Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2025ம் ஆண்டில் இந்தியாவை 'பிடிக்க முடியாதாம்' * சம்பளமும் பல மடங்கு; நுகர்வும் பல மடங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும்பை:சர்வதேச அளவில், 2025ம் ஆண்டில், இந்தியா, பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும். அப்போது, சராசரி இந்தியரின் சம்பளம், இப்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும்; அவர்கள் செலவு செய்வதும், மிக அதிகமாக இருக்கும்.சர்வதேச அளவில் நிதி, வர்த்தகம் தொடர்பாக, மெக்கன்சி நிறுவனம் எடுத்த சர்வேயில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச அளவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக முன்னேறி வருகிறது. அதில் தொய்வு காணப்படவில்லை. இதே வேகத்தில், அதன் பொருளாதார வளர்ச்சி இருக்குமானால், 2025ம் ஆண்டில், உலகில் அது, முன்னணி இடத்தை பெறும். இந்தியாவில் பல நாட்டு நிறுவனங்ளும் போட்டிபோட்டு, வர்த்தகம் செய்யக் காரணம், இந்தியர்கள் செலவு செய்வதை பார்த்துத்தான். மற்ற ஆசிய நாடுகளைவிட, இந்தியாவில், அதிக அளவில் நுகர்வு இருக்கிறது. சாதாரண 'டிவி' முதல், கார் வரை, பல்வேறு பொருட்கள் நுகர்விலும் இந்தியா முன்னணியில் உள்ளது. உலக அளவில், இதில் 12வது இடத்தில் உள்ள இந்தியா, 2025ம் ஆண்டில், 5வது இடத்திற்கு முன்னேறும். இந்தியர்களின் படிப்பு, திறமை, காரணமாக, இப்போதே அவர்களின் சம்பளம் பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்த சம்பளம், 2025ம் ஆண்டில், மூன்று மடங்காக உயரும். இந்தியாவின் நடுத்தர குடும்பங்கள் எண்ணிக்கை அப்போது 10 மடங்கு பெருகும். இன்னும் 20 ஆண்டுகளில், நடுத்தர மக்களின் எண்ணிக்கை 58 கோடியை தாண்டும். அவர்களில் படித்த இளைய தலைமுறையினர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். அவர்களால் பொருளாதார வளர்ச்சியும் பல மடங்கு அதிமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில், 2 கோடியே 30 லட்சம், நடுத்தர வர்க்க இளைய தலைமுறையினர் அதிக சம்பளம் பெறுவர். இப்போதுள்ள ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம். இவர்கள் மிக அதிக சம்பளம் பெறுவர் என்பதால், இவர்களின் நுகர்வு அளவும் அதிகரிக்கும். உலக நாடுகளில், பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழும். இப்போதுள்ளதை விட, இந்தியாவில் அதிக அளவில் பல நாட்டு முன்னணி வர்த்தகர்கள், வியாபாரம் செய்ய முன்வருவர். ஆனால், இப்போதுள்ள நிலையில், இந்தியா கவனிக்க வேண்டிய விஷயம் இரண்டு தான். ஒன்று, கல்வித்தரம்; இன்னொன்று, கட்டமைப்பு வசதிகள். இதில் கவனம் செலுத்தினால், நம் இளைய தலைமுறையினரிடம் உள்ள திறமைக்கு எந்தநாட்டு இளைய தலைமுறையும் சவால் விட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் கூடிய நாடாகவும் 2025ல் இந்தியா இருக்கும். இன்னும் 60% மானவர்கள் எழுத படிக்க தெரியாமல் இருக்கிறார்கள்.இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்.இவ்வளவுக

இப்படியே வாயல சொல்லியே விஜகாந் படம் மாதிரி காலத்தை கொண்டு போயிடுவாங்க!! :)

ஏழைகள் கூடிய நாடாகவும் 2025ல் இந்தியா இருக்கும். இன்னும் 60% மானவர்கள் எழுத படிக்க தெரியாமல் இருக்கிறார்கள்.இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்.இவ்வளவுக?கும் மேலாக கையூட்டு(corruption) எப்போ இல்லாமல் போகும்.சனத்தொகைக்கு என்ன செய்யப்போகின்றார்கள்?

