால் மஹ்தி குடும்பத்தின் கோபம் அதிகரித்துள்ளதா?

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, குற்றம்

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்று, ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவிற்கு 'மன்னிப்பு' வழங்க முடியாது என மஹ்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"இந்த விவகாரத்தில், சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என்று ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குறிப்பிட்டுள்ளார்.

நிமிஷா பிரியாவுக்கு, கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைக் குறிப்பிட்டு, "மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென" அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார்.

ஏமன் நாட்டின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்குவது மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பற்றுவதற்கான ஒரே வழி என அவரை மீட்க முயற்சித்து வருபவர்கள் கூறிவந்த நிலையில், 'சமரசத்திற்கு இடமில்லை' என்ற மஹ்தி குடும்பத்தினரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

அப்துல் ஃபத்தா மஹ்தி நேற்று (ஆகஸ்ட் 4) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீதிக்கான பாதையை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் இந்தப் பாதையை யாருடைய பாதுகாப்பின் கீழோ அல்லது அனுமதிக்காகக் காத்திருக்காமலோ, எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்தோம்.

எவ்வளவு காலம் எடுத்தாலும் அல்லது எத்தனை தடைகள் இருந்தாலும், எங்கள் முடிவில் மாற்றமில்லை. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு உறுதியானது. பழிவாங்கல் (Qisas- கண்ணுக்கு கண் என்ற ரீதியிலான தண்டனை) என்பதுதான் எங்கள் கோரிக்கை. வேறு எதுவும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவுடன் '3-08-2025' தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், "குற்றவாளி நிமிஷா பிரியா மீதான கிசாஸ் (பழிவாங்கும்) மரண தண்டனையை விரைவாக அமல்படுத்துமாறு, பாதிக்கப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரான நாங்கள், கிசாஸ் தண்டனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதற்கான எங்கள் முழு உரிமையையும் உறுதிப்படுத்துகிறோம். சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்." என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டு சட்டத்தின்படி, மரண தண்டனைக்கு ஒரு புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென, கொல்லப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் வாரிசுகள் மற்றும் அப்துல் ஃபத்தா மஹ்தி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, குற்றம்

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளார் நிமிஷா.

இது தொடர்பாக பேசிய 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின்' உறுப்பினர் பாபு ஜான், "மஹ்தி குடும்பத்தின் இந்தக் கடிதமும் கோரிக்கையும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பாகவே இதே போன்ற ஒரு கடிதத்தை அவர்கள் மின்னஞ்சல் மூலம் ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவிட்டார்கள். இப்போது நேரடியாக அதைச் சமர்ப்பித்துள்ளார்கள்." என்று கூறுகிறார்.

இதில், "சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என அப்துல் ஃபத்தா கூறியிருப்பது, நிமிஷாவின் வழக்கை கையாள அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் மற்றும் இந்திய தூதரகத்தின் சார்பாக எடுக்கப்படும் முயற்சிகளை அல்ல என்று கூறுகிறார் பாபு ஜான்.

"சாமுவேல் ஜெரோமும் இந்திய தூதரகமும், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் பல நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அப்படியிருக்க அப்துல் ஃபத்தா திடீரென இத்தகைய கடிதம் அனுப்ப காரணம், சில தனிநபர்கள் 'நாங்கள் நினைத்தால் மஹ்தி குடும்பம் நிமிஷாவை மன்னித்துவிடும்' என்ற ரீதியில் இந்த விவகாரத்தை அணுகுவதுதான். அவர்களைக் குறிப்பிட்டே அப்துல் ஃபத்தா இதைத் தெரிவித்துள்ளார்" என்கிறார் பாபு ஜான்.

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, குற்றம்

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, நிமிஷாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார்.

'மஹ்தி குடும்பத்தின் கோபம்'

"மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான செயல்முறையில், நாங்கள் இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த முன்னேற்றங்கள், சிலரின் பொய்களால் வீணாகின்றன." என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

"ஏமனில், இதுவரை 2 முறை அப்துல் ஃபத்தாவையும், ஒருமுறை மஹ்தியின் தந்தையையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது, 'உங்கள் பையன் இறப்புக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ தருகிறோம், மன்னிப்பு கொடுத்துவிடுங்கள்' என்ற ரீதியில் இருக்காது.

நிமிஷா செய்திருப்பது ஒரு கொடூரமான கொலை, ஷரியா சட்டப்படி மீட்கலாம் என்றாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பம் கருணை அடிப்படையில் மன்னித்தால் மட்டுமே முடியும். அப்படியிருக்க, இந்தியாவில் சிலர் சுயலாபத்துக்காக தொடர்ந்து பொய்களை சொல்லிக்கொண்டிருப்பதால், அந்தக் கோபத்தில்தான் அவர்கள் நேரடியாக ஒரு கடிதத்தை ஏமனி அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்." என்கிறார் சாமுவேல்.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி, அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

"மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மதத்தலைவர் காந்தபுரம் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) உடன் நிமிஷா விடுதலை குறித்து பேசியதாக கூறுபவர்களுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்." என்று கூறியிருந்தார்.

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, குற்றம்

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார்.

அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ.பால் என்பவர் கடந்த ஜூலை 22 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், 'நிமிஷா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான முயற்சிகளை தான் எடுத்து வருவதாகவும்' அவர் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அப்துல் ஃபத்தா மஹ்தி, "இப்படி பரப்பப்படும் அனைத்து பொய்யான செய்திகளும் உண்மையை மாற்றிவிடாது. எங்களின் ஒரே கோரிக்கை பழிவாங்கலை அமல்படுத்துவதாகும்" என்று பதிவிட்டிருந்தார்.

'நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவரது விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறும் அறிக்கைகள் பொய்யானவை' என இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன.

மேலும், 'இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அவரது தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைத்தனர். இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.' என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

'ஏமனின் மக்கள் நினைத்தால் தண்டனை உடனே நிறைவேற்றப்படும்'

நிமிஷா பிரியா, ஏமன், இந்தியா, கேரளா, குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறார் சாமுவேல்.

ஏமன் மக்கள் இந்த விஷயத்தில் கொதித்துப் போய் இருப்பதாகவும், 'நிமிஷாவின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள்' என அவர்கள் போராட்டம் ஏதும் முன்னெடுத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்கிறார் சாமுவேல்.

"ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும். இதேபோல வேறு சில வழக்குகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி, நிறுத்திவைக்கப்ட்ட தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால் அவர்களும் மஹ்தி குடும்பத்தினரும் முடிந்தளவு பொறுமையாக இருக்கிறார்கள். நிமிஷா வழக்கு இப்போது சர்வதேச கவனம் பெற்றுவிட்டதால், இதில் லாபம் பெற இந்தியாவிலிருந்து சிலர் விரும்புகிறார்கள். அது நிமிஷாவை மரண தண்டனைக்கு இன்னும் அருகில் கொண்டுசெல்கிறது" என்று அவர் கூறுகிறார்.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்திவைப்பது மட்டுமே ஏமன் அரசு எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை என்று கூறும் சாமுவேல், "மஹ்தி குடும்பம் மன்னிப்பு அளிக்காவிட்டால், ஒருபோதும் தண்டனையை ரத்து செய்யமுடியாது. இந்திய அரசின் உதவியுடன் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறோம். ஆனால், நிலைமை சற்று மோசமாகியுள்ளது. இனி மஹ்தி குடும்பத்திடம் பேசுவது இன்னும் கடினமாக இருக்கும்" என்று கூறினார்.

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg38x4yy34o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.