Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஐரோப்பிய காலனித்துவம் கொடி கட்டி பறந்தது, 20ம் நூறாண்டு வரை.

அதன் பின்னர், பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளை ஒவ்வொன்றாக சுதந்திரம் கொடுத்து, தனது பெரும் பேரரசினை சிறியதாக்கிக் கொண்டது.

இன்று அதன் வீட்டுக்குள்ளேயே, இரண்டு நாடுகள், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து பிரிந்து போக முனைப்பு காட்டுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், பேரரசினை கலைக்கும் இந்த நிலை, பிரித்தானியாவுக்கு உண்டாக்கியது.

பிரான்ஸ் நாடுதான், இன்னோரு காலனித்துவ நாட்டினை பிடித்தால், அதன் காலனி நாடுகளை ஆட்டையினை போடலாம் என்ற தந்திரத்தினை பாவித்து, நெதர்லாந்து மேலே போர் தொடுத்தது. ஆனால் அது எதிர்பார்த்தத்துக்கு மாறாக, நெதர்லாந்து மன்னர், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து, தனது காலணிகளினது கவனர்களுக்கு, அந்த காலணிகளை பிரித்தானியா வசம் ஒப்படைத்து விடுமாறு எழுத, இலங்கை, தென் ஆப்பிரிக்கா பிரித்தானியா வசம் ஆனது.

பிரான்ஸ் ஏமாந்தது. ஆனால் பிரான்சின் இதே தந்திரத்தினை ஜெர்மனி முதலாம், இரண்டாம் போரில் பயன்படுத்தியது. இரண்டிலும் பிரித்தானியாவே போரில் ஈடுபட்டு கடுமையாக பாதிப்படைந்தது. இரண்டாம் உலகப்போரில், பிரான்ஸ், ஜெர்மனியால் முழுவதுமாக கையகப்படுத்தப்பட்டது. ஹிட்லரின் இலக்கு பிரித்தானியாவாக இருந்தது. அவர் வென்றிருந்தால், உலகின் பெரும் ஜெர்மனிய பேரரசு உருவாகி இருக்கும்.

இந்தியா, இலங்கை, மற்றும் பிரித்தானிய காலனிகள் மட்டுமல்ல, பிரான்சின் காலனிகள் கூட அதன் கீழ் வந்திருக்கும். ஆனால் பிரித்தானியா, அமெரிக்காவின் உதவியுடன், ரசியாவும் சேர, ஜெர்மனி தோல்வி அடைந்தது.

போரின் முடிவில், பிரித்தானிய பேரரசினை படிப்படியாக குறைக்கும் முடிவினை பிரித்தானியா எடுத்ததால், இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆகவே, காந்தி அல்ல, ஹிட்லரே இந்திய சுதந்திரத்துக்கு காரணம்.

இங்கே ஒரு முரண்நகை, போரில் நாட்டையே இழந்த பிரான்ஸ், தனது காலனிகளை அப்படியே பத்திரமாக வைத்துக்கொண்டது.

பல காலத்துக்கு பின்னர், இந்தோ-சீனா நாடுகளான, லாவோஸ், வியட்நாம், கம்போடியவினை இழந்தது. ஆனால், பல நாடுகளை, காலனி நாடுகளை பிரித்தானியா நடத்தியது போல இல்லாமல், அவர்கள் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக நடத்தியதால், அந்த காலனிகள் பல, பிரான்சிடம் இருந்து, சுதந்திரத்தினை எதிர்பார்க்க வில்லை. மாறாக குடியொப்பங்களில் சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லி விட்டன.

இது ஒரு ஆச்சரியம் தான். இந்து சமுத்திரத்தில் தமிழர்கள் பலர் வாழும், ரீயூனியன் தீவு, குடியொப்ப தேர்தலில், சுதந்திரம் வேண்டாம் என்று சொல்லி விட்டது. நேரு இராணுவ ரீதியில் நெருக்கி இராவிடில், பாண்டிசேரி, பிரான்சுடன் இருந்திருக்கும்.

தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு பிரெஞ்சு கயானா. இது, பிரான்ஸ் தேசத்துக்கு வெளியே உள்ள, மிக பெரிய பிரான்ஸ் தேசத்துக்குரிய நிலப்பரப்பு. இது, ஐரோப்பிய யூனியனின் தென் அமெரிக்க நிலப்பரப்பு என்று வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார்கள்.