தற்போதைய இந்திய கற்றோர் விகிதம் (Literacy rate) 61.3% ஆகும். தரவுகள் இணக்கும் போது, யாழ்கள வாசகர்களுக்கு சரியான தகவல்கள் தருவதை உறுதி செய்து கொள்வது சிறப்பாக இருக்கும் அல்லவா

http://en.wikipedia.org/wiki/Literacy_in_India

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சாத்தியமான ஒரு விடயம். நான் இந்த ஆண்டு இந்தியா சென்றிருந்த போது உணர முடிந்தது. 2 வருடங்களிற்குள் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இங்கே வேலை பார்க்கும் இந்தியர்களுடன் பேசிய பொழுது அவர்கள் சொல்வது. இங்கு கிடைக்கும் சம்பளமும் இப்பொழுது இந்தியாவில் கிடைக்குமாம். எனக்கு தெரிந்து இரண்டு இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு தங்களுடைய நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பொருளாதாரத்தை மட்டும் தான் நான் சொல்கிறேன்.

இந்தியா பலமுள்ள பொருளாதாரமாக வளரும் என்பதில் அய்யமில்லை.

ஆனால் அவர்களது infrastructure பலவீனமாக இருக்கிறது.

அதை நிவர்த்தி செய்ய சீனா போல் விசேட பொருளாதார வலையங்களால் (special economic zone) கைய்யாழுகிறார்கள். சீனா வெறும் 5 வலையங்களைத் தான் அப்படி இதுவரை உருவாக்க அனுமதித்தார்கள். இந்தியா 50 மேல் 100 என்று போகிறது. இது வித்தியாசமான அணுகுமுறை. இது விரைவாக தேவைகளிற்கு ஏற்ப குறித்த infrastructure அய் உருவாக்க உதவும். பொருளாதார அதில் சில inefficiency, overlapping இருக்கலாம் பொருளாதார விரையம் இருக்கலாம். ஆனால் முதலீடுகளின் நன்மைகளை அடிமட்ட மக்களிற்கு எல்லா இடங்களில் விரைவாக பரப்ப உதவலாம்?

ஆனால் சீனாவோடு ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு இருக்கக் கூடிய அதிகரித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பின்னணியில் இப்படியான distributed infrastructure & economic hubs நல்லது.

இந்தியாவின் இளய கல்வி அறிவு கொண்ட மனிதவளம் பலமாக இருந்தாலும் துறைரீதியாக பன்முகத்தன்மை கொண்டது அல்ல. குறிப்பிட்ட சில துறைகளில் மாத்திரம் பெருமளவானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அந்தத் துறைகளின் இந்தியாவின் நிலையை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றாலும் ஏனைய துறைகளில் பலவீனமாக இருப்பது ஒரு வல்லரசாக பல்வேறு பட்ட துறைகளில் முடிந்த அளவு தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் ஆரோக்கியமானது அல்ல.

அது மாத்திரமல்ல ஒரு குறித்த துறையில் மாத்திரம் கவனம் செலுத்துவதால் அவர்கள் எல்லோரையும் உள்வாங்கக் கூடிய வேலை வாய்ப்புகளை யதார்த்தத்தில் உருவாக்க முடியாது. இந்த 2 விடையங்களையும் இணைத்துப் பார்த்தால் மனிதவளங்கள் ஒருவகையில் தவறாக தயார்படுத்தப்பட்டு விரையமாக்கப்படுகிறது.

இந்தியாவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் நிலப்பரப்பில் பெரும்பாலானவை கூட விவசாய நிலங்களாகத்தான் இருக்கின்றது. இந்திய தயாரிப்பில் (manufacturing) கவனம் செலுத்தாவிட்டால் சமூகத்தின் எல்லாப் படிநிலைகளிலும் வேலைவாய்ப்பின்மையை குறைக்க முடியாது. ஆனால் தொழிற்சாலைகளிற்கு விவசாய நிலங்கள் பறிக்கப்படுவது நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமானதா? விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களை (மத்திய கிழக்கு நாடுகளில் முடிகிறது) தொழிற்சாலைகளிற்கு பயன்படுத்துவது நல்லம். இன்று சீனாவில் காலம் பிந்தி உணரப்படும் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையேற்றம். இது உலகளவிலும் உணரப்படுகிறது. இது தக்கவைக்க கூடிய அபிவிருத்தியையாருக்கும் தராது. இந்தியவும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் அதே தவறை விட்டுக் கொண்டிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் யாழ் வாசகர்கள்.நான் தந்த தரவை சுட்டி காட்டிய வெற்றி வேலுக்கு நன்றிகள். இருந்தாலும் 400 மில்லியன் மக்களுக்கு எழுத படிக்க தெரியாமல் இருப்பது நினத்து பார்க்க முடியாமல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.