Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
777.jpg

கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து தொடர்பான அண்மைய ஊடகச் செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கமான கப்பல் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/287765

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லா தொலைக்காட்சிகளிலும் விரிவாக காண்பிக்க படைத்து. முழு பூசணியை சோற்றில் புதைக்க முயலுகிறது துறைமுக அதிகார சபை. அரசியல்வாதிகளுக்கு உல்லாசமாகஇருக்க எந்த நேரத்திலும் இங்கு வசதிகள் உண்டு. ராஜபக்ஷே நடக்க முடியாமல் கைத்தாங்கலாக கூடிக்கொண்டு போனார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம் - சஜித்

11 JAN, 2024 | 03:44 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர்  அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச தரப்பு உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினர்  துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியகூலா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக இராஜாங்க அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.

நாடு வங்குரோத்தாகி உள்ள இவ்வேளையில், அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு, அரசுக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு அதற்கு தேவையான எரிபொருள் செலவிட்டு எவ்வாறு கடல் நடுவில் விருந்துபசாரம் மேற்கொள்ள முடியும். துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு, குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

நான் தெரிவிக்கும் இந்த விடயம் உண்மை. அரசாங்கம் சவால் விடுவதாக இருந்தால், இதுதொடர்பான புகைப்படங்களை சபைக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் இவ்வாறு செயற்பட முடியுமா?

அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல. என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் இந்த 2 கப்பல்களுக்கும் ஏறுவதற்காக சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் எமக்கு ஆட்சேபனை இருக்கிறது.

நாட்டு மக்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இது பாரிய குற்றச்செயலாகும். இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம் - சஜித் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

விஜயத்தை பதிவு செய்தவர்களை கைது செய்ய வேண்டும்;காணொளி

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தை சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்த துறைமுக அதிகாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரிவின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு அணைப்பகுதி கட்டுமாணப் பணிகள் தாமதமாகுவதால் இங்கு சென்று அதற்கான பணிகளை பார்வையிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விடுத்த கோரிக்கையை அடுத்து, 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாகும். சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நாங்கள் விருந்து வைத்தோம் என்று கூறி விஜயம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தொழிற்சங்க உறுப்பினர்கள் சட்டவிரோதமாக விஜயத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்களை சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

துறைமுக அதிகாரசபையின் ஒரு சதம் கூட இந்த விஜயத்திற்காக செலவிடப்படவில்லை எனவும், நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் சகல சட்டதிட்டங்களையும் தாம் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் எம்.பி.க்கள் குழுவொன்று பொதுப் பணத்தைச் செலவிட்டு விருந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தில் பங்கு கொண்டு உல்லாசம் அனுபவித்தவர்கள் பிழை இல்லை. அதை வீடியோ எடுத்து வெளியிடடதுதான் பிழை. ஸ்ரீலங்காவின் ஆச்சரியம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

விருந்தில் பங்கு கொண்டு உல்லாசம் அனுபவித்தவர்கள் பிழை இல்லை. அதை வீடியோ எடுத்து வெளியிடடதுதான் பிழை. ஸ்ரீலங்காவின் ஆச்சரியம். 

spacer.png

419201435_765056045659370_76352855583148

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.