Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3  21 DEC, 2023 | 04:15 PM

image
 

(எம்.வை.எம்.சியாம்)

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணி தொடக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர  சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இதுவரை நான்கு நாள் முடிவில்  8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுள்  மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்செவன அடுக்குமாடி குடியிருப்பில் முப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சுமார் 920 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பஸ்கள், இரு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள்,  4 காணிகள் மற்றும் வீடொன்றும் உள்ளடங்குவதாகவும் இந்த சொத்துக்களை சந்தேகநபர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயர்களில் கொள்வனவு செய்து அதனை  மறைத்து வைத்திருந்ததாகவும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே 2 கிலோ 400 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் ,ஒரு கிலோ 200 கிராம் ஐஸ், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 12 கிராம் ஹஷீஷ், 5 கிலோ 200 கிராம் மாவா, 17,054 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 73,833 கஞ்சா சொடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/172227

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இதேவேளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சுமார் 920 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பஸ்கள், இரு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள்,  4 காணிகள் மற்றும் வீடொன்றும் உள்ளடங்குவதாகவும் இந்த சொத்துக்களை சந்தேகநபர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயர்களில் கொள்வனவு செய்து அதனை  மறைத்து வைத்திருந்ததாகவும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

நல்லது,அதேவேளை உங்கள் அரசியல்வாதிகளால் சுருட்டுப்பட்டு, பினாமிகளின் பெயரில் உள்நாடு வெளிநாடென உள்ள சொத்துகளை எப்போது பறிமுதல் செய்யவீர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

கைதிகளை தடுத்துவைக்க இடமில்லை.

வீடுகளிலேயே கைதியாக வைக்கப் போகிறோம் என்று சொன்னாங்களே?

இத்தனை பேரையும் கைது செய்வதைவிட மொத்தமாக இறக்கும் ஆட்களைப் பிடித்து உள்ளே போடலாம்.சுட்டு தள்ளலாம்.

செய்யவே மாட்டாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிற ஊதியத்துக்கு நியாயமாய் வேலை செய்திருக்கிறார்கள்........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 4 நாட்களில் 8,000 பேர் கைது, கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் - என்ன நடக்கிறது?

இலங்கையில் 8000 பேர் கைது
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

இடைக்கால போலீஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று, ஓரிரு தினங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் போலீஸார் 24 மணிநேர சோதனைகளை நடாத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, இதுவரை 8,000-திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிழல் உலக கோஷ்டிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளின் போது, எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார்.

''பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் போலீஸார் மற்றும் முப்படைகளுடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். நாடு தற்போது யுத்தத்திற்கு சமமாக ஒரு நிலைமையையே எதிர்நோக்கியுள்ளது. பேசிக் கொண்டு மாத்திரம் இருக்காது, இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்தியுள்ளோம்," என்கிறார் டிரான் அலஸ்.

மேலும், "இந்த உண்மையான தேடுதல் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமக்கு கிடைக்கும் அனைத்து விதமான தகவல்கள் குறித்தும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்," என அவர் கூறுகின்றார்.

''தமது குழந்தைகள், குடும்பம் தொடர்பில் சிந்தித்து, இந்த பேரழிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு போலீஸாரிடத்திலிருந்து எந்தவித மன்னிப்பும் கிடையாது. சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் தொடர்பிலும் இவ்வாறான நடவடிக்கைகளே எடுக்கப்படும். போலீஸாருக்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் குற்றங்களுக்காக அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே போலீஸார் தமது ஆயுதங்களை பயன்படுத்த வேண்டி ஏற்படும்," என்கிறார் அவர்.

"இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடக்கும். தமது குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் என குடும்பத்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்," என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார்.

 
இலங்கையில் 8000 பேர் கைது
படக்குறிப்பு,

இடைக்கால போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன்

தொடர் கைது நடவடிக்கைகள்

நாட்டில் நிலைக்கொண்டுள்ள குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த சில நாட்களாக 24 மணிநேர தொடர் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் ஊடாக, இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாங்களில் மாத்திரம் 2,008 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், யுக்திய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 17-ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதி வரை 6,583 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மேலும் பல சந்தேக நபர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குழுக்களுக்கு சொந்தமான சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

பேருந்துகள், கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள், தங்காபரணங்கள், பணம் உள்ளிட்ட சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதுடன், இந்த சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் 8000 பேர் கைது
 

புதிய சோதனை நடவடிக்கைகளின் நோக்கம்

போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் வலையமைப்பை வீழ்த்துவதே, போலீஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகளின் நோக்கம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

''இந்த யுக்திய தேடுதல் நடவடிக்கை கடந்த 17-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் திணைக்களத்தின் முழுமையான படையணி இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதே எமது திட்டம். இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்," என்கிறார் நிஹால் தல்துவ.

