Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN   16 JAN, 2024 | 04:52 PM

image
 

இந்திய கோடீஸ்வரர் முகேஸ்அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது ஜியோ பிளாட்போர்ம்  நிறுவனத்தின் ஊடாக  தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்காக அதிகாரிகள் பல நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில்  நஸ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக நவம்பர் பத்தாம் திகதிக்குள் இலங்கை விண்ணப்பங்களை கோரிய நிலையில் முகேஸ் அம்பானியின் ஜியோ பிளட்போர்ம் இது குறித்து ஆர்வம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளவர்களில் ஜியோ பிளாட்போர்மும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம்  ரிலையன்சின் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து  ஆதிக்கம் செலுத்தலாம் என நம்புகின்றது . தற்போது ஜியோ இந்திய சந்தையில் முன்னணியில் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/174082

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லைக்கா பாஸ்கரனைக் கூப்பிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Kapithan said:

லைக்கா பாஸ்கரனைக் கூப்பிடுங்கள். 

இப்போது மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அம்பானி, லைக்கா, இன்னுமொரு சீன நிறுவனம்.

இப்போதே SLT தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Cruso said:

இப்போது மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அம்பானி, லைக்கா, இன்னுமொரு சீன நிறுவனம்.

இப்போதே SLT தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம். 

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

இந்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பதுதான் இங்குள்ள சீனாவாதிகளின் போராட்டமே. அப்படி அதையும் மீறி கொடுக்கிறார்களா என்று பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் 

ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே 
ஐ எம் எவ் சொல்கிறது.........  கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை 
இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Maruthankerny said:

அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் 

ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே 
ஐ எம் எவ் சொல்கிறது.........  கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை 
இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை 

குட்டு வேண்டினாலும் மோதிரக் கையால் குட்டு வேண்ட வேண்டும். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, vasee said:

இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம். 

தொலைத் தொடர்பு தேசிய  பாதுகாப்புக்கானது எனும் கருதுகோள் பழையதாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

தொலைத் தொடர்பு தேசிய  பாதுகாப்புக்கானது எனும் கருதுகோள் பழையதாகிவிட்டது. 

உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன்.

https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US

முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா?

முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன்.

தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, vasee said:

உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன்.

https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US

முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா?

முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன்.

தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.

புலனாய்வு பல்வேறு படிநிலைகளைத்தாண்டி எங்கோ சென்றுவிட்டது. அம்பானியிடம் சென்றால் என்ன லைக்காவிடம் சென்றால் என்ன அவற்றிடையே பாரிய மாற்றன்கள் ஏது இல்லை என்பது என் கருத்து. 

ஆனால் இந்தத் துறைகளைப் பயன்படுத்தித்தான் பல colour revolution களை செய்கிறார்கள் என்பது உண்மை. இதனால் சிறிய நாடுகள் தொலைத்தொடர்புத்துறையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் - இலங்கை சொல்லும் செய்தி என்ன?   PMD MEDIA ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கை    இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்திப்பார்." என அவர் கூறுகின்றார்.   இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்படும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து, விஜயத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். ''இந்த விஜயத்தின் இறுதியின் இரு தரப்புக்களும் கருத்துக்கள் வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். இந்த விஜயத்தின் நேர அட்டவணையை வெளிவிவகார அமைச்சு வெளியிடும். இந்த தீர்மானங்கள் குறித்து இந்த விஜயத்தின் பின்னர் நாம் வெளியிடுகின்றோம்." என அவர் குறிப்பிடுகின்றார்.   இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?   இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனது முதலாவது விஜயமாக அயலாக நாடான இந்தியாவையே தெரிவு செய்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில், அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திஸாநாயக்கவும், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது.  ஜே.வி.பியினர் (ஜனதா விமுக்தி பெரமுன கட்சியினர்) இந்திய எதிர்ப்புக் கொள்கையை ஆரம்ப காலப்பகுதியில் கடைபிடித்திருந்ததாலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறும் என்ற அச்சத்தை இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன.  எனவே தமது ஆட்சியிலும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவம் மாறாது என்ற செய்தி அநுரவின் பயணத்தில் உள்ளடங்கி இருப்பது எனது பார்வையில் ஒரு விசேட அம்சமாகும்." என ஆர்.சனத் குறிப்பிடுகின்றார்.   PMD MEDIA அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் (கோப்புப்படம்) ''ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே திஸாநாயக்க டெல்லி சென்று பேச்சு நடந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறி வைத்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. எனவே அது சார்ந்த விடயங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.'' என்கிறார் ஆர்.சனத்   PMD MEDIA ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது(கோப்புப்படம்)   உற்று நோக்கப்படும் அநுரவின் விஜயம்!    திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் உற்று அவதானித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. டெல்லி விஜயம் முடிந்த கையோடு ஜனவரியில் திஸாநாயக்க பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது.  இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது." என பத்திரிகையாளர் ஆர்.சனத் சுட்டிக்காட்டினார்.    Sanath பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத்   பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது முக்கியம்!    "பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்றைய உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. பொருளாதார பலமும் உள்ளது.  எனவே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது முதல் இரு வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதி மேற்கொள்வது இலங்கைக்கு கூடுதல் பயனை தரக்கூடும். கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களில் அது கைகொடுக்கக்கூடும்." என பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது, உலக அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது முதலாவது விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்வதோடு, அதனை தொடர்ந்து, சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.     https://www.bbc.com/tamil/articles/c0kvx05mgldo
    • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் 14 டிசம்பர் 2024, 05:53 GMT ஈவிகேஎஸ் இளங்கோவன்   காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.  உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ''இளங்கோவன் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு தைரியமான தலைவர். அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தார். உறுதியான அர்ப்பணிப்புடனும் தமிழக மக்களுக்கு சேவை செய்தார்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கலை தெரிவித்துள்ளார்   அரசியல் பயணம்   Getty Images மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த இளங்கோவன், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேரன். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை இளங்கோவன் வகித்துள்ளார். அவரது தந்தை ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு, இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் முக்கிய தமிழ் திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பயணித்தார். 1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சென்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்(சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்(கோபிசெட்டிபாளையம் தொகுதி,2004) வெற்றிபெற்றுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார். இளங்கோவன் இருமுறை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். கடந்த 2004–2009 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்   https://www.bbc.com/tamil/articles/clygqjp9k17o?at_campaign=ws_whatsapp
    • அட,  இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும்  கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?
    • மெல்லிய நகைச்சுவை கலந்த அருமையான மேடைப் பேச்சு. 👍🏽 மனதார ரசித்து கேட்டேன்.  நன்றி சுப. சோமசுந்தரம் ஐயா. 🙂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.