பிரான்சினை அடுத்த, பிரான்சுக்கு உரிய இரண்டாவது பெரிய நிலப்பரப்பு.   

அவுஸ்திரேலியா எப்படி, பிரித்தானிய சிறைக்கைதிகளின், வெளிநாட்டு சிறையாக இருந்ததோ, அதேபோலவே, இந்த நிலப்பரப்பும், பிரான்சின் சிறைக்கைதிகளின், வெளிநாட்டு சிறையாக இருந்திருக்கிறது.

மிகப்பெரிய நிலப்பரப்பு, மக்கள் தொகை, 3 லட்ச்சத்துக்கும் குறைவு. மக்கள் தொகை குறைவு என்பதால், நாட்டின் கட்டமைப்பு, போக்குவரத்து போன்றவை வளரவில்லை.

வேலை வாய்ப்பு குறைவு, அது தொடர்பில் போராட்டம் நடந்தாலும், 2010ல் நடந்த குடியொப்பத்தில், மேலதிக சுய ஆட்சியே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். காரணம் வேறென்ன, சும்மா இருக்க, சோசியல் காசு வருமே.

அதுவே, பிரான்ஸ் நாட்டுக்கும், பிரித்தானியாவுக்கும் உள்ள வித்தியாசம். பிரான்ஸ் புதுசேரியினை விட்டு நீங்கிய போது, அங்கு பிரென்ச் அரச சேவையில் இருந்தவர்களுக்கு, பிரெஞ்சு தூதரகம் ஊடாக, பென்சன் கிடைத்து. அது பிரான்சில் கிடைக்கும் தொகைக்கு ஈடாக இருந்தது, ஏனெனில் காலனியானாலும், பிரான்ஸின் ஒருபகுதியாகவே பார்த்தார்கள்.

ஆனால் பிரித்தானியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், தனது பென்சன் வேலைகளை அந்தந்த அரசுகளிடம் சொருகி விட்டு வந்து விட்டதால், பலர் சாதாரண பென்சன் காரர்களாகவே வாழ்ந்து மடிந்தார்கள்.

பிரித்தானியா போலல்லாது, பிரான்சின் பாரிஸ் நகரத்து பாராளுமன்றுக்கு, தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, செனட் உறுப்பினர்களை, இந்த காலணிகள் அனுப்புகின்றன. காலணிகள், பிரஞ்சு அதிபர் தேர்தல்களிலும் நேரடியாக பங்கு கொள்கின்றன. காலனிகளின் அரச தலைவராக, பிரென்ச் ஜனாதிபதியே உள்ளார்.

அமெரிக்கா பிரிந்து போனதன் ஒரு முக்கிய காரணம், அதன் பிரதிநிதிகளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுமதிக்கும் கோரிக்கைக்கு, மறுப்பு தெரிவிக்கப்பட்டமையும் ஆகும்.

https://www.bbc.co.uk/news/world-latin-america-20376142

Edited by Nathamuni
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Nathamuni said:

சரியான கட்டுரை தான்

இன்னும் ஒன்று விடுபட்டு இருக்கிறது.

பிரான்ஸ் ஆண்ட நாடுகளில் பிரெஞ்சு மொழியின் ஊட்டல். ஒரு குறிப்பிட்ட மக்கள் பேசிய பிரெஞ்சு மொழியை அழிந்து விடாமல் காக்க முடிந்துள்ளது. இன்று பிரெஞ்சு காலனித்துவ நாடுகள் அனைத்திலும் பிரெஞ்சு மொழியே ஓங்கி நிற்கிறது. பல காலனித்துவ நாட்டு மக்களின் தாய் மொழிகள் முற்றிலும் அழிந்து விட்டன. அழிந்து வருகின்றன. 

இது தான் நான் பார்த்தவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கட்டுரை நாதம்ஸ்.........இங்கு நேற்று (16/12/2023) 2024 ம் ஆண்டுக்கான பிரான்ஸ் அழகிப் போட்டியில் மிஸ். கயானா முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து பின் ஐந்தாவதாக வந்திருந்தார்.......(pas de callais யின் அழகி முதலாவதாக வந்திருந்தார்)......ஆயினும் நன் நினைத்தேன் மிஸ்.கயானாதான் முதலாவதாக வருவா என்று.......ஜஸ்ட் மிஸ் ......!   😁

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.