''இந்த போதைப்பொருள் வலையமைப்பில் இதற்கு முன்னர் நாம் அடையாளம் கண்டுக்கொண்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வலையமைப்பை வீழ்த்தி, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோன்று, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் இயலுமை கிடைக்கும்," என்கிறார்.

''அதன்பின்னர், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். கைது செய்யப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் எதிர்கால தேடுதல்களை முன்னெடுப்போம்," என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இலங்கையில் 8000 பேர் கைது, போதைப்பொருள்
படக்குறிப்பு,

சோதனையில் ஈடுபட்டிருக்கும் போலீசார்

 

இதுவரை நடந்த தேடுதல்கள் என்ன செய்தன?

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

2005-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் 'போதைக்கு முற்றுப்புள்ளி' என வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் போலீஸாரினால் 'ஒபரேஷன் க்ளீன் அப்’ தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த பெருந்தொகையான போதைப்பொருட்களை அரச புலனாய்வு பிரிவு, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகி, பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பல சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.

இவ்வாறான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இடைக்கால போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இணைந்து தற்போது யுக்திய திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c88250jz41vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் : 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது - டிரான் அலஸ்

21 DEC, 2023 | 03:48 PM
image
 

(எம்.மனோசித்ரா)

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் கடந்த 4 நாட்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்புக்களில் இதுவரை  431 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும், 162 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று  வியாழக்கிழமை  (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கில் 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது 3 வகைகளின் கீழ் அவற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் முதலாவது பாரியளவில் போதைப்பொருள் கட்டத்தலில் ஈடுபடுபவர்களாவர். இரண்டாவது அவற்றை விநியோகிப்பவர்கள்.

மூன்றாவது போதைப்பொருள் பாவனையாளர்கள். நாம் போதைப்பொருள் பாவனையாளர்களை விடுத்து ஏனைய இரு பிரிவினரையும் இலக்காகக் கொண்டே எமது சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதான போதைப்பொருள் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் அடுத்த இரு பிரிவினரையும் கட்டுப்படுத்துவது மிக இலகுவானதாகும்.

போதைப்பொருளை விநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவினரால் 4665 சந்தேகநபர்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 4 நாட்களில் இவர்களில் 731 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின் போது பட்டியலில் இல்லாதவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒட்டு மொத்தமாக 8458 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை)

இவர்களில் 346 பேரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. 61 பேரிடம் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

697 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா, ஹஷீஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 431 மில்லியன் ரூபாவாகும்.

அதே போன்று கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள், காணி, கட்டடங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றின் பெறுமதி 162 மில்லியன் ரூபாவாகும். இந்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்.

கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

2024 ஜூன் 30ஆம் திகதியாகும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். எனவே இரு வாரங்களில் சுற்றிவளைப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது.

எவ்வித அறிவிப்புக்களும் இன்றி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோரை களமிறக்கி சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்படும்.

அதனைக் கருத்திக் கொண்டே முன்னரே அறிவித்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான போதைப்பொருள் கட்டத்தல்காரர்களை தப்பிக்கச்செய்வது எமது நோக்கமல்ல. கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் புலனாய்வு பிரிவினரால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களும் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/172219

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 30 பேர் கைது

யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விசேட சோதனை

இந்நிலையில் பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் இன்று (22.12.2023) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர் போதைப் பொருள் குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 30 பேர் கைது | Special Anti Narcotics Operation In Jaffna

மேலும், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுவரும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

https://tamilwin.com/article/special-anti-narcotics-operation-in-jaffna-1703252285

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2023 at 16:35, nochchi said:

நல்லது,அதேவேளை உங்கள் அரசியல்வாதிகளால் சுருட்டுப்பட்டு, பினாமிகளின் பெயரில் உள்நாடு வெளிநாடென உள்ள சொத்துகளை எப்போது பறிமுதல் செய்யவீர்கள்! 

இப்போதைக்கு போதைப்பொருள் கும்பலை ஒழிப்பதட்கான தேடுதல்தான் நடக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு வியாபாரத்தில் ஈடுபடும் கும்பலின் சொத்துக்கள் பணம், நகை, வாகனம், இன்னும் அசையா சொத்துக்கள் என நிறையவே கைப்பற்றப்பட்டுள்ளன. 

நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் சூறையாடிய, கொள்ளையடித்தவை எல்லாம் இதட்குள் வராது. அதட்கு வெளிநாட்டு அமைச்சு, நிதி அமைச்சு என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய மாடடார்கள். அந்த பதவியில் இருப்பவர்களும் , அவர்களை ஆதரிப்பவர்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான். எனவே நீங்கள் எதிர்பார்ப்பது நடப்பதட்கு சந்தர்ப்பமே இல்லை.

இருந்தாலும் IMF தனது நிபந்தனைகளில் இதனையும் ஒன்றாக சேர்த்திருப்பதாக அறிய கிடைக்கின்றது. எனவே பொறுத்திருந்து பார்ப்பம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு சோதனை

Published By: VISHNU    22 DEC, 2023 | 04:27 PM

image
 

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (22) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர்.

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற  பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

MANNAR_PESALAI_ISSUE__9_.jpg

MANNAR_PESALAI_ISSUE__5_.jpg

MANNAR_PESALAI_ISSUE__7_.jpg

MANNAR_PESALAI_ISSUE__1_.jpg

https://www.virakesari.lk/article/172298

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்படுவோரை தடுத்துவைக்கும் இடம் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச வெளியிட்ட தகவல் !

Published By: VISHNU   28 DEC, 2023 | 07:24 PM

image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடளாவிய ரீதியில் முற்படைகளால் மேற்கொண்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால் அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்களில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிராேத நடவடிக்கைகளை கைதுசெய்யும் யுக்திய வேலைத்திட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்துவைக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் முப்படைகள் மேற்கொண்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சிறைச்சாலைகளில் தற்போது இட நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாடு பூராகவும் உள்ள 28 சிறைச்சாலைகளிலும் இரண்டாயிரத்து 255க்கும் அதிகமான புதிய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றளர்.

அத்துடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்க முன்பதாக சிறைச்சாலைகளில் 28ஆயிரம் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக இந்த நாட்டில் சிறைச்சாலைகளில் 11ஆயிரம் பேரே தடுத்து வைக்க முடியும். அதேநேரம் பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800இல் இருந்து ஆயிரத்தி 124 வரை அதிகரித்திருக்கிறது.

அத்துடன் சிறைச்சாலைகளின் நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக மில்லனிய பிரதேசத்தில் 50ஏக்கர் காணி தெரிவுசெய்து அங்கு கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் பாதுகாப்பான கட்டிடங்களை தெரிவுசெய்து, சிறைச்சாலைகளில் இருக்கும் மேலதிக கைதிகளை குறித்த கட்டிடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/172659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 17 ஆயிரம் பேர் கைது : 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்!

29 DEC, 2023 | 05:55 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

போதைப்பொருள் மற்றும் பாதாளாக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹெரோயின், ஐஸ் உட்பட 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய, முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி முதல்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான ஒரு வார  காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இருப்பினும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் இரண்டு நாட்களுக்கு யுக்திய சுற்றிவளைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடந்த புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது 2,889  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  யுக்திய சுற்றிவளைப்புகளில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 850 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 186 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 1,187 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த  4,665 சந்தேக நபர்களில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 6 கிலோ 740 கிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோ 500   கிராம் கஞ்சா, ஒரு கிலோ 70 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள், 35 கிலோ 800 கிராம் ஹுஸ் போதைப்பொருள், 3  கிலோ 350 கிராம் தூள் போதைப்பொருள், 18 கிலோ 50 கிராம் மாவா, 71, 271 போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 2,110,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/172730

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தில் 40,590 பேர் கைது – டிரான் அலஸ்

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபா என மதிப்படப்பட்டுள்ளது. இந்தநிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/288576

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2023 at 18:43, ஈழப்பிரியன் said:

கைதிகளை தடுத்துவைக்க இடமில்லை.

வீடுகளிலேயே கைதியாக வைக்கப் போகிறோம் என்று சொன்னாங்களே?

இத்தனை பேரையும் கைது செய்வதைவிட மொத்தமாக இறக்கும் ஆட்களைப் பிடித்து உள்ளே போடலாம்.சுட்டு தள்ளலாம்.

செய்யவே மாட்டாங்களே.

இது பற்றி நேற்று ஒரு பெரிய பத்திரிகையாளர் மஹா நாடே நடந்தது. அதில் அவர்கள் கூறியது என்னவென்றால் கைது செய்யப்படட எல்லோரையும் சிறையில் அடைக்கவில்லையாம். அவர்களின் மோசமான, முக்கியமானவர்கை மட்டுமே சிறையில் அடைத்தும் , புனர்வாழ்வு முகாமுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள்.

இது வரைக்கும் ஏறக்குறைய 40 ,௦௦௦ இட்கும் மேட்படுத்தவர்கள் கைது செய்யப்பட்ட்தாகவும் அநேகமானோர் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட்தாகவும் கூறினார். ஏறக்குறைய 5000 பேர் மட்டில் சிறையிலும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 நாட்களில் 50,000 பேர் கைது!

Yukthiya-300x200.jpg

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 124 கிலோ 541 கிராம் ஹெரோயினும், 208 கிலோ 290 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 2,678 கிலோ கஞ்சாவும், 306,821 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/290774

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.